Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது மக்களின் அழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் டக்ளஸ் – சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
EPDPTNA.jpg
எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் டக்ளஸ் – சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது.

குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

 

http://tamil24news.com/news/?p=47535

 

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அப்போ  புலிகள் காரணமில்லை...

நன்றி  மாமா...

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு 5 வருஷம் போக புலிக்காச்சல் குறைந்து இந்த புதிய நோய்தான் பலரை பீடிக்கும்.

இங்கு காட்டு கத்து கத்தியது டக்லஸ் என்றே காணோளி பதிவு கூறுகிறது. காட்டு கத்து கத்திய டக்லஸை அடக்கிவைக்க முடியாததால் திரு விக்கினேஸ்வரன் வெளியேறினார். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சிறீதரன் கத்தியது என்ன வீட்டுக்கத்தலா துல்ஸ்?

சின்னகடை மீன்யாவாரியும், வாங்க வந்தவரும் மாரி இருவருமே காட்டுக்கத்தல் கத்தினர் என்பதே உண்மை.

இருவரையும் கைகளால் அடக்க முயற்சித்து முடியாது போகவே சீவி வெளியேறுகிறார்.

நிச்சயமாக இல்லை கோசான். காணாமல் போனோர் தொடர்பாக திரு ஸ்ரீதரன் ஏதோ கூறவருகிறார். அதை தடுத்து டக்லஸ் கத்துவது தெளிவாக தெரிகிறது. சிவியை உயர்த்துவதற்காக மற்றவர்களை  தாக்காதீர்கள்.  ஒரு மக்கள் பிரதிநிதி மக்களுக்காக விவாதத்தில் ஈடுபடுவது தவறல்ல. குரலை உயர்த்தி ஸ்ரீதரன் கூறுவதை கேட்கவிடாமல் டக்லஸ் கத்துகிறார். 

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.