Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டமான் அமைச்சரவையிலிருந்து விலகலா????

Featured Replies

கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், இளைஞர் நலம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டைமான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய வம்சாவழித் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்கும் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இக்கட்சியின் தலைவரான தொண்டைமான் இலங்கை அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார். இப்பதவிக்கு 2 மாதங்களுக்கு முன்புதான் தொண்டைமான் தேர்வானார்.

தற்போது தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவர் யோகராஜன் கூறுகையில், எங்களது தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் ராஜபக்ஷேவுக்கு அனுப்பி விட்டார்.

ராஜினாமாவுக்கான காரணத்தை கூற முடியாது. அமைச்சர் பதவியிலிருந்துதான் தொண்டைமான் விலகியுள்ளார். அடுத்து என்ன நடவடிக்கையை அவர் எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார் யோகராஜன்.

தொண்டைமான் கட்சியின் சார்பில் 2 எம்.பிக்கள் துணை அமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தொண்டைமான் அனுப்பிய ராஜினாமா கடிதம் இன்னும் அதிபருக்கு வந்து சேரவில்லை என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் சந்திரபாலா லியநாயகே தெரிவித்துள்ளார்.

தொண்டைமான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டாலும் கூட அவரது கட்சி, ராஜபக்ஷே அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறாது என்று கூறப்படுகிறது.

புலிகளை அழிப்பேன்: ராஜபக்ஷே

இதற்கிடையே கொழும்பில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ராஜபக்ஷே பேசுகையில், அமைதி பேச்சவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதுவரை உள்ள அரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றம் செய்யும் எண்ணமும் இல்லை.

எங்களது ஒரே லட்சியம் விடுதலைப் புலிகளை அழிப்பதுதான். அது நடைபெறும் வரை ஓய மாட்டோம். எந்தச் சூழ்நிலையிலும் ராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தமிழர் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்தி வரும் வெறித் தாக்குதல் தொடரும் எனத் தெரிகிறது. இது தமிழர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபரின் பேச்சுக்கு விடுதலைப் புலிகள் தரப்பு பதிலடி கொடுக்கும் என்பதால் மிகப் பெரிய போர் விரைவில் வெடிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

3 நாட்கள் தீவில் தத்தளித்த 20 அகதிகள்

இந் நிலையில் ராமேஸ்வரம் அருகே நடுக் கடலில் தீவில் இறக்கி விடப்பட்டு 3 நாட்களாக தத்தளித்து வந்த 20 இலங்கை அகதிகளை தமிழக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இலங்கையிலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 20 அகதிகள் ராமேஸ்வரத்திற்கு படகு மூலம் வந்தனர். ஆனால் இவர்களை அழைத்து வந்த படகோட்டி, ஆதாம் தீவு என்ற தீவில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.

நடுக் கடலில் ஆளில்லாத அந்தத் தீவில் கடந்த 3 நாட்களாக 20 பேரும் பரிதவித்து வந்தனர். குடிக்கக் கூட தண்ணீர் இல்லாததால் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இந் நிலையில் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள் இவர்களைப் பார்த்து அங்கு சென்று அனைவரையும் தங்களது படகுகளில் ஏற்றி ராமேஸ்வரம் கொண்டு வந்தனர்.

பின்னர் அனைவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2006/11...1/08/lanka.html

ஐ.தே.க தான் சேர்ந்துவிட்டதே இனி கறிவேப்பிலைகளை இப்படித்தான் தூக்கி வீசுவார்கள். தொண்டமான்களுக்கு இனியாவது புத்தி வரும் என்பது சந்தேகமே.

என்ன முகத்தோட வன்pக்'கு ஓடா...???

அதோடா....இவர் பதழவ வலிhகினாராம்..ஆனால் மகிந்தருக்கு ஆதரவு கொடுப்பாராம்...

என்ன விளையாட்டு...சத்தியமாய் நான் அடித்து சொல்லுறன் இதை;தான்

அரசியல் கோமளிகளின்..கேலி கூத்து என்பது....

பதலிக்காய் அலையும்...உந்த வாலுகள்..எப்படி மக்களை சிந்திக்கும்...???

உவர்கள்..இருப்பதின் பார்க்க இறப்பது மேல்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், இளைஞர் நலம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டைமான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவனுகள் எல்லாம் ஒரு மனுசன் என்று மலையக மக்களையும் வாழவைக்கவில்லை இந்த பன்றிகளை நம்பியா எமது போராட்டம் வன்னிக்கு வரட்டும் அதை வெட்டிதான் எறியனும் :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.தே.க தான் சேர்ந்துவிட்டதே இனி கறிவேப்பிலைகளை இப்படித்தான் தூக்கி வீசுவார்கள். தொண்டமான்களுக்கு இனியாவது புத்தி வரும் என்பது சந்தேகமே.

இருந்தால் தானே வர :?:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.....

இனி எப்ப அடுத்த கட்சிக்கு மாறப்போறாரோ?

"இதுகள்" எண்டைக்கும் திருந்தாதுகள்!!!!!

தமிழில அழகாய் ஒரு பழமொழி சொல்லுவீனம்

....... நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன!!!!!

அட அடா இதுகள் மாடுகள் அல்ல எருமைகள். கீழே இன்று சுடர் ஒளியில் வந்த செய்தி

பதவி விலகல் கடிதத்தை மீளப் பெற்றார் ஆறுமுகன்

இளைஞர் வலுவுட்டல் மற்றும் சமூக பொருளாதாரத்துறை அமைச்சர் ஆறுமுகன் தொண்டா ஜானாதிபதியிடம் வழங்கிய தமது பதவி விலகல் கடிதத்தை நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக அரசுடன் பேச்சு நடத்தித் தீர்வு பெற்றுக் கொண்டதையடுத்தே கடிதம் வாபஸ் பெறப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன் தினம் அமைச்சர் தொண்டமான் வியன்னாவிலிருந்து திரும்பிய கையோடு தமது அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்கிறார் எனக் குறிப்பிடப்பட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததமை தெரிந்ததே

எனினும்,இதற்கான காரணம்தெரியவரவில்லை.

நன்றி : சுடர் ஒளி 09நவம்06

ஈழத்திலிருந்து

ஜானா

நாளொன்றுக்கு மிகக்குறைந்த அடிமைச் சம்பளம்பெறும் அந்தத் தொழிலாளர்களிடம் இருந்து சந்தா என்ற போர்வையில் மாதம் மாதம் பணத்தைச் சுரண்டி (அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி) கொள்ளுப்பிட்டியிலே அடம்பர அலுவலகத்தைக் கட்டி ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தும் இவர்களிடம் மக்கள் நலனைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.