Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு சபேசன் அவர்களே!

ஒப்பீட்டளவில் காதல் திருமணம்தான் அதிகமாக விவாகரத்தில் முடிவதாக கூறியுள்ளீர்கள், இத் தகவலை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதயும் தரமுடியுமா?

  • Replies 152
  • Views 25.3k
  • Created
  • Last Reply

திருமணத்தின் வெற்றி என்பது தம்பதிகள் விவாகரத்து அற்று இருக்கிறார்கள் என்பதில் அல்ல. தாயகத்திலோ இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸிலோ விவாகரத்து என்பது ஒரு தெரிவாக இல்லை எனவே மணம் முடித்தவர்களிற்கு இடையில் எந்தளவிற்கு உறவு நிலையும் புரிந்துணர்வும் மோசமடைந்தாலும் சமூக அழுத்தங்களிற்கு பயந்து காலத்தை ஓட்டுகிறார்கள். உறவில் உள்ள 2 வருக்கு இடையில் நிவர்த்தி செய்ய முடியாத விரிசல் வரும் பொழுது பிரிவு என்பதும் ஒரு தெரிவாக இல்லாத பொழுது உறவில் உள்ள இருவரில் ஒருவர் பாதிக்கப்பட்டவராகிறார் (victimized). அவர் தனது மிகுதி வாழ்வை தியாகம் செய்கிறார். இது தற்கொலையாகவும் மாறுகிறது எல்லை மீறிப்போகும் பொழுது.

விவாகரத்திற்கு சுதந்திரம் இருப்பதால் புரிந்துணர்விற்கோ அல்லது சரியான உறவை தேடுவதிலோ கவனம் அற்று இருப்பது என்பது சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வது. இதுவும் நடக்கிறது.

  • தொடங்கியவர்

காதல் திருமணங்கள் அதிகமாக விவாகரத்தில் முடிகின்றன என்று சொல்வது தவறு.

விவாகரத்தில் முடிகின்ற திருமணங்கள் அதிகமாக காதல் திருமணங்களாக இருக்கின்றன (தமிழர்கள் மத்தியில்.)

இப்படி ஒரு கருத்து பொதுவாக உண்டு.

விவாகரத்து வழக்குகளை நடத்துகின்ற சட்டத்தரணிளும் இப்படித்தான் சொல்கிறார்கள்.

இதை யாரும் இதுவரை ஆராய்ந்து புள்ளிவிபரங்கள் தந்ததாக தெரியவில்லை.

நான் பொதுவான கருத்தின் அடிப்படையில், அதை உண்மை என்று எடுத்துக் கொண்டு, அப்படி இருந்தால், அதற்கான காரணம் எதுவாக இருக்கும் என்று விளங்கப்படுத்த முயன்றுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம் நாட்டில் ஒரு குடும்பத்தில் விரிசல் எற்படின், எம் சுற்றத்தார்கள் வரிசையில் நிற்பார்கள் உதவி (?), அல்லது ஆலோசனை செய்வதற்கு. இது குறுக்கால போவான் சொன்னமாதிரி பெரும்பாலும் நிச்சயிற்கப்படுகின்ற திருமணத்தில் தான் காணப்படுகின்றது. காதல் கலியாணம் என்றால் ஏற்கனவே பெற்றோறுடன் முரன்பாடு, அதனால் அவர்களது தலையீடு இருப்பதில்லை. குடும்பத்தில் சிலசில விரிசல்கள் வரும்போது,உறவினர்களின் ஆலோசனைப்படி அவை அவ்வப்போதே நிவர்த்தி செய்யப்படுவத்தால், விரிசல்கள் விவாகரத்துவரைப் போவதில்லை.

இங்கு புலத்தில் உறவினர்கள் செய்தவேலையய்த் தான் குடும்பநல ஆலோசகர்கள் வழங்குகிறார்கள். ஆனால் எம்மில் எத்தனைபேர்கள் இவர்களிடம் போகின்றார்கள்.

ஆகவே நம் நாட்டுச்சமுதாய்த்திற்குப்ப

அதை விட முக்கிய காரணம் புலத்தில் பெண்களால் சுயமாக வேலை செய்து பொருளாதார ரீதியாக தனித்து நிக்க முடியும்.ஆனால் இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இதூ சாத்தியமான ஒன்று அல்ல.அத்தோடு விவாகரத்து என்பது பெண்களின் ஒரு குறையாகவே பார்க்கப்படும் சமூக அமைப்பும் இருக்கிறது.விவாகரத்தான ஆண் மறுமணம் முடிக்கலாம் ஆனால் பெண் அவ்வாறு செய்ய முடியாது.இவை அனைத்துமே மணமுறிவுகள் ஏற்படாமைக்கு காரணிகளாக அமைகின்றன.எவ்வளவு தான் சித்திரவதைகளையும் மனக் கசப்புக்களையும் கொண்டிருந்தாலும் இலங்கையில் பெண்களுக்கு இது ஒரு தெரிவாக இல்லை என்பதே உண்மை.அதை வைத்துக் கொண்டு சோதிடம் பாத்துக் கட்டிய கலியாணங்கள் நிலைதிருக்கின்றன என்று கூறுவது பொய்மையானது.மனப்பொருத்தமும் புரிந்துணர்வுமே சந்தோசமான வாழ்விற்கு அடிப்படை அது காதலித்த திருமணமோ அல்லது பேசிய திருமணமோ எல்லாம் ஒன்று தான்.திருமண முறிவுக்கு சாத்திரப் பொருத்தம் என்பது எப்படி ஒரு காரணமாக இருக்கமுடியும்?

sOliyAn எழுதியது:

உதாரணமாக, யுகே தயாரிப்புகளான குழந்தைகளுக்கு கொடுக்கும் 'கிரேப் வாட்டர்' மற்றும் 'டெட்ரோல்' போன்ற பொருட்களை ஜேர்மனியில் பாவிக்க முடியாது. அவற்றை மறைத்தே நமது கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள்.

ஓய் சோழி நீர் பாவிக்கிற கோபால் பல்பொடியும் சாத்து பாவிக்கிற சுண்ணாம்பும் தான் விற்ப்பனை செய்ய ஏலாது

:P :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்றார் பேசி, சாதகம் பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து கல்யாணம் செய்கிறவர்கள் விவாகரத்து செய்யிறது குறைவாக இருக்கலாம். ஏனெனில் அதுக்கும் அதுகள் தாய் தகப்பனை கேட்டு எண்கணிதம் பாத்து கோள் கிரகம் பாத்துக் கொண்டிருக்க கிழடு தட்டியிடும். அதுக்கு பிறகு சட்டத்தரணியிட்ட பொல்லை பிடிச்சுக் கொண்டு போகேக்கை அவர் அதை வாங்கி வெளுத்தாலும் ஆச்சரியமில்லை. மற்றயது தம்பதிகளுக்கு இடையிலே பெரிய பிரச்சனை வந்தாலும், வியாளன் மாறினதால அல்லது ஏழரைச்சனி பிடிச்சதால என்று தேற்றிக் கொண்டு வாழ்வதால் பிரிந்து போக சந்தர்ப்பம் குறைவு. சுருக்கமாக சொன்னா காதலித்து கல்யாணம் செய்யிறதுக்கும் சரிவராது போனால் பிரியிறதுக்கும் துணிவு வேண்டும்.

:lol: சபேசன்! காதல் திருமணம் செய்தவர்களிடையேயா அல்லது பேசித் திருமணம் செய்தவர்களிடையேயா பிரிவுகள் அதிகம் என்பதை இன்னொரு புதிய தலைப்பில் ஆரம்பியுங்கள்.

உண்மையைக் கூறப் போனால் எனக்கு சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் எனது தாயாருக்கு நிறையவே நம்பிக்கை உண்டு. எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், என்னால் சாத்திரத்தை பிழை என்றும் கூற முடியாது. ஏனென்றால் அதை ஆராய்ந்து பார்க்குமளவிற்கு எனக்கு அறிவு இல்லை.

ஆனால் ஒன்று.. எனது சிறு வயதில் எனது வாழ்க்கைப் பலன்கள் என எழுதப்பட்ட குறிப்புகளில்.. எனது எத்தனையாவது வயதில் தகப்பனார் இறப்பார்.. அதேபோல எத்தனையாவது வயதில் தாயார் இறப்பார் என்ற விடயங்கள் உள்ளன. அவை உண்மையாக இருப்பதில், உண்மையாகவே நான் ஆச்சரியப்படுகிறேன்.

ஓய் சோழி நீர் பாவிக்கிற கோபால் பல்பொடியும் சாத்து பாவிக்கிற சுண்ணாம்பும் தான் விற்ப்பனை செய்ய ஏலாது

:P :P :P :P :P

ஆ.. ஐ ஆம் எ போறீன் மான்.. டேட்டி பற்பொடி அண்டு சுண்ணாம்ஸ்!!!!!!! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: சபேசன்! காதல் திருமணம் செய்தவர்களிடையேயா அல்லது பேசித் திருமணம் ஆனால் ஒன்று.. எனது சிறு வயதில் எனது வாழ்க்கைப் பலன்கள் என எழுதப்பட்ட குறிப்புகளில்.. எனது எத்தனையாவது வயதில் தகப்பனார் இறப்பார்.. அதேபோல எத்தனையாவது வயதில் தாயார் இறப்பார் என்ற விடயங்கள் உள்ளன. அவை உண்மையாக இருப்பதில், உண்மையாகவே நான் ஆச்சரியப்படுகிறேன்.

சோழியன் அண்ணா... நான் நினைக்கின்றேன், அந்த சாத்திரம் சொன்னவர், தனது சாத்திரம் பொய்க்க கூடாது என்பத்தற்காக... கொலை செய்திருப்பாரோ? மன்னிக்க வேண்டும்.... இவர்கள் எதை அடிப்படையாக வைத்து சாத்திர சம்பிரதாயங்களை மூட நம்பிக்கை என்று சொல்கின்றார்கள் என்று எனக்கு இன்று வரை புரியவில்லை......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இது,... ஒரு இரண்டு நாளுக்கு சும்மா எழுதாமல் விட்டால்.. கண்ட படி எல்லாம் எழுதுறீங்கள்...... இருங்க.. வாறன் சும்மா.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் திருமணங்கள் அதிகமாக விவாகரத்தில் முடிகின்றன என்று சொல்வது தவறு.

விவாகரத்தில் முடிகின்ற திருமணங்கள் அதிகமாக காதல் திருமணங்களாக இருக்கின்றன (தமிழர்கள் மத்தியில்.)

இப்படி ஒரு கருத்து பொதுவாக உண்டு.

விவாகரத்து வழக்குகளை நடத்துகின்ற சட்டத்தரணிளும் இப்படித்தான் சொல்கிறார்கள்.

இதை யாரும் இதுவரை ஆராய்ந்து புள்ளிவிபரங்கள் தந்ததாக தெரியவில்லை.

நான் பொதுவான கருத்தின் அடிப்படையில், அதை உண்மை என்று எடுத்துக் கொண்டு, அப்படி இருந்தால், அதற்கான காரணம் எதுவாக இருக்கும் என்று விளங்கப்படுத்த முயன்றுள்ளேன்.

விவாகரத்து என்பது, காதல் திருமணமா அல்லது பேச்சு திருமணமா என்பதில் தங்கி இல்லை... இதோ புள்ளி விபரம்... என்னுடையது அல்ல.. பல திருமண/விவாகரத்து

சட்டத்தரணிகளை வைத்து பிரித்தானியாவிலே, ஒரு முகாமைத்துவ கலா நிதி, திரு Gறான்ட் தோன்றன் நடத்திய ஆய்வின் முடிவு.... 2004(2003)

முக்கிய காரணங்கள்...

வேறு தொடர்புகள் 27% (29%)

குடும்ப பிரச்சனை 18%(11%)

உணர்வுகள்/துன்புறுத்தல் 17%(10%)

அடிமையாதல்(மது/சூது) 6%(5%)

வேலையில் அதிக அக்கறை 6%(5%)

இந்த கணிப்பீடு, அனைத்து இனத்தவரையும் உள்ளடக்கியது.

சும்மா பிரச்சனை எங்கோ இருக்க... தேவை இல்லாததை பற்றி பேசி என்ன பிரயோசனம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலித்து மணமுடித்தவர்கள்

அதீதமான காதலில் மற்றவர்

துன்புறுவதை தாங்கமுடியாமல்தான்

பிரிந்து போகிறார்களோ என்னவோ? :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் சொல்கிறார்:

நீங்கள் கொலை, கொள்ளை கூடாது என்று சொல்வதற்கு அதில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும். பாலியல் வல்லுறவு கூடாது என்று சொல்வதற்கு அதிலும் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்.

எய்ட்ஸ் ஆபத்து என்று சொல்வதற்கு........ஐயோ!!

சாத்திரத்தைக் காட்டி ஏமாற்றிப் பிழைப்பவன் எப்படி அது கூடாது என்று சொல்வான். விற்பவன் தன் பொருளை தரமில்லை என்று சொல்வானா?

சபேசன், நாம் எல்லோரும் மனிதர்கள், உணர்வுகள் கொண்டவர்கள், ஆறறிவு கொண்டவர்கள். மிருகங்கள் அல்ல. எதை செய்தாலும் அதன் எதிர்கால விளைவுகளை அறிந்து செய்ய வேண்டும். உதாரணமாக, ஒருவன் கொலை செய்தால் அல்லது கற்பழித்தால்( கற்பு இல்லாதவர்களுக்கு அதை எப்படி அழிப்பது??) அவனுக்கு தண்டனை கொடுக்கப்படுகின்றது. யாரால் கொடுக்கப்படுகின்றது? அந்த அந்த நாட்டு சட்ட வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் நீதிபதியால் வழங்கப்படுகின்றது.

சட்டங்களை உருவாகியவர்கள், அந்த நாட்டு கட்டமைப்புக்கு கலாச்சாரத்துக்கு ஏற்ப, இழைத்த குற்றத்துக்கு ஏற்ப, தண்டனையை நியமிக்கின்றார்கள்.... அதற்கு அவர்கள் அந்த குற்றங்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்பது பொருள் .... அனுபவ சாலிகள் அல்லது அதை செய்தவர்கள் அல்ல......

ஒரு பொருளை வாங்கும் போது, அதை பாவித்து அது சரி இல்லை என்று சொன்னீர்கள் என்றால், உங்களுக்கு அந்த பொருளை வாங்குவதில், அனுபவமும் இல்லை... அதில் பாண்டித்தியமும் இல்லை... பார்த்தவுடன் அந்த பொருள் சரி இல்லை என்று சொன்னால், உங்களுக்கு பாண்டித்தியத்துடன் அனுபவமும் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் சொல்கிறார்:

நீங்கள் கொலைஇ கொள்ளை கூடாது என்று சொல்வதற்கு அதில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும். பாலியல் வல்லுறவு கூடாது என்று சொல்வதற்கு அதிலும் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்.

எய்ட்ஸ் ஆபத்து என்று சொல்வதற்கு........ஐயோ!!

சாத்திரத்தைக் காட்டி ஏமாற்றிப் பிழைப்பவன் எப்படி அது கூடாது என்று சொல்வான். விற்பவன் தன் பொருளை தரமில்லை என்று சொல்வானா?

சபேசன்இ நாம் எல்லோரும் மனிதர்கள்இ உணர்வுகள் கொண்டவர்கள்இ ஆறறிவு கொண்டவர்கள். மிருகங்கள் அல்ல. எதை செய்தாலும் அதன் எதிர்கால விளைவுகளை அறிந்து செய்ய வேண்டும். உதாரணமாகஇ ஒருவன் கொலை செய்தால் அல்லது கற்பழித்தால்( கற்பு இல்லாதவர்களுக்கு அதை எப்படி அழிப்பது??) அவனுக்கு தண்டனை கொடுக்கப்படுகின்றது. யாரால் கொடுக்கப்படுகின்றது? அந்த அந்த நாட்டு சட்ட வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் நீதிபதியால் வழங்கப்படுகின்றது.

சட்டங்களை உருவாகியவர்கள்இ அந்த நாட்டு கட்டமைப்புக்கு கலாச்சாரத்துக்கு ஏற்பஇ இழைத்த குற்றத்துக்கு ஏற்பஇ தண்டனையை நியமிக்கின்றார்கள்.... அதற்கு அவர்கள் அந்த குற்றங்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்பது பொருள் .... அனுபவ சாலிகள் அல்லது அதை செய்தவர்கள் அல்ல......

ஒரு பொருளை வாங்கும் போதுஇ அதை பாவித்து அது சரி இல்லை என்று சொன்னீர்கள் என்றால்இ உங்களுக்கு அந்த பொருளை வாங்குவதில்இ அனுபவமும் இல்லை... அதில் பாண்டித்தியமும் இல்லை... பார்த்தவுடன் அந்த பொருள் சரி இல்லை என்று சொன்னால்இ உங்களுக்கு பாண்டித்தியத்துடன் அனுபவமும் இருக்கின்றது

என்ன சொல்ல வருகிறீர்கள் தொட்டால்தான் தெரியும் நெருப்பு சுடும் என்றா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொருத்தம் பார்ப்பதில் "திரிம்சாம்சம்" போடுதல் என்கின்ற ஒரு விடயம் உண்டு. இதன் மூலம் வரப் போகும் பெண்ணின் குணத்தை அறிய முடியுமாம்.

இதன்படி ஏறக்குறைய 40 வீதமான தமிழ் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள். .

சபேசன்,

இதிலே உங்களுக்கு என்ன சந்தேகம்? 40 வீதமான தமிழ் பெண்கள், கணவரல்லாத பிற ஆண்களுடன் பாலியல் தொடர்பு கொண்டிருப்பதை, அந்த பெண்களுக்கு பிறந்தவர்களே ஒப்புக்கொள்ளும் போது, நீங்கள் எப்படி அதை மறுக்க முடியும்? சாதகப்பொருத்தத்தை நம்பி பயன்படுத்தும் தமிழர்களில், இந்த 40 வீதமான பெண்களுக்கு பிறந்தவர்கள், தாம் பிற ஆண்களுடன் பாலியல் தொடர்பு கொண்ட பெண்களுக்கு பிறத்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் சொல்கிறார்:

நீங்கள் கொலைஇ கொள்ளை கூடாது என்று சொல்வதற்கு அதில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும். பாலியல் வல்லுறவு கூடாது என்று சொல்வதற்கு அதிலும் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்.

எய்ட்ஸ் ஆபத்து என்று சொல்வதற்கு........ஐயோ!!

சாத்திரத்தைக் காட்டி ஏமாற்றிப் பிழைப்பவன் எப்படி அது கூடாது என்று சொல்வான். விற்பவன் தன் பொருளை தரமில்லை என்று சொல்வானா?

சபேசன்இ நாம் எல்லோரும் மனிதர்கள்இ உணர்வுகள் கொண்டவர்கள்இ ஆறறிவு கொண்டவர்கள். மிருகங்கள் அல்ல. எதை செய்தாலும் அதன் எதிர்கால விளைவுகளை அறிந்து செய்ய வேண்டும். உதாரணமாகஇ ஒருவன் கொலை செய்தால் அல்லது கற்பழித்தால்( கற்பு இல்லாதவர்களுக்கு அதை எப்படி அழிப்பது??) அவனுக்கு தண்டனை கொடுக்கப்படுகின்றது. யாரால் கொடுக்கப்படுகின்றது? அந்த அந்த நாட்டு சட்ட வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் நீதிபதியால் வழங்கப்படுகின்றது.

சட்டங்களை உருவாகியவர்கள்இ அந்த நாட்டு கட்டமைப்புக்கு கலாச்சாரத்துக்கு ஏற்பஇ இழைத்த குற்றத்துக்கு ஏற்பஇ தண்டனையை நியமிக்கின்றார்கள்.... அதற்கு அவர்கள் அந்த குற்றங்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்பது பொருள் .... அனுபவ சாலிகள் அல்லது அதை செய்தவர்கள் அல்ல......

ஒரு பொருளை வாங்கும் போதுஇ அதை பாவித்து அது சரி இல்லை என்று சொன்னீர்கள் என்றால்இ உங்களுக்கு அந்த பொருளை வாங்குவதில்இ அனுபவமும் இல்லை... அதில் பாண்டித்தியமும் இல்லை... பார்த்தவுடன் அந்த பொருள் சரி இல்லை என்று சொன்னால்இ உங்களுக்கு பாண்டித்தியத்துடன் அனுபவமும் இருக்கின்றது

என்ன சொல்ல வருகிறீர்கள் தொட்டால்தான் தெரியும் நெருப்பு சுடும் என்றா?

சந்தேகம் என்றால் தொட்டுப்பாருன்கள். எனக்கு நடந்த ஒரு சுவையான சம்பவம். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தமிழில் மகாபாரதம் இருந்தது. அதில் சந்தர்ப்பம் கூறுதல் என்று இருந்தது. அதாவது ஒரு மேற்கோள் யாரால் யாருக்கு எப்போது கூறப்பட்டது என்று கூறவேண்டும். இதில் பாண்டுவுக்கு ரிஸி கள் கூறுகின்றனர் "சிற்றின்பம் வேண்டில் உன் சிரம் ஆயிரம் பிளவாகட்டும் எண்று" அப்போதய விடலைப் பருவத்தில் நான் எனது ஆசிரியரிடம் கேட்டேன் சிற்றின்பம் என்றால் என்ன அது எப்படியிருக்குமெண்டு?.

அதற்கு அவர் கூறினார் மாங்காய் இனிக்கும். இனிக்கும் என்றால் என்ன? அது சுவைத்தால் தானே தெரியும் என்று. அதெபோல்தான் நெருப்பும்?

மூட நம்பிக்கைகளுக்கு அறிவியல்புூச்சு புூசப்படுவது சில காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

விபுூதியில் நோய் எதிர்புச் சக்தி இருப்பதாக சிலர் கிளப்பி விட்ட வதந்தி இன்று வரை பலரால் நம்பப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்று இருப்பதாக அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

வீபூதி பூசுவதன் நோக்கம் எமது உடலும் ஒருநாள் இது போல சாம்பல் ஆகிவிடும் இதனை உணந்து வாழ்க்கையில் நல்லபடியாக நட என்பதே அதன் அர்த்த்ம் இதனை புரிந்து கொள்ள வேண்டும் சபேசன்

  • தொடங்கியவர்

"விவாகரத்து என்பது, காதல் திருமணமா அல்லது பேச்சு திருமணமா என்பதில் தங்கி இல்லை... இதோ புள்ளி விபரம்... என்னுடையது அல்ல.. பல திருமண விவாகரத்து

சட்டத்தரணிகளை வைத்து பிரித்தானியாவிலே, ஒரு முகாமைத்துவ கலா நிதிஇ திரு புறான்ட் தோன்றன் நடத்திய ஆய்வின் முடிவு.... 2004(2003)

முக்கிய காரணங்கள்...

வேறு தொடர்புகள் 27மூ (29மூ)

குடும்ப பிரச்சனை 18மூ(11மூ)

உணர்வுகள்ஃதுன்புறுத்தல் 17மூ(10மூ)

அடிமையாதல்(மதுஃசூது) 6மூ(5மூ)

வேலையில் அதிக அக்கறை 6மூ(5மூ)

இந்த கணிப்பீடுஇ அனைத்து இனத்தவரையும் உள்ளடக்கியது."

இந்த தரவுகளை "சும்மா" என்பவர் தந்திருக்கிறார்.

இதிலே விவாகரத்துக்கு என்ன காரணங்கள் என்று இருக்கின்றன. அது பற்றி யாரும் இங்கு பேசவில்லை. காதல் திருமணங்களாக இருக்கட்டும், பேச்சுத் திருமணங்களாக இருக்கட்டும். விவாகரத்து நடப்பதற்கு மேலே சொன்னது போன்று பல காரணங்கள் இருக்கும்.

ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், விவாகரத்தில் முடிகின்ற திருமணங்கள் அதிகளவில் பேச்சுத் திருமணங்களாக இருக்கின்றனவா அல்லது காதல் திருமணங்களாக இருக்கின்றனவா என்பதே. அது குறித்து நான் அறிந்த வகையில் யாரும் பெரிதான ஆய்வுகளை மேற்கொண்டதாக தெரியவில்லை.

ஆனால் பெரும்பாலான சட்டத்தரணிகள் விவாகரத்தில் முடிகின்ற திருமணங்கள் அதிகமாக காதல் திருமணங்களாக இருக்கின்றன என்றுதான் சொல்கிறார்கள்.

;இங்கு நான் சொன்ன விடயம் வேறு. "சும்மா" தந்த தரவுகள் வேறு.

இதற்கு அந்தந்த துறை சார்ந்தவர்களாால்தான் விளக்கமளிக்க முடியும்!

உதாரணமாக, யுகே தயாரிப்புகளான குழந்தைகளுக்கு கொடுக்கும் 'கிரேப் வாட்டர்' மற்றும் 'டெட்ரோல்' போன்ற பொருட்களை ஜேர்மனியில் பாவிக்க முடியாது. அவற்றை மறைத்தே நமது கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள்.

ஆக, மேற்குலகில் அவர்களுடைய தயாரிப்புகளிலேயே உடன்பாடில்லாதபோது, ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் சாஸ்திர சம்பிரதாயங்களை பிழை என்று முற்றுமுழுதாக ஒதுக்கிவிட முடியாது.

அப்படி ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டுமாயின், முதலில் தீர்மானிப்பவர்கள் அத்துறையில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்.

மிகவும் ஆழமான கருத்து சோழியன்

ஜோதிடம், பொருத்தம் பார்த்தல் என்பன எல்லாம் ஒரு மோசடி என்று அறிவதற்கு அதில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டுமா?

நல்ல நகைச்சுவை!

பொருத்தம் பார்த்த செய்த எத்தனையோ பேர் மண வாழ்க்கையில் படுகிற பாடு போதாதா "பொருத்தம் பார்த்தல்" ஒரு ஏமாற்று வேலை என்று கூற?

அத்தடன் நான் மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களைப் பார்த்தீர்களா?

கணக்குப் போட்டுப் பாருங்கள். இதன்படி ஏறக்குறைய 30 வீதத்தில் இருந்து 40 வீதமான பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருக்க வேண்டும்.

இது ஒரு பித்தலாட்டம் என்று சொல்ல வேறு என்ன வேண்டும்?

மிகுதியை நாளை வந்து சொல்கிறேன்.

இந்த கருதினை ஏற்றுக் கொள்ளமுடியாது நான் வாழும் இந்த நாட்டில் கூட நாளந்த டச் மொழி பத்திரிகைகளின் அவர்களின் முறைக்கு ஏற்ப பலன்கள் எழுதுகின்றார்கள். இவ்வளவு முன்னேற்றமான நாட்டில்கூட இதனை நம்பும் போது எப்படி இந்த கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளமுடியும் :idea: :roll:

பொருத்தம் பார்த்தல் என்கின்ற விடயத்தை மட்டும்தான் நீங்கள் சாத்திரவிதிகளில் ஏற்றுக்கொள்ளவில்லையா அல்லது சாஸ்திரம் என்பது வெறும் சுத்துமாத்து என்கின்ற கருத்தை பிரதிபலிக்கின்றீர்களா அதற்கான தகவலை எதிர்பார்க்கின்றேன் உங்கள் ஆக்கம் முலமாக திரு.சபேசன் அவர்களே

  • தொடங்கியவர்

இலக்கியன்! வீபுதி புூசுவதன் நோக்கம் பற்றி சைவ சித்தாந்தவாதிகள் சொல்வது பற்றி நான் பேச வரவில்லை.

நீங்கள் சொல்வது போன்றுதான் கண்ணதாசனும் "அர்த்தமுள்ள இந்து மதத்தில்" எழுதியுள்ளார்.

ஆனால் வீபுூதி பற்றி விஞ்ஞான வதந்திகள் உலாவுகின்றன என்பது உண்மை.

பேபாலில் நடந்த விசவாயுக் கசிவின் போது யாகம் செய்த ஒரு குடும்பத்தை விசவாயு எதுவுமே செய்யவில்லை என்றும் ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். தாயகத்தில் படிக்கின்ற பொழுது சைவ சமய பாடம் கற்பித்த ஆசிரியை அணுக் கதிர்களில் இருந்து கூட யாகத்தில் வருகின்ற புகை எங்களைக் காப்பாற்றும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக ஒரு போடு போட்டார்.

இப்படி இந்த மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளுக்கு விஞ்ஞான விளக்கம் சொல்லிக் கொண்டு சிலர் திரிவார்கள். அதைப் பற்றித்தான் நான் சொன்னேன்.

சரி, ஒரு பேச்சுக்கு வீபுூதி பற்றி நீங்கள் சொன்ன தத்துவத்தை ஏற்றுக் கொள்வோம். அப்படி என்றால் புதைக்கப்படுகின்ற மதத்தை சேர்ந்தவர்கள் மண்ணை அள்ளி புூசீக் கொண்டு திரிவதா? அவர்கள் அப்படிச் செய்தால் நீங்கள் உள்ளுக்குள் நகைக்க மாட்டீர்களா?

சாம்பலையோ, மண்ணையோ புூசித்தான் இறப்பை அடையாளப்படுத்த வேண்டுமா? அதை எதற்கு செய்ய வேண்டும்?

இப்படியான தத்துவங்களின் உள்ளர்த்தம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

  • தொடங்கியவர்

சாத்திரங்கள், வேதங்கள் எல்லாமே கடைந்தெடுத்த பித்தலாட்டங்கள்.

சாத்திரங்கள், வேதங்கள் எல்லாமே கடைந்தெடுத்த பித்தலாட்டங்கள்.

வட மொழி இலக்கியங்கள் என்பதனால்த்தான் நீங்கள் இதனை ஏற்கவில்லை என்கின்றீர்களா :idea: :?: . இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி அப்படி இருக்கும் போது எப்படி நீங்கள் இந்தக்கருத்துக்கள் கூறலாமா :idea: ? இதற்கான ஆய்வுகள் நடத்தி இருந்தால் ஆதரங்கள் தந்தால் எமக்கு அறிவுத்தேடலாக இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.