Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதித்த கரிகாலன் கொலை

Featured Replies

நான் நீண்ட நாட்களுக்கு முன்பு என்னுடைய வலைப்பதிவில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய இட்ட இடுக்கைகள். இன்னும் இந்தக் கேள்விகள் என்னுள்ளே அப்படியே இருக்கின்றன. யாழ் களத்தில் பல அறிஞர் பெருமக்கள் இருப்பதால் என் ஐயம் தீர இதைப் பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணி இதை இடுகிறேன்.
 
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்த பின்பு தமிழ் மீது பற்றுக் கொண்ட பலருள் நானும் ஒருவன். வாசித்தவர்களிடம் ஒரு வீரியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது இந்தப் புதினம். அதற்குப் பின்பு அகிலன், விக்கிரமன்,சாண்டில்யன் மற்றும் பாலகுமாரனின் உடையார் முதற்க் கொண்டு எல்லாம் வாசித்து விட்டேன். ஆனாலும் பொன்னியின் செல்வன் இன்னும் பசுமையாய் இருக்கிறது.  
 
இப்புதினத்தை வாசித்த பின்பு எல்லோர் மனதிலும் எழும் ஒரு சந்தேகம் "ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?".இன்றும் விடை காணமுடியாத ஒரு கேள்வி.. சோழ வரலாற்றில் பல மர்மங்கள் நிறைந்த கொலை இது. இன்றும் இது விவாதப் பொருளாகவே இருக்கிறது. இதைப் பற்றிய விவாதங்கள் இணையத்தில் ஏராளம் காணலாம். ஆதித்தன் கொலை பற்றி நான் அறிந்தவற்றை இங்கு தொகுத்து தர முயன்றுள்ளேன்.    
 
பொன்னியின் செல்வன் வாசித்த பலரும் இதை ஒரு வரலாற்று நூலாகவே கருதுகின்றனர். இது கொஞ்சம் வரலாறும், அதிகம் கற்பனையும் கலந்த ஒரு புதினம். பூங்குழலி, ஊமை ராணி,நந்தினி மற்றும் சேந்தன் அமுதன் யாவரும்  கல்கியின் கற்பனைப் பாத்திரங்கள். சேந்தன் அமுதன் பினனால் உத்தம சோழனாக புதினத்தில் மாற்றப்பட்டிருப்பார்.அனால் உண்மையில் அவர் கண்டராதித்தரின் மகனாவார்.
 
இக்கொலை நடக்கும்போது இருந்த வரலாற்று சூழ்நிலைகளை கொஞ்சம் பார்க்கலாம்.
சுந்தர சோழன் ஆட்சி ஏறும்போது தெற்கில் பாண்டியர்களும் , வடக்கில் இராட்டிரகூடர்களும் வலிமையில் மேலோங்கியிருந்தனர். சோழ நாட்டின் எல்லை சுருங்கிப் போயிருந்தது. சுந்தர சோழனோ, உத்தம சோழனோ போர்களில் பங்கேற்கவில்லை. ராசா ராசன் இளைஞனாக இருந்தபடியால் அவனும் போர்களில் பங்கேற்கவில்லை. அரச குடும்பத்தை காணும்போது, தனது வீரத்தின் மூலம்  எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரே அரச வாரிசு ஆதித்த கரிகாலன் மட்டுமே. அப்போது ஆதித்தனின் வயது 16. முதலில் ஆதித்தன் சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை விரட்டி அவர்கள் மேலும் வராதபடி வலுவான படைகளை உருவாக்கினான். பிறகு அவனது கவனம் பண்டியர்களின்பால் திரும்பியது. பாண்டியர்கள் மீண்டும் தலையெடுக்க முடியாதபடி ஒழிக்க வேண்டும் எனக் கருதி, வீர பாண்டியன் மீது படைஎடுத்து அவன் தலையைக் கொய்து அரண்மனையில் நட்டு வைத்தான். விசயாலய சோழன் காலத்தில் தொடங்கி ஐந்து தலைமுறைகளுக்குப் பினனால் சோழ நாட்டிற்கு ஓயாத தொல்லையாக இருந்த இரு பெரும் அரசுகள்  முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது  இவன் காலத்தில்தான். அப்பேர்பட்ட வீரன்.  
 
ஆதித்தன் எப்படி கொல்லப்பட்டான் என்பதே பெரிய மர்மம் தான். பொன்னியின் செல்வனில் சம்பூர்வர்  அரண்மனையில் வைத்து கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும். ஆனால் கல்வெட்டுகளிலோ /செப்பெடுகளிலோ நான் அறிந்தமட்டில் அதைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. எப்படியோ மிகப்பெரிய வீரன் சதியால் கொல்லப்பட்டான். 
 
இக்கொலைக்கு காரணம் மூன்று விதமாக நோக்கப்படுகிறது.
 1. பாண்டியன் ஆபத்துவிகள்
 2. உத்தம சோழன் 
 3. சிற்றரசர்கள், ராசா ராசன்  மற்றும் குந்தவையின்  கூட்டுசதி
 
1. பாண்டியன் ஆபத்துவிகள்
வரலாறு முழுவதும் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் தொடர்ந்து போர் நடந்து கொண்டுதான் இருந்தது. பழிவாங்குதலும்,பழிவாங்கப்படலும்  இடைவிடாத நிகழ்வு.சுந்தர சோழன் ஆட்சியில் வீரபாண்டியன்  இலங்கை வேந்தனுடன் சேர்ந்துகொண்டு சோழப் படையை தாக்குவதும் பின் காடுகளில் சென்று மறைவதுமாக இருந்தான். கடைசியாக நடந்த போரில் வீரபாண்டியன் படுகாயமடைந்து காடுகளில் புகுகிறான். இம்முறை எப்படியேனும் அவனைக் கொல்ல வேண்டும் என்று  ஆதித்த கரிகாலன் தலைமையில் சோழப் படையும் காடுகளில் துரத்திச் செல்கிறது. அங்கு நிராயுதபாணியாக இருந்த  வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் கொல்கிறான்(படுகாயமுற்று , நிராயுதபாணியாக இருந்த வீரபாண்டியனை போர் மரபுகளுக்கு மாறாக கொன்ற கோழை என்ற நாட்டுப் புற பாடல் ஒன்று பாண்டிய நாட்டில் ஒலித்தாகவும் கேள்வி).ஆதித்த கரிகாலன் பாண்டியனின் தலையைக் கொய்து,ஒரு கழியில் சொருகி, தஞ்சாவூர் அரண்மனை வாயிலில் நட்டு வைத்தான் என்று கூறுகிறது. இக்கொலைக்கு பழிவாங்கும் விதமாக வீர பாண்டியனின் ஆபத்துவிகள்(மெய்க்காப்பாளர் படை) ரவிதாசன் தலைமையில் ஆதித்த கரிகாலனை  கொன்று இருக்கலாம். உடையார்குடி கல்வெட்டில்  ரவிதாசன் குழுவினர்தான் ஆதித்த கரிகாலனை கொன்றதாக அவர்களுக்கு விதித்த தண்டனையின் விபரம் சொல்லப்படுகிறது. 
 
 2. உத்தம சோழன் 
உத்தம சோழன் பின்புலம் பற்றி சிறிது காண்போம்.முதலாம் பராந்தகனின் பதினோரு மனைவிகளில் இரு மகன்கள் தான் கண்டராதித்தர் மற்றும் அரிஞ்சய சோழன். முதலாம் பராந்தகனின் மறைவிக்குப் பின் கண்டராதித்தர் பதவியேற்று ஆட்சி நடத்துகிறார். அவருக்கு புதல்வர்கள் இல்லாததால் தன் தம்பி அரிஞ்சய சோழனை பட்டது இளவரசனாக ஆக்குகிறார். ஆனால் கடைசி காலத்தில் கண்டராதித்தருக்கு ஒரு ஆண் மகன் பிறக்கிறான். அவன்தான் உத்தம சோழன். ஏற்கனவே அரிஞ்சயனை இளவரசனாக அறிவித்து விட்டதால் கண்டராதித்தர் மறைவுக்குப் பின் அரிஞ்சய சோழன் ஆட்சிப் பொறுப்பேற்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற கொஞ்ச நாட்களிலே அரிஞ்சய சோழன் இறந்து விடுகிறார். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய உத்தம சோழன் வயது காரணம் காட்டி தவிர்க்கப்பட்டு அதற்க்கு பதிலாக  அரிஞ்சய சோழன் மகனாகிய சுந்தர சோழன் பதவியேற்கிறார். இதுவரைக்கும் எந்த பிரச்சனையும்  எழவில்லை. ஆனால் சுந்தர சோழன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் கட்டியவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது.  
 
உத்தமன் அரச மரபுப்படி இளவரசு பதவி தனக்கே வரவேண்டும் என எண்ணுகிறான். இதனால் பாண்டியன் ஆபத்துவிகள் மற்றும் சிற்றரசர்களுடன் இணைந்து ஆதித்தனை கொன்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சோழர்களைப் பற்றி பல நூல்கள் எழுதிய நீலகண்ட சாஸ்திரிகள் உத்தமனே கொலைக்கு காரணம் எனக் கூறுகிறார். 
 
3. சிற்றரசர்கள், ராசா ராசன்  மற்றும் குந்தவையின்  கூட்டுசதி
ஆதித்தன் வடக்கில்  இராட்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்தியுதடன், போரில் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பொன்னால் காஞ்சியில் ஒரு மாளிகையை அமைத்தான்.  ஆதித்தன் போரில் பெற்ற செல்வங்களில் ஒரு துளியைக் கூட தஞ்சைக்குக் அனுப்பவில்லை. அவன் தனி அரசன் போலவே செயல்பட்டான் எனக் கூறப்படுகிறது, இதனால்  சிற்றரசர்களின்  ஒரு பிரிவினர் அவன்மேல் அதிருப்தியடைந்தனர்.  சோழ ராஜ்ஜியத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற குந்தவை ஆதித்தனின் இந்த செயலை விரும்பவில்லை. குந்தவை தன் இளைய  தம்பி  ராசா ராசனின் மூலமே சோழப் பேரரசு உயர்ந்த நிலையை  எட்டும் என நம்பினாள். 
 
பின்வரும் கேள்விகளை நோக்கும்போது ராசா ராசனுக்கும் இக்கொலையில் பங்கு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயற்கையே..
 
1..உத்தம சோழன் பதவியேற்கும்போது  அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். அரச விதிமுறைகளின்படி உத்தம சோழன் மகனுக்குத் தான் இளவரசு பட்டம் கட்ட வேண்டும் அனால் எல்லாவற்றிகும் முரணாக ராசா ராசா சோழனுக்கு ஏன் பட்டம் சூட்ட வேண்டும்?
 
2. ஆட்சி பொறுப்பேற்றதும் ரவிதாசன் முதலியவர்களின் சொத்தை பறித்துக் கொண்டு ஊரை விட்டு துரத்துகிறான் ராசா ராசன். ஆதித்தனின்  கொலைக்கு ஊரை விட்டு துரத்துவது தான் தண்டனையா? பிராமணர்கள் போரிடுவது, பிராமணர்களை கொல்லுவது எல்லாம் அப்போது நடந்த ஒன்று தான். ராசா ராசான் மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்டபோது அந்நாட்டில் பிராமணர்களைக் கொன்று குவித்தான் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன.ஆகையால் பிராமணர்களை கொல்லுவது ஆகாது எனக் கருதி ஊரை விட்டு துரத்தினார்கள் என்பதெல்லாம் ஏற்புடையதாக இல்லை.
 
3. ராசா ராசன் தான் செய்யும் எல்லாவற்றையும் கல்வெட்டு செயும் பழக்கம் உள்ளவன்(தேவதாசிகளின் பெயர்கள் உள்பட). அப்படி இருக்க எந்த கல்வெட்டிலும் ஆதித்தனின் கொலைக்கான காரணத்தைப் பற்றியோ, கொலைகாரர்களை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது பற்றியோ எந்த குறிப்பும் இல்லை.
 
4.ராசா ராசா சோழன் ஆட்சியில்  உத்தம சோழன் மகன் கோவில்களை நிர்வகிக்கும் பதவியில் இருந்தான். பின்னாளில் ஊழல் புகார் காரணமாக அவன் கொல்லப்பட்டு ராஜேந்திர சோழனுக்கு போட்டி இல்லாமல் செய்யப்பட்டதாவும் ஒரு தகவல் உண்டு .மேலும் உத்தமனின் ஆட்சி முழுவதும் வந்தியத் தேவன்(பன்னிரண்டு ஆண்டுகள்) சிறையில் இருக்கிறான். ராசா ராசனின் ஆட்சிக்கு பிறகுதான் அவன் விடுதலை செய்யப்படுகிறான். 
 
சோழ வரலாற்றில் ஆதித்த கரிகாலன் மட்டும் மர்மான முறையில் கொல்லப்படவில்லை. அவன் தாத்தாவாகிய அரிஞ்சய சோழனும், அப்பனுமாகிய சுந்தர சோழனும், மைத்துனனுமாகிய வந்தியத் தேவனும்  மர்மமான முறையிலே கொல்லப்பட்டுள்ளனர். இதன் கொலைக்கான காரணங்களைப் பார்க்குமுன் அப்போது நிலவிய சமூக சூழலை பார்க்க வேண்டும். இந்த கால கட்டத்தில் சைவ மதத்திற்கும் வைணவ  மதத்திற்கும் இடையே பல மதக் கலவரங்கள் நடந்துள்ளன. இக்கலவரத்தில் ஏராளமான உயிர்கள் பலி கொள்ளப்பட்டுள்ளன. சோழர்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் (பாண்டியர்களும் கூட). இதன் காரணமாக வைணவ பிராமணர்கள் தொடர்ந்து சோழப் பேரரசை சிதைக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். காட்டுமன்னார்குடிக் கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் ஆதித்தன் கொலைக்கு சதுர்வேதி  மங்கலத்துப் பிராமணர்கள்தான் காரணம் என்று அவர்கள் குடும்பத்தினரை இராசராசன் ஊரை விட்டு துரத்தியதாக கூறுகிறது.  இந்தக் கொலைக்கு காந்தளூர்ச் சாலை நம்பூதிரி பிராமணர்கள் தூண்டுதலே காரணம் என்று கருதி இராசராசன் காந்தளூர்ச் சாலை மீது போர் தொடுத்து சிதைத்தான் என்ற கூற்றும் உண்டு.இது எதைப் பற்றியுமே கல்கி சொல்லவில்லை. எது எப்படியோ இக்கொலையில் உத்தம சோழனுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்பது மட்டம் தெளிவாகிறது.
 
கீழ்வரும் கேள்விகளுக்கு நான் விடை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் .....
 
1) ஆதித்த கரிகாலனும் குந்தவையும் இரட்டை பிறவிகள் என்றும்,  குந்தவை பிறக்கும்போது ஒரு கால் ஊனமாக இருந்தது என்ற குறிப்புகள் பாரசீக மொழியில் இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலியார் என்பவரைப் பற்றி குறிப்பிடும்போது உள்ளதாக கூறுகின்றனர்.  
 
2) ஆதித்த கரிகாலனும், பார்த்திபேந்திரனும் இலங்கைக்கு படை எடுத்துச் சென்று தோல்வியுற்றதாகவும், ஆதித்த கரிகாலன் சுந்தர சோழன் இருக்கும்பொழுதே காஞ்சியை  தனியாக ஆட்சி செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. 
 
3) உத்தம சோழன் கரிகாலனை சதியின் மூலம் கொல்வதற்கு உடந்தையாக இருந்து,  இறந்தவுடன் கலவரத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றி, சுந்தர சோழனை காஞ்சியில் சிறை வைத்து, ஆதித்த கரிகாலன் இறந்த கொஞ்ச நாட்களில் அவனும் கொல்லப்பட்டான் என்று கூறப்படுகிறது.
 
4) "முலைமகப் பிரிந்து முழங்கு எரிநடுவனும்                     
  தலைமகன் பிரியாத் தையல்"   என்ற கல்வெட்டு குறிப்புகளின் படி வானமா தேவி பால் மனம் மாறாத பெற்ற குழந்தையையும் பிரிந்து கனவனுடன் தீயில் உடன்கட்டை ஏறினால் என்று குறிக்கிறது. அந்தப் பாலகன் ராஜா ராஜா சோழன் தானா? சிறு குழந்தையை பிரிந்து அவளாக உடன் கட்டை ஏறினாளா அல்லது ஏற்றப்பட்டளா??  
 
5) குந்தவை வந்திய தேவனை காதல் மனம் கொண்டதாக எந்தக் குறிப்பும் இல்லை.அது நிச்சயிக்கப்பட்ட திருமணமே. திருமணம் நடந்திருந்தாலும் அவர்களுக்கு குழந்தை ஏதும் இருந்ததாக் குறிப்புகள் இல்லை காரணம் வேங்கி மன்னான வந்தியத் தேவன், ஆதித்த கரிகாலன் கொலைக்கு பின் நடந்த ஒரு கலவரத்தில் திருநெடுங்களத்தில் கொல்லப்பட்டனா?
 
6) சுந்தர சோழன் மறைவிற்குப் பின் ராஜ ராஜனும் ,குந்தவையும் யார் பாதுகாப்பின் கீழ் எங்கு வாழ்ந்தனர்?
 
7) உத்தம சோழனிடமிருந்து எவ்வாறு ராஜ ராஜனுக்கு ஆட்சி பொறுப்பு கிடைத்தது? உத்தம சோழன் கொல்லப்பட்டனா? கோவில் பொறுப்புகளை நிர்வகித்த உத்தம சோழன் மகன் ஊழல் குற்றசாட்டு காரணமாக கொல்லப்பட்டான் என்ற கூற்று உண்மையா?
  • கருத்துக்கள உறவுகள்
நானும், பொன்னியின் செல்வன் வாசித்த பின்னர் வரலாறில் ஆர்வமுடன் இருந்தேன். காலப் போக்கில் வேறு அலுவல்கள் காரணமாக ஆர்வம் குறைந்து விட்டது.
 
எனினும் தங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. ஒன்று மட்டும் தெரிகிறது. கோவிலை வைத்து அபபவும் ஆட்டையைப் போட்டு இருக்கிறார்கள்.
 
இப்ப ராசராசன் இருந்தால், கோயில் கோஸ்டிகளை தூக்கி மாளாது.  
 
வேறு விடயமாக ஒரு கேள்வி. அறிந்திருந்தால் பதில் தாருங்கள்.
 
கருவூர் சித்தர் என்னும் யோகியின் 'அருள்' அல்லது 'மகிமை' கிடைத்த காரணத்தினால் தான் ராசராசன் போர்க்களங்களில் பெரு வெற்றி அடைந்து கொண்டிருந்த தாயும் பின்னர் அவர் உடன் முரண் பட்டு அவர் இட்ட சாபம் காரணமாகவே, ராஜேந்திர சோழன் காலத்துக்குப் பின் சோழ சாம்ராஜ்யம் வீழ்ந்தது, என கேள்விப் பட்டேன்.
 
உங்களிடம் இது குறித்த தகவல் உள்ளதா? 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்தகரிகாலனின் கொலைக்குப் பின்னால் இவ்வளவு விசயங்கள் இருக்குதா?...நான் இவ்வளவு நாளும் பழுவேட்டையரும்,நந்தினியும் சேர்ந்து தான் இவரைக் கொலை செய்தார்கள் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறேன் :D.ஆதித்தகரிகாலனின் தம்பியும் பதவிக்காக அவரைக் கொண்டதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்....ஆதித்த இளம் பிறையன் சுவராசியமாக போகிறது உங்கள் பதிவு தொடருங்கள்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

 

நானும், பொன்னியின் செல்வன் வாசித்த பின்னர் வரலாறில் ஆர்வமுடன் இருந்தேன். காலப் போக்கில் வேறு அலுவல்கள் காரணமாக ஆர்வம் குறைந்து விட்டது.
 
எனினும் தங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. ஒன்று மட்டும் தெரிகிறது. கோவிலை வைத்து அபபவும் ஆட்டையைப் போட்டு இருக்கிறார்கள்.
 
இப்ப ராசராசன் இருந்தால், கோயில் கோஸ்டிகளை தூக்கி மாளாது.  
 
வேறு விடயமாக ஒரு கேள்வி. அறிந்திருந்தால் பதில் தாருங்கள்.
 
கருவூர் சித்தர் என்னும் யோகியின் 'அருள்' அல்லது 'மகிமை' கிடைத்த காரணத்தினால் தான் ராசராசன் போர்க்களங்களில் பெரு வெற்றி அடைந்து கொண்டிருந்த தாயும் பின்னர் அவர் உடன் முரண் பட்டு அவர் இட்ட சாபம் காரணமாகவே, ராஜேந்திர சோழன் காலத்துக்குப் பின் சோழ சாம்ராஜ்யம் வீழ்ந்தது, என கேள்விப் பட்டேன்.
 
உங்களிடம் இது குறித்த தகவல் உள்ளதா? 

 

 

கருவூர் சித்தர் காரணமாக சோழ சாம்ராஜ்யம் வீழ்ந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். எந்த ஒரு பேரரசுக்கும் உச்சம் என்று ஒன்று இருக்கும்போது வீழ்ச்சியும் கண்டிப்பாக வந்தே தீரும். அது பல்லவ ராஜ்யமாக இருக்கட்டும், களப்பிரர்களாக  இருக்கட்டும்.. மொகலாயர்களாக இருக்கட்டும்... 
 
மற்றபடி நீங்கள் கேட்கும் தகவல்களை நான் அறிந்ததில்லை நாதமுனி.

ஆதித்தகரிகாலனின் கொலைக்குப் பின்னால் இவ்வளவு விசயங்கள் இருக்குதா?...நான் இவ்வளவு நாளும் பழுவேட்டையரும்,நந்தினியும் சேர்ந்து தான் இவரைக் கொலை செய்தார்கள் என்றே நினைத்துக் கொண்டு இருக்கிறேன் :D.ஆதித்தகரிகாலனின் தம்பியும் பதவிக்காக அவரைக் கொண்டதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்...

 

அரசியலில் இது எல்லாம் சாதாரணம்... ! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பனிப்படலத்தின் ஊடாகவே வாசகர்கள் காணும்படி அந்த நிகழ்வை கல்கி அவர்கள் நுட்பமாகச் சித்தரித்துள்ளார். அனேகமாக ஆதித்தகரிகாலன் தன்னைத் தானே அழித்துக் கொண்டதாகவே காட்சியை நிழல்போல் படைத்துள்ளதாக உணரமுடிகிறது. மற்றையோரின் உணர்வுகள் எப்படியோ?. 

 

சுப்பிரமணிய சுவாமி உயிருடன் இருக்கும்போதே ராசீவ்காந்தி கொல்லப்பட்ட நிகழ்வை அறியமுடியவில்லை. அவரும் இறந்துவிட்டால் பின்பு யாரால் அறியமுடியும்!... அவரவர் கற்பனையே சரித்திரமாகும். :o    

  • 3 years later...
  • தொடங்கியவர்

மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய எனது பதிவை மீள்வாசிக்கும்போது இன்னும் அந்த சந்தேகம் அப்படியே உள்ளது.

சமீபத்தில் வரலாற்று நாவலான சங்கதாராவை படிக்க நேர்ந்தது. இதுவும் ஆதித்த கரிகாலன் கொலையை ஒட்டிய நாவலே. அந்த நாவலில் சொல்லப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் புதிதாக இருந்தது.

  •  அருண்மொழித்தேவன் குந்தவையின் புதல்வன்.
  •  ஆதித்த கரிகாலனை கொன்றது குந்தவை. ஏனேனில் குந்தவை ஆதித்தனால் தன மகனுக்கு துன்பம் நேருமெனவும், தன்னிடம் இருந்த பஞ்சண்ணியம்    என்ற ரேகையின் காரணமாக தன்னாலே சோழ சாம்ராஜ்யம் செழிக்கும் எனவும் நம்பினாள்.
  • வந்தியத் தேவன் குந்தவையின் விருப்பம் இல்லாமலேயே, அவளை அறியாமலே, சிறு வயதிலேயே கறுவைச் சுமக்க வைத்து விட்டான்.
  • அதில் சொல்லப்பட்ட இன்னொமொரு விடயம், பாண்டிய ஆபத்துதவிகளால் ஆதித்தன் கொல்லப்பட்டததெனில் அவர்களுக்கு பஞ்சவன் என்ற பட்டம் வந்தது எப்படி?  ரவிதாசன் அந்தணனாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருப்பின் சோழ அரச குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே சொந்தமான பஞ்சவன்  என்ற அடைமொழி எப்படி அவனுக்கு வந்தது?

உடையார் குடி கல்வெட்டு :
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு
சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்............................................... தம்பி
ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன்"

முதல் மூன்று கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதற்கு போதிய ஆதாரம் சேர்க்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் நான்காவது  கருத்தில் நான் உடன்படுகிறேன். ரவிதாசன் சோழ குடும்ப உறுப்பினரே. அவன் யாரோ முக்கியமான அரச குடும்ப உறுப்பினரின் தூண்டுதலிலே ஆதித்த கரிகாலனை கொன்று இருப்பான் என்று எண்ணத் தோன்றுகிறது.

  • 2 months later...

பொன்னியின் செல்வனுக்கும்

சங்கதாரா விற்கும் அப்படியே full change

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.