Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரகசியம் ரகசியமா போய் மகிந்த ராஜபக்ஷவையும் , கோத்தாவையும்.... டக்கி மாமாவையும் ரகசியம் ரகசியாமாய் தங்கள் சுயநல தேவைகளுக்காக சென்று சந்தித்து வரும் புலிகளின் முன்னாள் தீவிர ஆதரவாளர்களாக இருந்த புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர்களை விட வெளிப்படையாக டக்கியை சந்தித்த பாரதி ராஜா என்ற அனைவருக்கும் பொதுவான கலைஞன் பருவாயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ரகசியம் ரகசியமா போய் மகிந்த ராஜபக்ஷவையும் , கோத்தாவையும்.... டக்கி மாமாவையும் ரகசியம் ரகசியாமாய் தங்கள் சுயநல தேவைகளுக்காக சென்று சந்தித்து வரும் புலிகளின் முன்னாள் தீவிர ஆதரவாளர்களாக இருந்த புலம் பெயர் வாழ் ஈழத்தமிழர்களை விட வெளிப்படையாக டக்கியை சந்தித்த பாரதி ராஜா என்ற அனைவருக்கும் பொதுவான கலைஞன் பருவாயில்லை

 

எனக்கு இந்த முன்னாள் புலிகள்

முன்னாள் புலித்தீவிரவாதிகள்

என்பதில் உடன்பாடில்லை சுண்டல்

 

முன்னாள் என்றாலே புலியை  எடுத்துவிடவேண்டும்

இதென்ன ஓய்வூதியத்திட்டமா முன்னாள்  அதிபர்

முன்னாள் ஐனாதிபதி எனச்சொல்ல....??

  • கருத்துக்கள உறவுகள்

பாரதிராஜாவை விடுங்கோ, இப்பொழுது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளுக்கு (பாடசாலை, ஊர்) விரும்பியோ, விரும்பாமலோ இராணுவத்தளபதி, அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குபவர்கள் அழைக்கப்படுகிறார்கள்

சுட வெளிக்கிட்ட தோசை கருகிவிட்டது இனி எப்படியாவது போட்டு பிரட்டுங்கோ  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வடக்கில் தமிழருக்கே சுதந்திரம்  இல்லை. அங்கிருக்கும் தமிழ்க்குடிமகனே தனது பிறந்த நாளைக்கூட சுதந்திரமாக காெண்டாட முடியாத நிலை. வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவா்கள் வடக்கிற்குப்பாேகத் தடை. இருந்தாலும் சிலரை அரசாங்கம் அனுமதிப்பதற்கு காரணம் தாங்கள் தாராளமானவா்கள் என்றாெரு நாடகம், தமிழா்களால் நேசிக்கப்படுபவா்களை வைத்து தமிழா்களை வளைத்துப்பாேடும் திட்டம். வந்தவா், அரசு சாா்பானவரை சந்திக்க மாட்டேனென அடம் பிடித்தால், உடனே நாடு கடத்தல். அழையா விருந்தாளியாய் வந்து கைகுடுப்பவரை பாரதிராஜா என்ன செய்ய முடியும்? அவா் வராமலே இருந்திருக்கலாம். அவா்களுக்கு தேவை பாரதிராஜாவின் கைலாகு காெடுக்கும் படம் மட்டுமே. தங்கள் கருத்துக்கு சாட்சி அவரது படம். எமது அவசர புத்தியைப் பாவித்து எமது நண்பனையும் எமக்குப் பகையாளியாக்கும் தந்திரம். அவா்களுக்கு தற்பாேது பிரச்சாரத்திற்கு தேவையானவா் பாரதிராஜா. ஆகவே பாரதிராஜா சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி தான் பயன்பெற வேண்டும். நாமும் அவரைப் பயன்படுத்தி காரியம் சாதிக்க வேண்டும். இல்லையாயின், அவரைப்பற்றி அலட்டிக்காெள்ளாமல் விடுங்கள் எல்லாமே புஸ்வாணமாகிப்பாேகும். இந்தச்  சந்தா்ப்பம் பாரதிராஜாவுக்கு இலங்கை, இந்திய தமிழா்களின் வெறுப்பை பெற காரணமாகலாம். காலம், நேரம் பாா்த்து பயணத்தை தவிா்த்திருக்கலாம். அறிந்தாே, அறியாமலாே வலையில் விழுந்து விட்டாா். பாவம் பாரதிராஜா.

  • தொடங்கியவர்

6913_content_22-1419229043-bharathiraja-

 

நான் எதிர்பாராத போது திடீரென்று வந்து என்னைப் பார்த்து படம் எடுத்து வெளியிட்டுவிட்டார் டக்ளஸ் தேவானந்தா. இந்த வயதில் சோரம் போவேனா, என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இலங்கை சென்றுள்ள இயக்குநர் பாரதிராஜா, அங்கு சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்த படங்கள் இணையதளங்களில் வெளியாகின. இது பலவிதமான கேள்விகளை எழுப்பியதோடு, பிரபாகரனுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்திப்பதா என்ற கண்டனங்கள் எழவும் காரணமாக அமைந்தது.

 

இந்த நிலையில் இயக்குநர் வ கவுதம் இதுகுறித்து ஒரு விளக்கம் அனுப்பியுள்ளார். அதில், "உலகமுழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் என் உயிருக்கு நிகரான தமிழ் உறவுகளுக்கு வணக்கம். உங்களை போலவே இயக்குனர். பாரதிராசா அவர்களின் இலங்கை பயணத்தை கண்டு நானும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் சொன்னது போல "தவறு யார் செய்தாலும் அது தவறு தான்". இயக்குனர். பாரதிராசா அவர்களிடம் உடனடியாக நான் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொது "இந்த வயதில் நான் சோரம் போவேனா" என்று பேச தொடங்கி, என் இனத்திற்கும் நான் பெரிதும் மதிக்கும் தம்பி பிரபகரனுக்கும் ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன்.

 

சம்மந்தமே இல்லாமல் நான் இருக்கும் இடத்தை தேடிவந்து டக்ளஸ் தேவானந்தா என்னை சந்தித்த போது விருப்பம் இல்லாமலேயே பேச நேர்ந்தது. மீனவர் பிரச்சனை பற்றிப் பேச ஆரம்பித்த உடனே அரசியல் இப்போது பேச வேண்டாமே என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர்களது ஆட்கள் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். ஒரு வழியாக அவரை பேசி அனுப்பிவிட்டு, அதன் பிறகு சென்று முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களையும், அமைச்சர் ஐயங்கரன் நேசன் அவர்களையும் சந்தித்தேன்.

 

இவர்கள் இருவரையும் சந்திபதற்குள் அவசர அவசரமாக டக்ளஸ் தேவானந்தா குழு எடுத்த புகைபடத்தை வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். அது மட்டும் அல்ல என்னை அழைத்தது லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தை பராமரிக்கும் மரியாதைக்குரிய கோபால் அவர்கள்தான். அவர்களை தவிர என் இனத்திற்கு எதிரானவர்களின் அழைப்பின் பேரில் நான் இலங்கைக்கு செல்லவில்லை.

 

என்னுடைய தாய் தமிழ்நாட்டின் மண்ணை மிதிபதற்க்குள் நான் உயிராய் நேசிக்கும் உலகமெங்கும் வாழும் என் தமிழ் உறவுகளிடம் இந்த பயணத்தை பற்றிய விளக்கத்தை சொல்லிவிட்டுத்தான் இலங்கை மண்ணில் இருந்து புறப்படுவேன், என் உயிரே போனாலும் சரி," என்ற வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டார். முள்ளிவாய்க்கால் இனபடுக்கொலை நடந்த காலகட்டத்தில் இயக்குனர் பாரதிராசா  என் இனத்தை அழிக்க காரணமாய் இருந்த இந்திய அரசு கொடுத்த தேசிய விருதையும், பத்மபூசன் விருதையும் பல்லாயிர கணக்கான தமிழ் உறவுகளின் முன்னால் இரு கைகளிலும் ஏந்தி உடைக்கவா இல்லை திருப்பி இந்திய அரசிடமே அனுப்பவா என்று கேட்டவர்.

 

ஆகவே அவரை பற்றி தீர ஆராய்ந்து பார்க்காமல் விமர்சனம் செய்வதை சிறிது யோசித்து செய்யுங்கள் என்று என் தாய் தமிழ் உறவுகளிடம் தாழ்மையோடும், உரிமையுடனுடம் கேட்டுகொள்கிறோன். அதே நேரத்தில் தவறு நடந்திருந்தால் என் தாய்க்கும், தாய் மொழிக்கும் சமமான என்னுடைய தமிழீழ் தேசிய தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் சொன்னது போல சமரசம் இல்லாமல் விமர்சனம் செய்வோம்,". இவ்வாறு அதில் கூறியுள்ளார்

 

http://thinakkural.lk/article.php?local/llweptqiel90786c7de1f27f25069eosjr7de61a6daddfffbe05c058ozyo8#sthash.DnZTRr1n.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.