Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் நவம் அறிவுகூடத்திற்காக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நவம் அறிவு கூடத்திற்காக நிதி சேகரிப்பு வைபத்திற்கு சேரன் சிறிபாலன் பரத நாட்டிய கச்சேரி ஒன்று நடைபெற்றது இந்த கலைஞன் புலத்தில் பிறந்து வளர்ந்த கலைஞன்,நன்றாக நாட்டிய கச்சேரி சிறந்த முகபாவங்களுடன் ஆடினார்.இதன் மூலம் அவுஸ்ரேலியன் டொலர் 140000 நிதி சேகரிக்க பட்டு தமிழர் புனர்வாழ்வு கழகத்தினூடாக நவம் அறிவு கூடத்திற்கு கொடுக்கபட்டது,பரத நாட்டியத்தில் ஆர்வம் இல்லாதவர்களும் இதற்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள் காரணம் இது நல்ல நோக்கத்திற்காக பணம் அனுப்பபடுகிறது என்பதற்காக.அங்கு உறையாற்றிய சிலர் நவம் அறிவுகூடம் தேசிய தலைவரின் நேரடி பார்வையில் நடைபெறுகிறது என்றும் கூறினார்கள்.

புத்தனுக்கும் பரத நாட்டியத்திற்கும் வெகு தூரம் இருந்தும் இந் நிகழ்ச்சிக்கு சென்றது ஒரு இனம் தெறியாத மகிழ்ச்சியை தந்தது.

Navam Arivu kodam is an insititution named after a valiant Tamil figter called Navam who laid down his life defending his people."Arivu Koodam is loosely translated to mean repository of knoweldge".it provides young men and women maimed in the war with skills in computer science,languages,literature,history,psychology,art and claasical music,several of the residents at the institute are blind while others have lost limbs.

நவம் அறிவுகூடம் பற்றிய தகவலுக்கு நன்றி புத்தன் அங்கிள் எப்படி நிகழ்ச்சி இருந்தது என்று நீங்கள் சொல்லும் நேரம் உணரகூடியதாக இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போயிருந்தேன். எனக்கும் இனந்தெரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சந்தர்ப்பத்தில் நவம் அறிவுக்கூடத்திலும், விழுபுண் ஏந்தியும் மனம் தளாராது தாயகமீட்புக்கு தங்களை மெழுகாக்கி போராடிக் கொண்டிருக்கும் போராளிகளுக்காகவும் அவர்களின் மன உறுதிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் காவியமாக 'வேங்கையன் புூங்கொடி" எனும் காவியம் வெளிவர இருக்கிறது. எப்போது வெளிவரும் என்று குறிப்பிட்டுக் கூறமுடியாவிட்டாலும் இந்த இடத்தில் அதை முதல்முறையாக அறிவித்து அதன் ஆரம்ப பக்கங்களில் சிலவற்றை இங்கு தரவிளைகிறேன்.

நுழை வாசல்

நண்பர்களே! வாசக அன்பர்களே!! இக்காவியத்தினுள்

நீங்கள் நுழையுமுன் ஒருசில நிமிடங்கள் இந்தப்

பக்கத்தை உள்வாங்கிக் கொண்டு அடுத்தபக்கத்தைப்

புரட்டுங்கள்.

நினைத்துப் பார்க்கிறேன்!

தமிழீழப் போராட்டம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள்.

எத்தனை தியாகங்கள்!

எத்தனை இழப்புகள்!

எத்தகைய அவலங்கள்!

எண்ணிக்கைக்குள் அடக்கமுடியுமா?

தமிழீழபுூமியை சிங்கள இனத்துவேச ஆட்சியாளர்

கைகளிலிருந்து மீட்க தமிழினம் அகிம்சையைக்

கைவிட்டு ஆயுத வேள்வியில் ஆகுதியாகி வெற்றி

கண்டு வலிமை பெற்றிருக்கும் இத்தருணத்தில்

நேற்றைய நகர்வுகள் நினைவுகளில் மாத்திரம்

வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இலக்கியங்கள் கற்பனை வடிவங்களாக மட்டுமல்லாது

காலத்தின் கண்ணாடியாகவும் அமையவேண்டும் என்பது

பொதுவான அபிப்பிராயம். அந்த வகையிலேயே இக்காவியம் உருவம் பெற்றிருக்கிறது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்த

'வேங்கையன் புூங்கொடி" என்ற காவியத்தில் வரும் சம்பவங்களில் ஒரு பகுதியையேனும் கடந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். இக்காவியம் மக்களோடும்,புலிகளோடும் பின்னிப் பிணைந்தே நகரும்.

மேலும் இக்காவியம் சங்ககால இலக்கியங்களான

அகநானூறு, புறநானூறு, கலிங்கத்துப்பரணி வரிசையில் அதற்கு அப்பாலும் சென்று பார்க்கும் இன்றைய யதார்த்தங்களைத் தன்னகம்சுமந்து நிற்க விளைகிறது. ஈழத்து இலக்கியப் படைப்புகளில் சற்று மாற்றமுற்று முயற்சி செய்திருக்கிறேன்.

இதனை வாசிக்க முனையும் நெஞ்சங்களே!

இங்கு வரும் கதாப்பாத்திரங்கள் எனது கற்பனை. உங்களுக்கு யதார்த்தமாக இருக்கலாம். அங்குமிங்குமாக சில சம்பவங்கள் தெரிந்ததும், கேட்டு அறிந்ததுமாக தமிழீழ மண்ணின் நிலையை உரைக்கும் சங்கதியாக வடிவெடுத்து உலவ இருக்கின்றது.

இலக்கியவாதி என்று கூறுமளவுக்கு எனக்கு தகுதியில்லாவிடினும் இலக்கியங்களை இரசிக்கத்தெரிந்தவள் என்ற நிலைப்பாட்டுடனே இக்காவியத்தை உங்கள் முன் வைக்கிறேன். எனது இம்முயற்சிக்குஉங்களுடைய கணிசமான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்

'வேங்கையன் புூங்கொடி"

பாகம் 1

இப்போது உங்கள் கைகளில்

இப்படிக்கு

வல்வை சகாறா.

ஒப்பற்ற தியாக சீலர்;கள்

தாய் மண்ணிற்காக

தமை ஈந்து மாவீரர் ஆனவர்கள்.

அதே வேளை

போரியல் பகுதியின்

வேதனைகளைத் தாங்கி

ஈகையால் உயர்ந்து,

உடல் நலிந்து,

போரின் சின்னங்களாகி

இன்னும்

தேசத்தின் மலர்ச்சிக்காக

மனவலிமையைத் துணையாக்கி

வாழ்ந்து கொண்டிருக்கின்ற

மண்ணின் மைந்தர்கள்

தியாகத்தின்

இன்னொரு வடிவம்.

இந்தத் தீரமிகு தோழர்களின்

திட மனதிற்கு

தொடரும் இக்காவியம்

சமர்ப்பணம்.

-------------------------

வல்வை சகாறாவின்

வேங்கையன்

புூங்கொடி

பாகம் 1

------------------------------

அங்கம் 1

அவல்.

சூரியனுக்கு

அழைப்பு விடுத்து

சேவல்கள் கூவும்.

காலை

மலர்ந்தது என்று

காகங்கள் கரையும்.

மண்டலியை

விழிக்கச் சொல்லி

மயில்கள் அகவும்.

இத்தனையும்

கேட்டபடி மந்த

மாருதம் உலவும்.

மெல்லிய புகையாய்

பனியின் மூட்டம்.

புல்லினின் மீதே

அதன் தனி நாட்டம்.

மெல்ல வளைந்தே

நிலத்தினை நோக்கும் - புல்

நுனியினில் தொக்கிடும்

பனிநீர்த் தேக்கம்.

பொன்னலரி மொட்டுகள்

மென்மையாக முடிச்சவிழ்க்கும்.

போதை கொள்ளும்

வண்டு வரச்

செவ்வரத்தம் புூச்சிரிக்கும்.

கண் குளிர

வெண்மை தரும்

கல்யாணி நிதம் புூக்க - தன்

கணுக்குகள் எங்கெங்கும்

கலகலப்பாய் முகை கட்டும்.

ரோசா மொட்டு

இதழ் விரிக்கும். - கண்டு

ரோசங் கொண்ட

நந்தியாவட்டையின்

நகை வெளிக்கும்.

கஞ்ச மொட்டு

கட்டவிழ்க்கும் - பார்த்து

தாழை முகைகள்

தமை அவிழ்க்கும்.

கமுகு உதிர்த்த

ஆடையின் இடத்தில்

புதிதாய் பிறந்த

பாளை மிளிரும்.

பாரம் தாக்கிய

கூந்தலில் விரிந்த

தென்னம் புூக்களை

அணில்கள் மேயும்.

மாவில், பலாவில்

குயில்கள் கூடி

கூவிக் கூவித் தம்

துணை அழைக்கும்.

புூத்த மரத்தில்

சிட்டுக் குருவிகள்

தாவித் தாவித்

தேனினை உறிஞ்சும்.

பட்ட மரத்துப்

பொந்தில் இருந்து - எழில்

பச்சைக் கிளிகள்

கொஞ்சிக் குலவும்.

எட்ட இடத்தில்

ஆழிச் செவிலி

ஏக்கக் கரையில்

மோதி நுரைவாள்.

காலைப் பொழுது

காசினி நோக்கப்

பொழில்களைத் தேடி-பொன்

எழில் சிந்தி

கீழைத் திசையில்

கதிரினை விரித்து

காலைச் சூரியன்

கண் திறந்தான்.

சோம்பல் முறித்துச்

சுந்தரப் பைங்கிளி

சோபை நெளிப்புடன்

வெளி வந்தாள்.

ஆம்பல் புூத்த

அதரங்கள் நெகிழ

அன்றைய கடமைகள்

ஆற்ற வந்தாள்.

கூட்டைத் திறந்திட

கோழிக் குஞ்சுகள்

செட்டைகள் விரித்துச்

சிலிர்த்தன.

ஊட்டம் சேர்க்கும்

உணவை வேண்டி

அவளைச் சுற்றிச்

சூழ்ந்தன.

அவள்... .

இக்காவியத்தின் அவல்

கொறித்துப் பார்க்கவும்,

கொள்கை ஏற்றவும்,

இரசித்து நோக்கவும்,

இராச்சியம் காக்கவும்

மேதினி எழுந்த மேதை!

காவியம் நூல் வடிவில் தொடரும்.

மிகவும் நன்றாக இருந்தது வல்வை அக்கா,இது நீங்கள் உருவாக்கிய காவியமா அல்லது பிறிதொருவர் உருவாக்கியதா

யம்மு கண்டு பிடிச்சு காட்டிக் கொடுப்பமா?

வாங்கிக் கட்டப் போகிறீர் வரட்டும் அக்கா வல்வை!

யம்மு கண்டு பிடிச்சு காட்டிக் கொடுப்பமா?

வாங்கிக் கட்டப் போகிறீர் வரட்டும் அக்கா வல்வை!

இப்ப என்ன நான் என்ட டவுட்டை கிளியை பண்ண கேட்டேன்

:twisted: :twisted: :twisted:

யம்மு அக்கா ஏன் இந்த கோவம் கூழ்டவுன் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக இருந்தது வல்வை அக்கா,இது நீங்கள் உருவாக்கிய காவியமா அல்லது பிறிதொருவர் உருவாக்கியதா

இது என்னுடைய ஆக்கந்தான்...

உங்களுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் வந்தது என்று அறியலாமோ சகோதரி?

இது என்னுடைய ஆக்கந்தான்...

உங்களுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் வந்தது என்று அறியலாமோ சகோதரி?

இல்லை தெறியாமல் கேட்டு விட்டேன் மன்னிக்கவும்

:lol::lol:

யம்மு அக்கா ஏன் இந்த கோவம் கூழ்டவுன் அக்கா

சரி தங்கைச்சி நீங்கள் சொன்னால் சரி அக்காவுக்கு ஒரு இளநீர்

:oops: :oops: :oops:

  • 3 weeks later...

கவிதை நன்றாக உள்ளது வல்வைசகாரா

  • 2 weeks later...

ம்ம்ம் நன்றாக இருக்கு வல்வை சகாறா...வாழ்த்துக்கள்..அடுத்த பாகம்?

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் நன்றாக இருக்கு வல்வை சகாறா...வாழ்த்துக்கள்..அடுத்த பாகம்?

தூயா மேலே இணைத்திருப்பது 'வேங்கையன் பூங்கொடி" என்ற காவியத்தின், முதலாம் பாகத்தில் வரும் முதலாம் அங்கத்தின் ஆரம்பப் பகுதி மட்டுமே.

இதில் முதலாம் அங்கமே முழுமையாக இணைக்கவில்லை.

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடமும் இந் நிகழ்வு செப்டம்பர் 15 திகதி சிட்னியில் நடைபெறவுள்ளது,சிட்னி மக்களே உங்கள் பங்களிப்புகளை முன் வந்து செய்யுங்கள்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.