Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிர்ஸ்டவசமாக கண்காணிப்புக் குழுவினர் உயிர் தப்பியுள்ளனர்

Featured Replies

பூநகரி மீது எறிகணைத் தாக்குதல்: கண்காணிப்புக் குழுத் தலைவர் உயிர் தப்பினார்

[புதன்கிழமை, 8 நவம்பர் 2006, 17:51 ஈழம்] [தெ.சந்திரநாதன்]

பூநகரி இறங்குதுறையைப் பரிசீலிப்பதற்காக உத்தியோகபூர்வமாக சென்ற கண்காணிப்புக் குழுவினரை நோக்கி சிறிலங்கா இராணுவம் எறிகணை வீச்சுத் தாக்குதலை இன்று புதன்கிழமை நடத்தியுள்ளது.

ஏ-9 பாதைக்குப் பதிலாக பூநகரி இறங்குதுறையைப் பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா அரசு யோசனை தெரிவித்திருந்தது. ஆனால் அரசின் தாக்குதல்களால் பூநகரி இறங்குதுறை ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இவ்வாறான போக்குவரத்திற்கு அது உகந்ததல்ல எனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பூநகரி இறங்குதுறையைப் பரிசீலிப்பதற்காக, சிறிலங்கா அரசின் முன்கூட்டிய அனுமதியைப் பெற்று கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜோகன் சொல்பேர்க் இன்று பிற்பகல் தனது குழுவினருடன் அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் கண்காணிப்புக் குழுத்தலைவர் நின்றிருந்த பகுதியை நோக்கி சிறிலங்கா இராணுவம் பிற்பகல் 3.15 மணியளவில் எறிகணைத் தாக்குதலை நடத்தியது. சுமார் 7 எறிகணைகள் கண்காணிப்புக் குழுவினர் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் வீழ்ந்து வெடித்துள்ளன.

எனினும் அதிர்ஸ்டவசமாக கண்காணிப்புக் குழுவினர் இத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளனர்.

http://www.eelampage.com/?cn=29649

20061108002bw0.jpg

20061108001nu8.jpg

படங்கள்: விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம்

http://www.eelampage.com/?cn=29649

2 படங்களுக்கும் 6 வித்தியாசம் கண்டுபிடியுங்கள். பார்ப்பம்.. :P

20061108002bw0xs6.jpghenelil1cx9rd6.jpg

இரண்டுக்கும் ஒற்றுமை உயிரிக்கு பயப்பிடாமல் காணப்படுவது புலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவள்ள ஒன்டு ரெண்டு செத்தா தான் உலகம் கொஞ்சம் விழித்துக்கொள்ளும் போல இருக்கு. பொறுத்திருந்து பாப்பம் எவ்வளா நாளைக்கு தான் இப்படி மயிரிழையில தப்ப போகினம்.

சரியாகச் சொன்னீர்கள் வடிவேல் அம்பேல். கண்காணி;ப்பிலையும் ஒன்டு ரெண்டு போனாத்தான் உலகம் கொஞ்சம் சோம்பல்பட்டாவது கண்திறந்து பார்க்கும். உண்மை என்னவென்று.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

Shells fired at Norwegian observers in Sri Lanka

OSLO, Nov 8, 2006 (AFP) - Norwegian observers in Sri Lanka were fired on by government forces during attacks on Wednesday which killed at least 65 civilians and injured about 300, Norwegian Aid Minister Erik Solheim told Norway's NRK broadcaster.

"This is very serious. Government forces fired at unarmed people with the aim of killing them," Solheim, who is also the chief peace-broker for Sri Lanka, told NRK.

Norway heads the Sri Lanka Monitoring Mission (SLMM).

Government forces on Wednesday shelled a refugee camp in eastern Sri Lanka. The victims were ethnic Tamils who had been displaced by the recent upsurge in shelling in the region.

The bloodshed came as security forces and Tamil Tiger rebels accused each other of trying to spark full-scale war.

Nearly 3,300 people have been killed in fighting in the past year despite a 2002 truce in Sri Lanka's separatist conflict.

The conflict has killed more than 60,000 people since 1972, with rebels fighting for a separate homeland for the Tamil minority in the Sinhalese majority country.

http://www.reliefweb.int/rw/RWB.NSF/db900S...T2?OpenDocument

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்புக்குழுத் தலைவர் மீதான தாக்குதல்: கண்காணிப்புக்குழு கவலை

இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பக்குழுத் தலைவர் மீதான எறிகணை வீச்சுத் தாக்குதலுக்கு இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகத்துக்கு கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒலப்ஸ் டொடிட்டர் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் லார்ஸ் ஜொஹான் சொல்பேர்க் ஏ-9 பாதைக்கு மாற்றுப்பாதையாக அரசாங்கம் திறப்பதற்கு தயாரென முன்வைத்துள்ள பூநகரி, சங்குப்பிட்டி பாதையை பார்வையிட சென்றிருந்தவேளை அப்பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் தாக்குதல் மேற்கொண்டமை துரதிர்ஸ்டவமானது.

பொதுவாக இவ்வாறான எமது பயணங்களின் போது நாம் சிறிலங்கா அரசாங்க சமாதான செயலகத்திற்கு முதலிலேயே அறிவித்துவிட்டே செல்வோம். நேற்று எமது தலைவர் பூநகரி பிரதேசத்திற்கு செல்லவுள்ளார் என அறிவித்திருந்தோம்.

ஆயினும் அங்கு அவர் சென்றிருந்த வேளை எறிகணை வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றது. நாம் அரசாங்க சமாதான செயலகத்திற்கு தெரிவித்திருந்த அறிவித்தல் உரியவர்களுக்கு சென்றடையவில்லையோ என நாம் எண்ணுகின்றோம். எவ்வாறாயினும் எறிகணை வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்ற வேளையில் நாம் எமது தலைவர் அங்கு இருப்பதாக அரசாங்கப் படையினருக்கு தெரிவித்த பின்னர் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பார்வையிடச் சென்றவேளை இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாங்கள் கவலை அடைகின்றோம்.

இதனிடையே வாகரையில் 45 பொதுமக்கள் எறிகணை வீச்சில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதன் பேச்சாளர் தெரிவிக்கையில்,

இந்த தாக்குதல் யுத்த நிறுத்த மீறலா இல்லையா என்பதைவிட யுத்தத்துடன் சம்பந்தப்படாத அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள் துச்சமாக காவு கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்தச் சம்பவத்தினால் கண்காணிப்புக்குழு ஆழ்ந்த கவலையடைந்துள்ளதுடன் வன்முறைகளை உடனடியாக நிறுத்தக் கோருகின்றது. அப்பாவி பொதுமக்களை கொலை செய்வதை கண்காணிப்புக்குழு நிறுத்தக் கோருகின்றது என்றார்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்புக்குழுத் தலைவர் மீதான தாக்குதல் மோசமான செயல்: எரிக் சொல்ஹெய்ம்

பூநகரி, சங்குப்பிட்டி பாதையை பார்வையிடச் சென்ற இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் சொல்பேர்க் மீதான எறிகணைத் தாக்குதல் சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிட்ட மோசமான செயல் என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நோர்வே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது:

போர் நிறுத்த உடன்படிக்கையைக் கண்காணிக்கும் நிராயுதபாணிகளான கண்காணிப்புக்குழுவினர் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை நோக்கி நடத்தப்பட்ட எறிகணை வீச்சுத் தாக்குதல் நின்றிருந்த இடத்திற்கு 50 மீற்றர் தொலைவில் வீழ்ந்து வெடித்துள்ளது.

எனவே இது அவர்களைக் கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையாகும். இது சிறிலங்காவில் எமக்கு நேர்ந்த பாரதூரமான சம்பவம்.

கண்காணிப்புக் குழுத் தலைவர் மீதான இந்தத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் நோர்வே விளக்கம் கோரியுள்ளது.

வாகரையில் இடம்பெயர்ந்த மக்கள் மீது நேற்று நடத்தப்பட்ட பல்குழல் எறிகணை, ஆட்லறி எறிகளை வீச்சுத் தாக்குதலில்; 45 பொது மக்கள் கொல்லப்பட்டு 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவமும் கண்காணிப்புக் குழு மீதான தாக்குதலும் அப்பட்டமான போர்நிறுத்த ஒப்பந்த மீறல் என்றார் எரிக் சொல்ஹெய்ம்.

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண'ண சொல்ஹெய்ம்!!!

சென்ன எல்லாம் உவையள் திருந்த மாட்டினம்

வேறு விதமாய் சொன்னா தான் விளங்கும்

குடுக்கிறதை நிப்பாட்டுங்கோவன்!!!

பசிக்கிறவனுக்குதான் சாப்பாடு

ஏப்பம் விடுகிறவனுக்கில்லை!!!

அடப் பாவிகளே..........க.கா.குழுவுக்கே பங்கர் தான் என்றால்.........அப்பாவித்தமிழனின

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரிக்கு செல்வது பற்றி கண்காணிப்புக் குழுத் தலைவர் தெரிவிக்கவில்லை: கேகலிய ரம்புக்வெல

பூநகரிக்கு செல்வது பற்றி இலங்கை கண்காணிப்புக் குழுத் தலைவர் எமக்குத் தெரிவிக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேகலிய ரம்புக்வெல கூறியதாவது:

பூநகரி செல்வது குறித்து எமக்கு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் தெரிவிக்கவும் இல்லை. எமக்கு அவரது பயணம் பற்றியும் தெரியாது.

இத்தகைய பயணத்தை மேற்கொள்ளும் முன்பாக உரிய நடைமுறைகளை அவர் பின்பற்ற வேண்டும்.

தாக்குதலுக்கு முன்னர் தொலைநோக்கிகளை நாம் பயன்படுத்துவதில்லை என்றார் அவர்.

பூநகரி கேரதீவு - சங்குப்பிட்டி பாதை குறித்து பரிசீலிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவனுடன் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜோகன் சொல்வ்பெர்க் பூநகரி சென்றிருந்தார். அப்போது சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். எறிகணைகள் கண்காணிப்புக் குழுத் தலைவரின் அருகே விழுந்து வெடித்தன. இதனையடுத்து அவர் புலிகளின் பதுங்குகுழியில் சென்று பதுங்கியிருந்து உயிர்தப்பியிருந்தார்.

-புதினம்

ஆனால் கண்காணிப்புக்குழுத்தலைவர் இலங்கை சமாதானச் செயலகத்துக்கு அறிவித்து விட்டே சென்றதாகக் கூறியிருந்தார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.