Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னருகில் நீ இருந்தால்

Featured Replies

மம்மி.....

கதைப்புத்தகத்தில் கலந்திருந்த சுஜாதா நிமிர்ந்தாள்

மம்மி நான் ஜெயிச்சுட்டேன் மம்மி

கையில் கப்போடு கட்டிப்பிடித்த பாலாவை வாரியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். கண்கள் கலங்கின. என் செல்லக்குட்டி நீ எப்போதும் ஜெயிக்கணும்டா. படிப்பிலும் எந்த போட்டியாகினும் நீ வெற்றி பெறணும் என் செல்லத்தங்கம் என வாரியணைத்தாள்.

நான் பெரிய சம்பியனாகினால் என்ன மம்மி தருவீங்க என கண்கள் அகல விரித்து பாலா தாயை அன்போடு கேட்டான்.

எதுவானாலும் தருவேன்டா எனதன்பு செல்லமே என சுஜாதா வாஞ்சையுடன் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தாள்

என்ன மம்மியோடு கொஞ்சல் என கேட்டுக்கொண்டே வந்த ரமேஷை கண்டதும் செல்லப்பைய்யன் பாலா தனது வெற்றியை தந்தயோடும் தாயோடும் சேர்த்து களித்தான். இருவரும் அவனை மாறி மாறி முத்தத்தால் நனைத்தனர்.

மறுநாள்

ரமேஷ் காலை பத்திரிகையில் மூழ்கியிருந்த வேளை பாலா கையில் கடிதத்துடன் துள்ளிகுதித்தபடி உள்ளே வந்தான். ரமேஷ் கடிதத்தை பிரித்ததும் அதிர்ந்தான்

அன்புள்ள சுஜாவிற்கு பாஸ்கர் எழுதுவது,

நீ நலமாய் இருப்பாய் என நம்புகின்றேன். பாலாவும் ரமேஷும் நலமா? நான் 14ம் திகதி அங்கு வருவேன்.

ரமேஷின் முகம் மாறுவதை கண்ட பாலா யாருப்பா எழுதி இருக்கிறாங்க என்றான்.

பாஸ்கர்

யாருப்பா அவங்க?

உங்கம்மாவை போய் கேள் என்று சந்தோசமின்றி சொன்ன ரமேஷ் மீண்டும் பத்திரிகை படிக்க மனமின்றி வெளியில் செல்ல ஆயத்தமானான்.

அடுப்பங்கரையில் காய்களை நறுக்கிட்டு இருந்த சுஜாவிடம் ஏதுமறியா பாலா வந்து யாரம்மா பாஸ்கர் என்றதும் அவளின் முகம் வாடியதை கண்ட குழந்தை அவரிடம் இருந்து லெட்டர் வந்திருக்கம்மா என கூறினான்.

லெட்டரை படபடப்போடு பிரித்த சுஜாதா கண்களில் கண்ணீர் வழிந்தாலும் நெஞ்சம் சந்தோசத்தில் நிரம்பியது.

பாலா குழந்தை என்பதையும் மறந்து என் பாஸ்கர் என்னை மறக்கல்லை என ஒரு சின்ன குழந்தை போல சந்தோச மிதப்பில் துள்ளிக்குதித்தாள். அப்போது வெளியில் சென்றிருந்த ரமேஷ் வந்ததும் இன்னும் ஆனந்தமாக ரமேஷ் பாஸ்கர் வருகிறார் என பேரானந்தமாக பலதடவைகள் சொன்னாள்.

குழம்பிய பாலா அப்பா அம்மா முதலில் அழுதாங்க. இப்போ சந்தோசத்தில் மிதக்கிறாங்க என்னப்பா இங்கு நடக்குது யாரப்பா பாஸ்கர் என வினாவினான்.

அப்போது கண்ணில் கண்ணீரோடும் உதட்டில் புன்னகையுமாக நிமிர்ந்த சுஜாதா அவர் ………….. அவர் என்னோட என்னோட.. அவள் சொல்லமுடியாமல் திணறியதை உணர்ந்த ரமேஷ் அவர் உன் அம்மாவோட பிரண்ட் என சொல்லி, நீ குழந்தையாக இருக்கிறப்போ நம்ம கூடதான் இருந்தவர் மறந்துட்டியா? என்று முடித்தான்.

கெட்டிக்காரனான பாலாவோ மீண்டும் ரமேஷிடம் கேள்விகள் கேட்டான். அம்மாவின் பிரன்ட் என்றால் அம்மாவின் க்ளாஸ் மேட்டா டாடி?

ஆமாடா நீ போய் படி என தன் கோபத்தை எல்லாம் பிள்லை மீது காட்டினான். அவனோ அழுது கொண்டிருக்கும் தாயை விட்டு போக மனமின்றி தன் தாயோடு ஒட்டிக்கொண்டான். பாலா 5ம் வகுப்பு படிப்பவன் ஒரு பாஸ்கரின் கடிதத்தால் ஏன் அம்மா துக்கமும் சந்தோசமும் அடைகின்றாள் என புரியாமல் விழித்தான்.

இரவு பாலா உறங்கியதும் எழுந்தாள் சுஜாதா. பாஸ்கர் எழுதிய அந்த 4 வரி கடிதத்தை மீண்டும் மீண்டும் படிக்கலானாள். பீரோவை திறந்து அவனின் புகைப்படத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்தாள்.

அவள் உள்ளம் அவளை அரித்தது. நீ செய்தது தப்பென சொல்லி சொல்லி சாட்டையால் அடித்தது. மனவலியோடு பாலாவை திரும்பி பார்த்தாள்.

நீ செய்தது சரிதான் என மனம் மீண்டும் சொல்லியது. அவள் இதயம் பாஸ்கர் பாஸ்கர் என விடாமல் துடித்தது.

ஜன்னல் கம்பியை பிடித்தவாறு மெல்ல மெல்ல கடந்த காலங்களை நினைக்கலானாள்.

கல்லூரி படிப்பை முடித்து தன் அத்தையின் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது ரயிலில் சுஜாதா............

தொடரும்

என்ன தொடருமா..

என்ன வெண்ணிலா வெளாடுறிங்களா..

யாரந்தாளுன்ன தெரிஞ்சுக்க ஆவல்..

மிகுதிக்காக..

காத்திருக்கிறோம்.

அட வெண்ணிலா கதை எழுதுகிறாவா?

கதையின் ஓட்டத்தைப் பார்த்தா புதிய எழுத்தாளருக்கு உரியதாகப் படவில்லை. நல்ல பரிச்சயம் உள்ள எழுத்தாளருக்கு உரியதாக இருக்கிறது.

அப்ப நம்ம வெண்ஸ் சிறந்த எழுத்தாளரா?

எங்கே வெண்ணிலா மிகுதியைத் தந்தால்த்தான் மிச்ச விமர்சனத்தை எழுதலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட... நம்ம வெண்ணிலாவா? பாராட்டுக்கள். அது சரி.. அந்த 14 மாசி மாதமா? கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லது.... என்ன தான் ஆம்பிளையள தப்பா சொன்னாலும், என்னைய மாதிரி, கதையில வாற ரமேஷ் மாதிரி இழித்த வாய்களும் இருக்கின்றார்கள் தான்.. இப்படியான ஆம்பிளையளுக்கு நம்ம பெண்கள் வைத்த பெயர், "புரிந்துணர்வுள்ள ஆண். ( என்ன அவசரப்பட்டு எழுதிட்டனோ??????)

வெள்ளை நிலா.. தொடரும் என்று போட்டு இருக்கின்றீர்கள்... எப்போ என்று சொல்லவில்லையே.... சீக்கிரம் தொடர்ந்தால் மகிழ்ச்சி....

  • தொடங்கியவர்

ம்ம்ம் கட்டாயம் தொடரும். அச்சச்சோ இது நான் எழுதும்; கதையல்ல. படித்ததில் ரொம்ப பிடித்துப்போய்விட்டது. உங்களோடு பகிரலாம் என்று தான்

சும்மா நீங்க நினைப்பது போல ரமேஷ் இழிச்சவாயன் இல்லை. தொடர்ந்து வரும் பகுதிகளை வாசித்தபின் தெரியும் யார் இழிச்சவாயன் என்று

  • கருத்துக்கள உறவுகள்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

ம்ம்ம் கட்டாயம் தொடரும். அச்சச்சோ இது நான் எழுதும்; கதையல்ல. படித்ததில் ரொம்ப பிடித்துப்போய்விட்டது. உங்களோடு பகிரலாம் என்று தான்

:twisted: :twisted: :twisted:

வெண்ணிலா! அப்படியே இது யாருடைய கதை என்றும் சொல்லுங்கள்

  • தொடங்கியவர்

என்னது சாத்ரி மாமாவும் ஆதிவாசியும் கோவிக்கிறாங்க. ஏனுங்க ஏதும் தப்பா? சொன்னால் தானே எனக்கு தெரியும். :cry: :cry: :cry:

சபேசன் அது ஆர் சுமதி என்ற எழுத்தாளரின் கதை :lol: :roll: :roll: :roll: :roll: :roll:

முதல்லேயே ஏன் சொல்லவில்லையாம்?

நானும் நம்ம வெண்ஸ் உருப்படியாக் கதையெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டா என்று சின்னதா களிப்புற்றேன்....

எழுத்தாளர் வெண்ணிலா நம்ம கூட்டாளி என்று காலரை நிமிர்த்தி விடலாம் என்று பார்த்தா...... எல்லாக் கனவும் வேஸ்ட்... :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்

முதல்லேயே ஏன் சொல்லவில்லையாம்?

நானும் நம்ம வெண்ஸ் உருப்படியாக் கதையெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டா என்று சின்னதா களிப்புற்றேன்....

எழுத்தாளர் வெண்ணிலா நம்ம கூட்டாளி என்று காலரை நிமிர்த்தி விடலாம் என்று பார்த்தா...... எல்லாக் கனவும் வேஸ்ட்... :evil: :evil: :evil:

சொல்லணும் என நினைச்சேன் ஆனால் சொல்லவில்லை. :cry: சிறிதாகவேனும் களிப்புற வைத்துவிட்டேனே அதுவரைக்கும் சந்தோசம்

என்னது காலரை நிமிர்த்தி விட போறியளா? கவனம் யாராச்சும் வாலை நிமிர்த்தி விடப்போறாங்க :P

நிலா நிலா எங்கே மற்றப் பகுதி வாசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்

இதை இங்கு இணைத்தமைக்கு நிலாவுக்கு முதல் நன்றி

இதை எழுதிய ஆசிரியருக்கும் பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

கல்லூரி படிப்பை முடித்து தன் அத்தையின் கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது ரயிலில் சுஜாதா தன் கற்பனையான அழகான குழந்தையை பெற்றெடுக்கும் காலத்தை எண்ணி மூழ்கி இருந்தாள். ரயில் கிராமத்தை அடைந்தது.

அழகான குழந்தை என்றால் கொள்ளைப் பிரியம் கொண்டவள் தான் இந்த சுஜாதா. ஒரு அழகான ஆண்மகனை திருமணம் செய்து அழகான குழந்தைக்கு தாயாகணும் என்று தினம் தினம் கற்பனையில் மூழ்குபவள் தான் இந்த சுஜாதா. ஆம் அவளே எதிர்பார்க்காத அளவுக்கு ஓர் ஆடவனை அவள் சந்திப்பாள் என நினைக்கவே இல்லை. சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த சுஜாதாவுக்கு எல்லாமே அத்தைதான். இந்த அத்தை வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருப்பவனே பாஸ்கர். இருவரது பார்வையும் ஓரிரு முறை மட்டுமே மலர்ந்தன. அவளுள் அவன் ஆக்கிரமித்தான். இல்லையில்லை அவனின் அழகு அவளை ஆக்கிரமிக்க வைத்தது.. அவனைப்போலவே அழகான குழந்தை அவள் மனதில் தோன்றி மறைந்தது. ஆம் அவள் ஆசைப்படும் குழந்தை இவனை போலவே இருக்கணும் என்பதற்காகவே அவனை சந்திக்க சென்றாள்

மிஸ்டர்

ம் என் பெயர் பாஸ்கர்.

ஓ இருக்கட்டும். என் பெயர் சுஜாதா. சுஜா என்று கூப்பிடலாம். நீங்கள் யாரையாவது காதலிக்கிறீங்களா?

என்ன இது கேள்வி? பட்டணத்தில் படிக்கிற பொண்ணுகளுக்கு ரொம்ப தான் தைரியமோ?

கேட்டதுக்கு பதில்

இல்லை என்றால் என்ன செய்வாய்? ஆம் என்றால் என்ன செய்வாய்? என்று அழகாக தலை சாய்த்து கேட்ட பாஸ்கர் அவளின் தைரியத்தையும் அழகையும் உள்ளுக்குள் ரசித்தான்.

குழந்தை ஆசை கொண்ட சுஜாதா உடனேயே ஆம் என்றால் ஒண்ணுமே பண்ணமாட்டேன். இல்லையெனில் நான் காதலிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றாள்.

வாட்? என்ன இது லவ்வா? என்னையா? என்னை பற்றி என்னங்க தெரியும்? இங்க பாருங்க எனக்கு இப்படியெல்லாம் பேசினால் கெட்ட கோவம் வரும்.

அடடா கோவத்திலும் கெட்ட கோவம் நல்ல கோவம்ன்னு இருக்குதா?

சரி சரி இப்போ நான் என்ன பண்ணனும்?

என்னை லவ் பண்ணணும்.

என்னை சிக்கலில் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்க போறீங்களா? ஏனுங்க என் மேல் அப்படி ஓர் ஆசை? இதுக்கு முன் என்னை பார்த்ததே இல்லையே. என்னை பற்றி எதுவுமே தெரியாதே.

எனக்கு குழந்தை வேணும் என குழந்தை போலவே சொன்னாள்

புரியல்லை.

அழகான குழந்தை எனக்கு வேணும் அதனாலேயே உங்களை செலக்ட் பண்ணினேன்.

அப்படின்னா எனக்காக என்னை லவ் பண்ணல்லை. என் அழகை பார்த்துதான் அழகான குழந்தை பிறக்கும் என லவ் பண்ணினியா?

யெஸ்.

லுக் சுஜா. ஒரு பெண்ணுக்கு முதலில் கணவன் பற்றிய எண்ணமே இருக்கணும். பிறகுதான் குழந்தை பற்றிய எண்ணம் வரணும். தாய்மை என்பது இரண்டாம் பட்சம். ஒரு பெண்ணுக்கு கணவன் தான் கடைசிவரை அகை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. ஒரு குழந்தை மீதான தாயன்புக்காக கணவனை தேர்ந்தெடுப்பது முட்டாள்தனம்.

அவள் மெளனமாக இருந்தாள். அவனே மீண்டும் பேசினான்.

எனக்கு உங்களை பற்றி எதுவுமே தெரியாது. எனக்கென கொஞ்ச கனவுகள் இருக்கு. எனக்கு பொண்டாட்டியாக வாறவள் என்னை முழுதாக நேசிக்கணும். நானோ அன்புக்கு ஏங்குபவன்.

அவளும் பேசலானாள். நான் குழந்தைக்காக உங்களை கட்டிக்க ஆசைப்பட்டது உண்மை தான். உங்களை நேசிக்க மாட்டேன் என சொல்லவில்லையே. இந்த நிமிசத்தில் இருந்து உங்களை நான் காதலிக்கிறேன். என்னை விட்டு போகாதீங்க ஐ லவ் யூ பாஸ்கர் என அழுதாள்.

பாஸ்கர் செய்வதறியாது திகைத்தான். வித்தியாசமான பெண் என நினைத்தான். காதலை ஏற்றான்.

பாஸ்கர் சுஜாதா திருமணம் இனிதே நிறைவேறியது. அவன் மீது அளவுக்கதிகமான அன்பை செலுத்தினாள். ரொம்ப பிடிவாதக்காரியாக இருப்பினும் பிரியம் காட்டுவதில் அவளை விஞ்சி யாரும் இல்லை என பாஸ்கர் நினைத்தான். சராசரி பெண்னை விட சற்று வித்தியாசமான குணம் படைத்தவள் என எண்ணினான். அவனும் அவள் மீது அதீத பாசம் கொண்டு வாழ்க்கையை இன்பமாக கழித்தான்.

ஐந்தாறு மாதங்களாகியும் தான் தாய்மை அடையவில்லை என பாஸ்கர் மீது கோபப்பட்டாள். அவனும் ஆறுதல்படுத்தினான்.

திடீரென ஓர்நாள் அவன் ஆபீஸ் வேலையில் ஈடுபட்டிருந்த வேளை தொலைபேசி சினுங்கியது. அதிர்ந்தான் பாஸ்கர். நேர்சிங்க் கோமில் இருந்து போன். உங்கள் மனைவி விஷம் அருந்திட்டாங்க. கேட்டதும் அதிர்ந்தான். நேர்சிங் கோம் முகவரி வாங்கி படபடத்த நெஞ்சோடு பறந்தான். அவசரமாக நுழைந்தான்.

தொடரும்

என்ன நிலா மிகுதியைக் காணவில்லை :roll: :roll: :?: :?: :?:

  • தொடங்கியவர்

மிகுதி தொடரும் சந்தியா :P

இது என்ன ரீவியலா

மிகுதி அடுத்த சனியா..

வெண்ணிலா..

நூலோட பேரென்னங்க.. நானே வாங்கி படிச்சிடறேன்.. :P

  • தொடங்கியவர்

பக்கத்து வீட்டு மாமியை கண்டதும் கலங்கிய கண்களோடு நன்றி தெரிவித்துவிட்டு அவனின் அன்பு மனைவி இருந்த அறைக்கு சென்றான். அவளோ இவனைக் கண்டதும் ஓவென அலறினாள். என்ன குறை வைத்தேன் சுஜா ஏன் இப்படி செய்தாய் என அன்போடு வினாவிய கணவனை பார்த்து நான் மலடியாம் நான் மலடியா? டாக்டர் சொன்னாங்க. நான் மலடியாம். அதுதான் எனக்கு குழந்தையே பிறக்காது அதன் பின்னும் ஏன் நான் வாழணும். கேள்விகளை தொடுத்தாள் ஓர் பைத்தியக்காரி போன்ற தோற்றத்தோடு.

அவன் எவ்வளவோ ஆறுதல்படுத்தினான். ஆனால் அவனும் உள்ளுக்குள் வெந்து சாம்பலானான். அவனின் ஆறுதல் வார்த்தைகளால் அவள் கண்ணீர் காய்ந்த கன்னங்களோடு அவன் நெஞ்சில் சிறுபிள்ளை போல் உறங்கலானாள். ஆனால் அவனுக்கும் அவளை போல கதறனும் போலிருந்த போதும் தன்னை தானே அடக்கினான்.

அவளின் கவலையை போக்குமுகமாக அவளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லலானான். இருப்பினும் அவள் மாறவேயில்லை. எந்த சலனமுமின்றி மூலையில் ஒடுங்கினாள். சுஜாவுக்காகவே பாஸ்கர் ஒரு வேலைக்காரன் ஆனான். அன்பிற்கு முன் ஆண்மை எப்பொழுதும் அடிமையாகிப் போவது எத்தனை அதிசயம்!

தன்னுடைய துக்கங்களுக்கு தோள் கொடுப்பாள் என எண்ணிய பாஸ்கர் அவளுக்கு தோள் கொடுப்பவனாக முற்றாக மாறினான். அவளை ஓர் குழந்தை போல கண்காணித்தான்.

மணி பன்னிரண்டை தாண்டிய போதும் ரமேஷ்க்கு நித்திரை வரவில்லை. பாஸ்கரின் லெட்டர் தான் அவனின் கண்ணை நிரப்பியதே அன்றி அவனை நித்திரை அண்மிக்கவேயில்லை. 7 வருடமாக வராத பாஸ்கர் ஏன் திடீரென இப்போ வர நினைக்கின்றான்?

பாஸ்கர் பாஸ்கர். அன்பும் அமைதியும் உருவெடுத்த தோற்றம் கலையும் அழகும் குடிகொண்ட முகம்!

நிதானமான பேச்சு கவர்ச்சியான சிரிப்பு …. ரமேஷின் சிந்தனையும் உருண்டோடியது. பழைய பாஸ்கரை நோக்கி.

ரமேஷ் மதிய உணவை உண்ண அமர்ந்த வேளையில் பாலாவின் மழலை முகம் அவனை வாட்டியது.

டாடி எனக்கு மம்மி வேணும். ஸ்கூளில் எல்லோருக்கும் மம்மி இருக்காக்ங்க டாடி எனக்கு மட்டும் மம்மி இல்லையே. ஏன் டாடி? அழுகை முட்டிக்கொண்டு வந்த ரமேஷ் பெற்றுப்போட்டத்தும் கண்ணை மூடிய தன் மனைவியின் முகத்தை நினைத்து கடவுளை நொந்தான். உலக இன்பத்தை எல்லாம் அறிமுகம் செய்துவிட்டு அடையாள சின்னமாக குழந்தை பாலாவையும் விட்டு போனாளே என மிக மனம் வருந்தினான்.

பெண்ணின் அருமை ஆடவனுக்கு புரிவதே இப்படியானதொரு கட்டத்தில்தான். எப்படியோ வளர்க்கின்றான். ஸ்கூலுக்கு அனுப்புகின்றான். வேளாவேளைக்கு சாப்பாடு கொடுக்கின்றான் அன்போடு பண்பையும் ஊட்டி வளர்க்கின்றான். ஆனாலும் குழந்தை மம்மி மம்மி என அழும்போது அம்மா செத்துட்டா என சொல்ல மனம் மறுத்தது.

குழந்தை பாடசாலையில் எழுத்தை கற்கவில்லை. ஏக்கத்தை கற்றுக்கொண்டது. ஏனைய குழந்தைகளின் தாய் கன்னத்தில் மூக்குரசி முத்தமிடும் போது விநோதமாக பார்த்தான். ஆசையோடு ஏக்கம் குடிகொண்டது,

பாலா என்ன வேணும் என கேட்கும் போதெல்லாம் எனக்கு மம்மி தான் வேணும் என கெஞ்சிய குழந்தைக்கு எப்படி ஆறுதல் சொல்வதென தெரியாமல் தவித்தான். இரண்டாம் கல்யாணம் செய்யலாமா என மனசு கேட்ட போது வருபவளுக்கு பாலா எதிரியாக தெரிந்தால் எண்ணிப் பார்த்த மறுகணமே அவ் எண்னத்தை சாம்பலாக்கினான்.

மெல்ல மெல்ல சுஜாதாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. முற்றாகவே பழைய போல மாறியிருந்தாள். அதுகண்டு பாஸ்கர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உங்களை நான் ரொம்ப கஸ்டப்படுத்திவிட்டேன் அல்லவா? என்னை மன்னிச்சிடுங்க. ஐயோ அசடு நீ யார் என் பொண்டாட்டி தானே. ஏன் இப்படி எல்லாம் சொல்கின்றாய்? இல்லைங்க எனக்கு ரொம்ப பயமாக இருக்கு. ஏன்Dஆ? எனக்கு குழந்தை இல்லைன்னு என்னை மலடி என்று தூற்றிவிட்டு என்னை விட்டு பிரிந்திடுவீங்க. இன்னொரு கல்யாணம் கட்டிக்குவீங்க என நினைக்கிறப்போ. என்னது இப்படி எல்லாம் நினைக்கிறாய்?

இல்லை நீங்களும் ஆம்பிளை தானே. அப்படித்தானே இருப்பீங்க.

பைத்தியம் எல்லா ஆம்பிளைங்களும் அப்படி இருக்கமாட்டாங்க. நான் யார் உன் பாஸ்கர் நீ என் குழந்தை உன்னை ஒருபோதும் விட்டு போகமாட்டேன். போதுமா? தலையில் அடித்து சத்தியம் செய்தவனை இறுக கட்டியணைத்து முத்தமிட்டாள்.

பாலா காய்ச்சலில் துவண்டான். அழுத கண்கள் சிவந்து கன்னம் வீங்கி அவனை பார்க்கவே ரமேஷ்க்கு நெஞ்சு கனத்தது. பாலாவின் உடல்நோயை தீர்த்தான். ஆனாலும் மனநோய் தீர்க்க முடியவில்லை.

பாலா பாடசாலைக்கு கிளம்பு.

நான் போகல்லை. எனக்கு மம்மி வேணும். குழந்தை மறக்காமல் கேட்டது வழமை போல.

ரமேஷ் முதன் முறையாக தன் மனைவி வாழ்ந்த இதயத்தில் இன்னொருத்தியை பாலாவுக்காக உட்கார வைக்க நினைத்தான்.

ம்ம் அம்மா வருவா நீ நல்லாக படிக்கணும் அல்லவா சரி கிளம்பு.

குழந்தை பாலா அவசர அவசரமாக அம்மா வருவா என்று தந்தை சொன்ன சந்தோசத்தில் தயாராகினான்.

பாஸ்கர் நினைக்கவே இல்லை சுஜாதா இப்படி பழையபடி மாறுவாள் என்று. குழந்தைக்காகவே தன்னை திருமணம் செய்தவள் தான் ஒரு மலடி என தெரிந்தும் எப்படி இப்படி மாறினாள் என்று பாஸ்கர் திகைத்தான். சந்தோசத்தில் மலைத்தான். அன்று அவன் அலுவலகம் கிளம்பும் போது அவள் கெஞ்சினாள்

என்னங்க நான் வேலைக்கு போக போறேன். நீங்க போனபின் எனக்கு போரடிக்க்து.

ஓ நான் சொல்ல நினைத்ததை நீயே சொல்கின்றாயே. ம் எங்க கம்பனியிலேயே ஒரு ரைப்பிஸ்ட் போஸ்ட் வேகன்டா இருக்கு முதலாளி கிட்ட சிபாரிசு செய்கின்றேன். அது கண்டிப்பா உனக்கு கிடைக்கும்

எனக்கு அதொண்ணும் வேணாம். நான் பக்கத்தில் இருக்கிற நேர்சரி க்கு வேலைக்கு போக போறேனுங்க.

என்னது என் மனைவி நேர்சரிக்கு வேலைக்கு போவதா என மனசுக்குள் நினைத்த பாஸ்கர் அவளின் கெஞ்சல் முகத்தை கண்டு வெரிகுட் என சொல்லி விடைபெற்றான்.

பாஸ்கர் நான் ஏன் அங்கு வேலைக்கு போறேன் தெரியுமா? அங்கு அழகழகான குழந்தைங்க இருப்பாங்க. அதுதான்.

அவளின் தாய்மை உணர்வை அவன் உணர்ந்து கொண்டான்.

இளந்துளிர் நேர்சரி ஸ்கூல். தினமும் இங்கு வரும் பாக்கியத்தை பெற்றாள். மனசு மகிழ்ச்சியில் பூரித்தது. முதல்நாள் தன்னை அலங்கரிக்து வேலைக்கு சென்றாள். அப்பப்பா எத்தனை குழந்தைகள்

எல்லோரும் ஒவ்வொரு இன்ப இரவுகளின் ஞாபக சின்ங்கள். ஆண் பெண் அன்பின் பரிணாமங்கள் காதலின் சின்னமாய் உலவும் உன்னத பொக்கிஷங்கள்.

ஆனால் எனக்கு……………….

எவ்வளவு நாள் கற்பனைகொண்டேன். எப்படி ஏங்கினேன் எவ்வளவு எதிர்பார்த்தேன் ஆனால் யாருக்கும் காதலை மறுக்காத இயற்கை ஒரு சிலருக்கு மட்டும் தாய்மையை மறுத்து விடுகிறது. ம்ம் நான் என்ன பாவம் செய்தேன் என மனசுக்குள் அழுதாள்.

சொர்க்கத்தை உணர்ந்தாள் அச்சிறுவர்களைக் கண்டு. தன்னிலை மறந்து தனக்கென ஒதுக்கப்பட வகுப்புக்குள் நுழைகின்றாள். எல்லோரும் எழுந்து காலை வணாக்கம் சொல்லி புது ரீச்சர் என சந்தோசித்திருந்த வேளை ஒரு மாணவன் மட்டும் வாடிய முகத்துடன் இருப்பதை உணர்ந்த சுஜாதா அவனை மெல்ல அழைத்தாள்.

உன் பேரென்னப்பா?

பாலா

ஏன் சோகமாக இருக்கிறாய்? காலையில் சாப்பிடவில்லையா?

எனக்கு சாப்பாடு வேணாம் எனக்கு மம்மி மட்டும் தான் வேணும் என விசும்பினான்.

நான் இருக்கிறேன்டா என தன்னையும் மறந்து சொன்னாள்

அப்போ நான் மம்மி என சொல்லலாமா என அந்த அழகான குண்டு கன்னங்களோடு கலங்கிய கண்களோடு இருந்த பாலா தலை சாய்த்து கேட்ட அழகை கண்டு என் செல்லம் என்னை அம்மான்னு கூப்பிடு கண்ணா என தன் மார்போடு அணைத்தாள்.

அம்மா என கூப்பிட்ட பாலாவின் குரல் கேட்டதும் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைந்த திருப்தி. அவனுக்கு மதிய நேரம் அவளே சாப்பாட்டை ஊட்டினாள்.

இரு மனங்களின் ஏக்கங்களும் மெல்லை மெல்ல கரையத் தொடங்கின.

தலைமை ஆசிரியரிடம் பாலாவின் முகவரி கேட்டு வாங்கினாள்.

பரபரப்போடு ஓடிவந்து தன்னை கட்டிக்கொண்ட சுஜாதாவை ஆச்சரியமாக பார்த்தான் பாஸ்கர்.

கரைபுரளும் மகிழ்ச்சிக்கு காரணம் புரியவில்லை அவனுக்கு. கணவனின் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள் சுஜாதா.

என்ன ஆச்சு இன்றைக்கு என வியப்போடு வினாவிய கணவனை பார்த்து

நான் சொன்னா நம்பமாட்டீங்க நான் அம்மாவாகிட்டேன் என சொன்னதும்

பயந்து போனான் பாஸ்கர் இவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என

தொடரும்

  • 3 weeks later...

நிலா நிலா எங்கே மிகுதி வாசிக்க ஆவலுடன் இருக்கின்றோம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பாலாவின் பாசம் மற்றும் ரமேஷின் கெஞ்சலினால் அம்மாவாக நடிக்கச் சம்மதிக்கிறாள் ஈரோயினி. :rolleyes: பாஸ்கர் பெருந்தன்மையாக சம்மதிக்கிறான். பின்பு பாஸ்கர் வீட்டுக்கு வந்து போவது ரமேஷுக்குப் பிடிக்கவில்லை. இதுதானே கதை? :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.