Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த, கூட்டமைப்பு சல்மான்கான் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவும் கூட்டமைப்பும்

 

தமிழர் தலைமை கொழும்பு தமிழ் பிற்போக்குச் சக்திகளின் கையாட்களால் கைபற்றப்பட்டுவிட்டதா? சத்தியாகிரகப் போராட்டத்தின் தோல்வியின் பின்னர் ஏற்பட்ட விரக்கதிச் சூழலிலும் கொழும்புத் தமிழ் பிற்போக்குச் சக்திகள்  தமிழர் தலைமையைக் கைப்பற்ற UNP யை ஆதரிக்கும் தந்திரோபாயத்தைக் கையாண்டன. அதன் பயனாக 1960 பதுகளின் நடுப்பகுதியில் எம். திருசெல்வம் அமைச்சர் பதவி பெற்றார். அதுபோன்ற ஒரு வெற்றிடமும் விரக்திச் சூழலும் இண்ரு நிலவுகிறது. 2009ல் தமிழர் இனக்கொலையாக முடிந்த போரின் தோல்வியையும் தொடரும் விரக்திச் சூழலையும் பயன்படுத்தி  கொழும்பு தமிழ் பிற்போக்குச் சக்திகள் மீண்டும் UNP அனி ஆதரவு என்கிற முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது. கூட்டமைப்பின் வடகிழக்குப் பிரதி நிதிகளும் தமிழ் மக்கள் சமூக சக்திகளும் இந்த சதியை முறியடிக்க வேன்டும் என கோருகிறேன். நமது அரசியல் தோல்விகளின்  வரலாறு மீண்டும் திரும்பும் சோகத்தை கவலையுடன் நினைவு கூருகிறேன்.

 

மகிந்த உறுதியாக சீனாவின் பக்கத்தில் நிற்கிறவர். அண்மை காலம் வரை சீன விசுவாச அரசியல் செய்த மைதிரி இப்போது  அமரிக்காவுக்கு தலையும்  சீனாவுக்கு  வாலும் காட்டும் அரசியல் செய்கின்றார். இருவருமே இந்தியாவை ஆதிக்க சக்தியாகவும் தமிழரும் மலையக தமிழரும் இந்திய ஆதரவாளர்கள்  எனவும் கருதும் சிங்கள பெத்த பேரின வாதத்தின் பிரதி நிதிகள்.  இருவருமே தமிழர் வாக்குகளைப் பெற இந்தியாவின் நண்பர்களாக நடிக்கிறார்கள்.

இந்தியா இதனை உணரவேன்டும்.

 

பதவி ஆசையால் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை சர்வதேச சமூகமும் நம்மைக் கைவிடுகிற அரசியல் முள்ளிவாய்க்கால் சூழலை உருவாக்க சிங்கல இனவாத சக்திகளுக்கு உதவுகிறார்கள். இதனை அனுமதிக்கவோ ஆதரிக்கவோ முடியாது என்பதை ஈழத் தமிழ் சமூகச் சக்திகள் கூட்டமைப்புக்கு உணர்த்த வேண்டும். . .

 

மகிந்தவோ மைதிரியோ தீர்வு எதையும் முன்வைக்காத நிலையில் சர்வதேச சமூக செயல்பாட்டுகலைப் பாதிக்கும் வகையில் மைதிரியை ஆதரிப்பது தமிழரைப் பணயம் வைத்து பதவிகளுக்காக ஆடும் சூதன்றி வேறல்ல.  சுயநிர்ணய அடிப்படையிலான அதிகாரப் ப்கிர்வல்ல அமரிக்க ஆதரவு சிங்கள அரசு  அமைவதே  தமிழரின் கோரிக்கை என்பதுபோன்ற மைத்திரி ஆதரவு நடவடிக்கையை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்.

 

மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவோ அல்லது வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களை பயனற்றதாக்கி வாக்கு பெட்டியில் போடவோ வேண்டும் என்று பணிவன்புடன் கோருகிறேன்.

 

சல்மான் கானுக்கு விண்ணப்பம்

 

பாகிஸ்தானும் சீனாவும் மகிந்தவின் தேர்தல் வெற்றிக்காக பணிபுரிகின்றன. இந்த சர்வதேச சூழ்ச்சிக்கு சக நடிகரான சல்மான்கான் பலியாகிவிடக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு இந்தியாவை சிங்களவங்கள் ஏமாற்றிறாங்கள் என்ற கவலை அதிகம் இருந்தாலும்.. இந்தியா தெரிந்து கொண்டே தான் ஏமாந்து வருகிறது.

 

மற்றும்படி.. ஐயாவின்.. இந்த முடிவை வரவேற்கிறோம். தமிழர்கள்..எந்தப் பேரினவாத பூதத்துக்கு அடிமையாவது என்பதை சம்பந்தன் தீர்மானிப்பதை விட.. சிங்களவர்களே தீர்மானிச்சிட்டுப் போகட்டும். தமிழர்களை தாங்கும் சக்தி இலங்கை வட்டகைக்கு வெளியில் தான் உள்ளது. :):icon_idea:

 

மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவோ அல்லது வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டுக்களை பயனற்றதாக்கி வாக்கு பெட்டியில் போடவோ வேண்டும் என்று பணிவன்புடன் கோருகிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு பதவி ஆசையினால் தான் ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்வதற்கு உங்களிடம் உறுதியான ஆதாரங்கள் உண்டா?

தேர்தலைப் புறக்கணிக் கோருவதும் வாக்குகளைச் செல்லாமல்போகச் செய்வதும் நேரடியாகவே மகிந்தவை ஆதரிக்கும் என்பதை நீங்கள் அறியவில்லையா? அப்படியானால் மகிந்தவை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்?

மகிந்த ஆட்சியில் இருந்து அகற்றப்படவேண்டியவர். கூட்டமைப்பின் முடிவு வரவேற்கத்தக்கது.

கூட்டமைப்பில் சுமந்திரனை தவிர மற்ற எவருக்கும் சுயநல பதவி ஆசை உள்ளவர்களாக இல்லை. மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுபட ஆட்சி மாற்றமும் அவசியம் என் ற ரீதியில் கூட்டமைப்பின் முடிவு தவறு இல்லை. இதை தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. தமிழ் மக்கள் எப்போதுமே ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசிற்கெதிராக வாக்களித்ததே வரலாறு. கூட்டமைப்பு கூறறாவிட்டாலும் அவர்கள் மகிந்தவிற்கு எதிராக மைத்திரிக்கே வாக்களிப்பார்கள்.

கூட்டமைப்பின் இந்த முடிவின் மூலம் மைத்திரியுடனான எதிர்கால பேச்சுவார்த்தைகள் சிறப்பாக அமைய கூடியதாக இருக்கும். சுமந்திரன் போன்ற சுயநலமிகள் இதை தங்கள் தனிப்பப நலன்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க மற்றய கூட்டமைப்பு தலைவர்கள் உட்க்கட்சி ஜனநாயகத்தை பலப்படுத்தி கூட்டமைப்ப என்ற தமிழ்மக்களின் நம்பிக்கை நட்சத்திரத்தை பாதுகாக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.