Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தாக்குதலை நிறுத்தினால் ஏ-9 திறக்கப்படும்-- சிறிலங்கா

Featured Replies

noxces.jpg

தமது தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நிறுத்தி, சாதகமான சூழலொன்றை ஏற்படுத்தினால், ஏ-9 பாதை திறப்பதற்கு அரசு தயாராக இருக்கின்றது என பேச்சுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

சிறிலங்கா அரச பேச்சுக்குழு நாடு திரும்பிய பின்னர், சிறிலங்கா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளரிடம் கருத்து வெளியிட்ட சிறிபால டி சில்வா, விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல்களை நடத்தியதால் தான் ஏ-9 பாதை மூடவேண்டி நேரிட்டது என்றும் காரணம் கூறினார்.

பேச்சு ஆரம்பிக்க முன்னரும், பேச்சுக்கள் நடக்கும் போதும் கூட, ஏ-9 பாதையில் முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காகவே ஏ-9 பாதை திறக்க முடியாதுள்ளது. ஆனால், ஏ-9 பாதையை நிரந்தரமாக மூடிவைத்திருப்பது அரசின் நோக்கமல்ல. களநிலைமை சீரடைந்ததும், ஏ-9 பாதை திறப்பது பற்றி அரசு ஆராயும்.

விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுக்க மறுத்திருக்கிறார்கள். பேச்சு மேசைக்கு வருவதற்கு புலிகள் இணங்கியிருந்தால் வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும். ஏ-9 பாதை திறந்தால்தான் பேச்சுக்கு வருவோம் என்பது விடுதலைப் புலிகளின் நிபந்தனையல்ல, விடுதலைப் புலிகளின் உண்மையான நிபந்தனை, முகமாலை பாதையைத் திறக்கும்படி கோரியிருப்பது தான்.

ஆனால், ஏ-9 பாதை திறந்ததும், அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுக்களுக்கு விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்கள். அதனால் நாளடைவில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பிக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில், தேசிய பாதுகாப்பை விலை வைத்து அடுத்த பேச்சுக்கான திகதியைப் பெற முடியாதுள்ளது.

அரசைப் பொறுத்த வரை, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகக் கொள்ளவில்லை. முதற்தடவையாக, அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு இரு பகுதியும் இணங்கியுள்ளது. இதற்கு ஏதுவாக தெற்கிலும் பொது நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதை விடுதலைப் புலிகளும் வரவேற்றுள்ளதுடன், இந்த இரு பிரதான கட்சிகளும் இணைந்து முன்வைக்கவுள்ள தீர்வை ஆராயவும் அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பின்னர் கருத்துக்கூறிய சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் கலாநிதி பாலித கோகன்ன, ஜெனீவாவில் என்ன பேசப்போகின்றோம் என்ற விடயத்தில், நாட்டை விட்டு செல்லுமுன்னர், இரு தரப்பினரிடையிலும் இணக்கப்பாடு காணப்பட்டது. என்ன பேசவேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலை ஏற்கனவே நோர்வே தரப்பினர் தயாரித்து, இரு தரப்பிலும் இணக்கம் கண்டனர். இருப்பினும் அங்கு சென்றபின்னர் தான் விடுதலைப் புலிகள் ஏ-9 பாதை திறப்பது தொடர்பாக பேச வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர் என்றார்.

http://www.eelampage.com/

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் மீது தாக்குதல் நடத்தவே ஏ9 வீதியை திறக்குமாறு புலிகள் கோருகின்றனர் - ரம்புக்வெல.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்,யுவதிகளை அழைத்து ஆயுதப்பயிற்சி வழங்கி மக்கள் படையென்றபெயரில் அரச படையினர் மீது தாக்குதல் நடத்தவே புலிகள் ஏ9 வீதியை திறக்குமாறு கோருகின்றனர்.

இதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்று திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. ஆனால் புலிகளுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் உண்மையான நோக்கம் இல் லை. ஆயுதங்களை சேகரித்துக்கொண்டு யுத்தம் செய்வதே புலிகளின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் மேலும் சொன்னார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது.

ஜெனிவா பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இருப்பினும் அரசாங்கம் அடுத்தகட்டபேச்சுவார்த்தைக்

நான் நினிக்கிறேன் பேச்சுவார்த்தை முறிவடைந்து விட்டது என்ற ஒரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுவிட்டது இப்போது பேச்சுவார்த்தையில் A9 திறக்கமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவிதித்தது இலங்கை அரசு ஆக இது சர்வதேசத்துக்கு ஒரு செய்தியாகவிருந்திருக்கும் இனி சண்டை தொடங்கினாலும் அமைதியாவார்கள்.இப்போது தலைவரின் உரை இன்னும் 27 நாளில் இடம்பெறப்போகுது ஒரு முக்கிய முடிவு அதில் அறிவிக்கப்படுமென தமிழர் எதிர்பார்க்கின்றனர்.ஏனேனின் போன மாவீரர்தின உரையில் தலைவர் மகிந்தவை பற்றி சொன்னது எல்லாம் நடக்கவில்லை அதுமட்டுமல்ல அடுத்தவருடம் எம் போராட்டத்தை முன்னெடுப்போம் என தலைவர் சொல்லியிருந்தார் ஆக இலங்கை போன இலங்கை குழுவுக்கு கிலி ஏற்படுத்தியிருக்கக்கூடும் ஏனேனின் இந்தநிலையில் இலங்கை அரசு போரை முன்னெடுக்கப்படுமாயின் வெற்ரியடையாது என அரசுக்கு நன்று தெரிந்திருக்கும் அதாவது முகமாலை தாக்குதல் மற்றும் அடையாளம் தெரியாதவ்ர்களின் கபரனைதாகுதல் மற்றும் காலித்தாக்குதல் படையினரின் மனநிலையை தகர்த்தெறிந்திருக்கும்.ஆக போரை நிறுத்த அரசியல் ரீதியாக செய்யவேண்டுமாயின் A9திறக்கவேண்டும் ஏனேனின் புலிகள் பாதை திறந்தால்தான் பேச்சுவார்த்தையென கூறிவிட்டார்கள் பாதை திறப்பதாக கூறினால் சர்வதேசம் புலிகள் மீது அழுத்ததை பிரயோகிக்கும் அரசு தலையாட்டுகிறது என காரணம் காட்டி போரை நிறுத்த அல்லது தலைவரின் பேச்சில் செல்வாக்கு செலுத்த அறிவித்த ஒரு அரசியல் சாணக்கியம் மிக்க அறிவுப்பு என நான் நினைகிறேன் இது என் சொந்தகருத்து

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பேச்சு வார்த்தைக் குழுவினர் கிளிநொச்சி சென்றடைந்தனர்.

விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக்குழுவினர் சுவிஸ்சில் இருந்து புறப்பட்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்து இன்று மதியம் உலங்குவானுர்தி மூலம் கிளிநொச்சி சென்றடைந்தனர்.

கிளிநொச்சி சென்றடைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இன்று தேசியத் தலைவர் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை பெறுபெறுகள் சம்பந்தமாக எடுத்துக்கூறுவார் என தெரியவருகிறது.

அரசியல் துறைப்பொறுப்பாளர் தலைமையிலான புலிகளின் பேச்சுவார்த்தை குழுவிற்கு பயண பாதுகாப்பை நோர்வே அனுசரனையாளர்களும் சர்வதேச சமூகமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

மட்டக்களப்பில் விமானக் குண்டுவீச்சு

மட்டக்களப்பு மாவட்டம் கட்டுமுறிவுப் பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதல் காரணமாக அப்பகுதி மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்திய அதேவேளை வாழைச்சேனை மற்றும் கரடிக்குளம் சிறிலங்கா இராணுவ முகாம்களிலிருந்து பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளான வாகரை, பனிச்சங்கேணி, கிரிமிச்சை, ஆலங்குளம் பகுதிகளை நோக்கி பல்குழல், ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இப்பகுதிகளில் பாரிய இராணுவ நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவத்தினர் திட்டமிட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்னர் சிறிலங்கா விமானப்படையினர் நடத்திய முதலாவது குண்டுவீச்சுத் தாக்குதல் இதுவென வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=29556

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6104970.stm

  • தொடங்கியவர்

பொருத்திருந்து பாப்போம்... தலைமை ஏதாவது வித்தியாசமாய் செய்யும்! :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிடிக்குச் சொன்னது வினையாகிய பல கதைகளை சிறுவர்களாக இருந்தபோது கேட்டிருப்போம். அப்படியானதொரு புதியகதை கிடைக்கப்போகிறது போலும். ஆனாலும் ஜெனிவா-2 பேச்சுவார்த்தை முடிவு பற்றி எனது நண்பன் சொன்னதை இங்கு பதிவு செய்கிறேன்.

"இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொண்டபடி சிறிலங்கா அரசு நடந்திருக்கா?"

"அப்ப இப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சொன்ன மாதிரி ஏ9 பாதையைத் திறக்கவே மாட்டோம் எனச் சொன்னதை மட்டும் எப்படி நிறைவேற்றும்?"

- நண்பனின் சூட்சுமமான கேள்வியில் இலயித்தது நான் மட்டுமல்ல!!

ஏ9 க்குள்ளால வந்து தானோ காலியையும ஹபரனையையும் துவசம் செய்தது. உது கைவிரல் சூப்பித் திரியிர பாப்பாக்களுக்கு சொல்ல நல்ல கதை.

ஈழததிலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ நடவடிக்கைக்காக ஏ-9 பாதை திறப்புக்கான நிபந்தனை: சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு

தமிழர் தாயகத்தின் மீதான இராணுவ நடவடிக்கைக்காகவே ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் திறக்க மறுத்து நிபந்தனைகளை விதிக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏ-9 பாதையைத் திறக்க வேண்டுமாயின் புலிகள் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெனீவா பேச்சுக் குழுத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கொழும்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஜெனீவாவிலிருந்து இன்று புதன்கிழமை தாயகம் திரும்பிய அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

நாம் இம்முறை ஜெனீவா சென்றதை ஒரு வெற்றிகரமான நிகழ்வாகத்தான் பார்க்கிறோம். ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் பேச்சுக்கு விரோதமானவர்கள்- பேச்சுக்கு வர மறுக்கிறார்கள்- விடுதலைப் புலிகள்தான் யுத்தத்தைத் திணிக்கிறார்கள் என்று பாரிய அளவில் சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்த முற்பட்டனர். ஆனால் இப்போது சிறிலங்கா அரசாங்கத்தின் நேர்மையற்ற- உண்மையற்ற போக்கு தெட்டத் தெளிவாகியிருக்கிறது.

இம்முறை பேச்சுக்கள் நிறைவடைந்த பின்னர் சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நோர்வே அனுசரணையாளர்களே மிகத் தெளிவாக, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள சரத்தான ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் திறக்க மறுத்துவிட்டதாலும் இந்தப் பேச்சுக்கள் வெற்றியடையாமைக்கு ஒரு காரணம் என்று பகிரங்கமாக கூறினர். இதன்மூலம் எமது தரப்பின் மீது சர்வதேச சமூகம் இனி அழுத்தங்கள்- குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது. இருநாட்கள் பேச்சுக்களிலும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெனீவாப் பேச்சுக்கு செல்லும் முன்பாகவே நாம் இந்தப் பேச்சுவார்த்தையில் எமக்கு துளிகூட நம்பிக்கை இல்லை என்று தெரிவித்திருந்தோம். சர்வதேச சமூகத்தின் அழைப்பை ஏற்றுத்தான் செல்கின்றோம் என்றும் கூறியிருந்தோம். கிளிநொச்சியிலிருந்து மனிதாபிமான பிரச்சனைகளை பேசுவதை விட சர்வதேச அரங்கத்திலே நின்று எமது மக்களினது மனித அவலங்களை எடுத்துக் கூறுமாறு சர்வதேச சமூகம் கேட்டுக் கொண்டது. அதனை ஏற்று சர்வதேச அரங்கத்தில் நின்று எமது மக்களினது மனித அவலங்கள் பற்றியும், சிறிலங்காவின் அரச பயங்கரவாதங்க, படுகொலைகள், ஆட்கடத்தல்கள், எமது மக்கள் மீதான பொருளாதாரத் தடைகள் ஆகிய விடயங்களை தெளிவாக முன்வைத்துள்ளோம். இந்த விடயங்கள் சர்வதேச சமூகத்தினது கவனத்தை தொட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சுக்களின் முடிவில் சர்வதேச சமூகமானது ஆச்சரியமும் வியப்பும் கவலையுமடைந்திருக்கிறது. இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சுக்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருந்தும் ஏ-9 பாதையை திறக்க மறுத்து சிறிலங்கா அரசாங்கக் குழு பிடிவாதமாக இருந்த காரணத்தால் பேச்சுக்களில் முன்னேற்றங்களைக் காண முடியலை.

6 இலட்சம் யாழ். குடா நாட்டு மக்களுக்கான ஒரே ஒரு தரைவழிப்பாதையான ஏ-9 பாதை திறப்பின் அவசியத்தை சர்வதேச சமூகம் வலியுறுத்துகிறது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஏ-9 பாதை திறப்பு என்பது மனிதாபிமான பிரச்சனை. அதனை இராணுவ விவகாரமாக்குவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. கொழும்பில் நாம் திரும்பி வருகின்றபோது இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களை நாம் சந்தித்து ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்கள் தொடர்பாகவும் எமது நிலைப்பாடுகள் தொடர்பாகவும் விவரித்துள்ளோம். ஏ-9 பாதை தொடர்பில் இராணுவ விவகாரமாக்குவதை விரும்பவில்லை என்பதாகத்தான் அவர்களின் கருத்தும் இருந்தது.

ஏ-9 பாதை திறப்பு என்பது ஒரு மிகச் சிறிய விடயம். ஆனால் இதனை சிறிலங்கா அரசாங்கம் மறுத்து பெரிய விவகாரமாக்கி இருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று ஜெனீவாவில் சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நாம் தெரிவித்திருந்தோம். ஒரு பாரிய இராணுவ நடவடிக்கைக்காகத்தான் இப்படியான செயற்பாடுகளை காட்டியிருப்பதாக நாம் பகிரங்கமாக சர்வதேச சமூகத்துக்கு தெரிவித்திருக்கிறோம்.

ஏ-9 பாதை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் உத்திரவாதங்களைக் கோருவதும் நிபந்தனைகளை விதிப்பதும் போலியானது. இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே ஏ-9 பாதையை திறக்க மறுக்கின்றனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்த ஏ-9 பாதையை மூடிவிட்டு பேச்சுக்கள் வாருங்கள் என்றனர். எமது மக்களுக்கான ஒரே தரைவழிப்பாதையை திறக்கமறுத்துவிட்ட நிலையில்- நோர்வேக்கு நாம் செல்ல இருந்த பயணத்தை இரத்துச் செய்துவிட்டோம். எமக்கு அத்தகைய பயணத்தில் மகிழ்ச்சியும் திருப்தியும் இல்லை. எமது தலைமைப்பீடம் உடனே வருமாறு அழைத்ததற்கு இணங்க நாம் பேச்சுக்கள் முடிந்த உடனே தாயகம் திரும்பியுள்ளோம்.

இனி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக நோர்வே, இணைத் தலைமை நாடுகள் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பர். நாமும் எமது தேசியத் தலைவருடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்டத் தீர்மானங்களை மேற்கொள்வோம்.

பேச்சு மேசைக்கு வந்த சிறிலங்கா அரசாங்கக் குழுவினருக்கு தமிழ் மக்கள் தொடர்பில் எதுவித அக்கறையுமே இல்லை. சர்வதேச சமூகத்தினது உதவி ஏதேனையும் சுரண்டிக் கொண்டு போகலாம் என்பதாகத்தான் இருந்தனர். ஆனால் அவர்களது நேர்மையற்ற போக்கு இம்முறை பகிரங்கமாக வெளிப்பட்டுவிட்டது. பேச்சுக்கள் முடிந்த பின்னரும் ஊடகவியலாளர்கள் மாநாட்டிலும் இராஜதந்திரிகளை சந்திக்கின்ற போதும் இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டோம். இனிவரும் காலங்களில் சிறிலங்கா அரசாங்கத்துக்கான அழுத்தங்களே அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

நாங்கள் பேச்சுக்கு போக மறுத்திருந்தால் எங்கள் மீதே முழுப் பழியை சுமத்தியிருப்பர். பேச்சுக்கு சென்றபடியால் சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான யுத்த வெறிப் போக்கு மற்றும் மனிதாபிமானமற்ற படுகொலை என்பவற்றை முழு அளவில் பகிரங்கப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் மீது சர்வதேச சமூகம் அழுத்தங்களைச் செலுத்துவதில் இனி நியாயமே இல்லை. பேச்சுக்களின் முடிவில் அரசும் இணங்கி வராததால்தான் பேச்சுக்கள் தோல்வியடைந்தது என்று சர்வதேச சமூகம் கூறிவிட்டது.

தாக்குதல்களை நிறுத்துவதற்கும்- யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்கும் நாம் தயார் என்று தெரிவித்துள்ளோம். ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின்போது நாம் கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. அது சர்வதேச சமூகத்தின் கையில் உள்ளது. புலிகள் பதில் தாக்குதல் நடத்துகின்றபோது புலிகள் மீது சர்வதேச சமூகம் குற்றம் சுமத்தினால் அது அர்த்தமற்றது என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.

http://www.eelampage.com/?cn=29558

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மக்களின் அவலநிலையை கருத்தில் கொண்டு பாதையை திறக்க வேண்டும்.- யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம்.

யாழ். குடாநாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய அவல நிலையை கவனத்தில் கொண்டு மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஏ9 நெடுஞ்சாலையை அல்லது யாழ்ப்பாணத்துக்கான வேறு மாற்று தரைப்பாதையை திறக்குமாறு யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற அவல நிலையை விளக்கும் முகமாக யாழ்.ஆயர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இக்கடிதத்திலேயே அவர் இவ்வாறு கோரியுள்ளார். தனது கடிதத்தில் ஆயர் மேலும் தெரிவித்துள்ளதாவது:.

ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து யாழ். குடாநாட்டு மக்கள் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு நிலைமையும் மிக மோசமடைந்துள்ளது. கடந்த மூன்று மாதகாலமாக இத்தகைய சூழ்நிலையே நிலவி வருகின்றது..

தற்பொழுது உணவுப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்து நிற்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது. கூட்டுறவு கடைகளுக்கு முன்பாகவும், பேக்கரிகளுக்கு முன்பாகவும் காலையிலிருந்தே மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். இராணுவத்தால் நடத்தப்படும் தற்காலிக நியாய விலைக் கடைகளுக்கு முன்பாகவும் மக்களின் நீண்ட வரிசையை காணமுடியும். சில தனியார் வியாபார நிலையங்கள் திறந்துள்ளபோதும், அங்கு மிக அதிக விலையில் பொருட்கள் விற்கப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், பால்மா, பிஸ்கட்டுக்கள் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தில் அரிசி ஒரு கிலோ 120 ரூபாவுக்கும், மா கிலோ 150 ரூபாவுக்கும், சீனி கிலோ 450 ரூபாவுக்கும், தேங்காயொன்று 80 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது..

வைத்தியசாலைகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காலை முதலே காத்து நிற்கின்றனர். இங்கு மருந்துப் பொருட்களுக்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது..

மக்களின் இந்த அவலநிலையை போக்க யாழ். நகருக்கான தற்போது உள்ள தரைவழிப் பாதையான ஏ9 வீதியை திறக்க வேண்டும் அல்லது மாற்று தரை பாதையை ஏற்படுத்தி தரவேண்டும்..

இராணுவமும், அரசாங்க அதிபரும், யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பான தவறான தகவல்களையே தொடர்ந்து அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்றனர். கப்பல் மூலம் பொருட்களையும், எரிபொருளையும் கொண்டுவந்து வழங்கி யாழ். மக்களை திருப்திப்படுத்த முடியுமென நினைக்கின்றனர். சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தனியார் வர்த்தகர்களும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதற்கு ஆவன செய்யவேண்டும்..

கடந்த மூன்று மாதகாலமாக தொடருகின்ற மோதல்களாலும், ஆட்டிலறித் தாக்குதல்களாலும் மக்கள் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. சொத்துக்களுக்கு பாரிய அழிவுகளும் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களின் அவலநிலையையும், அவர்கள் எதிர்நோக்குகின்ற மனிதாபிமான பிரச்சினையையும் ஜனாதிபதியான நீங்கள் கவனத்திலெடுத்து, மக்களின் அவலநிலைக்கு முடிவுகட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://sankathi.org/news/index.php?option=...d=1081&Itemid=1

புதன் 01-11-2006 12:46 மணி தமிழீழம் [மயூரன்]

படையினர் மீது தாக்குதல் நடத்தவே ஏ9 வீதியை திறக்குமாறு புலிகள் கோருகின்றனர் - ரம்புக்வெல.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்,யுவதிகளை அழைத்து ஆயுதப்பயிற்சி வழங்கி மக்கள் படையென்றபெயரில் அரச படையினர் மீது தாக்குதல் நடத்தவே புலிகள் ஏ9 வீதியை திறக்குமாறு கோருகின்றனர்.

இதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்று திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. ஆனால் புலிகளுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் உண்மையான நோக்கம் இல் லை. ஆயுதங்களை சேகரித்துக்கொண்டு யுத்தம் செய்வதே புலிகளின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் மேலும் சொன்னார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது.

ஜெனிவா பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இருப்பினும் அரசாங்கம் அடுத்தகட்டபேச்சுவார்த்தைக்

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் புலிகளுடன் இனிவரும் காலங்களில் சமாதான பேச்சுக்களை மேற்கொள்ளகூடாது கிழக்கை மீட்பதுடன் ஏ9 பாதையை திறக்கவும் கூடாது என்கிறார் எல்லாவல மேதானந்த தேரர்

அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் இனிவரும் காலங்களில் எந்தவிதமான சமாதானப்பேச்சுவார்த்தைகளைய

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.