Jump to content

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

  • Replies 709
  • Created
  • Last Reply
  • 2 weeks later...

படித்ததில் பிடித்தது :-- ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று.
வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.

அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.
புலி கரடியிடம் கூறிற்று:

இவ்வேடன், நமது மிருக குலத்துக்கே பகைவன்;

இவனைக் கீழே தள்ளி விடு என்றது.

இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான்....
சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.

சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று; எனக்கு பசியாக இருக்கிறது.

நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான்,
கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு விழாமல் தப்பி மேலே ஏறிக் கொண்டது.

அப்போது புலி கரடியிடம் சொன்னது.
இந்த மனிதன் நன்றிகெட்டவன்.
சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான்.
அவனை இப்பொழுதே தள்ளிவிடு என்றது.....

அதற்கு கரடி சொன்னது:

எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக, நான் என் தர்மத்தைக் கைவிட இயலாது.
இன்னமும் அவன் சரண் புகுந்தவனே.

அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

#நல்லமனிதர்கள்எந்தசூழ்நிலையிலும்எதுக்காகவும்.....
#யார்எப்படிநடந்தாலும்தன்னுடையஒழுக்கமானகுணத்தைமாற்றிகொள்ளமாட்டார்கள்..

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
நன்றி Azhagan Kanagendiram

Link to comment
Share on other sites

Image may contain: 4 people , beard and outdoor
Nagoor Meera to உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம்

வாவ்.. இந்தியா.. வாவ்!!

பெட்ரோல் விலை உலக நாடுகளில்:
பாகிஸ்தான் - ரூ. 26.00
பங்களாதேஷ் - ரூ. 22.00
க்யுபா - ரூ. 19.00
இத்தாலி - ரூ. 14.00
நேபாளம் - ரூ. 34.00
பர்மா - ரூ. 30.00
ஆப்கானிஸ்தான் - ரூ. 36.00
ஸ்ரீலங்கா - ரூ. 34.00

ஆனால்...

இந்தியாவில் - ரூ. 68.00

அடிப்படை விலை லிட்டருக்கு 16.50
மத்திய வரி - 11.80
கலால் வரி - 11.80
செஸ் வரி - 4.00
மாநில வரி - 8.00
ஆக ரூ. 50.05 + 18.00 = மொத்தம்: ரூ. 68.00
இந்த ரூ. 18.00 யாருக்கு எங்கே போகிறதோ??

முகேஷ் அம்பானியின் கனவு வீடு (ஏழு வருடங்களாக கட்டியது)
4 இலட்சம் சதுர அடியில்..
27 மாடிகளாக..
9 லிஃப்ட் வசதியுடன்..
3 ஹெலிகாப்டர் இறங்கு தளம்
1 ஆடம்பர சினிமா தியேட்டர்
1 ஆடம்பர உடற்பயிற்சிக் கூடம்
1 பூங்கா
168 கார் பார்க்கிங்
600 அறைகள்
600 வேலையாட்கள்

உலகத்திலேயே 
மிகப்பெரிய
மிகவும் வசதி படைத்த 
மிகுந்த பண,
பொருட்செலவில் உருவான 
தனி நபர் வீடு..

மொத்த விலை ரூ. 4700 கோடி மட்டுமே.
கடந்த மாதம்தான் தனது குடும்பத்தோடு குடியேறினார்.

முதல் மாத மின் கட்டணம்..
அதிகமில்லை.. வெறும் 71 இலட்சம் மட்டுமே!

நம்பமுடியாத இந்தியா!
அதிசயிக்கவைக்கும் இந்தியா!!
இதுதான்.. எனது இந்திய தேசம்

ஆம்புலன்ஸ்-க்கு முன்பே பீட்சா
வீடு தேடி வரும்
நம்பமுடியாத இந்தியா!!

வாகனக்கடன் வட்டி வீதம் 7%
கல்விக்கடன் வட்டி வீதம் 12%
நம்பமுடியாத இந்தியா!!

அரிசி கிலோ ரூ 40/-க்கு கிடைக்கும்
ஆனா.. சிம் கார்டு ப்ரீ..
நம்பமுடியாத இந்தியா!!

துர்கா பூஜை செய்ற இதே நாட்லதான் 
பெண் சிசு கொலையும் நடக்குது..
நம்பமுடியாத இந்தியா!!

ஒலிம்பிக்ல மெடல் வாங்கினா
அரசாங்கம் 3 கோடி கொடுக்கும்..
ஆனா..
எல்லையில சண்டைபோட்டு
செத்துட்டா அவனுக்கு..
1 இலட்சம்.. ஒரே இலட்சம்தான்..
உண்மைதான்.. 
நம்பமுடியாத இந்தியா!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணனியில் இருந்து குறோம் காஸ்ட் பண்ணி தொலைக்காட்சியில் ஊமைப்படம் பார்த்தது போல பார்ப்பேன்.
    • 👍...... ஓமான் அணியில் Kashyap Prajapati என்ற பெயரில் ஒரு வீரர் விளையாடுகின்றார். நமீபியாவிற்கு எதிராக முதல் பந்திலேயே அவுட் ஆகினார். Prajapati என்ற பெயரைர் பார்த்ததுமே 'முண்டாசுப்பட்டி' படம் ஞாபகத்திற்கு வந்தது. இவர் உடனேயே அவுட் ஆகினதால், வந்த படம் அப்படியே போய் விட்டது. இவருக்கு குடியுரிமை கொடுத்த மாதிரி மற்ற வெளி ஆட்களுக்கும் கொடுக்கலாம் தானே........... 
    • ச‌வுதி த‌ந்திர‌மாய் செய‌ல் ப‌டுகின‌ம்.......................ஜ‌ரோப்பாவில் கால‌ போக்கில் பெட்ரோல் ஏற்றும‌தி செய்ய‌ ஏலாது க‌ர‌ன்டில் ஓடும் கார் இப்ப‌வே டென்மார்க்கில் ப‌ல‌ர் வேண்டி விட்டின‌ம் என்றால் ஜேர்ம‌ன் போன்ற‌ நாடுக‌ளை சொல்ல‌ வேணும்   ச‌வுதின்ட‌ பிலான் இப்ப‌டி முன்ன‌னி கால்ப‌ந்து வீர‌ர்க‌ளை வேண்டி அவ‌ர்க‌ள் மூல‌ம் உல‌கை த‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌ பார்க்க‌ வைச்சு சுற்றுலா நாடாக்குவ‌து ரொனால்டோ நீய்மார் வென்சிமா இப்ப‌டி புக‌ழ் பெற்ற‌ வீர‌ர்க‌ளை வேண்டி கால்ப‌ந்தை வ‌ள‌த்த‌ மாதிரியும் இருக்கும் த‌ங்க‌ட‌ நாட்டை சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து போகும் நாடாய் ஆக்குவ‌து தான் அவ‌ர்க‌ளின் திட்ட‌ம்.............................   ஓமான் நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியாது நான் நினைக்கிறேன் ஓமான் நாட்டு குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அவ‌ர்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ முடியும் Qatarஅப்ப‌டி கிடையாது திற‌மையான‌ வீர‌ர் யாராய் இருந்தாலும் ச‌ரி கோடி காசை கொடுத்து த‌ங்க‌ட‌ நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் உதார‌ண‌த்துக்கு கைப‌ந்து விளையாட்டில்  பிரேசில் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஜ‌ரோப்பிய‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் க‌ட்டார் தேசிய‌ அணிக்காக‌ விளையாடுகின‌ம்😁..............................................
    • அதே கட்சி, அதே தீவிர இடதுசாரி அரசியல். பெரிதாக மாற்றம் எதுவும் வரப் போவதில்லை என்றே சொல்லலாம். அந் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வகையில் மகிழ்ச்சியடையலாம். ஆனாலும் அந் நாடு பெரும்பாலும் பெரும் போதைப் பொருள், ஆட் கடத்தல் முதலாளிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவிற்கு மெக்சிக்கோவால் இரண்டு பெரிய பிரச்சனைகள், பல ஆதாயங்களும் இருக்கின்றன. முதலாவது பிரச்சனை மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா உள்ளே வரும் போதைப் பொருட்கள். இரண்டாவது பிரச்சனை அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லையூனூடாக அமெரிக்கா உள்ளே வரும் அகதிகள்.  இவை இரண்டுக்கும் எந்த தீர்வோ, முடிவோ இந்தப் புதிய தலைவரால் கிட்டப் போவதில்லை........ 
    • வேணாம் சாமியார்  குழப்பம் இந்தியன் டெல்லி கூட்டத்துக்கு எதோ வகிபாகம் இருக்கும் என்று பங்களிப்பு செய்தேன் ஆனால் அவர்களின் நோக்கம் இந்து கிருத்து வத்துக்குஎதிரான ஒன்று என்று தெரிந்து கொண்டபின் விலகி கொண்டேன் அவ்வளவே என் கருத்து இன்னைக்கு .
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.