Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாயா நீ? பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு சாட்டையடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09-naaya-nee-public-urine-600.jpg

 

நாயா நீ? பொது இடத்தில், சிறுநீர் கழிப்பவர்களுக்கு சாட்டையடி!

 

நம் ஊரில்தான் பொது சுவரில் சிறுநீரில் கோலம் போடுவார்கள் பொதுமக்கள்.

அம்மா உணவகம் இருக்கும் அளவிற்கு கூட இங்கே பொது கழிப்பிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிறுகிராமங்களில் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் கூட பொது சுவற்றை நாறடித்து முகம் சுளிக்கச் செய்பவர்கள்தான் இங்கே அதிகம் உள்ளனர்.

 

இதுபோன்று பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களையும், சிறுநீர் கழிப்பவர்களைத் தடுப்பவதற்காக ஸ்வாமி படங்களை வரைந்து வைத்திருப்பார்கள்.

 

இல்லையெனில் அறுந்த செருப்பு, துடைப்பம் என கட்டி தொங்க விட்டிருப்பார்கள் அதையும் பார்த்து சில ஜென்மங்கள் திருந்தாமல் சிறுநீர் கழித்துச் செல்வார்கள்.

 

நாயா நீ?

அபராதம் விதித்தாகி விட்டது. என்னென்னவோ செய்தாகிவிட்டது. ஆனாலும் நம்மக்கள் திருந்தியபாடில்லை. சென்னையில் முக்கியமான தெரு ஒன்றில் நாய் காலை தூக்கி சிறுநீர் கழிப்பது போல படம் ஒன்றினை வரைந்து பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் நீ நாயா? என்கிற ரீதியில் வாசகமும் எழுதி வைத்துள்ளனர்.

 

ஏனெனில் நாய்கள்தான் கண்ட இடத்தில் சிறுநீர் கழிக்கும் என்கிற தொனியில் கேட்டுள்ளனர். இந்த படம் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.

 

வித்தியாசமான தண்டனை

சென்னையில் இப்படி என்றால் மும்பையில் கிளீன் இந்தியா என்ற தனியார் அமைப்பு ஒன்று பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது வேகமான நீரை பாய்ச்சி அவர்களை திக்குமுக்காட செய்து வருகின்றனர்.

இதற்கெனவே காவல்துறையினர் வைத்திருப்பது போன்ற தண்ணீர் நிரப்பிய லாரி ஒன்றை இந்த அமைப்பு வாங்கியுள்ளது. இந்த லாரி, மும்பையின் முக்கிய இடங்களை வலம் வருகிறது.

 

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களை கண்டால் போதும் உடனடியாக அவர்கள் மீது வேகமாக நீரை பாய்ச்சி அவர்களை நிலைதடுமாற செய்துவருகிறது. இதனால் மும்பையில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களின் பாடு பெரும்பாடாகி வருகிறது.

 

சிறுநீர் கழிக்க என்று கட்டணக்கழிவறைகள் மற்றும் இலவச கழிவறைகள் பலவற்றை அரசு அமைத்து கொடுத்திருந்தபோது, அவற்றை பயன்படுத்தாமல் விலங்குகள் போன்ற சாலையில் உள்ள சுவரோரங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கவே நாங்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்கின்றனர் இந்த அமைப்பினர்.

இந்த நடவடிக்கை சட்டப்படி சரியா அல்லது தவறா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து இந்த நடவடிக்கையை செய்தால் கண்டிப்பாக பொதுமக்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

முதலில கழிவறைகளை கட்டுங்கள், கட்டின கழிவறைகளை ஆரோக்கியமாக பராமரியுங்கள் 

 

அதுக்குப்பிறகு தண்டனையை கொடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் சொன்னாலும் காத்தோட்டமாய் நிண்டு ஒருசில அலுவலை முடிக்கிற சந்தோசம்.....சொல்லி வேலையில்லை.... :D

  • கருத்துக்கள உறவுகள்

09-naaya-nee-public-urine-600.jpg

 

ஒரு பண்பட்ட அல்லது நாகரீகமடைந்ததெனத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு சமுதாயம் வெட்கப் பட வேண்டிய ஒரு அறிவித்தல் இதுவாகும்!

 

சுருங்கி வருகின்ற உலகத்தின் மற்றைய பகுதிகளிலிருந்து வருபவர்கள், இதனை வைத்துத் தான் தமிழர்களின் ' நாகரீகத்தை' எடை போடுவார்கள்!

 

மிகவும் 'இழிவான இரசனையை' இந்த அறிவித்தல் ஏற்படுத்தும்!

 

இந்த விடயங்களைப் பழக்கவழக்கங்களாலும், சமுதாய அறிவூட்டல்களாலும், மட்டுமே மாற்ற முடியுமன்றித் தண்டனைகளால் மாற்ற முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

09-naaya-nee-public-urine-600.jpg

 

ஒரு பண்பட்ட அல்லது நாகரீகமடைந்ததெனத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு சமுதாயம் வெட்கப் பட வேண்டிய ஒரு அறிவித்தல் இதுவாகும்!

 

சுருங்கி வருகின்ற உலகத்தின் மற்றைய பகுதிகளிலிருந்து வருபவர்கள், இதனை வைத்துத் தான் தமிழர்களின் ' நாகரீகத்தை' எடை போடுவார்கள்!

 

மிகவும் 'இழிவான இரசனையை' இந்த அறிவித்தல் ஏற்படுத்தும்!

 

இந்த விடயங்களைப் பழக்கவழக்கங்களாலும், சமுதாய அறிவூட்டல்களாலும், மட்டுமே மாற்ற முடியுமன்றித் தண்டனைகளால் மாற்ற முடியாது!

 

 

சும்மா  போய்க்கொண்டிருப்போம்

இதனைக்கண்டதும  முதலில் வருவது என்ன....??? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு கோப்பிக்கடை (coffee shop chain) தமிழ்நாட்டில் பிரபலமாகி வருவதாக ஒரு ஓட்டுநர் சொன்னார். நானும் கண்டேன். ஆனால் அதன் பெயர் மறந்துவிட்டது. இவற்றில் இலவச கழிப்பிடங்களை அமைத்தால் பலன் கிட்டும். பராமரிப்பு செலவை வாடிக்கையாளரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா  போய்க்கொண்டிருப்போம்

இதனைக்கண்டதும  முதலில் வருவது என்ன....??? :lol:

 

நீங்கள் நினைக்கிற 'அது' தான்! :D

 

படம் மட்டுமல்ல... அந்த 'வாசமே'... அலுவலை இங்கேயே முடிச்சிட்டுப் போவம்... இனி 'ரீகல்' தியேட்டருக்குள்ள படம் முடியும் மட்டும்.. இரண்டு மனித்தியாலத்துக்குக் குந்திக் கொண்டிருக்க வேண்டும்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு கோப்பிக்கடை (coffee shop chain) தமிழ்நாட்டில் பிரபலமாகி வருவதாக ஒரு ஓட்டுநர் சொன்னார். நானும் கண்டேன். ஆனால் அதன் பெயர் மறந்துவிட்டது. இவற்றில் இலவச கழிப்பிடங்களை அமைத்தால் பலன் கிட்டும். பராமரிப்பு செலவை வாடிக்கையாளரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

Cafe Coffee Day?

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

autohof-toilette-208x300.jpg

 easyentrance1.jpg

 

ஒரு சில நாடுகளில் இருப்பது போல் பொது மலசலகூடங்களை தனியார் மயப்படுத்தி கட்டணங்களை அறவிட்டால் நாடும் நாறாது. மக்களும் அவதிப்படமாட்டார்கள். 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

autohof-toilette-208x300.jpg

 easyentrance1.jpg

 

ஒரு சில நாடுகளில் இருப்பது போல் பொது மலசலகூடங்களை தனியார் மயப்படுத்தி கட்டணங்களை அறவிட்டால் நாடும் நாறாது. மக்களும் அவதிப்படமாட்டார்கள். 

 

 

காசு கொடுத்து, நோய் வாங்கும் அவலம்.

 

திண்டுக்கல் நகர் மற்றும் தாலுகா பஸ்ஸ்டாண்ட்களில் உள்ள கட்டண கழிப்பறைகளை உள்ளாட்சி நிர்வாகங்களிடம் இருந்து கான்ட்ராக்ட் எடுப்பவர்கள் வசூல் ஒன்றே குறியாக இருக்கின்றனர். இந்த கழிப்பறைகளில் சுகாதாரம் பற்றி கண்டு கொள்வதில்லை. இலவச கழிப்பிடங்கள் மிகவும் மோசமாக இருப்பதால்தான் பயணி கள் கட்டணகழிப்பறைகளை நாடு கின்றனர். ஆனால் அங்கும் கால் வைக்க முடியாத அளவிற்கு அசுத்தங்கள் நிறைந்து காணப்படுகிறது. சுகாதார சீர்கேட்டில், இலவச கழிப்பிடங்களைப் போலவே கதவுகள் இல்லாத கழிப்பறை, உடைந்த கோப்பைகள், துர்நாற்றம் வீசும் சுற்றுப்புறம், சுத்தம் செய்து பல மாதங்களான தரைகளாக உள்ளது. இவற்றிற்கு காசு மட்டும் சரியாக வாங்கும் கான்ட்ராக்ட்காரர்கள், பினாயில், பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்வதில்லை. இதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் யாரும் கண்டு கொள்வதில்லை. கட்டண கழிப்பறைக்கு காசு கொடுத்து செல்பவர்கள் நோயை வாங்கி வரும் அவலம் நீடிக்கிறது. சுகாதாரம் இல்லாமல் கட்டண கழிப்பறை நடத்துபவர்களின் கான்ட்ராக்ட்டை ரத்து செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர

 

large_126194.jpg

 
பாதாள வழி என்று யாரும் இறங்கி விடாதீங்க...செப்டிக் டேங்க் குழியைதான் திறந்து கண்காட்சி போல் வைத்துள்ளனர். - திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்

gallerye_163053721_126194.jpg

 
இது மாதிரி துர்நாற்றத்தை அள்ளித்தரும் துர்பாக்கியம் வேறு எங்கும் கிடையாது.... - திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்.

gallerye_163121953_126194.jpg

 
சேதமடைந்தாலும் வாங்கும் கட்டணத்தில் குறைவில்லை - பழநி பஸ் ஸ்டாண்ட் கட்டன கழிப்பறை.

gallerye_163148352_126194.jpg

 
ஓபன் மேட்டர் என்பதால் தான் சேதமடைந்த கதவையும் கண்டு கொள்ளவில்லை - ஒட்டன்சத்திரம் மார்கெட் கழிப்பறை.

gallerye_16493967_126194.jpg

 
உள்ளே செல்பவர்களை தேங்க வைக்கும் தேங்கிய சாக்கடை கழிவு நீர் - ஒட்டன்சத்திரம் மார்கெட் கழிப்பறை நுழைவு வாயில்.

gallerye_165044201_126194.jpg

 
காசு கொடுத்து சென்றால் நோயை வாங்கி வரலாம்... - திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட்.

gallerye_165120480_126194.jpg

 
உன் குத்தமா...என் குத்தமா..சுத்தம் செய்யாத யாரை நான் குத்தம் சொல்ல.. - ஒட்டன்சத்திரம் மார்கெட் கட்டண கழிப்பறை.

gallerye_165437885_126194.jpg

 
அவசரத்தில் செல்பவர்களுக்கு கதவு எதற்கு என்று நினைத்து விட்டார்கள் போல. -பழநி பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறை.
 
நன்றி தினமலர்.
 
#####
 
கட்டண கழிப்பறையை ஒப்பந்தம் எடுத்து நடத்துபவர்கள் திருந்தாத வரை... மக்களும், அதற்குள் ஏன் போவான் என்று, வெளியிலேயே... தமது காரியங்களை முடிக்கப் பார்ப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.