Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

எமக்காய் தன்னை

வெண்ணிலா மறைக்க..

ஏனோ விண்மீன் சிரிக்க...

அடடா காற்றுக்

கைகள் நீட்டி

உன் சேலையை

என்னிடம் இழுக்க..

வருவேன் என்றது சேலை

விடமாட்டேன்பதுன் லீலை..

தோளில்த் தோளாய்த்

ஒட்டிக்கொண்டு..தொடு

விரலால் கன்னம்

தொட்டுக்கொண்டு..

ஏதேதோ சொல்கின்றாய்..

எதுவுமே புரியவில்லை..

உன் புன்னகை மட்டும் வாசிக்கிறேன்..

உனை மடியில் ஏந்திட யாசிக்கிறேன்..

மாலையிடவா யோசிக்கிறேன்..மண

பெண்ணாய்நீ வர பரி காசிக்கிறேன்..

  • Replies 1.9k
  • Views 182.2k
  • Created
  • Last Reply

எமக்காய் தன்னை

வெண்ணிலா மறைக்க..

ஏனோ விண்மீன் சிரிக்க...

அடடா காற்றுக்

கைகள் நீட்டி

உன் சேலையை

என்னிடம் இழுக்க..

வருவேன் என்றது சேலை

விடமாட்டேன்பதுன் லீலை..

தோளில்த் தோளாய்த்

ஒட்டிக்கொண்டு..தொடு

விரலால் கன்னம்

தொட்டுக்கொண்டு..

ஏதேதோ சொல்கின்றாய்..

எதுவுமே புரியவில்லை..

உன் புன்னகை மட்டும் வாசிக்கிறேன்..

உனை மடியில் ஏந்திட யாசிக்கிறேன்..

மாலையிடவா யோசிக்கிறேன்..மண

பெண்ணாய் நீ வர பரி காசிக்கிறேன்..

நீ வர பரிகாசிக்கின்றேன்-ஆனால்

உனையே தினமும் யாசிக்கின்றேன்...!

விண் முகில்கள் மோதி

இடிகள் கேட்டிடும் போதெல்லாம்

வெண்ணிலா உடைந்து வீழ்ந்ததோ....?

யோசிக்கிறேன்....!

வெளியில் வந்துனைத் தேடி

மதியே (நீ) இன்றி -நிம்

மதியே இன்றி வாடிடுவேன்...!

ஓ...

மழைக்கால மேகம் தான்...

மழை நீரில் நனையாமல்

வெண்ணிலா வீட்டை போச்சு....

வெளியே நான் வந்து

மழை நீரில் நனைகின்றேன்.....

மதியே இல்லாத மனிதன் நான்...! :P

நான் எழுதிய கடிதம்

முகவரி நனைந்து கரைந்ததில்...

இடம் மாறி

உன்னிடத்தில் வராமல்

போயிருக்கலாம்.

ஆனால்..என்

காதல் உன்னிடத்தில் வந்து

சேர்ந்தது.. அறிந்தேன்...

என் முதற்கனவே...

பதிலுக்காக பாத்திருக்கிறேன்..

பாத்திருக்கிறேன்

உன்னை

காத்திருக்கின்றேன்

உனக்காய் நீ

எடுத்த என்

இதயம் வேண்டி

நீ சிதைத்த என்

வாழ்வைக் கேட்டு

நீ எறிந்த என்

மனதைத் தேடி

காத்திருக்கின்றேன்

என்னை நானே

தேடிக்கொண்டு.....

Edited by கஜந்தி

தேடிக்கொண்டு அலையும்

என் விழிகள்..

உன்னைக் காணவில்லை..

நீ பத்தடி அருகில் இருந்தாய்

என்இதயம் அறிந்தது..

இதய நாடிகள் எகிறித்துடிக்க..

எண்ணங்கள் விம்மி வெடிக்க..

என் காதலே..ஏழு வருடங்கள் தாண்டி..

ஏதோ ஓர் தூர தேசத்தில்.. எனக்கருகே. நீ

உன் முகம்காண விரும்பியும்..

விளைவுகள் எண்ணி..இருக்கிப்

பிடித்த என் உயிர்த்துடிப்பும்..

நானும் உன்னருகில் இருந்தது...

உனக்குத்தெரியாது.. ஆனால்..

உன் குழந்தையை

தூக்கி முத்தமிட்டேன்.

உன் கணவனை

வாழ்த்தி அனுப்பிவிட்டேன்..

நானும் நீயும் நேசித்த

காதலை விதி தூக்கி எறிந்ததே..

என்று எனக்கு இப்போது

வருத்தமில்லை..

அழகான குழந்தை..

அன்பான வாழ்க்கை..

உனக்கு கிடைத்திருக்கிறது..

உன் பூப்போன்ற

இதயம் எங்கிருந்தாலும் வாழ்க..

வாழ்க வென

நீ வாழ்த்த

வாழ்த்து மழையில்

நான் நனைய

இணையா இதயத்தில்

மரணித்து போகா

காயங்கள்

மறைத்தே நான்

வாழ உன்னால்

மறத்துப் போனது

என் இதயமும்

கூட

கூடவெனத் தோர் வனத்

தோகைமயிலாடும் -மனத்

தாமரையிலேறு முகத்துள்

பாவனைகள் மாறும்...

கூடிக்கழித் திடவேயாண்

கோமகனும் வாடும்-பெடைக்

கோழியினாள் தொடத்

காதைவிலகி யோடும்..

கூடமறுத்த வளோடி விட

மனத்துவலியாளவன் -தன்

அகத்தினால்த் துவள..கூட

முன்னோடல் வலித்தது காண்.

Edited by vikadakavi

'காண்" என்று சொன்னான் விகடம்

கண்டுவிட்டேன் அவன் மனவலி அகரம்

மானவளின் மறுப்பில் ஊறி

மாய்ந்ததென்ன மானுடக்கவியே!

தேனென்று அந்நினைவை ஏந்து

தினந்தினம் தித்திக்கும் உணர்வாய்!

தீண்டலைக் காட்டிலும் இன்பம்

திரண்டிட காண்பாய் நண்பா! B)

நண்பா

நாற்று நட்டாய் அதில்

நயமும் கண்டாய்

சேற்றிலாடி நின்றாய் - இன்று

காற்றிலா தேசத்திலே

கவிதை பாடியுள்ளாய்

மாற்றம் என்ன ?

மாயம் என்ன ?

மாயம் என்னயார் கண்டார்..

மாற்றம் என்ன நான் கண்டேன்..?

அவரவர் இரகசியம்..

அவரவர்... மறைப்பார்..

மறைப்பதை தேடுதல்

மானிட வழக்கம்..

இருப்பதை அறிந்தபின்..

இருக்கையும்.. கசக்கும்..

படுக்கையும் கசக்கும்..

என்.. பா..வையும் கசக்கும்

Edited by vikadakavi

கச்கும்போதே இனிக்கும் வாலிபம்

கனியும்போது தொடரும் வாழ்க்கை

விதை வீழ்ந்தால்தான்

நாளை விருட்சம்

நீ வாழ்ந்தால்தான்

நாளை ஈழம்

நாளை ஈழம் மலரும்..

நம் இன்னல்கள்..

யாவும் மறையும்..

உலகம் யாவும் புகழும்..

தமிழ்த்தாயகப் பூமியில்

மழலைப் பூக்கள் சிரிக்கும்..

சிரிக்கும் மழலை கண்டு

சிந்தை குளிரும் நமக்கு

வெந்த உள்ளம் யாவும்

விண்மழை ஏந்தி குளிரும்

எப்போதும் தமிழோடு

எம் புலம் வாழவேண்டும்

தப்பாமல் நாமெல்லாம்

தலைவணை வணங்கவேண்டும்

தேசத்தின் குரலினை

தினம் ஓலித்து

தேசியம் நாம்

காத்து நிற்கவேண்டும்

காத்து நிற்க வேண்டும்

அதற்காய் ஆழக்காதல் செய்

உள்ளப் பூவை உறுதி ஆள

உயிர் பறவையில்

உன்னதம் வெளிக்கும்

தீயில் தகிக்கும்

தாயகம் காக்க

உலகதத்திசைகளில்

திரண்டது வலிமை

என்ற சொற்பதம்

மறவர் சேனைக்கு

மகுடம் ஏற்றும்.

விரைவு என்பது

உன்னிடம் என்னிடம்

உயிர்க்கும் எழுதுகோல்களில்

முனைகளில் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளது என் காதல் உன்னிடத்தே!

இருந்தும் மறைப்பது நியாயமா

அன்பே! கருத்தில்! ஒன்றாய்

இணைந்தோம்! உன் விழிகளின்

மொழிகளில் சிக்குண்டது

என் அத்தனை கவிதையும்!

அடி பெண்ணே! இன்னுமா?

நாணம்?!! ஏற்றுக்கொள்! இல்லை

எனில்!! காதல் ஊற்றிக் கொல்!.

கொல்லும் விடமாய் காதல்

கொல்லும் இதமாய்.....

அதை-வெல்லும் விதமாய் யாரும்

இப் புவியில் இல்லை உணர்வாய்..! :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உணர்வாய் எந்தன் காதலை ஒருநாள்

கணக்கும் எந்தன் உள்ளக் குமுறல்

கனதியில் வெறுமைதான் ஆனாலும்

வேதனையின் வலியோ அதிகம்தான்

அதிகம்தான்

பேசாமடந்தை உன்னிடத்தே..

நான் பேசியது அதிகம்தான்..

அதிகம்தான்..

முகம் ஏறிடா உன் முகத்தை

நான் பார்த்த நாழிகைகள்

அதிகம்தான்..

அதிகம்தான்..

எனக்காக நின்று பேசாத உனக்காக

நான் காத்திருந்த மணித்துளிகள்

அதிகம்தான்..

அதிகம்தான்..

எனக்காக ஒரு வரிப் பதிலெழுதாத

உனக்காக நான் எழுதிய கவிதைகள் அதிகம்தான்..

அதிகம்தான்..

எனக்காக ஒருதுளி கண்ணீர் சிந்தாத உனக்காக

என் குறிக்கோளிழந்தது அதிகம்தான்

அதிகம்தான்..

Edited by vikadakavi

தான் எனும்

தன்மை கூடி

மனிதம்

வீண் எனும்

எண்ணம் தோன்றுதம்மா!

வானென

விரிந்துகிடந்த

மனித மனம் - ஒரு

சாணென

சுருங்கியதும்

ஏனம்மா?

வாடிய பயிர்

கண்டபோதெல்லாம்

உருகிய வள்ளளார்

காட்டிய வழி

மறந்தான் தமிழன்

'யாதும் ஊரே

யாவரும் கேளீர்'

என்று உலக

சொந்தம் பேசியவன்

தமிழன்

எழுதியதெல்லாம்

ஏட்டிலே தூங்கிவிட

புழுதி படிந்த

மனங்களுடன்

நடக்கின்றான்

மனிதன்

வேறென்ன சொல்ல

அவன்

மரந்தான்!

மரந்தான் மனிதன்

அவன் மறந்தான் மனிதம்

புரிந்தான் தன்னிலையினை

புரிவான் பல சாதனைகளை

கருந்தோள் கொண்டவன் - அவன்

கருத்தால் வெல்பவன்

வெல்பவன் தூங்கவில்லை..

எம் வீரம் சோரவில்லை..

சத்தியம் செத்ததாய்..எங்கும்

வரலாறு வாழவில்லை..

கரிகாலன்..காத்திருப்பு..

எதிரியைக் கலங்கடிக்கும்..

ஊர்விட்டு வந்தாலும்..

எம்முறவே உரம் சேர்க்கும்..

உணர்வெல்லாம் ஊற்றி..

தலைமைக்கு பலம் சேர்ப்போம்..

ஒற்றுமையாய்.. தோழர்களே..

நம் மண்ணைக் காப்போம்.

காப்போம் தமிழ்மானம்

காத்தோம் தமிழ்வீரம்

கல்லறையில் உறங்கினாலும்

கலங்கடிப்போம் எதிரியினை

கோவணம் அவிழ்ந்தாலும்

கோமகன் மானம் காப்போம்

வீரர் படையடா நாம்

வீழமாட்டோம் !

வீழமாட்டோம்

அண்ணன் சொல்

மீறமாட்டோம்

காலனாவோம்

கரிகாலன்

ஆணையேற்று

சிங்களஞ் சேனை

முடித்து

வெற்றி வீரனாவோம்!

மங்களம்

பாடவேணும்

மற புலி வீரம்

காணவேணும்

அங்கிள்

அன்ரி எல்லாம்

கைசேருங்கோ

எம் தேசத்தின்

கங்குல் விடியும்

கோலம் பாருங்கோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கோ பாருங்கோ

தாய்மண் மீதே நடந்தேறிடும்

படுகொலைகள்

பாருங்ககோ பாருங்கோ

வாழும் புலத்தினில்

நித்தம் நித்தம்

நடந்தேறிடும்

கொலை வெறியாட்டங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறியாட்டங்கள் அடக்கவே வேங்கைகள்

வெகுண்டு எழும்!! தங்கள் மண் என்று

தாரால் எழுதினாலும் செந்தமிழ்மண்

அது சிங்களமாய் ஆகுமா?!!

சந்தனத்தில் மீது சேறா?!! பூக்கடைகள்

நாறடிக்க சாக்கடைத் தெளிப்பா?!

சுட்டெரிக்கும் சூரியனும் தூங்கி

விடலாம் சில நொடிகள்!! எட்டப்பர்

கூட்டத்தை விட்டு வைப்போமோ?!!

விண் எட்டும் எங்கள் வீரம்

கைதட்டும் கடலலைகள்! எங்கணுமே

தமிழ் மணக்கும்! வீரக்குருதியில்

எம் மண் வெளிக்கும்! விரைவினில்

எம் ஈழம் மலர்ந்தே சிரிக்கும்! பார்!.

Edited by Thamilthangai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.