Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியர்கள் இந்தக் களத்துக்கு தேவையா? தேவையில்லையா?

Featured Replies

தமிழின், தமிழீழத்தின் நண்பர்கள், ஒரு சில தனிப்பட்ட அரசியல் தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டவர்கள். தமிழீழத்திற்கு உறுதியான மனச்சுத்தியுள்ள நண்பர்களே தேவை! ஈழத்தமிழருக்கு, எல்லைச் சுவரில் குந்திக்கொண்டிருக்கும் மந்திகள் போன்ற ஆதரவாளர்களால் ஆபத்தே! (மதில் மேல் பூனையென்பது பழையது)! தமிழகத்தில் முதலைகண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகளிலும், கட்சி சார்பற்ற பத்திரிகையாளர்களே எமக்கு நண்பர்கள்! இவர்கள் மிகவும் சிலரே!. இக்களத்தில் தென்படும் ஓரிரு இந்திய கள உறுப்பினர்களும் கட்சி சார்புள்ளவர்களே! மாற்றுக் கட்சியினரை தாம் விரும்பியபடி திட்டலாம், ஆனால் தன் கட்சியினர யாரும் குறை கூறக்கூடாது! இப்படியான கருத்துள்ளவர்களால் யாழ்களம் நன்மை பெறாது! சில சில அரசியல் நக்கல்களையும் (Political Satire) ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஒரு "அரசியல் கட்சி ஆதரவாளருக்கு" தேவை என்பது இன்றைய "அரசியல் நாகரீகம்" ஆகிவிட்ட தன்மையில் ஒரு சிலரின் "வெட்டுக் கொத்து"க்குப் பயந்து சினிமா போன்ற மற்றய களப்பிரிவுகளில் ஓடி ஒளிந்து கொள்வது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இவர்களால் எப்படி தமிழீழத்திற்கு தம் கருத்துக்களால் உதவ முடியும்!

இப்படியான ஆயிரம்பேரைக் கொண்ட கருத்துக்களத்திலும் பார்க்க ஓரிரு ஆக்க பூர்வமான கருத்தாளர்கள் கொண்ட களம் பலரால் பார்வையிடப்படும். அப்படியான ஒரு நிலையிலேயே நானும், என் பல நண்பர்களும் இக்களத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக வாசகர்களாகவே இருந்தோம், இன்னும் இருக்கிறார்கள். சில வசதிக் குறைவாலேயே அநேகர் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கு பெறாமல் ஒரு மேல் கண்ணோட்டமாக சில முக்கிய கருத்துக்கள் என தாங்கள் கருதுவதை தெரிவு செய்து வாசித்து அறிந்து கொள்கிறார்கள். மற்றயவற்றை விட்டுவிடுகிறார்கள். இதை என் பல தமிழக நட்புறவுகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இங்கே புறமுதுகு காட்டும் "நண்பர்களின்" நட்பு தேவையா?

நண்பர் அல்லிகாவின் கருத்து இது.... அவரை அவரே புத்திசாலியாகவும், ஈழத்தமிழரின் காவலராக அவரை அவரே உருவகப்படுத்திக் கொள்வதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் மற்ற உறுப்பினர்கள் களத்திற்கு வேண்டுமா? வேண்டாமா என முடிவெடுக்க வேண்டியது நிர்வாகமே....

மற்ற நண்பர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தமிழர்கள் ஈழத்துத் தமிழர்கள் என்ற பிரிவினைகளுக்கு அப்பால் உலகத்தமிழர்களாக பலம்பெற வேண்டியதில் உங்களுக்கும் பங்குண்டு. இணைந்திருங்கள் நண்பர்களே.

கருத்துக்களில் மாறுபாடுகள் எழுவது சகஜம். அப்பா பிள்ளைக்கிடையிலேயே ஒத்த கருத்துக்கு தவமிருக்க வேண்டி இருக்கும் இக்காலத்தில்..கருத்துகளுக்கு அப்பால் தமிழ் மொழி உங்களை எங்களை எல்லோரையும் இணைத்திருக்கும் என்றும். வாருங்கள் மனதில் உள்ளதை எழுதுங்கள். தெளிவு பெறுங்கள். தெளிவுறுத்துங்கள்.

ஒரு சிலரின் பொறுமையிழந்த செயற்பாடுகளை மன்னியுங்கள் மறவுங்கள் உடனடியாகவே.

  • தொடங்கியவர்

எனக்குத் தெரிய வேண்டியது என்னவென்றால்

1) யாரெல்லாம் களத்துக்கு வரலாம் என்பதை முடிவு செய்யவேண்டியது களநிர்வாகமா அல்லது அல்லிகா போன்றவர்களா?

2) உறுப்பினர்கள் சினிமாவோ, கதை/கவிதையோ அல்லது அரசியல் சார்பு திரிகளோ எதில் பங்குகொள்ள வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் நண்பர் அல்லிகாவுக்கு உண்டா?

- கள நிர்வாகம் இதுமாதிரியான அதிகப்பிரசங்கிகளை அடக்கி வைக்க வேண்டும். இல்லையேல் கள உறுப்பினர்களுக்கிடையே இருக்கும் பரஸ்பர நட்புச்சூழல் கெட்டுப் போகும் சூழ்நிலை ஏற்படும்.....

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிய வேண்டியது என்னவென்றால்

1) யாரெல்லாம் களத்துக்கு வரலாம் என்பதை முடிவு செய்யவேண்டியது களநிர்வாகமா அல்லது அல்லிகா போன்றவர்களா?

2) உறுப்பினர்கள் சினிமாவோ, கதை/கவிதையோ அல்லது அரசியல் சார்பு திரிகளோ எதில் பங்குகொள்ள வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் நண்பர் அல்லிகாவுக்கு உண்டா?

- கள நிர்வாகம் இதுமாதிரியான அதிகப்பிரசங்கிகளை அடக்கி வைக்க வேண்டும். இல்லையேல் கள உறுப்பினர்களுக்கிடையே இருக்கும் பரஸ்பர நட்புச்சூழல் கெட்டுப் போகும் சூழ்நிலை ஏற்படும்.....

இக் கேள்விகளோடு எமக்கும் உடன்பாடுண்டு.

கள நிர்வாகத்துக்காக குரல் கொடுப்பவர்கள் கள உறுப்பினர்களுக்கு அட்வைஸ் கொடுப்பவர்கள் கொஞ்சப் பேர் செய்யினம் தான். அதை கள நிர்வாகம் பெருமையாப் பார்க்கிறதோ தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல பிரச்சனைகளின் தோற்றுவாய்களில் அதுவும் ஒன்று.

கள நிர்வாகம் கூட ஒரு சிலர் எழுதுவதற்குப் பதிலளிக்கும் வழக்கத்தை கையில் வைத்திருக்கிறது. மிகுதிப் பேர்களைக் கண்டுகொள்வதே இல்லை. அது அவர்களின் பிரச்சனை. சுட்டிக்காட்டுவதே எங்கள் கடமை. :idea:

லக்கி, தமிழில் எழுதக் கூடிய எல்லாரும் களத்தில் இருக்கலாம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

உறுப்பினர் எல்லா பகுதிகளிலும் பங்கு பற்றலாம் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் தாயகத்தின் அவல நிலைகருதி பொழுது போக்கு விடையங்களில் அதிக அளவு ஈடுபாடாக இருப்பது சிலரிற்கு எரிச்சலூட்டலாம்.

ஈழத்தவர்கள் பெரும்பாலக உள்ள களத்தில் அப்படியானவர்களை காண்பது தவிர்க்க முடியாது.

உதாரணத்திற்கு காகில் மாதிரி பல மடங்கு மோசமா ஒரு போர்ச்சூழ்நிலையோ குஜராத் பூகம்பம் போன்ற இயற்கை அனர்த்த காலத்திலோ ஒரு இந்தி தளத்தில் சினிமா கவிதை பொழுது போக்கு விடையங்களில் கவனம் செலுத்துவோர் மீது எப்படியான எண்ணங்களை வரவழைக்கும்?

இவை களவிதிகளாக இல்லை ஆனால் சக கருத்தாளர்களின் மனநிலையை கொஞ்சம் விளங்கிக் கொள்ள முயன்றால் உதவும்.

களம் என்பது ஒரு பொது நன்மைக்காக நடத்தப்படுவது. அதனை நல்வழிப்படுத்த யாரும் அறிவுரைகள் கூறலாம் குற்றம் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

களத்தின் போக்கின் மீது தாயகத்து நிலமையும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டமும் மேலாண்மை செலுத்தும் கள விதிகளிற்கு அப்பால் என்பதை நினைவில் கொள்ளவும்.

முன்னர் சொன்னமாதிரி தாயகத்து அவலங்கள் பலரை பல வழிகளில் பாதிக்கிறது கோபமடைய செய்கிறது விரக்த்தியாக்கி விடபாக்கிறது. தெரிந்தவர் உறவினர் என்று அவலத்தில் தவிப்பவர்கள் பற்றி விபரங்கள் வரும் பொழுது எல்லை மீறி கருத்துக்கள் சில வேளை போய்விடுகிறது.

ஈழத் தமிழரிடம் பாரிய எhதிர்பார்ப்பு இருக்கிறது கலைஞர் கருணாநிதி பற்றி. அவர் மீது விழும் வசைபாடல்கள் சரி என்று நிச்சையமாக சொல்லவில்லை ஆனால் அவர் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையாலும் உரிமையாலும் வந்தது என்றதையும் விளங்கிக் கொள்ளுங்கள்.

இதுவரை இல்லாத பரிய அவலத்தையும் பல் பரிமாண நெருக்கடிகளையும் எமது தேசிய விடுதலைப் போராட்டம் சந்திக்கப் போகிறது. இதை விளங்கிக் கொள்ள கிரகித்து கொள்ள நம்மில் பலர் தயார் இல்லை அதைவிட அதை எப்படி உங்களிற்கு நிலைகுலையாது அறிவிக்கப் போகிறோம் சர்வதேசத்திற்கு கொண்டுவர போகிறோம் என்று பல கடினமான சவால்கள் எங்களை எதிர்பார்த்திருக்கிறது.

எமது போராட்டம் தனது இறுதி அமிலப்பரீட்சையில் வெற்றி பெற உங்கள் உதவி அவசியமானது. அந்த உதவிகள் கிடைக்க உங்களின் புரிந்துணர்வு அரசியல் தெளிவு விழிப்புணர்வு முக்கியமானது. இது கட்சி வாக்கு அரசியலிற்கு அப்பாலான அர்ப்பணிப்பு உறுதிப்பாடு வேண்டி நிக்கிறது.

மாக ஈழவேந்த அய்யா சொன்னது போல் ஈழத்தமிழ் மக்கள் தமது சுதந்திர தமிழீழம் என்ற குழந்தையை பெற்றுக் கொள்ளும் பொழுது மருத்துவராக தாதியாக இருந்து ஈழத்து மக்களின் வலியை குறைத்து வெற்றி பெற உதவ வேண்டும் தமிழ்நாடு. அதை செய்யக் கூடிய இனப்பற்றும் முதிர்ச்சியும் தகுதியும் கலைஞரிடம் தாராளமாக இருக்கிறது. அவர் அந்த வரலாற்று கடமையை செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் எல்லாரிடமும் இருக்கிறது. ஆதங்னம் அங்கலாய்பாகவும் மாறிவிடுகிறது சில வேளைகளில்.

எனக்கு வாக்கு அளிக்க விருப்பம் இல்லை...

இங்கு எல்லாரும் முக்கியம்தான்... லக்கிலுக், அல்லிகா உட்பட எல்லாரும்தான்... பலர்கூடும் இடங்களில் சர்ச்சைகள் வரத்தான் செய்யும்... அவை வக்கிரங்களாக மாறாது காக்கவேண்டியது மற்றயவர்களின் கடமை...

  • தொடங்கியவர்

உதாரணத்திற்கு காகில் மாதிரி பல மடங்கு மோசமா ஒரு போர்ச்சூழ்நிலையோ குஜராத் பூகம்பம் போன்ற இயற்கை அனர்த்த காலத்திலோ ஒரு இந்தி தளத்தில் சினிமா கவிதை பொழுது போக்கு விடையங்களில் கவனம் செலுத்துவோர் மீது எப்படியான எண்ணங்களை வரவழைக்கும்?

நீங்கள் கூறுவது வாதத்திற்கு சுவையுடையதாக இருப்பினும் கள நிர்வாகம் பொழுதுபோக்கு, சினிமா, கதை, கவிதை போன்றவற்றிற்காக தனித் தனி பகுதிகள் வைத்திருப்பது ஏன்?

என்னைப் பொறுத்தவரை ஈழம் தொடர்பான செய்திகளை அறியவே இந்தக் களத்துக்கு வருகிறேன். மற்ற களங்களை விட இந்த விஷயத்துக்கு யாழ் களத்தையே நான் அதிகம் நம்புகிறேன். இதுவே ஈழம் தொடர்பான களங்களில் நம்பகமானது என்பது என் நம்பிக்கை.

இங்கே வெறுமனே பார்வையாளராக இருப்பதை விட ஏதேனும் சில பகுதிகளில் பங்குகொண்டால் கள உறுப்பினர்களிடையே பரிச்சயம் ஏற்படும் என என் நலனில் அக்கறை கொண்ட சில மட்டுறுத்துனர்கள் எனக்கு அறிவுறுத்தியதின் பெயரிலேயே சினிமா, கதை மற்றும் உறுப்பினர்களுக்கான போட்டிகளில் பங்கேற்கிறேன்.

மற்றபடி நான் ஈழம் மற்றும் ஏனைய அரசியல் தொடர்பான திரிகளில் பங்குகொள்வதோ அல்லது வெறும் பார்வையாளனாக இருப்பதோ என் விருப்பம் மட்டுமே. என்னை யாரும் வற்புறுத்த முடியாது.

அதுமாதிரி பங்கேற்று கசப்பான அனுபவங்கள் கிடைத்து அதன்பின்னர் சக புரிந்துணர்வின் பேரிலேயே நான் களத்துக்கு வந்துச் செல்கிறேன்.

அல்லிகா போன்றோரின் கருத்துக்கள் இங்கு நாங்கள் வந்து செல்வதையே குற்றம் சாட்டுவதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றபடி நான் ஈழம் மற்றும் ஏனைய அரசியல் தொடர்பான திரிகளில் பங்குகொள்வதோ அல்லது வெறும் பார்வையாளனாக இருப்பதோ என் விருப்பம் மட்டுமே. என்னை யாரும் வற்புறுத்த முடியாது.

அதுமாதிரி பங்கேற்று கசப்பான அனுபவங்கள் கிடைத்து அதன்பின்னர் சக புரிந்துணர்வின் பேரிலேயே நான் களத்துக்கு வந்துச் செல்கிறேன்.

உங்களிற்கு மட்டுமல்ல யாரிற்கும் அவ்வாறு கூற முடியாது. ஒருவரின் சுதந்திரத்தை பறிக்க முற்படும் போதே பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. :idea:

ஊடகங்களில் எல்லா விடையங்களும் வரும் ஆனால் காலம் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி சிலவற்றை பின்நகர்த்தி அந்த காலத்திற்கு உரியவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பது போலவே கள உறுப்பினர்களிடமும் பொறுப்பான நடத்தை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஒரு பேர் அவலம் நடந்தேறிக் கொண்டிருக்கும் பொழுது சன்டிவி தனது வழமையான நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்கிறதா? அல்லது ஏனைய பொறுப்புள்ள ஊடகங்கள் செய்கின்றனவா? எல்லாவற்றிலும் அந்த அவலத்தை முக்கியப்படுத்தி தான் தமது பணியை செய்ய முனைவார்கள். அவர்கள் விதிகள் சட்டங்கள் வைத்து இவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. இது இந்தியா அல்ல எந்த மனிதாபிமானமானவர்களின் நடத்தையாகத்தான் இருக்கும்.

அதற்காக அவர்கள் என்றும் அவ்வாறான நிகழ்ச்சி நிரலோடா இருக்கிறார்கள்? அதேபோல் தான் யாழ்களத்திலும் எல்லாவற்றிற்கும் பகுதிகள் இயலுமானவரை சேர்த்திருக்கு. அவற்றில் பங்கு பற்றுவது என்பது காலநேர சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பார்ப்பு இருக்கிறதே அன்றி அவை ஒன்றும் கள விதிகள் அல்ல.

இது லக்கிலுக்கிற்கு மாத்திரமல்ல ஏனை கள உறுப்பினர்களிற்கும் பொருந்தும். வேறு பல ஈழத்தமிழரின் கூத்துகளோடு ஒப்பிடுகையில் லக்கி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் இந்தக் களத்துக்கு தேவையா? தேவையில்லையா?

இந்தத் தலைப்பையே நான் வரவேற்கவில்லை லக்கி சார். நானும் இந்தியர் என்ற நிலையில் தான் வாழ்ந்து வருகிறேன். யாழ்நகரில் 5 வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். கொழும்பு என்றும் இப்படி நீண்டு கொண்டே போகிறது. இப்போ லண்டனில்.

தமிழ் எழுதத் தெரிந்த் அனைவருக்கும் இந்த களம் தேவையே எண்டு நான் நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவனின் இந்தக் கருத்து ஏற்புடையதல்ல.

ஈழத்தின் அவலம் என்பது நீண்டது. அதற்காக எல்லோரும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க வேண்டும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது சாத்தியப்படாதது மட்டுமன்றி அது பிற விடயங்களில் இருந்து கவனத்தைக் கலைப்பது போன்றதாகிவிடும்.

சோகமான சூழலில் களியாட்டங்களைத் தவிர்க்கலாம். ஈழத்து அரசியல் பேசுகிறார்கள் என்பதற்காக எல்லோரும் அதில் பங்களிக்க வேண்டும் என்பதில்லை. அவரவர் தங்களுக்கு பிடித்தமான பொருத்தமான இடத்தில் தங்களுக்கு என்றுள்ள கருத்தை வைக்கலாம் என்பதுவே நியாயம்.

ஈழத்துப் போரின் பாதிப்புப் போல ஈராக்கிலும் தினமும் இடம்பெறுகிறது. அதற்காக எவராவது உலகம் பகுதியில் ஒரு செய்தியாக வேணும் அந்த மனித அவலங்களை வல்லாதிக்கத்தின் விளைவுகளை காட்டுகிறார்களா இல்லைத்தானே? வெளிநாட்டுச் செய்திகளில் ஏன் அவை இடம்பெறக் கூடாது ஏன் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை? காரணம் யாழில் உள்ளவர்களின் மனிதாபிமானம் மற்றும் நடவடிக்கைகள் குறுகிய எல்லைக்குள் உள்ளமையே.

தினமும் 25,000 மக்கள் உலகில் பட்டினிச்சாவுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்காக எவராவது பட்டினி இருக்கிறீர்களா? அல்லது வருத்தப்படுறீங்களா? அல்லது இப்படி ஒன்று நடக்கிறதே என்றாவது அறிய முற்பட்டிருக்கிறீர்களா? அல்லது அறிந்து ஏதாவது நடவடிக்கையில் இறங்கி இருக்கிறீர்களா இல்லையே.

அவர்களுக்காக உலகம் ஒரு செய்தியைப் பிரசுரிக்கிறது அதில் கூட எத்தனை பேர் அக்கறை காட்டுகின்றனர். உலகில் 85 கோடி மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். யாழ்ப்பாணத்தில் பட்டினி வரப்போகிறது என்றவுடன் பதறித்துடிக்கும் நீங்கள் அந்த 6 இலட்சம் பேரோடு இந்தக் கோடிகளின் நிலையையும் எண்ணிப் பார்த்து அதற்கான காரணிகளை அடையாளம் காட்டியுள்ளீர்களா? மக்கள் இது குறித்து விழிப்புணர்வுக்கு உள்ளாக்கி உள்ளீர்களா?

ஆக ஈழத்தவர்கள் தங்களின் குறுகிய கண்ணோட்டத்துக்குள் எல்லோரும் அடங்கிவிட வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.

ஈழத்தவரின் துயரத்தை கண்டு எல்லோரும் துயருற்று இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்க முடியாது. நாமே அப்படி இல்லாத போது எப்படி மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது?

ஈழத்தில் அவலம் என்பதற்காக ஈழத்தமிழர்கள் தங்கள் நடவடிக்கைகளை இடைநிறுத்தியா வைத்திருக்கின்றனர் இல்லையே. அவர்கள் சூழலுக்கு ஏற்றமாதிரி தங்களை மாற்றிக் கொண்டு வழமையான காரியங்களைச் செய்கின்றனதானே.

அந்த வகையினதே பாதிப்பு என்பது தனக்கு வரும் வரை அதை பலரும் உண்மையாக உணர்வதில்லை. அந்த வகையில் இங்கு கூட களியாட்டங்களுக்கு அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. பிறந்த நாள் திருமண நாள் வாழ்த்துக்கள் என்று பல விடயங்களை ஈழத்தவர்கள் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை கண்ணீர் அஞ்சலியும் செலுத்துகின்றனர்.

அதுபோன்றதே களத்திலும் பல தரப்பட்டவர்களையும் உள்ளடக்கும் போது அவரவர் தான் வாழும் சூழலுக்கு ஏற்பவே தனது நிலைப்பாட்டை எடுத்துக் கொள்வார். துயரம் ஒன்றில் பங்கேற்கும் ஒருவர் அது முடிந்ததும் வழமைக்குத் திரும்புவது போல களத்தின் ஒரு மூலையில் மனித அவலம் பற்றிப் பேசும் அதேவேளை இன்னோர் மூலையில் சினிமா பற்றியும் பேச ஆட்கள் இருப்பார்கள். நிச்சயம் எல்லோரையும் அவலம் பற்றி சிந்திக்க வைக்க முடிந்தால் நாம் என்ன உலகே அதை வரவேற்கும். ஆனால் அது சாத்தியப்படக் கூடியதா?

இந்த வினாடி கூட உலகின் எங்கோ ஓர் மூலையில் அவலம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். அதற்காக நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து உறை நிலையில் இருக்க முடியுமா? முடியாது.

அதேபோன்றதே களத்திலும்..அவரவர் மனவோட்டத்துக்கு ஏற்ப அவரவர் தீர்மானிக்க வேண்டும். தான் இந்தச் சூழலில் இதைச் செய்யலாமா சொல்லலாமா என்று. நாம் அவர்களை நோக்கி இந்தச் சூழலில் இதைத்தான் செய்ய வேண்டும் என்று விதிக்க முடியாது. அவருக்கு அந்தச் சூழலில் அப்படிச் செய்யப் பிடிக்காமல் அல்லது விரும்பாமல் வேறு ஓர் விடயத்தில் தன்னை ஈடுபடுத்துவது திருப்திகரமாக இருக்கலாம். அவை தனிமனிதப் பண்புகளிலும் தங்கியுள்ளது.

அந்த வகையில் ஒரு மனிதாபிமான மரியாதையோடு நடந்து கொள்ளக் கோர முடியுமே தவிர இவற்றை ஒதுக்கி இவற்றில் மட்டும் தான் இச்சூழலில் கவனம் செலுத்த வேண்டும் என்று எல்லோரையும் வற்புறுத்த முடியாது. அதற்கு இக்களத்தில் உள்ள அனைவரினதும் வேறுபட்ட இரசணை மற்றும் செயற்பாட்டு உண்மைகள் உதாரணமாகி உள்ளன.

போர் வேளைகளில் மனித அவலங்கள் நிகழும் போது

  • கருத்துக்கள உறவுகள்

இது யாழ்களம் இங்கு ஈழத்துப்பிரச்சினை பற்றியே அதிகம் பேசப்படும், இதன் நோக்கம் ஈழத்தமிழரின் விடுதலை நோக்கியதாகவும், அதற்காக உலகத்தமிழரை ஒன்றினைப்பது நோக்கியதாகவும், அவர்களது ஆதரவை பெருக்குவதை நோக்கமாக கொண்டதாகவே இருக்கும், அதைத்தான் நாமும் விரும்புகிறோம். இது பிரதானமான நோக்கம் அதோடு பல்சுவை நிழ்சிகளும் இருக்கும். இது களத்தை சலிப்பின்றி கொண்டு செல்ல பேருதவியாக இருக்கும்.

என்னைப்பொறுத்தவரைக்கும் எமது தேசத்தில் பிறந்து சிங்களவன் போடும் பிச்சைக்காக அவர்களோடு ஒட்டி இருக்கும் ஒட்டுண்னிகளை விட இந்தியர்கள் மேலானவர்கள், அவர்களிலும் எமக்காக குரல் கொடுப்பவர்கள் எமது பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர்கள். அவர்களை விட எம்மை எதிர்பவர்களும் மேலானவர்கள்தான் ஏன் எனில் அவர்கள் எமக்கு உதவி செய்யாவிட்டாலும் எமக்கு உபத்திரம் செய்யாதவர்கள். எமது மக்கள் பசித்திருக்கும் போது அதுபற்றி கவலைப்பட கூடாது என்பவர்களை விட அவர்கள் மேலானவர்கள். அவர்கள் ஒருகாலத்தில் எம்மை பற்றி புரிந்து கொள்வார்கள்,புரிந்து கொண்டும் இருக்கிறார்கள்.

ஒட்டுக்குழுக்கள் எமது குலத்தை அழிக்கும் கோடரிக்காம்புகள் எந்தக்காலத்திலும் புரிந்துகொள்ள மாட்டார்கள். எட்டப்பர் என்பதே வரலாற்றில் அவர்களது நிரந்தர இடம். அனைத்து இனமான உணர்வுடையவர்களும் எமக்கு தேவையானவர்களே. :idea:

லக்கிலுக்

உங்கள் மனிதில் எவ்வளவு வேதனையுள்ளது என்பதை இந்த தலைப்பே காட்டுகின்றது. சிலரின் தான்தோன்றித்தனமான கருத்துக்களை நீங்கள் கணக்கில் எடுக்காதிருப்பதே நல்லது. இது போன்ற விடயங்களில் நிர்வாகமும் தனது தெளிவான நிலைப்பாட்டை தெரியப்படுத்துவது இங்கே முக்கியம். தொடர்ந்தும் பக்கச் சார்பான நிலையிலேயே நிர்வாகம் செயற்படுமானால் அது களத்திற்குத் தான் அபகீர்த்தியை உண்டாக்கும்.

வசம்பு நிர்வாகம் பக்கச் சார்பானதகாச் செயற்பட்டதாக நீர் கூறுவதற்கான ஆதாரத்தை முன் வையும், சும்மா எழுதமாற்றாக குற்றம் சாட்டுவதையும் முதலைக் கண்ணீர் வடிப்பதையும் நிற்பாட்டும்.

லக்கி இங்கே இந்தியர்கள் தேவையா இல்லையா என்பது அர்த்தம் அற்ற கேள்வி,இங்கே எவருமே அப்படிக் கூறவில்லை. நீங்கள் அல்லிகா பிறிதொரு இடத்தில் வாசகன் எழுதியவற்றிற்கே பதில் எழுதி இருந்தார்.அதில் இந்திய நண்பர்களுக்கு எதிராக எழுதியதாலையே அவர்கள் இங்கு வருவதில்லை என்று எழுதி இருந்தார்.இங்கே வருவதும் வராமல் இருப்பதுவும் அவர் அவர் சொந்த விருப்பங்கள்.அதனை மற்றவர்கள் மேல் திணிக்க முடியாது.இந்தக் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொண்ட்டால் இங்கே எதையுமே எவருமே எழுதி விட முடியாது.ஒருவர் சொல்லுவார் எனக்கு இங்கே இந்து மதத்தைபற்றி எழுதுவதால் நான் இங்கு வரமாட்டேன் அதனால் நீங்கள் அப்படி எழுதுவதை நிற்பட்டுங்கள் என்று.இன்னொருவர் ஒரு முகமூடியில் வந்து சொல்வார் நீங்கள் சமாதானம் என்பவருக்கு பதில் எழுதுவதால் நான் இங்கு வர மாட்டேன் என்று.இன்னொருவர் சொல்லுவார் நான் எனக்கே சுய தடை செய்வது நிர்வாகம் நான் சொல்வதைக் கேட்க்கவில்லை நான் மன முடைந்துள்ளேன் .இனி இங்கு வரவே மாட்டேன் என்பார்.பிறகு அதற்கு இரண்டு மூன்று பேர் கவலை தெருவிப்பார்கள்.பிறகு அவரே பல முகமூடியில் வருவார்.இப்படி ஒவ்வொரு முகமூடியும் சொல்லும் கதைகளை காதில் போடாமல் கருத்திற்க்கு பதிற் கருத்து நேர்மையாக எழுதினலையே எந்தப் பிரச்சினைகளும் இல்லாது இருக்கும்.எழுதும் விடயம் பற்றிய வாசிப்பும் பொறுமையும் உணர்ச்சிவசப்படாமலும் நாகரீகமாகவும் கருத்தாடல் செய்தால் அனேகமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

  • தொடங்கியவர்

லக்கிலுக்

உங்கள் மனிதில் எவ்வளவு வேதனையுள்ளது என்பதை இந்த தலைப்பே காட்டுகின்றது. சிலரின் தான்தோன்றித்தனமான கருத்துக்களை நீங்கள் கணக்கில் எடுக்காதிருப்பதே நல்லது. இது போன்ற விடயங்களில் நிர்வாகமும் தனது தெளிவான நிலைப்பாட்டை தெரியப்படுத்துவது இங்கே முக்கியம். தொடர்ந்தும் பக்கச் சார்பான நிலையிலேயே நிர்வாகம் செயற்படுமானால் அது களத்திற்குத் தான் அபகீர்த்தியை உண்டாக்கும்.

அன்பு வசம்பு,

முடிந்தவரை அந்தமாதிரி கருத்துக்களை புறந்தள்ளி விட்டே இந்தக் களத்தை பாவிக்கிறேன். இருந்தும் தொடர்ந்து அடிப்படைக் காரணம் ஏதுமில்லாமல் பொத்தாம் பொதுவாக ஏதாவது சொல்லவேண்டுமே என்று எதையாவது சொல்லித் தொலைப்பவர்களை நினைத்தால் எரிச்சல் தான் வருகிறது.

இந்த மாதிரி தேசபக்தி வேடம் போட்டு ஊரை ஏமாற்றுபவர்கள் நிறைய பேரை என் அனுபவத்தில் கண்டறிந்திருக்கிறேன். மற்றவரை குறை சொல்லியே இவர்களுக்கு இருப்பதாக காட்டும் தேசபக்தியின் அளவுகோல் கேலிக்குரியதே..... :lol:

லக்கி இங்கே எவருமே உங்களை வர வேண்டாம் என்று சொல்லவில்லை.அல்லிகா கூறியது வாசகன் என்பவர் எழுதிய கருத்திற்கு பதிற் கருத்து மட்டுமே.ஒருவர் வராமால் விடுகிறார் அதனால் நீங்கள் எழுதுவதை எழுதாதீர்கள் என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.மேலே உள்ள வாக்கெடுப்பும் அதனையே உறுதி செய்கிறது.ஆகவே வேண்டுமென்றே பிரிவினைகளை உருவாக்க முயல்வோரையும் முதலைக் கண்ணீரை வடிப்போரையும் சிண்டு முடிவோரையும் இணங்கணுங்கள்.

யாழ்க்களத்திற்கு வருவோரை வராமற் செய்ய என்றே சிலர் இங்கே பல முகமூடிகளில் நாடகமாடுகின்றனர்.தலைப்பத் திறக்க ஒரு அப்பாவி முகமூடி,பின்னர் சிண்டு முடிய இன்னொரு முகமூடி பிறகு அதற்கு ஆதரவு தெருவிக்க இன்னொரு முகமூடி என்று இப்போது தசாவதாரம் எடுதிருக்கிறார் ஒருவர்.அவரின் ஒரே நோக்கம் யாழ்க் களத்தில் அர்த்தமற்ற ,தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி இங்கிருந்து உறுபினர்களை வெளியேற்றி களத்தை முடக்குவது ஒன்றே.

  • தொடங்கியவர்

லக்கி இங்கே இந்தியர்கள் தேவையா இல்லையா என்பது அர்த்தம் அற்ற கேள்வி,இங்கே எவருமே அப்படிக் கூறவில்லை.

லக்கி இங்கே எவருமே உங்களை வர வேண்டாம் என்று சொல்லவில்லை.

அல்லிகா எழுதியது:

தமிழின், தமிழீழத்தின் நண்பர்கள், ஒரு சில தனிப்பட்ட அரசியல் தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டவர்கள். தமிழீழத்திற்கு உறுதியான மனச்சுத்தியுள்ள நண்பர்களே தேவை! ஈழத்தமிழருக்கு, எல்லைச் சுவரில் குந்திக்கொண்டிருக்கும் மந்திகள் போன்ற ஆதரவாளர்களால் ஆபத்தே!

இப்படியான ஆயிரம்பேரைக் கொண்ட கருத்துக்களத்திலும் பார்க்க ஓரிரு ஆக்க பூர்வமான கருத்தாளர்கள் கொண்ட களம் பலரால் பார்வையிடப்படும். அப்படியான ஒரு நிலையிலேயே நானும், என் பல நண்பர்களும் இக்களத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக வாசகர்களாகவே இருந்தோம், இன்னும் இருக்கிறார்கள். சில வசதிக் குறைவாலேயே அநேகர் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கு பெறாமல் ஒரு மேல் கண்ணோட்டமாக சில முக்கிய கருத்துக்கள் என தாங்கள் கருதுவதை தெரிவு செய்து வாசித்து அறிந்து கொள்கிறார்கள். மற்றயவற்றை விட்டுவிடுகிறார்கள். இதை என் பல தமிழக நட்புறவுகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இங்கே புறமுதுகு காட்டும் "நண்பர்களின்" நட்பு தேவையா?

நாரதர் நியாயத்தை உங்கள் மனம் கண்டிப்பாக உணரும். ஆனால் அதை வெளியே சொல்வதில் வேண்டுமானால் கவுரவம் தடுக்கலாம்.

லக்கி அல்லிகா எழுதியது வாசகன் எழுதிய கருதுக்குப் பதிற் கருத்து அதை அந்தவகையில் தான் பார்க்க வேண்டும்.இங்கே இந்தியர் என்பதற்காக எவரையும் எவரும் பிரிக்கவில்லை.ஒருவருக்கு இங்கு எழுதப்படும் கருதுக்கள் பிடிக்கவில்லை என்பதால் மற்றவர்கள் அந்தக்கருதுக்களை எழுதாமல் இருக்கமுடியாது.அது இந்தியர் என்றாலும் ஈழத்தவர் என்றாலும் ஒன்று தான்.கருதுக்குப் பதிற்கருத்து எழுதாமல் அதைப்பற்றி எழுதாதே இதைப்பற்றி எழுதாதேன்று சொல்ல,முடியாது என்று தான் அல்லிகா கூறி உள்ளார் என்பதை மீண்டும் தெளிவு படுத விரும்புகிரேன்.இங்கே கவுரவப் பிரச்சினை எதுவும் இல்லை.

தலைப்பத் திறக்க ஒரு அப்பாவி முகமூடி

நாரதர் நான் ஒரே ஒரு முகமூடிதான் வாசகன் என்ற பெயரில் போட்டிருக்கிறேன். :lol:

நண்பர் லக்கிலுக்

எல்லைகளை கடந்து தமிழர்கள் என்ற அடிப்படையின் கீழ் பலமான இனமாக நாம் மீண்டும் உலகலாவிய ரீதியில் ஒருங்கினைய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.

அல்லிகாவின் கேள்விக்கு ஏற்கனவே எனது தலைப்பின் கீழ் பதிலளித்து விட்டேன்.

உணர்ச்சிவசப்படும் ஈழத்தமிழ் உறவுகள் இது போன்ற ஆக்கங்கள் தற்பொழுது வருவதை கவனியுங்கள்.

http://www.tamilcanadian.com/page.php?cat=133&id=4499

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு நிர்வாகம் பக்கச் சார்பானதகாச் செயற்பட்டதாக நீர் கூறுவதற்கான ஆதாரத்தை முன் வையும், சும்மா எழுதமாற்றாக குற்றம் சாட்டுவதையும் முதலைக் கண்ணீர் வடிப்பதையும் நிற்பாட்டும்.

லக்கி இங்கே இந்தியர்கள் தேவையா இல்லையா என்பது அர்த்தம் அற்ற கேள்வி,இங்கே எவருமே அப்படிக் கூறவில்லை. நீங்கள் அல்லிகா பிறிதொரு இடத்தில் வாசகன் எழுதியவற்றிற்கே பதில் எழுதி இருந்தார்.அதில் இந்திய நண்பர்களுக்கு எதிராக எழுதியதாலையே அவர்கள் இங்கு வருவதில்லை என்று எழுதி இருந்தார்.இங்கே வருவதும் வராமல் இருப்பதுவும் அவர் அவர் சொந்த விருப்பங்கள்.அதனை மற்றவர்கள் மேல் திணிக்க முடியாது.இந்தக் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொண்ட்டால் இங்கே எதையுமே எவருமே எழுதி விட முடியாது.ஒருவர் சொல்லுவார் எனக்கு இங்கே இந்து மதத்தைபற்றி எழுதுவதால் நான் இங்கு வரமாட்டேன் அதனால் நீங்கள் அப்படி எழுதுவதை நிற்பட்டுங்கள் என்று.இன்னொருவர் ஒரு முகமூடியில் வந்து சொல்வார் நீங்கள் சமாதானம் என்பவருக்கு பதில் எழுதுவதால் நான் இங்கு வர மாட்டேன் என்று.இன்னொருவர் சொல்லுவார் நான் எனக்கே சுய தடை செய்வது நிர்வாகம் நான் சொல்வதைக் கேட்க்கவில்லை நான் மன முடைந்துள்ளேன் .இனி இங்கு வரவே மாட்டேன் என்பார்.பிறகு அதற்கு இரண்டு மூன்று பேர் கவலை தெருவிப்பார்கள்.பிறகு அவரே பல முகமூடியில் வருவார்.இப்படி ஒவ்வொரு முகமூடியும் சொல்லும் கதைகளை காதில் போடாமல் கருத்திற்க்கு பதிற் கருத்து நேர்மையாக எழுதினலையே எந்தப் பிரச்சினைகளும் இல்லாது இருக்கும்.எழுதும் விடயம் பற்றிய வாசிப்பும் பொறுமையும் உணர்ச்சிவசப்படாமலும் நாகரீகமாகவும் கருத்தாடல் செய்தால் அனேகமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

களத்தின் போக்கில் இப்படியான சந்தேகப்பார்வைகளை விதைக்கும் சந்தேகப்பேர்வழிகள் கருத்துக்கு விடை தேட செலவழிக்கும் நேரத்தை விட தங்கள் சந்தேகங்களைக் கருத்தாக்கி கருத்தாளர்களை சீண்டு முடிவதில் செலவழிக்கும் நேரம் அதிகம்.

இவரின் வாதப்படியே இவரே இங்கு தசவதாரம் எடுத்தால் கூட யாரும் ஏன் என்று கேட்கப்போவதில்லை. ஏன் இவர் கூட இப்போ எத்தனை முகமூடியோடு உள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் தேட முடியாத சூழலில் இப்படியான கருத்துக்கள் அவசியம் தானா?

இப்படியான கருத்துக்கள் தான் இங்குள்ள கருத்தாளர்களின் நேர்மைத் தன்மையையே சிதைக்க ஆரம்பிக்கிறது எனலாம்.நேர்மையாக வருபவரைக் கூட சந்தேகிப்பதன் மூலம் (சந்தேகம் என்று கூறக் காரணம் இவரிடம் இவரின் முடிவுகளுக்கு ஆதாரங்களே இல்லை. தேடவும் முடியாது அப்படி இருந்தும்..) இவரே பல பெயரில் வர தூண்டுதலாக அமைகின்றார் என்று கொள்ளலாம்.

இவருக்கு தனக்குள்ள சந்தேகங்களைக் கருத்தாக்கி திணித்து விடுவதில் ஒரு ஆத்ம திருப்தியோ என்னவோ தெரியாது. இவர் தனது கருத்துக்களை வைக்குமிடமெல்லாம் கருத்தாளர்களை மோசமாக ஒருவரோடு ஒருவர் இணைத்து முகமூடி என்றிடுவார். இவரா எத்தனை முகமூடியோடு இங்குள்ளார் என்பதற்கோ அப்படி இவரில்லை என்பதற்கோ இங்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

தனது கருத்தைத் தெளிவாக்க முடியாத சூழலில் இவர் திட்டமிட்டு இப்படிச் செய்து வருவது களத்தின் நாம் அண்மைய தினங்களில் அவதானித்து வருகின்றோம். இவரைப் பின்பற்றி இன்னும் சிலரும் பிரச்சனைகளை பெருக்கிக் கொள்கின்றனர். இவர்கள் கருத்தைத் தேடுகிறார்களா கருத்தாளர்களைத் தேடுகிறார்களா? நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும் இவர்கள் இங்கு இப்படி செயற்பட அனுமதிப்பதன் மூலம்.

நிர்வாகம் இப்படியான கருத்துக்களை அகற்றுவதம் மூலமே அநாவசிய சந்தேகங்களும் கருத்துக்குப் புறம்பாக கருத்தாளர்களை தங்களின் சந்தேகப் பார்வையால் இணைப்பது அவற்றைக் கருத்தாக்கி அனைவரையும் குழப்புவதை தடுக்க முடியும்.

தனது கருத்தில் தெளிவிருந்தால் ஒருவரே ஆயிரம் பெயரில் வந்து சாட்சி கருத்தெழுதினும் தெளிவானவன் எவனும் தனது கருத்துக்கு மட்டுமே முதன்மை அளிப்பானே தவிர எத்தனை பேர் வந்து என்ன செய்யினம் என்று தேவையற்ற குற்றச்சாட்டுகளோடு களத்தில் இருக்கமாட்டான். கருத்து வைப்பவர்களின் மீதான அநேமதேயக் குற்றச்சாட்டுகளும் களத்திற்கு தானே வழிகாட்டி என்ற தோறணையிலான நினைப்புகளும் அதற்கான சந்தர்ப்பம் வழங்களுமே பலரும் அதிருப்திப்போக்கோடிருக்க வழி செய்கிறது. அதுவே பிரச்சனைகளுன் தோற்றுவாய்களும் காரணமாகின்றது.

அந்த வகையில் கருத்தாளர்களை நோக்கி சந்தேகத்தை விதைக்கும் இப்படியான கருத்துக்களை எனியும் அனுமதிக்க வேண்டியது அவசியமா என்பது குறித்து நிர்வாகம் சிந்திக்க வேண்டும். இங்கு ஒருவர் ஒரு பெயரில் தான் எழுத வேண்டும் என்ற ஒரு விதியே இல்லாத போது ஏன் இவருக்கு மட்டும் கருத்தாளர்களைப் பல முகக்காரர்களாகக் காட்ட வேண்டிய அவசியம். தனது கருத்தின் நியாயத்தை நிலை நிறுத்த முடியாது போவதால் இப்படிப் பிரச்சனைகளை உண்டு பண்ணும் கருத்துக்களை வைக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமன்றி இவர் இன்னும் சிலருக்கு தவறான உதாரணமாகவும் இப்படியான கருத்துக்கள் மூலம் இருக்கிறார்.

உண்மையாக ஒரு பெயரில் வந்தெழுதும் கருத்தாளர்களைக் கூட இவரின் இப்படியான சந்தேகத்தனமாக மூடிச்சுப் போடும் கருத்து அதிகம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகவும் களத்தின் மீதான வெறுப்பாகவும் உருவெடுக்கக் கூடும். கள நிர்வாகம் இவர்களின் கருத்துக்களுக்கு இடமளிப்பதால் அவர்கள் மீதும் அது வெறுப்பாக உருவெடுக்க வாய்ப்பிருப்பதை உணர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயமாகிறது.

லக்கிக்குக் கூட இப்படியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம் இங்கு. அநாவசியமாக ஒரு கருத்தாளரின் பெயர் இருக்க இன்னொரு கருத்தாளரின் பெயரை விளித்து கருத்தெழுதுவது இவர்களின் சந்தேகங்களுக்கு கருத்து வடிவம் கொடுப்பதாகவே பார்க்க முடிகிறது. இது இக்களத்தில் நிர்வாகத்தால் சிலருக்கு என்று அனுமதிக்கப்படுவது நிர்வாகம் தொடர்பிலும் சந்தேகத்தை நம்பிக்கையீனத்தைத் தருகிறது. இக்களத்தில் ஒருவர் ஒரு பெயரில் தான் எழுத வேண்டும் என்பது விதியல்ல என்பதை அனைவரும் உணர்ந்து உங்கள் கருத்துக்கு உங்களிடம் தெளிவான நிலைப்பாடு இருப்பின் நீங்கள் எவர் எத்தனை பெயரில் வந்து எழுதின் உங்கள் கருத்தோடு உறுதியாக இருப்பீர்கள் கருத்தாளர்களில் எத்தனை முகம் என்ற சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் வராது என்று சுட்டிக்கட்டாலம். இப்படியான சந்தேகங்களை விதைத்து நேர்மையானவர்களை நேர்மையற்றவர்களாக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்காமல் இருப்பதே சிறப்பு. களத்துக்கு இன்று அவசியமும் கூட.

இவர்கள் முகமூடி என்று தேவையற்று அளிக்கு முக்கியத்துவமே பல முகமூடிகள் பெருகவும் வழி ஏற்படுத்துகிறது. நிர்வாகமாவது கவனிக்குமா இது தொடர்பில்.

  • கருத்துக்கள உறவுகள்

இக் கேள்விகளோடு எமக்கும் உடன்பாடுண்டு.

கள நிர்வாகத்துக்காக குரல் கொடுப்பவர்கள் கள உறுப்பினர்களுக்கு அட்வைஸ் கொடுப்பவர்கள் கொஞ்சப் பேர் செய்யினம் தான். அதை கள நிர்வாகம் பெருமையாப் பார்க்கிறதோ தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல பிரச்சனைகளின் தோற்றுவாய்களில் அதுவும் ஒன்று.

கள நிர்வாகம் கூட ஒரு சிலர் எழுதுவதற்குப் பதிலளிக்கும் வழக்கத்தை கையில் வைத்திருக்கிறது. மிகுதிப் பேர்களைக் கண்டுகொள்வதே இல்லை. அது அவர்களின் பிரச்சனை. சுட்டிக்காட்டுவதே எங்கள் கடமை. :idea:

கள நிர்வாகத்தை நியாயப்படுத்துவதில் எவ்வித வித தவறும் கிடையாது. ஆனால் தானே கள நிர்வாகி போல வீராப்புக் காட்டி வாங்கிக் கட்டுவது தான் கேவலமானது. ஆதைவிடக் கேவலம், வரமாட்டேன் என்று மகுடம் போட்டு, வந்து நிற்பது!

அதுவும் யாழ்களத்தில் இருந்தபடி, யாழ்களத்தைப் பற்றிக் கதைப்பது என்பது அதைவிடக் கேவலமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் லக்கிலுக் தொடர்ந்து வரவேண்டும் என்பதே நமது விருப்பும். ஆனால் இது ஒரு அரசியல்ரீதியான விளையாட்டாகப் போக்கிட மாட்டார் என்பதில், நம்பிக்கை உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே உங்களுக்கு நங்கு பொருத்தமாக உள்ள பதில் கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.