Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் பாரிய படைநகர்விற்கு சிங்களப் படைகள் தயார்??!!!!

Featured Replies

வடபோர் முனையில் படைகள் குவிப்பு - தென்மராட்சியில் ஊடரங்கு அமுல் - புலிகளின் நிலைகள் நோக்கி உக்கிர எறிகணை வீச்சு

இன்று காலை தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளில் சிங்களப் படையினால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றிரவு முதல் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி உக்கிர எறிகணைத் தாக்குதலை படைகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரிரு நாட்களாக வடபோர் முனையில் சிங்களப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டு வரும் அதேவேளை ஆயுத தளபாடங்களும் முன்னரங்கப் பகுதிகள் நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன. (படைகளின் குவிப்பு மற்றும் ஆயுத தளபாடங்கள் நகர்த்தப்படுவது தொடர்பில் சங்கதி நேற்றும் செய்தி வெளியிட்டிருந்தது)

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு முதல் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி படையினர் உக்கிர எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இன்று காலையில் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை சிங்களப் படைகள் நடைமுறைப் படுத்தியுள்ளனர்.

வரணி, உசன், கச்சாய், கொடிகாமம், நாவற்காடு, எழுதுமட்டுவாள், மீசாலை கிழக்கு, அல்லாரை, தனங்கிளப்பு உள்ளிட்ட பகுதிகளிலேயே சிங்களப் படைகளால் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளத

பேச்சுக்களிற்கு சர்வதேச சமூகம் வரையறை விதிப்பு என்றதை எவ்வாறு இந்த நகர்வுகளோடு இணைத்து பார்ப்பது?

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=15174

பேச்சுக்களிற்கு சர்வதேச சமூகம் வரையறை விதிப்பு என்றதை எவ்வாறு இந்த நகர்வுகளோடு இணைத்து பார்ப்பது?

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=15174

அந்த- வரையறை-

யாருக்கு என்பதை பொறுத்து !!

எங்களுக்காய் இருக்குமா?

தெரியல 8)

மறுமுறையும் பேச்சுக்கு ஒமெண்டு தலையாட்ட வேணுமல்லா மகிந்த படையெடுப்பு அதுக்கு அவசியம் தானே நான் நினைகிறேன் மகிந்த இராணுவத்துக்கு சவப்பெட்டி சப்பிளை பண்ணும் பிஸினஸ் செய்யிரார் போல கிடக்கு அதுதான் இலாபத்துக்கு இப்படி தொங்கப்போடுகிறார் நாக்கை

இரண்டு தரப்பிற்கும் இருக்கும். சிறீலங்காவை திருப்த்திப்படுத்த எங்களுக்கு அதிகமாக இருக்கும். தற்பொழுது சிறீலங்கா பலவீனமாக இருக்கிறது என்பது வெளிப்படையான பொதுவான கருத்து ஆகிவிட்டது. இந்த நிலையில் எந்த பேச்சுகளையும் சிறீலங்கா விரும்பாது. எனவே சிறீலங்காவின் இராணுவ நடவடிக்கைகளை தடுக்க பிற்போட சர்வதேச சமூகம் தமிழர் தரப்பு மீது வேறு வழிகளில் அழுத்தங்களை கொடுத்து சமனப்பாடு போணப்படுவதாக காட்ட முனையும்.

தமிழர் தரப்பு பலமாக இருக்கும் பொழுது தான் சர்வதேசத்தின் கவனம் எம்மீது இருக்கும் அதுவும் எம்மை பலவீனப்படுத்துவதற்கான கவனமே அன்றி தீர்வு ஒன்றை தருவதற்கு அல்ல. நாம் பலவீனமாகிவிட்டால் அதன் பின்னர் சர்வதேசத்தை பொறுத்தவரை அது சிறீலங்காவின் உள்வீட்டு பிரச்சனை என்று ஒதுங்கி விடுவார்கள்.

எனவே அந்த கவனத்தை சரியாக அரசியல் இராஜதந்திர ரீதியில் பயன்படுத்தி இந்த வட்டத்திற்குள் இருந்து வெளிவந்தால் தான் அங்கீகாரம் கிடைக்கும். அதுவரை சர்வதேசத்தின் கவனம் எம்மை பலவீனப்படுத்துவதற்கானதாகவே இருக்கும். அந்த அங்கீகாரம் நோக்கிய இறுதிப்பாச்சலிற்கு புலம்பெயர்ந்தவர்களின் பணி முக்கியமானது.

[b]மேற்கோள்:

நாம் பலவீனமாகிவிட்டால் அதன் பின்னர் சர்வதேசத்தை பொறுத்தவரை அது சிறீலங்காவின் உள்வீட்டு பிரச்சனை

இது கருத்து - !! 8)

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே, 2000ம் ஆண்டு காலப்பகுதியில், நல்லெண்ண அடிப்படையிலான ஒரு தலைப்பட்ச யுத்தநிறுத்ததை மேற்கொண்ட நேரம், அது முடிந்த அடுத்த நாளே, அக்கினிசுவாலைப் படை நடவடிக்கையை இலங்கையரசு செய்தது.

இம் முறையும், பேச்சுவார்த்தை முடிந்த கையோடு படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் திட்டத்தில் தான் செயற்படுவதை உணர முடிகின்றது. இதை இராணுவரீதியில் மட்டுமல்ல, அரசியல்ரீதியாகவும் கொண்டு செல்வதில் தான் எம் வெற்றி தங்கியிருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தமிழர் தரப்புக்கு மிகவும் கேடுதரக்கூடியது.

வந்தா அடி வாங்குவினம் எண்டு சும்மா முதுகு சொறிந்துகொண்டிருப்பதில் பலனில்லை. எல்லாச் சமரும் எப்போதும் வெற்றியாவதில்லை.

மேலும் மறிப்புச்சமர் என்பது பலத்தைக்காட்ட மட்டுமே உதவும்.

மறிப்புச்சமருக்கு மட்டும் பெருமளவு ஆயுத தளபாடங்களையும் மனித வளத்தையும் விலையாகச் செலுத்திக்கொண்டிருப்பது போராட்டத்துக்குப் பின்னடைவே.

பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதலொன்றை மறிப்புச்சமர் நிச்சயம் குலைத்துப்போடும்.

புலிகளின் வலிந்த தாக்குதலுக்குத் தயாராவதற்கான கால அவகாசத்தைக் கொடுக்கக்கூடாதென்பதுதான் சிங்கள தேசத்தின் நினைப்பு.

எனவே இராணுவம் முன்னேற்ற முயற்சிகளைச் செய்யாமலிருப்பதுதான் தமிழர் தரப்புச் சாதகம்.

எனவே இவ்விசயத்தில் புலம்பெயர்ந்தவர்கள் செய்யவேண்டிய கடமைகள் உள்ளன.

வெறுமனே 'வெளிக்கிட்டால் சாத்து வாங்குவினம்' எண்டு சொல்லிக்கொண்டு சிங்களவனை மட்டந்தட்டிக்கொண்டு இருக்கிறது சரியில்லை.

முன்னேற்ற முயற்சி நடந்து, இராணுவம் பலத்த இழப்பைச் சந்தித்தாலும்கூட இராணுவம் தான் நினைத்ததைச் செய்துவிட்டதென்றே பொருள். பாதகம் தமிழர் தரப்புக்குத்தான்.

இது என்ன புது விடயமோ?

பெப்ரவரியில் பேச்சுவார்த்தை மேசையில கைகுலுக்கி முடியமுன்னமே பாகிஸ்தானில இருந்து 2 கப்பல் ஆயுதம் வரேல்லையே.....

அரசாங்கம் குள்ளநரித்தனத்தோடதான் பேச்சுவார்த்தையில நிற்கிறதென்று நம்ம புள்ளைங்களுக்கும் தெரியுமப்பா.

சரியாகச் சொன்னீர் நல்லவன்.

மேற்கொண்டு புலம் பெயர்ந்து வாழும் நாம் செய்ய வேண்டியபணிகளைத் தெளிவுபடுத்த வேண்டும்.

சரி எல்லோரும் நாளைக்கு உங்கள் உங்கள் நாட்டு பர்லிமெண்டுக்கு முன்னால கறுப்பு துணி கட்டி கொண்டு போங்கோ :P :P

ஏன் என்றால் இது தமிழருக்கு பாதகமான விடயம் இராணுவம் முன்னேறுவது ஆனா அதுக்கு முன் யாழ்கள ஜனநாயகவாதிகளிடம் அறிவுரை கேளுங்கள் இல்லாட்டி வெற்றி பெறாது உங்கள் போராட்டம் :idea: :?:

சப்பான் காரன் வந்து கைகுலுக்கிட்டு முதுகில தட்டிப் போட்டுப் போயிட்டான் பாக்கிஸ்தான் காரன் முன்னரங்கத்தை வந்து பாத்துட்டு ஏதாவது ஆயுதம் விக்க உசுப்பி விட்டுப் போயிருப்பான். அமெரிக்கன் கிழக்கில போய் நின்டு ஆமியளுக்கு கிழுகிழுப்பு ஏத்திட்டு போயிட்டான் இனி என்ன ஒருக்கா நொட்டிப் பாக்க வெளிக்கிடுவினம் தானே..

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேச்சே....

நான்தான் பிழையா விளங்கிப்போட்டன் போல.

ஆமி முன்னேறினா அது தமிழர் பக்கத்துக்குச் சாதகம் தானே?

ஆயுதமோ பாவிக்கப்போறம்?

கல்லாலதானே எறிஞ்சு கலைக்கப்போறம். நிலத்தை மீட்க மட்டும்தானே அவையள் ஆயுதங்களைப் பாவிப்பினம்?

பொம்மைகளை வைச்சுத்தானே சண்டை பிடிக்கபோகினம். எல்லாம் இஞ்சை இருந்து பட்டன்தட்ட அங்க வெடிக்கும். ஆமி சாவான்.

ஆக்கள் காணாமல் கட்டாய சேவை கொண்டு வந்தா எங்கட குடும்பத்திலயோ கைவைக்கப்போகினம். அந்தளவு தூரத்திலயோ இருந்து வாள் வீசிக்கொண்டிருக்கிறம்.

திரும்பவும் சொல்லிறன்,

காகத்துக்குக் கனவிலயும்...........

_________________________________

ஆமி முன்னேறினா விட்டிட்டு இருக்கவேணும் எண்டு நல்லவன் சொன்னார் எண்டு யாராவது கோமாளி இன்னொரு இடத்தில புரட்டுச் சொல்ல முதலே திரும்ப தெளிவாச் சொல்லிறன்.

முன்னேற்ற முயற்சிகள் தமிழருக்குப் பாதகமானவை. ஆகா உவர் நல்லா வேண்டிக்கட்டப் போறார் எண்டு சந்தோசப்பட்டுக் கருத்து எழுதிறது பிழை எண்டுறன். எந்தவொரு இழப்புமின்றி அந்த முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்படப் போவதில்லை.

ஆட்பலத்திலும் ஆயுத பலத்திலும் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்டளவில் இருக்கும் தமிழர் படைக்கு தொடர்ச்சியான வலிந்த தாக்குதல்கள் பாதகமே.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். எதிரி வலிந்த தாக்குதலைச் செய்யும்போது, நிச்சயமாகப் போர்த் தந்திரங்களை மாற்றி அமைக்க வேண்டிய தேவையிருக்கின்றது. ஆனால் முந்திக் கொள்ளும் விதம் என்பது சிறப்பாக இருக்கும்.

கேணல் சொர்ணம், ஓயாத அலைகள் 3 இல் சொன்ன விடயம் ஒன்று. எதிரி, ஜயசுக்குருவால் நெருக்கடி கொடுத்ததோடு, மன்னார் வழியாக முன்னேறுவதற்காக, அந்தப் பகுதிக்கு சிறப்புப் படையினரை நகர்த்திக் கொண்டிருந்ான். அந்த நேரத்தில் எதிரி ஒரு ஒழுங்கான தளமற்ற நிலையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்ண தலைவர், ஓயாத அலைகள் திட்டத்தை வகுத்தார் என்று சொல்லுவார். அது எல்லா நேரத்திலும் பொருந்தாது

.

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை இங்குள்ளவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை (தளத்தில்/களத்தில் உள்ளவர்கள் சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள்).

95 இல் புலிப் பாய்ச்சல் வெற்றி தந்தது. அதே பாணியில் புத்தூர்/நவக்கிரியில் தொடுத்த தாக்குதல் தோல்வியில் முடிந்தது. போர் யுக்திகள் எதுவுமின்றி சிங்கள இராணுவம் முன்னேறும்; வெளுத்துக்கட்டலாம் என்பது எப்போதும் சரிவராது. எதிரியும் தங்களது தந்திரங்களில் உள்ள பிழைகளைத் திருத்திக்கொள்ள முயல்வான் என்பதை நாம் உணரவேண்டும். மோட்டுச் சிங்களவன் என்று சொல்லி நாங்கள் மோடர்களாக மாறக் கூடாது.

சீ சீ சீச் சீ நக்கி தயவு செய்து இதை சொல்லுவதால் என்னை தூரோகி என்று சொல்ல வேண்டாம் என்று கூறி கொண்டு:::::::::::::::

எனது நக்கல் தொழிலை தொடங்கலாம் என்றி இருக்கேன் நீங்கள் என்ன சொல்லுறிங்கள்?

:P :P

ஊடக சுதந்திரம் அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதா?

BBC World Debate: Is a free media essential to development?

ஊடகங்கள் உலக ஒழுங்கில் வகிக்கும் முக்கிய பங்கும் அதன் கடமைகள் பற்றியும் மிகமுக்கியமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் வறிய நாடுகளில் உள்ள சவால்கள் பற்றி ஊடகங்களின் பாராமுகம் பற்றி நல்லதொரு விவாதம்.

அத்தோடு மேற்குலகின் இரட்டை வேட நிலைகள் பற்றி நல்ல கருத்துகள் பரிமாறப்பட்டது.

இன்று எவ்வாறு முன்னணி மேற்கத்தேய ஊடகங்கள் மக்களை தவறான அபிப்பிராயத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறது அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டி உண்மையான சவால்கள் என்ன என்று விவாதிக்கப்பட்டதோ அதே பரிதாப நிலை தான் புலம் பெயர்ந்த தமிழரின் ஊடகங்களும். அதாவது இராணுவ செய்திகளை வைத்தும் சிங்கள தரப்பை மட்டம் தட்டியும் மக்களை மகிழ்விக்கும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

http://www.eelamist.com/temp/worldDebate29Oct2006.mp3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.