Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ தொடுவதற்கோ அனுமதிக்க மாட்டேன்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

Ms%20manifasto3_CI.jpg

 

 

 

“இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள்துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான்அனுமதிக்கமாட்டேன்”  

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டநடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒருபிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோஅல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன்  எனஎதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டு;ள்ளார்

தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக எதனையும் தனதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் குறிப்பிடாததும்குறிப்பிடத்தக்கது.

அவர் 100 நாட்களுக்குள் புதிய தேசம் திட்டத்தில்குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் வருமாறு

1994 இலிருந்து நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறையைநீக்குவதாக மக்களுக்கு உறுதியளித்துவந்துள்ள போதிலும்,அதனை அரசமைப்பு ரீதீயாக மேற்கொள்ள முடியவில்லை.நாடாளுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் காணப்பட்டபோதிலும்,அதனால் கடந்த 23 வருடங்களாக அதனைநிறைவேற்ற முடியவில்லை.

பிரதான கட்சியின் தலைவரான ஜனாதிபதியே அதற்கானதலைமைத்துவத்தை வழங்கவேண்டும், அதற்கு மூன்றில்இரண்டு பெரும்பான்மை அவசியம்,இதற்காக ஜனாதிபதிமுக்கிய அரசியல் கட்சிகளுடன்  உடன்பாட்டிற்குவரவேண்டும்இந்த பணியை நிறைவேற்றவதற்காகவே நான்பொதுவேட்பாளராக போட்டியிட முன்வந்துள்ளேன்.

என்னால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினதுஆதரவை பெறமுடியும்,ஐக்கிய தேசிய கட்சி இதற்கான ஒப்பந்தமொன்றில்என்னுடன் கைச்சாத்திட்டுள்ளது.

 

ஜே.விபி 1994 முதல் எங்களுடைய கட்சியுடன் இது தொடர்பாகஇணக்கப்பாட்டை கொண்டுள்ளதுஜாதிஹ ஹெலஉறுமயவும் இது தொடர்பான உடன்பாட்டிற்குவந்துள்ளது.ஆகவே நான் இது குறித்து ஏனைய கட்சிகளுடன்ஆலாசித்து 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவேன்,

நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கானஆவணங்களாக மாதுளவாவே சோபித தேரரின் நீதீயானசமூகத்திற்கான இயக்கத்தால் முன்வைக்கப்பட்டஆவணங்களையும்அத்துரலிய ரத்தினதேரரின்தலைமையிலான குழுவால் முன்வைக்கப்பட்டஅரசமைப்பின் 19 திருத்தத்திற்கானயோசனைகளையும்,ஐக்கிய தேசிய கட்சியால்முன்வைக்கப்பட்ட யோசனைகளையும் நான் பின்பற்றுவேன்.

புதிய முறையின் கீழ் நாடாளுமன்றமே முக்கியம்பெறும்,ஜனாதிபதி நாட்டின் ஏனைய பிரஜைகளை போன்று சட்டத்தின்முன் சமனானவராக காணப்படுவார்சர்வஜனவாக்கெடுப்புடன்மாத்திரமே மாற்றப்படவேண்டிய அரசமைப்புமாற்றங்களில்நான் கைவக்கமாட்டேன்நாட்டின் இறமை , பாதுகாப்பு மற்றும்ஸதிரத்தன்மைக்கு ஊறுவிளைவிக்க கூடிய அரசமைப்புமாற்றங்கள் எதனையும் செய்யமாட்டேன் ,

நாட்டின் தேர்தல் முறையிலும் மாற்றங்கள்செய்யப்படும்,அதேவேளை நாட்டின் நல்லாட்சியைகண்காணிப்பதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும்

 

வெளிவிவகார கொள்கை

2009 இராணுவவெற்றிக்கு பின்னர் எமது வெளிவிவகாரகொள்கை முழுமையான குழப்ப நிலைக்குதள்ளப்பட்டுள்ளமை முழு உலகும் அறிந்த விடயம்.

முறையான வெளிவிவகார கொள்கை எம்மிடத்தில் இல்லாதஅதேவேளை இராஜதந்திர செயற்பாடுகள் குறித்த அறிவும்திறமையும் உள்ளவர்கள் எமது இராஜதந்திர சேவைக்குநியமிக்கப்படவில்லைஅவர்கள் தமது கிராமங்களில்செயற்படுவது போன்று வெளிவிவகார செயற்பாடுகளைமுன்னெடுக்க முயல்கின்றனர்.இலஞ்சத்தையும்,காடைத்தனத்தையும் பயன்படுத்துகின்றனர்.இதன் காரணமாகஇலங்கை குறித்த சர்வதேஅபிப்பிராயத்தில்வீழ்ச்சியேற்பட்டு;ள்ளதுநாட்டை உடனடியாக இதிலிருந்துவிடுவிக்கவேண்டும்.

இதற்காக தேசத்தின் கருத்திற்கேற்ப நாட்டின் வெளிவிவகாரகொள்கை உருவாக்கப்படும்,நூறு நாட்களுக்குள்வெளிவிவகார சேவைக்கு அரசியல்ரீதீயாக நியமனம்பெற்றஅனைவரினது சேவையும் இரத்துச்செய்யப்படும்,ஆசியாவின்முக்கிய நாடுகளுடன் சமமான உறவுஏற்படுத்தப்படும்.இந்தியாவின் பன்முகத்தன்மையைகருத்தில்கொண்டாதாக எமது இந்திய கொள்கைஅமைந்திருக்கும்.இந்தியாவிடம் சார்ந்திருக்காத அதேவளைஅதற்கு விரோதமற்ற கொள்கை பின்பற்றப்படும்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டநடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒருபிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோஅல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114594/language/ta-IN/article.aspx

 


அப்படியானால் யுத்தக் குற்றம் புரிந்த அரச பயங்கரவாதிகளின் மீது சர்வதேச விசாரணை இல்லை என்கின்றார் அடுத்த இனவாதி 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் நீங்களே செய்வீங்களா ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுமொத்த ஆப்பு 

எல்லாத்தையும் நீங்களே செய்வீங்களா ???

இதே கொமன்ற் எழுதவேண்டும் என்றே வந்தேன். அதற்குள் நீங்கள் முந்திவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகள் சீனா, பாகிஸ்தான் - ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனும் ஒரே விதமான உறவுகள் பேணப்படும்:-

Ms%20RW%20manifasto_CI.jpg

 


இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகள் பேணப்படும் சீனா, பாகிஸ்தான் - ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனும் ஒரே விதமான உறவுகள்

இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகள் பேணப்படும் என எதிர்க்கட்சிகள் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான கொள்கைகளையோ அல்லது இந்தியாவை அதிகம் தங்கியிருக்கும் கொள்கைகளையோ புதிய அரசாங்கம் பின்பற்றாது என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனும் ஒரே விதமான உறவுகள் பேணப்படும் என ஆவணத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்து வரும் ஆசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளுடனும் சமமான உறவுகள் பேணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2009 இராணுவவெற்றிக்கு பின்னர் எமது வெளிவிவகார கொள்கை முழுமையான குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை முழு உலகும் அறிந்த விடயம்.


முறையான வெளிவிவகார கொள்கை எம்மிடத்தில் இல்லாத அதேவேளை இராஜதந்திர செயற்பாடுகள் குறித்த அறிவும் திறமையும் உள்ளவர்கள் எமது இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்படவில்லை. அவர்கள் தமது கிராமங்களில் செயற்படுவது போன்று வெளிவிவகார செயற்பாடுகளை முன்னெடுக்க முயல்கின்றனர். இலஞ்சத்தையும், காடைத்தனத்தையும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இலங்கை குறித்த சர்வதே அபிப்பிராயத்தில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது. நாட்டை உடனடியாக இதிலிருந்து விடுவிக்கவேண்டும்.


இதற்காக தேசத்தின் கருத்திற்கேற்ப நாட்டின் வெளிவிவகார கொள்கை உருவாக்கப்படும். நூறு நாட்களுக்குள் வெளிவிவகார சேவைக்கு அரசியல்ரீதீயாக நியமனம்பெற்ற அனைவரினது சேவையும் இரத்துச்செய்யப்படும். ஆசியாவின் முக்கிய நாடுகளுடன் சமமான உறவு ஏற்படுத்தப்படும். இந்தியாவின் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டாதாக எமது இந்திய கொள்கை அமைந்திருக்கும். இந்தியாவிடம் சார்ந்திருக்காத அதேவளை அதற்கு விரோதமற்ற கொள்கை பின்பற்றப்படும்.


பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114601/language/ta-IN/article.aspx

போர் வெற்றிக்குப் பங்களித்த அனைவரையும் பாதுகாப்பேன் – மைத்திரி வாக்குறுதி   DEC 19, 2014 | 15:27by கார்வண்ணன்in செய்திகள்

maithri2-300x200.jpgதாம் வெற்றி பெற்றால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் எவரையும் முன்னிறுத்த அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆனால், போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள அவரது தேர்தல் அறிக்கையில், “அனைத்துலக நீதிமன்றத்தை உருவாக்கும் பிரகடனத்தில் சிறிலங்கா கையெழுத்திடவில்லை என்பதால், அதற்கு நாம் கட்டுப்பட வேண்டியதில்லை.

எனினும், உள்நாட்டில் சுதந்திரமான நீதிமன்றத்தின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு பங்காற்றிய ஒவ்வொருவரையும், அனைத்துலக நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜபக்ச அரசாங்கம் சீனாவுக்கு நெருக்கமான கொள்கையை கடைப்பிடிப்பதால், இந்தியாவின் கோபத்துக்கு ஆளாக நேரிட்டுள்ளது.

அதிபர் தேர்லில் வெற்றி பெற்றால், சமநிலையான வெளிவிவகாரக் கொள்கை கடைப்பிடிக்கப்படும்.

அனைத்துலக சமூகத்திடம் இருந்து சிறிலங்கா திடீரென தனித்து விடப்பட்டுள்ளது.

ஆசியாவின் பிரதான நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான், மற்றும் ஜப்பானுடன் சமமான உறவுநிலை பேணப்படும்.

ஜனநாயக மறுசீரமைப்புகளை மேற்கொள்ள கொழும்பு மறுப்புத் தெரிவித்ததால், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விலக்கிக் கொள்ளப்பட்ட ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு நடத்தப்படும்.

ஏற்றுமதி மற்றும் மேலதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு இது அவசியம்”  கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2014/12/19/news/1966

 

  • கருத்துக்கள உறவுகள்
 ஸ்ரீலங்கா தேசத்தின், சிங்கள இனத்தவரின் தோ்தல் இது. சிங்களவரை எப்படி கவா்வது? என்பதுதான் அவா்களது கவலை. தமிழரைப்பற்றி அவா்கள் ஏன் சிந்திக்கப்பாேகிறாா்கள்? என்று ஆயுதப்பாேராட்டம் மரணித்ததாே அன்றே தமிழா்களும் மவுனமாக்கப்பட்டு விட்டாா்கள். இழுத்தபாட்டுக்கெல்லாம் இழுபட வேண்டியவா்கள்தான்.
கதிரை ஏறுமட்டும் கெஞ்சுவாா்கள் காெஞ்சுவாா்கள். அதன் பிறகு சா்வாதிகாரியாகிவிடுவாா்கள். அதிகாரத்தை சாெந்தமாக்க புதுப்புதுச்சட்டத்தை இயற்றுவாா்கள். அதற்கு யாரின் அங்கீகாரமும் தேவையில்லை. தலைவரிட்ட படிச்ச பாடத்தை இலகுவாக மறக்கமாட்டாா் மைத்திரி. பாவம் மகிந்த பக்கத்து நண்பா் முஷாரப்பின் நிலையை நினைச்சுப்பாத்திருக்கலாம். காலம் கடந்தது பாேச்சு அழுதென்ன லாபம். சண்டித்தனம் கைகாெடுக்குமாே? அடியைப் பாேல அண்ணன் தம்பி உதவாது. உதறிப்பாேட்டு வெளிக்கிடேக்கை எதுக்கும் தயாராய்த்தானே வெளிக்கிட்டிருப்பாா், மைத்திரி.
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அதையும் மீறி தொட்டால் ஒலக வல்லரசான சொறி லங்கா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்காது என்றும் எச்சரிக்கிறேன் என்று பிட்ட போட்டீங்க எண்டா எல்லா நாடுகளும் பயந்து நடுங்குமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.