Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஷிராணி ஒரு நாளில் ஓய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் புதனன்று மீண்டும் பதவி அமர்த்தப்பட்ட தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க வியாழனன்று பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

ஷிராணியை நாடாளுமன்றம் குற்றஞ்சாட்டி பதவி நீக்கியது தவறு என தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அவர் மீண்டும் பதவி அகற்றப்பட்டிருந்தார்.

  ஷிராணி பண்டாரநாயக்க

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை வரவேற்கும் வைபவத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

தான் ஒய்வு பெற்ற பின்பு வெற்றிடமாகும், இலங்கையின் 44ஆவது தலைமை நிதிபதி பதவிக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக செயற்படும் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டால் அது தொடர்பாக தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

 

நீதித் துறையில் தான பதினாறு வருட காலம் சேவையாற்றியுள்ளதாக கூறிய ஷிராணி பண்டாரநாயக்க, அந்தக் காலப் பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட தான் முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

 

ஆயினும் அடிப்படையற்ற முறையில் சமர்ப்பிக்கப்பட்ட கண்டன தீர்மானமொன்று காரணமாக தனது சேவை காலத்தில் 746 நாட்கள் பறிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

 

அந்த காலப் பகுதிக்குள் தனது குடும்பத்தினர் மற்றும் தனக்கு ஆதரவளிக்க் முன்வந்தோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்ததாக கூறிய நிதிபதி பண்டாரநாயக்க அச்சுறுத்தல்கள் மத்தியில் தன்னை ஆதரித்த பொது மக்கள் வழக்கறிஞர்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் செய ற்படும் நிதிபதிகளின் துணிச்சலை தான் வரவேற்பதாகவும் கூறினார்.

 

ஆயினும் தலைமை நிதிபதியாக ஷிராணி பண்டாரநாயக்க நியமிக்கப்பட்ட முறையை தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாதென்று மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் பெரேராகூறினார் .

 

தலைமை நிதிபதி ஷிராணி பண்டாரநாயக்க நிக்கப்பட்ட நாடாளுமன்ற தீர்மானம் முறையாக நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவர் மிண்டும் பதவியில் அமர்த்தப்பட்டு மொஹான் பிரிஸ் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

 

இந்த முறையை தனக்கு ஏற்றுக் கொள்ள முடியாதென்று கூறிய ஸ்ரீநாத் பெரேரா, இவ்வாறு நிதிபதிகள் நிக்கப் பட்டால் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் அரசாங்கங்களும் தான் விரும்பியவாறு நீதிபதிகளை நீக்குவதட்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படலாமென்றும் எச்சரித்தார்.

 

ஆயினும் மொஹான் பிரிஸ் பதவி நீக்கப்பட்டாலும் கூட அவர் வழங்கிய தீர்ப்புக்கள் செல்லுப்படியற்றவை என்று கருதப்பட மாட்டதென்று வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

இந்த வைபவத்தில் உச்ச நீதிமன்ற, மேன் முறையிட்டு நீதிமன்ற மற்றும் மஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கலந்துகொண்டனர்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/01/150129_shiraniretire

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் சுயாதீன நீதித்துறை என்ற ஒன்றே இல்லை என்பதை தான் இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகன்றன.

 

சிறீலங்காவின் தற்போதைய அரசியல் அமைப்பு ஆட்சியாளர்களிடம் அளவுக்கு அதிகமாக ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டி புதைக்கக் கூடிய அளவுக்கு அதிகாரங்களை அள்ளி வழங்கி உள்ளமையையே இது காட்டுகிறது.

 

இத்தகைய அரசியல் அமைப்பின் கீழ் ஒற்றையாட்சி.. ஒன்றுபட்ட இலங்கைக்குள் எப்படி தமிழர்களுக்கு.. நீதியான.. சுயாட்சிமிக்க.. சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வு கிடைக்கும் என்று தமிழர்கள்.. சர்வதேசத்தை பார்த்து கேள்விக்கு கேட்க.. இச்சந்தர்ப்பங்களை பயன்படுத்துவதே சிறந்தது. தமிழர்களின் எதிர்காலத்துக்கு உதவக் கூடியது. :icon_idea:

Edited by nedukkalapoovan

விடைபெற்றார் சிராணி – புதிய பிரதம நீதியரசர் சிறீபவன் JAN 29, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Shirani-2-300x199.jpgசிறிலங்காவின் 43வது பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்க இன்று, உயர்நீதிமன்றத்தில் சக நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பணியாளர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.

இக்கட்டான நேரத்தில் தனக்காக குரல் கொடுத்த, பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், தாம் இன்றுடன் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

நாட்டின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி சிறீபவன் பொறுப்பேற்பார் என்றும் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

Shirani-2.jpg

http://www.puthinappalakai.net/2015/01/29/news/3251

  • கருத்துக்கள உறவுகள்

//தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஷிராணி, ஒரு நாளில் ஓய்வு//

அந்த ஒருநாளில் தான்... விடயமே அடங்கியுள்ளது.
முன்னைய அரசால், குற்றம் சாட்டி நீக்கப் பட்ட ஒருவரை.... ஒரு நாள் தலைமை நீதிபதியாக நியமித்து...

அவராகவே, பதவி விலக வைத்ததன் மூலம் அவர் ஓய்வூதியம் பெறுவதில், எந்தச் சிக்கலும் இருக்க மாட்டாது. :)

//தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஷிராணி, ஒரு நாளில் ஓய்வு//

அந்த ஒருநாளில் தான்... விடயமே அடங்கியுள்ளது.

முன்னைய அரசால், குற்றம் சாட்டி நீக்கப் பட்ட ஒருவரை.... ஒரு நாள் தலைமை நீதிபதியாக நியமித்து...

அவராகவே, பதவி விலக வைத்ததன் மூலம் அவர் ஓய்வூதியம் பெறுவதில், எந்தச் சிக்கலும் இருக்க மாட்டாது. :)

 

 

 

"சுத்தமான கற்பூரம்"

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் பதவியிலிருந்து தூக்க இன்னொருவர் மீண்டும் பதவியில் அமர்த்துகிறார்.அதேவேளை இன்னொருவரைப் பதவியிலிருந்து தூக்ககிறார்.மீண்டும் இன்னொருவர் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தூக்கப்பட்டவரக்குப் பதவி கொடுப்பார். அவரும் ஓய்வுதியப் பணத்துக்காக ஒரநாள் வேலையைப் பொறுப்பேற்று மறுநாள் விலகுவார். நல்ல ஜனநாயகம்.நல்ல நீதித்துறை.இவர்களிடம் தமிழர்களுக்கான நீதியை எப்படி எதிர்பார்ப்பது?????

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மோஹான் பீரிசுக்கு அனைத்து வரப்பிரசாதங்களும் கிடைக்குமா கிடைக்காதா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.