Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா?

நாகரீக வளர்ச்சியில் உலகம் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், மானுடம் பற்றி எல்லாவிடத்திலும் எல்லோரும் பேசுகிறார்களே! புலம்பெயர் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இவை வேதனைச் சிரிப்பைத் தரவில்லையா?

பிறந்து வளர்ந்து வாழ்ந்த மூதாதையர் புூமியில் இனவாதப் பேய்களின் ஆதிக்கத்தால் மனிதம் மறுக்கப்பட்டு ஆயுதமுனைகளால் உறவுகள், உடலங்கங்கள், வாழ்விடங்கள் இயல்பு நிலை இழந்து வாழ்வுக்கான தேடலில் புூமித்திசையெங்கும் அகதியெனும் முகத்துடன் அவலப்படும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் மனிதத்தின் பெருமையும், பெறுமதியும் புரியாமலா இருக்கும்?

மானுடம் பேசும் ஆதிக்கசக்திகள் மனிதப்புதைகுழிகளை உற்பத்தி செய்தவர்களோடே கைகுலுக்குகிறார்களே! மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா?

அல்லது புலம்பெயர்ந்து வாழும் எம்மினத்தின் தாயகப்பற்று பலவீனமாகி விட்டதா?

கந்தகம் விற்கும் கனவான் தேசங்களுக்கு கருகி சிதையும் எங்கள் இனத்தின் வலிதெரிய நியாயமில்லை.

பேரம் பேசி விற்கும் ஆயுதவளங்கள் எங்கள் மண்ணில் நிறைக்கப்போகும் பிணக்குவியல்களைப்பற்றி விற்பனையாளர் அறிய ஆர்வப்படவா போகிறார்கள்?

இயற்கை எழில்கொஞ்சும் எங்கள் புூமியின் மரஞ்செடியெல்லாம் பரட்டையாக மெல்ல மெல்ல உயிர்ப்பைத் தொலைத்துக் கொண்டிருப்பது பற்றி.... எங்கள் தேசத்தின் மண்ணினை ஆய்வு செய்தால் அது தன்னுள் கலந்திருக்கும் கந்தக அமிலத்தின் கனதியைச் சொல்லுமென்பது எனக்கும், உனக்கும் மட்டும் தெரிந்தால் போதுமா?

எப்போது உலகப்பரப்புகளில் சிங்கள இனவாதிகளுக்கு ஆயுதங்களையும், நிதியுதவிகளையும் கொடுக்காது நிறுத்தக்கோரி கிளர்ந்தெழப் போகிறோம்?

வடக்கிலும், கிழக்கிலும் தமிழினத்தின் மேல் போரையும், பொருளாதாரத் தடையையும் விதித்து சிறுகச் சிறுக எம்மினத்தைச் சாகடித்துக்கொண்டிருக்கும் இதேவேளை மற்றைய பகுதிகளில் வெளிநாட்டு; உல்லாசப்பயணிகளின் களியாட்டங்களில் உண்மைகளை மூடிமறைத்து வேசம் போட்டு விவேகமாக வெளியுலகை நோக்கும் இலங்கை அரசின் முகமூடியை எப்போது கிழித்தெறியப் போகிறோம்?

அரச பயங்கரவாதம் நிறைந்த நாட்டிடையே பெரும்பெரும்

முதலீடுகளை செய்து எம்மினத்தின் அழிவுக்கு ஆதரவுத்தோள் கொடுக்கும் உண்மைநிலை புரியா அந்நிய அப்பாவித்தனங்களுக்கு எப்படிப் புரியவைத்து எம்மினத்தை பாதுகாக்கப் போகிறோம்?

பட்டிக்குள் அடைபட்ட மந்தைகளைப்போல் யாழ்குடாநாட்டிற்குள் மக்கள் அவலப்படும் இன்றையகாலங்கள் எப்படி உலகத்தின் கண்களுக்குத் தெரியாமல் போகிறதோ? உண்ண உணவின்றி ஒரு பிடி அரிசிகூட பெற வழியின்றி நஞ்சை உண்டு உயிரை மாய்த்த குடும்பம் உனக்கும், எனக்கும் சொன்னது என்ன ஊர்ப்புதினமா? உக்கிரமான இராணுவ வக்கிரத்தின் மத்தியில் புசிக்க ஒருவாய் ஊணின்றி ஒட்டி உலர்ந்து சாவதைக் காட்டிலும் விசத்தை உண்டு உயிரை மாய்ப்பது விவேகம் என்பதையா? இது எதை உணர்த்துகிறது?

புலம்பெயர் உறவுகளான எங்கள் மேல் ஏற்பட்ட அவநம்பிக்கையை அல்லவா.. குறிப்பெடுத்துக் காட்டுகிறது.

களத்தில் நின்று எங்களைக்காக்க வீர்ப்புதல்வர்களும்,

'அதே சமயம் வெளிப்புலத்திருந்து எங்களைக் காக்க எங்களின் விடியலுக்காய் ஒவ்வொரு தேசத்தின் மனக்கதவங்களையும் திறந்து எங்கள் தேசத்தில் எங்களுடைய வாழ்வுக்கான அங்கிகாரத்தை வழங்கச் சொல்லி சிங்களத்தின் செருக்கடக்குவீர்கள் நீங்கள் உள்ளீர்கள்! நீங்கள் உள்ளீர்கள்!"

என்ற எம்மினத்தின் எதிர்பார்ப்பை உடைத்தெறிந்து விட்டோமா? நீயும், நானும் நேற்றைய இரணங்களை மறந்துவிட்டோமா? கல்வியைப் பறிகொடுத்தோம், கட்டிளம் பருவத்தில் இராணுவக்கரங்களில் சிதைவுற்றோம், உறவுகள், அயலவர், கண்ணெதிரே துடித்திறந்த காட்சியெல்லாம் காலாவதியாகி நினைவு பதிவிலிருந்து காணாமல் போய்விட்டதா? ஷெல் தந்த தழும்புகளையும், குருதிச் சுற்றோட்டத்தில் குலவித்திரியும் கந்தகத் துகளையும் காலம் மறக்கடித்து விட்டதா?

அல்லது புலம்பெயர் வாழ்வியல் தந்த சுகம் இருட்டுக்குள் தள்ளிவிட்டதா?

பட்டியில் அடைபட்ட விலங்குகளுக்குக் கூட உணவு போடுவார்கள் ஆனால்.. எங்களினத்திற்கு?

இராணுவக் குண்டர்களுக்கு மத்தியில் அவர்களைக் காக்கும் கேடயமாக மாற்றப்பட்டிருக்கும் மக்களுக்கே உணவைத் தடை செய்யும் சிறிலங்காவின் உற்பத்திப் பொருட்களை நானும் நீயுமாவது புறக்கணிக்கலாம் அல்லவா!

எங்களின் இருப்பை, எங்களின் உறவுகளுக்கும், இந்த உலகத்திற்கும் உறுதிப்படுத்த வேண்டிய காலத்தில் நானும் நீயும் பயணிக்கிறோம். எங்களின் இருப்பு என்பது ஒருநாள் எழுச்சியல்ல.... பெரும் தொடருந்தாய் நானும் நீயும் நகரவேண்டும்.

அடுத்தடுத்து சிறிலங்காவின் உற்பத்திப்பொருட்களுக்கும், உல்லாசப் பயணத்துறைக்கும், பாரிய முதலீடுகளுக்கும் தடைகளை உருவாக்கும் அதே நேரத்தில் இலங்கை வங்கிகளில் கிடக்கும் தமிழரின் பெரும் சேமிப்புப் பணங்களையும் மீளப்பெற்றும், சிறிலங்காவிற்கு பெரும்வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் எயர்லங்கா விமான சேவைகளைத் தவிர்ப்பதாலும் உலகளதவிய ரீதியில் சிங்கள அரசுக்கு தமிழர்களாகிய எங்களால் பாரிய தடையை உருவாக்கமுடியும். அதற்கான முன்னெடுப்பை நானும் நீயும்தான் உருவாக்க வேண்டும். எங்களின் இந்த செயற்பாட்டின் மூலம் புலம்பெயர் தமிழரின் விடுதலை வேட்கையின் கனதியை சிங்கள இனவாதம் மட்டுமல்ல எங்களின் அவலங்களை கணக்கெடுக்காமல் ஆயுதவளங்களை அள்ளி சிங்களத்திற்கு வழங்கும் அண்டை நாடுகளோடு அனைவருக்கும் ஈழத்தமிழினம் புரியவைக்க வேண்டும்.

என்ன......?

என்னினத்தின் விடியலின் ஒளிதேடி நான் இறங்கிவிட்டேன்.

நீ... இன்னும் உறங்குகிறாயா?....

இல்லை உணர்வற்று எம்மினத்தை அழிக்கும் அரசுக்குச் சாமரம் வீசுகிறாயா?....

வா!..... என் பதில்போல் உன்பதிலும் தாயகமண்ணுக்கு தலைநிமிர்வைக் கொடுக்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மானுடம் பேசும் ஆதிக்கசக்திகள் மனிதப்புதைகுழிகளை உற்பத்தி செய்தவர்களோடே கைகுலுக்குகிறார்களே! மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா?

அல்லது புலம்பெயர்ந்து வாழும் எம்மினத்தின் தாயகப்பற்று பலவீனமாகி விட்டதா?

கந்தகம் விற்கும் கனவான் தேசங்களுக்கு கருகி சிதையும் எங்கள் இனத்தின் வலிதெரிய நியாயமில்லை.

பேரம் பேசி விற்கும் ஆயுதவளங்கள் எங்கள் மண்ணில் நிறைக்கப்போகும் பிணக்குவியல்களைப்பற்றி விற்பனையாளர் அறிய ஆர்வப்படவா போகிறார்கள்?

என்ன......?

என்னினத்தின் விடியலின் ஒளிதேடி நான் இறங்கிவிட்டேன்.

நீ... இன்னும் உறங்குகிறாயா?....

இல்லை உணர்வற்று எம்மினத்தை அழிக்கும் அரசுக்குச் சாமரம் வீசுகிறாயா?....

வா!..... என் பதில்போல் உன்பதிலும் தாயகமண்ணுக்கு தலைநிமிர்வைக் கொடுக்கட்டும்.

மானுடம் பேசும் ஆதிக்கசக்திகள் மனிதப்புதைகுழிகளை உற்பத்தி செய்தவர்களோடே கைகுலுக்குகிறார்களே! மானுடம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு ஏற்றவகையிலேயே பாதுகாக்கப் படுகிறதா?

அல்லது புலம்பெயர்ந்து வாழும் எம்மினத்தின் தாயகப்பற்று பலவீனமாகி விட்டதா?

கந்தகம் விற்கும் கனவான் தேசங்களுக்கு கருகி சிதையும் எங்கள் இனத்தின் வலிதெரிய நியாயமில்லை.

பேரம் பேசி விற்கும் ஆயுதவளங்கள் எங்கள் மண்ணில் நிறைக்கப்போகும் பிணக்குவியல்களைப்பற்றி விற்பனையாளர் அறிய ஆர்வப்படவா போகிறார்கள்?

என்ன......?

என்னினத்தின் விடியலின் ஒளிதேடி நான் இறங்கிவிட்டேன்.

நீ... இன்னும் உறங்குகிறாயா?....

இல்லை உணர்வற்று எம்மினத்தை அழிக்கும் அரசுக்குச் சாமரம் வீசுகிறாயா?....

வா!..... என் பதில்போல் உன்பதிலும் தாயகமண்ணுக்கு தலைநிமிர்வைக் கொடுக்கட்டும்.

வல்வையக்கா நீங்க என்ன சொல்ல வாறீங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லையா?

அல்லது புரியாதமாதிரி நடிக்கிறீர்களா?

வல்வைசகாரா உலகத்துக்கான சமாதன பரீசுக்கான அளிக்கப்படும் பணத்தில் ஓரு பகுதி கூட ஒரு ஆயுத வியாபார கம்பனியில் முதலீடு செய்யப்பட்டு அதில் கிடைக்கும் இலாபத்திலேயே அளிக்கப்படுவதாக செய்தி வாசித்த ஞாபகம்.

எனது பல நண்பர்கள் செம்மனியில் புதைக்கப்பட்டார்கள். சேரா சேரா ஓவர் என்று வோக்கி இல்லாமலே நாங்கள் பகிடி விட்டு திரிந்த காலம் ஒன்றும் இருந்தது. நான் இலங்கையில் இல்லாத பொழுது சேரன் அதே செம்மனியில் ஓவாராகி விட்டான். அவனுக்காக தீர்க்க வேண்டிய பழி இன்னமும் என்னிடம் கடனாகவே இருக்கிறது.

இந்த கைகுழுப்புகள் இறந்தவர்களுக்காக இல்லை. இப்போதும் இருப்பவர்களுக்காக....அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகள் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கும் போது கட்டாயம் வழங்கப்படும். எங்களுக்குள் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். தமிழர் என்று வரும்போது நாங்கள் எல்லாம் உயிர்ஆயுதங்கள் என்று உலகம் அறியும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

முன்பு கூட கவிதைப்பகுதியில் உங்களின் நண்பனின் இழப்பை எடுத்துக் கூறியிருந்தீர்கள் வாசகன். இத்தகைய வேதனை உங்களுக்கு மட்டுமல்ல தமிழீழத்தைத் தாயகமாக கொண்ட ஒவ்வொரு தமிழருக்கும் இந்த வேதனைகள் உண்டு. புலம் பெயர்ந்து விட்டதனால் புழுதி மூடிப் போய்விடலாகாது.

வலியின் கனதியை காலஓட்டம் ஆற்றினாலும் இன்னும் என்னினத்தின் வேதனை தீரவில்லை என்ற உண்மையை உதறி தள்ளிவிட முடியுமா? செயலாற்ற வேண்டும். சிறு துளிதான் பெரு வெள்ளம். எம்மின அழிப்பிற்கு தெரிந்தோ, தெரியாமலோ எங்கள் கைகளால் நாம் வழங்கும் ஆதரவுகளை முடிந்தவரை நிறுத்துவோம். வெளியில் இறங்கிக் குரல் கொடுக்குமுன் எங்கள் வீட்டில் இலங்கை அரசை வளப்படுத்தக்கூடிய பொருட்களை நிராகரிப்போம். சமையல் அறையில் இருந்து ஆரம்பிப்போம்.

பெண்களே நீங்கள்தான் முன்வரவேண்டும். முதல் ஆதரவு உங்கள் கைகளில்த்தான் உள்ளது.

கேளுங்கோ!... கேளுங்கோ....

நல்லா முன்னுக்கு வருவினம்...

அதுவும் எங்கட கனடாவில தேயிலையில இருந்து பால்மா வரைக்கும் பாவிக்கிறதே தமிழச்சிகளாம். நானும் கண்டிருக்கன்.... நீங்க கூப்பிட்டு சொன்னா சிறிலங்காச் சாமானுகளுக்கு எதிரா கொடி பிடிச்சுப்போட்டுத்தான் மறுவேலை பாப்பினம் பாருங்கோ. சும்மா எழுதி எழுதிக் கேந்தியை உருவாக்காதீங்க..... :twisted: :twisted: :twisted:

வெளிநாட்டில சிறிலங்காச் சாமானுக்கு நாங்க குடுக்கிற ஒவ்வொரு நாணயமும் தமிழரை வதைக்க எண்டதை விளங்காத லூசுகளோட என்னத்தை எழுதி என்னத்தை பிரயோசனம்?

கடைக்காரர்களைக் கண்டு சிறிலங்காச் சாமான்களைப் புறக்கணிங்க! என்று கேட்டா வாடிக்கையாளர்களை இழக்க நாங்க தயாரில்லை என்கிறார்கள். சிறிலங்கன் சாமானை வாங்கிறவர்களைக் கேட்டா எங்கடை காசு நாங்க வாங்கிறம் என்று அந்த விளக்கம் குறைஞ்ச விலங்குகள் சொல்லுதுகள்.

இப்ப ஓடி வருவார் ஒரு மனிதர் 'உயர்திணையை நான் அஃறிணையில' சொல்றன் என்று நாலாபக்கத்தாலும் நார்நாராக ஆதியை பிய்த்து எறிவார் கவனியுங்கோ... சில நேரம் ஆதியை வரவேற்றா வரமாட்டார் அதைக் கண்டு கொள்ள வேண்டாம்.

வேறை கொஞ்சப் பேரிட்ட இதைப்பற்றிக் கேட்டா நடைமுறைச் சாத்தியம் இல்லையெண்டு ஆயிரம் சால்யாப்புகளைச் சொல்லுகினம்.

இப்படிப் பட்ட லூசுகளுக்கு புரிய வைக்க இயலுமெண்டு நினைக்கிறீங்களே?.....

நல்லா மண் கவ்வுவது எப்படி என்று பழக்குவினம் தெரியாட்டிப் பழகிக் கொள்ளுங்கோ..... நான் வாறன்.....

ஆதிக்கு லூசுத்தனமாக கருத்து எழுதத் தெரியும் என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆகவே நீர் இப்படி வர்ணம் அடித்து தான் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று இல்லை. சிங்கள பொருட்களை எப்படி தவிர்ப்பது பற்றி கதைப்போம் என்று இல்லமால் தன்னைப்போல் எல்லோரையும் நினைத்து கருத்து எழுதுகின்றார். இப்படி கருத்து எழுதி என்ன சுகம் காண்கின்றரோ தெரியாது. ஆதி உங்கள் வீட்டில் எல்லாம் கனடியன் பொருட்களா பாவிக்கின்றனீர்கள்? முதலில் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று அறியத் தாருங்கள். உண்மையில் உமது கருத்துக்கள் மற்றவர்களுக்கு பொழுது போக்குகாக தான் படிக்க உதவும். ஒருவரை வேண்டும் என்று சீண்டுவது, பின்னார் நான் போகப்போகின்றேன் என்று படம் கட்டுவது, அதற்கு பின்னார் வந்து மன்னிப்பு கேட்பது எல்லாம் லூசுத்தனமாக உமக்கு தெரியவில்லையோ? ஒருவரின் கருத்தை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்று ஒரளவு தெரிந்து கொள்ளலாம். உமது கருத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டது நீர் ஒரு ஏட்டுச்சுரக்காய் என்று (உம்மிடம் இருந்து தான் அதற்கு அர்த்தம் கண்டு கொண்டேன்) ஏற்கனவே கந்தப்புவினால் அறிமுகப்பட்ட தலையங்கத்தில் கீழ் இதைப்பற்றி எல்லோரும் தங்கள் கருத்தை வைத்துக் கொண்டிருக்க இங்கை வந்து புதிதாக தலைப்பு திறந்து என்ன செய்கின்றீர்களோ தெரியாது?

வல்வை சாகறா.... உங்கள் கருத்துக்களிலிருந்து தான் ஆதி ஒவ்வொரு முறையும் தனது குள்ளத்தனத்தை காட்டிக் கொண்டு இருக்கின்றார். அதற்குரிய காரணம் தான் தெரியவில்லை.

அதானே!

ஏட்டுச்சுரைக்காயென்று வல்வை சகாறாவைத்தானே சொல்கிறீங்க...

வல்வை சகாறா எழுதின விடயத்திற்கு எனக்குத் தோன்றியதை எழுதினேன்.

ஒரே தலைப்பு எண்டதை வல்வையக்காவுக்கும், நிர்வாகத்திற்கும் தெரியேல்லையாக்கும்.. ஏனுங்க நிர்வாகம் ரமாக்காவிற்கு விளங்கினது உங்களுக்கு விளங்கவில்லையா?

மற்றவர்கள் எழுத்திற்கு வர்ணம் பூசுவது உங்கள் கண்ணுக்குத் தெரியாட்டில் பார்வை பழுதாக்கும். ஐயோ பாவம்! என்று சொன்னாலும் புரியக்கூடிய சீவனுக்குச் சொல்லலாம்.

மன்னிப்பு கேட்டால் லூசுத்தனமா?

ஆயிரம் நெடுக்கு களத்திற்குள் அலைந்தாலும் என்ன பிரயோசனம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.