Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் உந்தன் விழிகள்

யாருக்கும் தெரியாமலே

கார்காலமதில் அதிகாலையில்

யார்க்கும் தினமும் கவிவரிகள்

ஈர்க்கும் மனதை காந்தமாய்

வடிக்கும் சொற்கள் ஒரிரண்டு

நெருப்பாய் நெஞ்சை தீச் சுடும்

நீர்த்து பூக்கும் கண்ணீர்த்திவலைகள்

தர்க்கம் புரிவதற்கோ நேரமில்லை

மார்க்கம் இதுவென்றே மனதினில்

புரியும் சமாதானங்கள்

Edited by கறுப்பி

  • Replies 1.9k
  • Views 182.2k
  • Created
  • Last Reply

புரியும் சமாதானங்கள்

என்று

ஒதுங்கி நின்றோம்!

எரியும் நெருப்பில்

எண்ணை வார்ப்பதன்றி

எதுவும் புரியவில்லை

அந்த மடையருக்கு!

அரியும் புலியும்

மோதினால்

ஓட்டமிடும் அரியும்

தெரியும் நீல வானம்

அண்ணாந்து பார்

விரியும் வானவில்லில்

தெரியும் புலியின்

வரியும்!

சிரியும் ஐயா

சிரிசேன ஐயாக்களால்

சரிசமன் எமக்கு

என்றும் வராது

போலியாய் நெற்றியில்

பட்டையிடும் பக்தன் போல்

காவிப் பல் தெரிய

இவா்கள்

சமாதான வேதம்

ஓதுவது ஒன்றும்

புதிதி்ல்லை!

வேலியாய்

நாம் தான்

இருக்கவேணும் ஐயா!

ஆளிக் கடலலை

மேவி

விரியும் வானத்தில்

நீந்தி

வரிசையாய் புலிப்படை

நடத்தும்

அண்ணன் வீரத்தால்

பரிசாய் கிடைக்கும்

எமக்கு ஈழம்!

Edited by kavi_ruban

ஈழத்து மண்னே

சின்னச்சின்னஆசைகள்

கற்பனைக்குள்

ஆனால் நான் வாழ்த்த

ஊரோ அழிவிற்குள்...

சுடகாடாய் என்

உறவுகள் கல்லறைக்குள்

இடம்தெரியாமல் போக

கோழையாய் நினைவு

சுமந்து வாழ்கின்றேன்

வாழ்கின்றேன் என்று

தான் சொல்கிறாய்

நீயும்

உண்மையில் வாழ்தல்

என்றால் என்ன?

சூரியனுக்குப் பின்

எழுந்து

பல் துலக்கி

தேநீர் தயாரித்து

குடித்து முடிய

கணினியின்

உயிர் பொத்தான் அழுத்தி

இணையத்தில் கொஞ்சம்

நடந்து திரிந்து

நாலைந்து தொ(ல்)லை பேசி

நேரம் கரைத்து

மதியம் ஏதேனும்

சமைத்துப் புசித்து

குட்டித் தூக்கத்தில்

தேகக் களைப்பகற்றி

மீண்டும் கணினி,இணையம்

இரவுணவு என்று

அதே பழைய பல்லவி

பாடி

நீயும் சொல்கிறாய்

வாழ்கின்றேன் என்று!

என்ன இது

காலத்தின் கை பிடித்து

நடை பழகாமல்

என் விதி

இதுவென மண்வாரித் தூற்றி

சந்தோசம் தொலைக்கின்றாய்!

நான் சொன்னது

கேட்டாய்

சொல்லாத சேதி எல்லாம்

உய்த்தறிந்து

சொல்லாததும் புரிவாய்!

உலக இயக்கம்

இம்மியும் நிற்காது

விலகி நிற்பதால்

விந்தைகள் நடக்காது

விம்மி நீ அழுதால்

கையொன்று நீளவேண்டும்

உனை நோக்கியும்!

தொட்டுத் துடைக்க

கையொன்று நீளும்மெனின்

பொய்கை போல் நீர் கொண்டு

கண்கள் அழுவதில் கூட

சுகமுண்டு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகமுண்டு சோகத்திலும்

சொந்தங்கள் சேர்ந்திங்கே

சந்தோசமான நிகழ்வுகளில்

சங்கமிக்கும் பொழுதுகளில்

எல்லைமீறிய ஆனந்தம்

மனக்கதவை தட்டி

எட்டிப்பார்க்கையில்

சுகமுண்டு சுகமுண்டு

உச்சி மோந்து மகளை

அணைத்திடும் வேளையில்

சுகமுண்டு சுகமுண்டு

சுகமுன்டா?

கண்கள் அழுவதில்

கூட

அறியாது நிற்கின்றேன்

நீ கூற

புரியாத காயங்கள்

தெரித்தே வந்ததால்

அறியாத மனசு

தெரிந்தே தேட

தனிமை சிறையிலும்

சுங்கள் கண்டேன்

தெரியா வாழ்வை

தெரித்த வலியை

சுமப்பதால் என்ன

பயன் நீ சொல்?

Edited by கஜந்தி

நீ சொல் தாயே..

எங்கிருக்கிறாய்..

உன் நிழலில்..

சுகமுண்டு அம்மா..

எனைச் சோகமெல்லாம்

சூழ்ந்ததே.. தொலைவில்..

ஆரோரோ இல்லை ..

எவரெவராலோ தொல்லை..

அப்பாவிப்பிள்ளை..

படும்பாடெல்லாம் உன்னிடம்

நான் சொல்லவில்லை

உன்மடியில்

தூக்கத்திற்கு ஏங்கவில்லை..

இங்கே தூங்கவில்லை..

கொசுத்தொல்லை

கூட இல்லவே இல்லை

நிம்மதியும் இல்லை

பசி கேட்கும் வயிறு

பீஸாவைப் பேசாதுண்ணும்..

பசி மீண்டபின்

அம்மா கை உணவை எண்ணி

உள்ளம் ஏங்கும்..

அம்மா என்ற சொல்

உன்றுதான்.

அதில் இல்லாத

பொருள் இல்லை..

கனிவு இல்லை..

பரிவு இல்லை..

பாசம் இல்லை..

அம்மா நீ இல்லாமல்

எனக்கு உலகமே இல்லை

Edited by vikadakavi

உலகமே இல்லை

உலகை காட்டிய அம்மா

நீ அருகினில் இல்லை

ஆசைமொழி பழக்கி

அன்பை பாலால் புகட்டி

அறிவெல்லாம் திகட்டாமல்

தினம் ஊட்டி

பொத்தி பொத்தி எனை

வளர்த்தாய் - இங்கு

பொட்டலாய் என் வாழ்க்கை

உறக்கத்தை தேடுகின்றேன்

உறவைத் தேடுகின்றேன்

உணவையும் தேடுகின்றேன்

முடிவினில் விடையாய் நீதான்

தேசத்தின் இருளகலட்டும்

தேசிய விடுதலை கிட்டட்டும்

நானும் ஓர் நாள் ஈழம் வருவேன்

உன்தன் மடியில் தவழ்வேன்

இதுவரை இழந்த யாவற்றையும்

இறுதிவரை உன்னிடம் பெறுவேன்

பெறுவேனா?

அன்னையே உன்

பிரிவால் நான்

இழந்த நாட்கள்

காயத்தை எழுத

நீ செய்த தியாகங்கள்

என் வலியில் தெரிய

உன் விம்பம்

எனக்காய் வாழக்

கண்டு என்னை

நான் வெறுக்க

மீண்டும்

உன் மகளாய்

உன் அன்பை

பெறுவேனா?

இறுதிவரை....

இறுதிவரை

இறக்காமல்

இருவரும்

இன்பமாக

இன்றுபோல

இருப்போமா?

இருப்போமா

என்று கேட்டாய்

வெண்ணிலா...

கசக்குமா

கரும்பு தின்ன?

வெறுக்குமா

நிலா ஒளியில்

மேனி நனைய?

பலாச் சுளையில்

பதுங்கியிருக்கும்

இனிப்பாக

இனிக்குமே நம்

வாழ்க்கை!

எதுகைக்கு மோனை

தேடும் இவன்

கவிதையில்

கன அர்த்தம்

உள்ளதென்று

வெள்ளை நிலா

எண்ணுமாயின்

அரச மர நிழலில்

வீற்றிருக்கும் என்னப்பன்

விநாயகன் முன்

கற்பூரமணைத்து

சத்தியம் செய்வேன்

அப்படி எதுவுமில்லையென்று!

சொன்ன கதையெல்லாம்

நம்புவாயா நீ?

அம்புகள் விடும்

உன் விழி

என்று பல

அடுக்கடுக்காய்

கவிதையில்

புழுகுவேன் நான்!

ஒரு வித மயக்கத்தில்

எல்லாம்

கடந்து போகும்

வேறேதும்

எண்ணாதே நிலா

எழுத எழுத

வந்து விழும்

தமிழ் சொல் மயக்கத்தால்

வந்த வினை காண்!

தமிழ் சொல் மயக்கத்தில்

வந்த வினை காண்

பலர் வாழ்விலும்

சரித்த நிலையோ!!

கற்பனைகள் பல கண்டு

கனவுகள் சில கொண்டு

உன்னேடு நானிருக்க

ஏதுகை மோனைக்காய்

பக்கத்து பெண்ணவளை

கற்பனையாய் ரசித்து

பொல்லாப் பிள்ளையாரை

துணைக்கழைத்து

சத்தியம் செய்து

என்னை ஏமாற்றிய

பொய்யா கவியே..

கவிதையாய் நானிருக்க

என் காதல் தனை

மறந்து ஒரு நொடி

நீ போனதால்

உன்னை நான் மறந்து

போகின்றேன் பல நொடிகள்

பல நொடிகள்

மறந்து போனால்

என்னம்மா?

காதல் இலக்கியத்தில்

ஊடலுக்குமோர் இடம்

உள்ளதம்மா!

மோதல் கனிந்து

காதலாகிக் கசிந்துருகுதல்

காதலின் ஒர் நிலையம்மா!

ஆடல் கலையின் தலைவன்

சிவனும்

விழி மூன்றும் சிவந்து

சக்தியைக் கோபித்ததுவும்

பின் தணிந்த கோபம்

உடலில் சரிபாகம்

தந்ததம்மா!

விண்ணோடம் ஏறி

விரைந்தே நீ

போனாலும்

உன் மனசில்

சிறகடிக்குமே என்

நினைவுப் பறவை!

என் செய்வாயோ?

பாவம் நீ யம்மா!

பாவம் நீயம்மா

என பரிதாம்

தனைக்கொண்டு என்னேடு

அனுதாபம் வேண்டாம்

பல வேடங்கள்

தனைமாற்றி

சண்டைகள் போட்டு

என்னேடு சமாதானம்

கொள்ள வேண்டாம்

பார்வதி சிவன்

கதை பேசி என்னை

வம்பாய் இழுத்து

என் மனதைத் தேடவும்

வேண்டாம்

உன்னேடு நான் கொண்ட

கோபம் கொண்டது

தான்

தான் தோன்றியாய்

ஈஸ்வரன் தோன்ற

தானாட தன் தசையாடும்

மானாட வண்ணமயிலாடும்

கர்வத்தில் மிதந்த

கயவர் நாமடா !

நாமடா எல்லோர்

மனங்களும் ஆட

கானகத்து மயிலாட

புள்ளிமானோட

குயிலினம் பாட

மங்கையிவள்

மாட்டிக்கொண்டாள்

கனகத்தில்

தத்தித் தாவும்

குரங்கினம் சேட்டைகள்

செய்ய வேல் விழியாள்

பயத்தால் வாட

எங்கோயிருத்து

வந்தான் வேடன்

இவள் அருகில்

விழிமிரன்டு பயத்தால்

விலக கரம்பற்றி

காரணம் கூறாது

அழைத்து போகின்றான்

கானகத்திலிருந்து

எங்கே எனத்தெரியாது

தவிக்கின்றாள்

தவிக்கின்றாள் தமிழ்மங்கை அங்கே

தன்னுயிரான பதியினுடல் கண்டே

தறிகெட்ட எட்டப்பர் கொண்டே

தறிக்கின்றார் தமிழர்வாழ்வை இன்றே

தரம்கெட்ட அன்னியரின் பின்னே

தயைகேட்டுக் கிடக்கின்ற பதர்கள்

தலைசாயும் நாள்நல்ல நாளே

தமிழ்வாழ்வு சிறக்கின்ற நாளே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளே சிறக்கும்

நல்லன நடக்கும்

நலிந்திட்ட துயரங்கள்

நகர்ந்தே ஓடிடும்

நடைப்பிணங்கள்

நாங்கள் அல்ல

நாட்பொழுதில்

நாளொறு பொழுதாய்

நன்மதிப்பாய் உழைத்த

நூறு ரூபா நோட்டுக்களை

நம் தாய் நாட்டுக்காய்

நல்மனதுடன்

தருவதே நம் பணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணி செய்வது என் கடமை

மண் மீது கொண்ட காதல்

எண் மொழியோணைந்த பற்று

கண் போல் வளர்த்த அன்னை

கண்ணாய் இருப்பதால் மனதினை

வெண்மையாக்கும் செயலும்

தண்ணொளி வீச வைத்திடும்

தரணியில்

தரணியாள

பரணீ நான்

தனிமைதீர்க்க

துணைக்கு யார் ?

துணைக்கு யார் உளர்

தள்ளாடும் வயதிலும்

துன்பங்கள் பல சுமந்து

தனிமையில் வாழும் உனக்கு?

உனக்கு நான்

எனக்கு நீ

தள்ளாடும் வயதல்ல

பல்லோடும்

சொல்லோடும்

மல்லாடும் வயது

வயது ஒன்று ஆனபோது

வாரியணைத்தாய்

வயது பதினாறு ஆனபோது

வாஞ்சையோடணைத்தாய்

வயது அறுபத்தாறு ஆகும்போது

எப்படி அணைப்பாயோ?

எப்படி அணைப்பாயோ?

என்னவள் கேட்டாள்..

காளை இன்று நீ

என்னை யென்னை

சுற்றிச் சுற்றி

வந்தாய்....

காதலாலே மொழி

பேசிப் பேசி

என்னுயிரில்

பாதியாகிப் போனாய்..

கூடி வாழும் போது

கூடலென்றும்... ஊடலென்றும்

கொன்று ...கொன்று போட்டாய்...

இனி

கூன் விழுந்து

தலை நரைத்து

தடி பிடிக்கும் போதும்

அன்று போலும்

இன்று போலும்

என்றும் எனை யணைப்பாயோ...??

என்ன கேள்வி கேட்டாய்

பெண்ணே...

என்னைக் கேள்வி கேட்டாய்..!! :)

என்னைக் கேள்வி கேட்டாய்

கண்ணைப் பார்த்து

பதில் சொல்ல சொன்னாய்

பாவையிவள் தவித்தாள்

உன் கண்ணில் தெரிந்த

காதல்கனல் கண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.