Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தகத் திருவிழா 2015: அதிகம் விற்பனையான புத்தகங்கள்

Featured Replies

book_2287214f.jpg
* இந்த மதிப்பீட்டில் ‘தி இந்து’ வெளியீடுகள், ‘தி இந்து’ குழுமத்தைச் சார்ந்தவர்களின் நூல்கள் சேர்க்கப்படவில்லை.

பளிச் புத்தகம்

pi_naveenam_2287212a.jpg

புத்தகக் காட்சியின் பளிச் புத்தகம் ‘அடையாளம் பதிப்பக’த்தின் ‘தொடக்க நிலையினருக்கு...’ பின்நவீனத்துவம், ஜென், மொழியியல், புவிவெப்பமாதல் போன்ற தூக்கம் வரச் செய்யும் விஷயங்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் தரும் புத்தக வரிசை இது. அதுவும் இதன் காமிக்ஸ் பாணி வடிவமைப்பு இருக்கிறதே... தமிழுக்குப் புதுசு மட்டும் அல்ல; எவரையும் வசீகரிக்கக் கூடியதும்கூட!

 

மீண்டும் காந்தி

gandhi_2287208a.jpg

காந்தியும் நேருவும் வசீகரித்தனர். ‘கிழக்குப் பதிப்பகம்’ கொண்டுவந்த ராமச்சந்திர குஹாவின் ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’, ‘அலைகள் வெளியீட்டகம்’ கொண்டுவந்த ‘ஜவஹர்லால் நேரு - சுயசரிதை’ போன்ற புதிய புத்தகங்களோடு, ‘சர்வோதய இலக்கியப் பண்ணை’யில் ‘சத்திய சோதனை’யும் எப்போதையும்விடப் பெரிய அளவில் விற்றது. இதேபோல, மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் புத்தகங்களும் கணிசமாக விற்றன.

 

இணையமே இணைந்து வா!

போன புத்தகக் காட்சியில், இணைய எழுத்தாளர்கள் திடீரென ஒரு புது அலையாகப் புறப்பட்டார்கள் அல்லவா? அந்த அலை இந்த முறை நீடிக்கவில்லை. ஆனால், எழுத்தாளர்களில் எவரெல்லாம் இணையத்தில் வாசகர்களோடு உறவாடுகிறார்களோ, அவர்களுக்கே புத்தக விற்பனை திருப்திகரமாக இருந்தது. ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன் நால்வரும் இந்தப் புத்தகக் காட்சியிலும் தங்கள் விற்பனையைத் தக்கவைத்துக்கொண்டார்கள். புத்தகங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிடும் முறை அறிமுகமானது. புத்தகங்கள் விளம்பரம் - விற்பனையிலும் ‘ஃபேஸ்புக்’, ‘யூ டியூப்’ முக்கிய இடம்பிடித்தன.

 

திருவிழா 2015-ன் நாயகன்

perumal_2287210a.jpg

இந்தப் புத்தகக் காட்சியின் நாயகன் பெருமாள்முருகன்தான். நான்கு ஆண்டுகளில் மூவாயிரம் பிரதிகள் விற்று, சில ஆயிரம் பேரால் மட்டுமே அறியப்பட்டிருந்த ‘மாதொருபாகன்’ நாவல், போராட்டக்காரர்கள் புண்ணியத்தில் சர்வதேச அளவில் பிரபலமானது. ‘வாஷிங்டன் போஸ்ட்’, ‘தி கார்டியன்’ பத்திரிகைகளில் தொடங்கி உள்ளூர்த் தொலைக்காட்சிகள் வரை பெருமாள்முருகன் பெயரை உச்சரித்ததால், புத்தகக் காட்சியில் ‘மாதொருபாகன்’ நாவலுக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டது. அந்தப் புத்தகத்தின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், பெருமாள்முருகன் எழுதிய ஏனைய புத்தகங்கள் அள்ளிக்கொண்டு போயின.

 

திருவிழா 2015-ன் புத்தகம்

anyaadi_2287213a.jpg

பூமணியின் ‘அஞ்ஞாடி...’ புத்தகம் வெளியாகி நான்காவது வருடம் இது. 1,066 பக்கங்கள், ரூ. 925 விலை என்று சாதாரண வாசகர்களைக் கொஞ்சம் மலைக்கவைக்கும் புத்தகம்தான். ஏற்கெனவே நான்கு புத்தகக் காட்சிகளிலும் ஏராளமான பிரதிகள் விற்றிருந்தன. எல்லாவற்றையும் தாண்டி இந்தப் புத்தகக் காட்சியில் பெரும் வசூலை அள்ளியது. ‘காவல் கோட்டம்’, ‘கொற்கை’என ‘சாகித்ய அகாடமி விருது’பெறும் புத்தகங்கள் புத்தகக் காட்சி விற்பனையில் ஏற்படுத்திவரும் தாக்கத்துக்கும் தொடர் உதாரணமாகியிருக்கிறது ‘அஞ்ஞாடி...’

வரலாற்றின் வருகை

hindu_2287209a.jpg

ஆர்ப்பாட்டமே இல்லாமல், தமிழ்ப் பதிப்புலகில் கால் பதித்தது ‘தி இந்து’. சமஸ் எழுதிய ‘கடல்’, டி.எல். சஞ்சீவி குமார் எழுதிய ‘மெல்லத் தமிழன் இனி’, டாக்டர் ஆர். கார்த்திகேயன் எழுதிய ‘வேலையைக் காதலி’, ‘நம் மக்கள் நம் சொத்து’, கோ. தனஞ்செயன் எழுதிய ‘வெள்ளித் திரையின் வெற்றி மந்திரங்கள்’ ஆகிய 5 நூல்களோடு களம் இறங்கிய ‘தி இந்து’வுக்கு, முதல் புத்தகக் காட்சியிலேயே ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்தார்கள் வாசகர்கள்!

 

இது பாய்ச்சல்!

sidharthan_2287211a.jpg

ஒரு புத்தகக் காட்சியில் ஒரு எழுத்தாளர் எத்தனை புத்தகம் வெளியிடுவது? அலப்பறை கொடுத்துவிட்டார் கெளதம சித்தார்த்தன். ‘பொம்மக்கா’, ‘சாதி: அரசியல் அதிகாரம்’, ‘உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்’, ‘கருத்து சுதந்திரத்தின் அரசியல்’, ‘மூன்றாவது சிருஷ்டி’, ‘ஆயுத வியாபாரத்தின் அரசியல்’ என்று 6 புத்தகங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்பது கவனிக்க வேண்டியது!

 

நீ…ண்ட தலைப்பு

thalaippu_2287207a.jpg

உள்ளே இருப்பது தெரியாது. ஜ்வாலாமுகி ராஜ் என்பவர் எழுதியிருக்கும் புத்தகத்தின் தலைப்பு இது: ‘திருடப்பட்ட… அங்காளம்மன் சாமி நகையெல்லாம் திரும்பக் கிடைச்சுட்டுது…. ஆனா அருக்காணியின் அறுக்கப்பட்ட தாலி?’

 

வெண்முரசு எங்கே?

எல்லோர் கவனத்தையும், ‘மாதொருபாகன்’ விவகாரம் எழும் வரை ஆக்கிரமித்திருந்தது ஜெயமோகனின் மகாபாரதமான ‘வெண்முரசு’தான். இதுவரை 4 நாவல்கள் வெளியாயின. ஆனால், புத்தகக் காட்சியில் ‘வெண்முரசு’ வரிசை நாவல்கள் பேச்சே காணோம். எத்தனை பிரதிகள் விற்றன என்கிற மூச்சும் இல்லை. எழுத்து வேகம் விற்பனை வியூகத்திலும் வேண்டாமா?

 

இயற்கை நேசம்

சுற்றுச்சூழல் புத்தகங்கள் நல்ல கவனம் பெற்றன. ‘பூவுலகின் நண்பர்கள்’, ‘இயல்வாகை’, ‘எஃப் 5’ எனப் பல அரங்குகள் சூழலியல் புத்தகங்களோடு வரவேற்றன. எல்லா இடங்களிலும் நல்ல கூட்டம். ‘இயல்வாகை’அரங்கில் புத்தகங்களோடு பாரம்பரிய விதைகளையும் வாங்கிக்கொண்டு போனார்கள் வாசகர்கள்.

நித்ய இலக்கியம்

nithya_2287206a.jpg

தமிழின் முக்கிய படைப்பாளிகளான புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், மெளனி போன்றோரின் புத்தகங்களுக்கான வரவேற்பு குறையவே இல்லை. இவர்களைப் போலவே கண்ணதாசனும் கல்கியும்!

 

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2015-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6815159.ece?widget-art=four-rel

 

அதிகம் விற்பனையான புத்தக பட்டியலில் ஆயுத எழுத்து இடம்பெறவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் விற்பனையான புத்தக பட்டியலில் ஆயுத எழுத்து இடம்பெறவில்லையா?

 அதுக்கு பொய்யை உண்மையாக எழுத தெரியனும் சாத்து ஒரு வெள்ளாந்தி மனிதன் யாரோ சொல் கேட்டு இப்படி பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் விற்பனையான புத்தக பட்டியலில் ஆயுத எழுத்து இடம்பெறவில்லையா?

 

அந்தப் புத்தகம், அச்சடிச்ச காசு வருமோ... என்று சனம் ஏங்கிக்  கொண்டிருக்குது.

அதுக்குள்ளை,  வயித்தெரிச்சலை ஏன்யா.... கிளப்புறீங்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மாதொருபாகன் நூல் புத்தகக் கண்காட்சியில் விற்கப்படவே இல்லையே. அந்த நூலுக்குத் தடை எல்லா போட்டார்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

மாதொருபாகன் நூல் புத்தகக் கண்காட்சியில் விற்கப்படவே இல்லையே. அந்த நூலுக்குத் தடை எல்லா போட்டார்கள்???

 

'மாதொருபாதகன்' சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறுகிறதாமே? :huh:

 

அவர்தான் விற்காத அனைத்து புத்தகங்களையும் திரும்பப் பெறுவதாக கூறினாராமே?

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை அண்ணா. நான் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற மாதொருபாகன் பற்றிய இரு விமர்சன நிகழ்வுக்குப் போயிருந்தேன்.


புத்தகங்களை விற்பதற்கும் தடைதான்

 

  • கருத்துக்கள உறவுகள்

தடை போட்டது அவரே, தனது புத்தகத்தின் விற்பனைக்கு. நீதிமன்று அல்ல.

கிடைத்த publicity காரணமாக புத்தக வியாபாரம் அள்ளிவிட்டது போல் உள்ளது.

தடை போட்டது அவரே, தனது புத்தகத்தின் விற்பனைக்கு. நீதிமன்று அல்ல.

கிடைத்த publicity காரணமாக புத்தக வியாபாரம் அள்ளிவிட்டது போல் உள்ளது.

 

அன்பின் வணக்கங்கள்! பெருமாள் முருகன் தடை ஏதும் போடவில்லை. போராட்டக்காரர்கள் விளைவித்த வலியினால், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கட்ட பஞ்சாயத்தில் "எழுத்தாளன் பெருமாள் முருகன் இறந்து விட்டான் " எனக் கூறி தன் புத்தகத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறி அநீத போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்கிறார். அவரது பாதுகாப்பிற்காக பணியிட மாற்றமும் செய்யப் பட்டு உள்ளார்.  மனத்தளவில் இறந்து போன எழுத்தாளருக்கு ஏற்கனவே எழுதிய புத்தக வியாபாரம் அள்ளியது பெருமகிழ்வு தரும் விடயமல்ல! மாதொரு பாகனின் முடிவு நல்ல எழுத்தாளர்களுக்கு ஒரு மாபெரும் பின்னடைவே!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.