Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கக்கார - கிரிக்கெட்டின் ஒப்பற்ற வீரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லோருக்கும் !

 

பலருக்கு இது முகத்தைச் சுளிக்க வைக்கலாம், சிலருக்கு மகிழ்வாக இருக்கலாம், ஆனால் எனக்குப் பிடித்ததை எழுதும் உரிமை எனக்கிருக்கிறதென்று நான் நம்புவதால்  இதை எழுதுகிறேன்.

 

இன்றைய கிரிக்கெட் உலகில் பல வீரர்களைப் பார்க்கிறோம். எதிரணிப் பந்துவீச்சைத் துவசம் செய்து தனது அணியை வெற்றியை நோக்கிக் கொண்டுபோகும் தனிமனித செயல்களை அவ்வப்போது காண்கிறோம். அந்த துடுப்பாட்டக்காரர் மைதானத்திற்குள் நுழைந்தாலே ரசிகர்கள் கூச்சலிடுவதும், வர்ணனையாளர்கள் உசாராகிவிடுவதும், களத்தடுப்பாளர்களும், பந்து வீச்சாளர்களும் கலக்கமடைவதும் நடக்கிறது. இப்படியான ஒப்பற்ற வீரர்கள் ஒவ்வொரு கிரிக்கெட் அணியிலும் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

 

அவுஸ்த்திரேலியாவின் டேவிட் வோர்னர், இந்தியாவின் வீரட் கோலி, பாக்கிஸ்த்தானின் யூனிஸ்கான், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில், சிறிலங்காவின் குமார் சங்கக்கார.

 

இந்த வீரர்களும் அனைவரும் தமது தோள்களில் மொத்த அணியையும் தாங்கிக்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்லக்கூடியவர்கள், செய்துகாட்டியவர்கள். தத்தமது அணிக்கும் நாட்டின் ரசிகர்களுக்கும் நம்பிக்கை நடசத்திரமாகவும், இறுதி அரணாகவும் இருப்பவர்கள். அவன் இருக்கிறான், பார்த்துக்கொள்வான் என்று நம்புமளவிற்கு நம்பிக்கையைக் கொடுப்பவர்கள்.

 

ஆனால், இந்த வீரகளுக்கிடையே தனியான ஒரு இடத்தை வகிப்பவர் சிறிலங்காவின் குமார் சங்கக்கார என்றால் அதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை.

 

90 களின் இறுதிப் பகுதிகளில் இலங்கையின் கிரிக்கெட் அணிக்குள் நுழைந்த குமார் சங்கக்கார பற்றி பலருக்கு தெளிவான எண்ணம் இருக்கவில்லை. அந்தக் காலத்தில் குமாரைப் போலவே அணிக்குள் வந்திருந்த மஹேல ஜயவர்த்தன, அவிஷ்க்க குணவர்த்தன, திலான் சமரவீர போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீரகளுடன் ஒப்பிடும்போது சங்கக்கார பற்றி பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கவில்லை. 

 

ஆனால், விக்கெட் காப்பாளாராக 2000 ஆண்டில் தென்னாபிரிக்காவிற்கெதிராக கொழும்பில் நடைபெற்ற 3 போட்டிகளடங்கிய ஒருநாள் போட்டித்தொடரில், 199 ஓட்டங்களைக் குவித்ததோடு, இரண்டாவது போட்டியின் நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார். இந்தப் போட்டிகளில் அவரது ஓட்டச் சராசரி 66.33.

 

அடுத்து வந்த அனைத்துப் போட்டிகளிலும் அவருக்கு ஏறுமுகம்தான். தனது முதலாவது சதத்திற்கு முன்னர் இருமுறை 90 களில் அவர் ஆட்டமிழந்தது அவர் ஒரு துரதிஷ்ட்டசாலி என்று பலரும் கூற வழிவகுத்தது.

 

அதைத் தொடர்ந்து பலமுறை சதங்களையும், இரட்டைச் சதங்களையும் குவித்த சங்கக்கார, 2006 இல் தனது நெருங்கிய நண்பனான மஹேல ஜயவர்த்தனவுடன் சேர்ந்து தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சாதனை இணைப்பாட்டமான 624 ஓட்டங்களைக் குவித்தார். இந்த இணைப்பாட்டத்தில் சங்கக்காரவின் ஓட்டப் பங்களிப்பு 287 ஓட்டங்கள்.

 

2007 இல் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்ட சங்கக்கார முதல் முரையாக நான்கு அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் 150 ஓட்டங்களுக்கும் அதிகமான ஓடங்களைப் பெற்ற ஒரே துடுப்பாட்டக்காரர் என்கிற சாதனையையும் கொண்டிருக்கிறார்.

 

டெஸ்ட் போட்டிகளின் மிகவும் குறைந்த டெஸ்ட் ஆட்டங்களில் 8000 (152 இன்னிங்ஸ்) மற்றும் 9000 (172 இன்னிங்ஸ்) ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரராகத் திகழும் சங்கக்கார, 2006 இல் உலக டெஸ்ட் அணியில் விளையாடும் அந்தஸ்த்தையும் பெற்றுக்கொண்டார்.

 

2009 இல் மஹேல ஜயவர்த்தனவிடமிருந்து அணியின் கப்டன் பதவியை பெற்றுக்கொண்ட சங்கக்கார 2011 உலகக் கிண்ண ஒருநாள் ஆட்டத் தொடருக்கு சற்று முன்னதாக அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவர் விளையாடிய டெஸ்ட் தொடர்களில், இலங்கையணி  47 போட்டிகளில் வென்று, 37 போட்டிகளில் தோற்று, 33 போட்டிகளை வெற்றி தோல்வியின்றி முடிவுக்குக் கொண்டுவந்தது. அவர் விளையாடிய 362 ஒருநாள் போட்டிகளில் 197 இல் இலங்கையணி வென்றும், 150 போட்டிகளில் தோற்றும் இருக்கிறது.

 

அவர் விளையாடிய இரு உலகக் கிண்ணத் தொடர்களில் இருமுறை இலங்கையணியை இறுதிப் போட்டிக்குக் கொண்டுபோவதற்கு அவர் காரணமாக இருந்துள்ளதுடன், அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசியக் கிண்ண மற்றும் 20 - 20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கையணி வெற்றி பெறுவதற்கும் முக்கிய காரணமாக அவர் இருந்திருக்கிறார்.

 

ஒரு வழக்கறிஞராக பட்டம் பெற்றுள்ள சங்கக்கார ஆங்கிலத்தில் மிகுந்த புலமை உள்ளதோடு, போட்டிகளின்போது எதிரணி வீரர்களுடன் ஸ்லெட்ஜிங் செய்வதிலும் பெயர் பெற்றவர்.

 

கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய சேவைக்காக 2011 இல் உலகக் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லோட்ஸ் அரங்கின் கெளட்றி சொற்பொழிவை ஆற்றிய இளவயது ஆட்டக்காரர் என்கிற பெருமையையும் பெறுகிறார். அவர் அங்கே ஆற்றிய சொற்பொழிவு இலங்கையின் கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் விளையாட்டு அமைச்சு அதிகாரிகளுக்கு தர்ம சங்கடமாக அமைந்ததுடன், சங்கக்கார இதற்காகப் பழிவாங்கலுக்கும் உள்ளானார் என்கிற செய்திகள் அப்போது வெளிவந்திருந்தன. எது எப்படியிருந்தபோதும், ஒரு கிரிக்கெட் வீரரால் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த சொற்பொழிவாக அவரது உரை இன்றுவரை திகள்கிறது.

 

இலங்கையணியினதும், ரசிகர்களதும், கிரிக்கெட் வர்ணனையாளர்களினதும் செல்லப்பிளையக்கத் திகழும் குமார் சங்கக்காரவின் துடுப்பாட விபரங்களுடன் எனது கட்டுரையை முடிக்கிறேன்.

 

டெஸ்ட் ஆட்டம் :

 

போட்டிகள் : 128, இன்னிங்ஸ் : 221 , ஆட்டமிழக்காத இன்னிங்ஸ் : 17, ஓட்ட எண்ணிக்கை : 11988, அதிகூடிய ஓட்டம் : 319,

சராசரி ஓட்ட எண்ணிக்கை : 58.76, சதங்கள் : 37, அரைச் சதங்கள் : 51, விக்கெட் காப்பாளராக ஆட்டமிழப்புகள் : 152

 

ஒருநாள் ஆட்டத்தொடர் :

 

போட்டிகள் :390,  இன்னிங்ஸ் : 367,  ஆட்டமிழக்காத இன்னிங்ஸ் : 38,  ஓட்ட எண்ணிக்கை :13372,  அதிகூடிய ஓட்டம் : 169,

ஓட்டச் சராசரி : 40.64,  சதங்கள் : 20,  அரைச் சதங்கள் : 91,  விக்கெட் காப்பாளராக ஆட்டமிழப்புகள் : 474 - இது ஒரு சாதனை என்பதும் குறிப்பிடத் தக்கது.

 

T 20 சர்வதேசப் போட்டிகள் :

 

போட்டிகள் : 56,  இன்னிங்ஸ் : 53, ஆட்டமிழக்காமல் : 9,  ஓட்டங்கள் : 1382,  அதிகூடிய ஓட்டம் : 78,  சராசரி : 31.40,

100 பந்துகளுக்கான ஓட்ட எண்ணிக்கை : 119.6

 

இன்று விளையாடும் டெஸ்ட் போட்டியாளர்களில் 100 ஆட்டங்களுக்கு மேல் விளையாடியவர்களில் அதிகூடிய டெஸ்ட் சராசரியைக் கொண்டிருப்பவர் குமார் சங்கக்கார ஆகும். அவரது 58.76 என்கிற ஆட்டச் சராசரிக்கு அடுத்தபடியாக 159 போட்டிகளில் விளையாடிவரும் மேற்கிந்தியத் தீவுகளின் சிவநாராயணன் சந்திரப்போலின் சராசரி 52.74 ஆகும்.

 

இவ்வாறு இன்றைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும்  மற்றும் விக்கெட் காப்பாளராகத் திகழும் குமார் சங்கக்கார  2015 உலகக் கிண்ண சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் பின்னர் ஒருநாள் போட்டிகளிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.ஆதுமட்டுமல்லாமல் 2015 இல் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் தொடர்களின் பின்னர் டெஸ்ட் ஆட்டங்களிலிருந்தும் ஓய்வுபெறப்போவதாகவும் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இது இலங்கையணிக்கும், ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. இலங்கையணியில் இன்னொரு நடசத்திரத் துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்த்தன் ஓய்வுபெறும் அதேவேளை சங்கக்காரவும் ஓய்வுபெற ஆயத்தாமாவது இலங்கையணியின் இஸ்த்திரத் தன்மைக்கு பேரிடியாக அமையும் என்று கூறியுள்ள இலங்கைக் கிரிக்கெட் கட்டுப்பாடுச் சபை, அவரது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டிருக்கிறது.

 

எது எப்படியாயினும், விளையாடிய காலங்களில் மிகவும் சிறந்த துடுப்பாட்டக்காரராகவும், பேச்சாளராகவும், ஆர்ப்பாட்டமில்லாத தன்னடக்கதைக் கொண்டவராகவும் விளங்கிய குமார் சங்கக்காரவின் கிரிக்கெட்டின் பின்னரான வாழ்விற்கு ரசிகன் என்கிற வகையில் எனது வாழ்த்துக்கள்.

 

இதில், இவன் சிங்களவன், எதிரி நாட்டு வீரன் என்று யாரும் எழுதினால் என்னால் சொல்வதற்கு எதுவுமில்லை.

 

 

 

 

 

 

 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் நீங்கள் australian citizen மட்டுமா அல்லது dual citizen வைத்துள்ளிர்களா?

If you in Rome be roman ..... இப்போதெல்லாம் நான் ஆஸி அணிக்கு மட்டுமே ஆதரவு. ரகுநாதன் மாதிரியான தமிழ் cricket fans கஷ்டப்படுகிறார்களே என்று சங்ககார எப்போதாவது அறிக்கை விட்டதுண்டா, ஆனால் தமிழராகிய நாங்கள் சங்க, மகில, ஜெயசூரிய என்று அவரகளை கண்மூடித்தனமாக support பண்ணுவோம் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் டுவல் சிட்டிசன் வைத்திருக்கும் ஒருவரல்ல. இன்னும் சொல்லப்போனால் 2002 இல் வந்தபின்னர் மீண்டும் போகமுடியாமல் இருக்கிறேன்.

 

அவர் தமிழருக்காக அறிக்கை விடவேண்டும் என்று நான் நினைக்கவுமில்லை எதிர்பார்க்கவுமில்லை. அவர் ஒரு சிங்களவர், தனது நாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்பவர். ஆகவே அவரை சிறிலங்கன் என்பதற்காக ஆதரிக்கவில்லை. அவரது விளையாட்டை ரசிக்கிறேன்.

 

சரி, என்னை விடுங்கள். நீங்கள் ஆஸி அணிக்கு ஆதரவு வழங்குமுன்னர் யாருக்கு ஆதரவு வழங்கினீர்கள் என்பதைச் சொல்லுங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு அணிக்கு உங்களின் ஆதரவு இருந்திருக்கும். நீங்கள் உண்மையாகவே யாருக்கு ஆதரவு வழங்கினீர்களென்று கூறினால் என்னால் பதிலளிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விருப்பம் ...I like it :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றியண்ணா ! சங்கக்காரவை ரசிப்பது சிறிலங்காவை ஆதரிப்பதென்று வருமென்று நான் நினைக்கவுமில்லை, அந்த அர்த்தத்தில் அவரை ஆதரிக்கவுமில்லை. உண்மையாகவே அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், அவ்வளவுதான். மற்றும்படி அவரது அரசியலுடன் எனக்குச் சம்பந்தமோ இணக்கமோ இல்லை.

முரளிதரன் ஒரு பச்சோந்தி தான் அதற்காக அவர் உலகின் தலை சிறந்த  சுழற் பந்துவீச்சாளர்  இல்லையென மறுக்க முடியுமா ? இங்கு ரகு அண்ணா சொல்லியிருப்பது சங்ககாராவின் விளையாட்டு திறனை மட்டுமே, அவரின் தனிப்பட்ட குணாதிசயங்களை அல்ல. ஜெயவதனேவும் சங்ககாரவும் நல்ல மட்டை வீச்சாளர்கள் தான். ஆனால் மட்டை வீச்சில் சாதித்தவர்கள் இந்தியர்கள் மட்டுமே என்ற மாயை உள்ளது, இந்திய வீரர்களின் மட்டை வீச்சு அளவு மற்ற நாட்டு வீர்களின் திறன் பேசப்படுவதில்லை. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் ஒரு பச்சோந்தி தான் அதற்காக அவர் உலகின் தலை சிறந்த  சுழற் பந்துவீச்சாளர்  இல்லையென மறுக்க முடியுமா ? இங்கு ரகு அண்ணா சொல்லியிருப்பது சங்ககாராவின் விளையாட்டு திறனை மட்டுமே, அவரின் தனிப்பட்ட குணாதிசயங்களை அல்ல. ஜெயவதனேவும் சங்ககாரவும் நல்ல மட்டை வீச்சாளர்கள் தான். ஆனால் மட்டை வீச்சில் சாதித்தவர்கள் இந்தியர்கள் மட்டுமே என்ற மாயை உள்ளது, இந்திய வீரர்களின் மட்டை வீச்சு அளவு மற்ற நாட்டு வீர்களின் திறன் பேசப்படுவதில்லை. :icon_idea:

 

நன்றி ராஜன்,

 

எனக்கு முரளீதரனைப் இப்போது பிடிக்காது.  முக்கியமாக தமிழராக இருந்துகொண்டு அவர் பேசிய பேச்சுக்களும், பயங்கரவாதத்தை தோற்கடித்த மகிந்தவுக்கு நன்றி கூறியதும் இன்னும் நினைவிலிருக்கு. அதற்காக அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்பது இல்லையென்று ஆகிவிடாது.

 

ஆனால் சங்கக்கார முரளியைப் போல அரசியல் பேசியது குறைவு. ஒருமுறை மட்டும், "2011 உலகக் கிண்ணத்தை வென்றால் யுத்தத்தில் மரணித்த வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்வேன்" என்று கூறினார். இது தவிர அவர் பேசிய அரசியல் எனக்குத் தெரியாது. அவர் மேலும் பேசியிருக்கலாம், அதற்காக அவர் சிறந்த அட்டக்காரர் என்பது இல்லையென்று ஆகிவிடாது.

நன்றி ரகு உங்களது சங்ககாரா பற்றிய பதிவிற்கு .உங்களது கருத்துத்தான் எனதும் .

ஒருவரின் திறமையை கௌரவிக்கும் போது எமக்கு என்ன செய்தவர் என்று பார்க்கமுடியாது.

சங்ககாரா MCC யில் ஆற்றிய உரை பலவிடயங்களை தொட்டு சென்ற பலராலும் பாராட்டப்பட்ட மிக சிறந்த உரை .

 

நன்றி ரகுநாதன் உங்களது பதிவிற்கு. குமார் சங்ககாரா ஒரு மிக சிறந்த கிரிக்கெட் வீரர்.

துடுப்பாட்டம் மட்டுமல்ல, சிறந்த விக்கெட்காப்பாளரும் கூட.

 

குமார் சங்ககாராவின் MCC உரை

 

http://youtu.be/PII5DwqWA_4?list=PLMnF7vW2Mvk5HYrzdKYvzpdzPflfQ7lDc

 

http://www.lords.org/mcc/mcc-spirit-of-cricket/mcc-spirit-of-cricket-cowdrey-lecture/2011-kumar-sangakkara/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.