Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு உம் கவி பிடிச்சிருக்கு

கவலை மறந்து பாடல் ரசிக்க பிடிச்சிருக்கு

மழலைகளுடன் மழலையாய் மாற பிடிச்சிருக்கு

மழையில் நனைய பிடிச்சிருக்கு

மலர்கள் அழகில் மயங்கிட பிடிச்சிருக்கு

கண்ணாடி வழி விற்பனை பிடிச்சிருக்கு

தினம் தினம் செய்திகள் வாசிக்க பிடிச்சிருக்கு

விகடமாய் எழுதும் கவிதை பிடிச்சிருக்கு

விதண்டாவாதம் பண்ண பிடிச்சிருக்கு

வீசும் காற்று புயலாய் தழுவிட பிடிச்சிருக்க

இத்தனை பிடித்திருந்தும்

என்னை தான் எனக்கு பிடிக்கவில்லை

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

இல்லை..

என்னை எனக்குப் பிடிக்குதே..

என்னோட முதல் இரசிகன்..

நானேதானே...

அடுத்தபிறவி என்றாலும்..

இதே உடல்..

இதே அம்மையப்பன்..

இதே சகோதரங்கள்..

இதே நண்பர்கள்..

இதே.. உலகம்...

எல்லாமும் வேண்டும்...

ஆனால் அப்போதாவது..

தமிழனுக்கென சொந்தமாய்..

ஒரு நாடு வேண்டும்..

ஒரு நாடு வேண்டும்

தமிழர் நாம் வாழ

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

ஒரு நாளேனும் வாழ

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

நமக்கென மட்டும்

ஒரு நாடு வேண்டும்!

ஒரு நாடு வேண்டும்

அது எப்போ கிடைக்கும்?

Edited by வெண்ணிலா

ஒரு நாடு வேண்டும்

அது எப்போது கிடைக்கும்?

வெளியில் வந்து

புன்னகைத்து

பொது மேடைகளில்

ஆசையாக இப்படிக்

கேட்பதால் கிடைக்குமா?

ஒன்று செய்யலாம்

ஊரெல்லாம் வலம் வரும்

வானத்து வெண்ணிலாவை

உளவு பார்க்கச்

சொல்லலாம்!

ஏதேனும் சேதி

கிட்டின்

கேட்டுச் சொல்லுங்கள்

கனக்க எழுத

ஆசை தான்

எனக்கும்...

நேர முட்கள்

எந்தன் கட்டைவிரல்

உரசி அடுத்த வேலையின்

அவசியம் உரைப்பதால்

மீண்டொரு கணம்

வருவேன்

மெதுவாகப் பேசலாம்!

மெதுவாக பேசலாம்

பதுமையே வா

பொது மைதானத்தில்

கை கோர்த்தபடி

மெல்லமாக நடந்து

செல்லமாக கொஞ்சி

கொஞ்சி

விளையாடலாம் தான்

அஞ்சி அஞ்சி

நீ போனால்

ஆவதெப்போது?

பஞ்சி பார்க்காது

பக்கத்தில் வாவேன்

கஞ்சி குடித்தபடி

கதைக்க

பல கதை உண்டு!

குஞ்சி பார்த்தால்

குடும்பத்திற்கே

தெரியவரும்...

ஆதலால் யாரும்

பார்க்காமல் என்னிடம்

வா நீ!

கை கோர்த்தபடி

பொது மைதானத்தில்

நடை பழக

எனக்கு விருப்பமில்லை

மெல்லிய இருட்டில்

நட்சத்திர வானம்

பார்த்தபடி

நடப்பதெனில் கொள்ளைப்

பிரியம்...

என்ன ஒன்று

கூடவே வெண்ணிலாவும்

வரும்...

வரும் வெண்ணிலா

தரும் வெளிச்சத்தில்

சேரும் இருவரையும்

யாரும் பார்த்தால்

என்ன நடக்கும் என்பதை

அன்ன நடை நடந்து என்

கன்ன்க் குழி ரசிச்சு உன்

சின்ன மனசினில் அசைபோடு

நடப்பது ஏது என நீ கூறின்

தடைகளை தாண்டி உடன்

வருவேன் உன் பக்கத்தில்

தருவாயா முத்தங்களை

முத்தங்களை நான்

தருவேன்

அர்த்தங்களை நீ

புரிவாயா?

வித்தகக் கவியிவன்

விண்ணாளாவும் தமிழோடு

விளையாடும் வெள்ளை நிலாவே

கொள்ளையழகும் சின்னவிதழும்

நான் சுவைப்பேன்

சிணுங்காமல் சிறைப்பட்டு

நீ கிடப்பாயா?

பாஷை பல பேசி

நேர முட்களை

சோம்பலோடு நோக்குவதென்ன?

ஆசை புரிய வைக்க

அன்பால் சிறை வைக்க

மீசை குற்றினாலும்

மிடுக்காக நான் தரும்

முத்தங்களே பல

பாஷை பேசுமடி!

பதிலாக நீ ஏதும்

பேசாதே...

சரியாகக் கணக்கிட்டு

முத்தங்கங்களைத்

திருப்பித் தருவாயா?

திருப்பித் தருவாயா

திருமகனே

பருவத்துடிப்பின்

இன்பமதை?

புள்ளி மானாய்

துள்ளி வருவேன்

கள்ளி நான்

உன் முன்னால்!

விண்ணிலாவின் ஒளியில்

மண்ணில் இருந்து நாம்

கண்கள் இறுக மூடி

நம்மை நாமே ரசிப்போமா?

ரசிப்போம்

மறப்போம்

சுவைப்போம்

துடிப்போம்

வா வா அன்பே வா

என்னருகே வா

உல்லாசமாக சிறகின்றி

பல்லக்கில் ஏறி

செல்லமாக கதைபேசி

நிலாவுக்கு செல்வோம்

நிலாவுக்கு செல்வோம்...

உலாவவல்ல..

நிலாக்குழிகள்..

நீர் சுரக்கவில்லையாம்..

பூமியில் நீர் வாங்கி

நிலாவில் ஒரு குடித்தனம்...

நீயும் நானும்..

நெடுநேரம் பேசிக்கொண்டு...

பசி கேட்கும் வேளை..

உனக்கு நானும்..

எனக்கு நீயும்....

தூக்கம் சேரும்.

என்மடி உனக்கும்..

உன்மடி எனக்கும்..

காலப்போக்கில்..

உன் முகமெனக்கும்..

என் முகமுனக்கும் சலிக்கும்..

..தெரியும்..

மெய் வலிக்கும்..

ஆனால்..

உணமை அதுதான்..

அன்று பூமி திரும்புவதைக் காட்டிலும்.

இன்றிலிருந்தே..

பெண்ணே..

யதார்த்தவாதிகளாய்..

அழகான இந்த பூமியிலேயே..

அன்பாக வாழ்வோமே.. :blink:

அன்பாக வாழ்வோமே

துன்பங்கள் மறந்து

இன்பங்கள் நிறைந்து

கண்களால் பேசி

கைகளால் அணைத்து

மெய்களை மூடி

யாருமேயில்லாத வேளை

இருவரும் தனித்திருந்து

வான்வெளியில் ஒலிக்கும்

நட்சத்திரத்தை பிழையின்றி

எண்ணுவோம் வா அன்பே

அன்பே என்றழைத்தது..

யாரோ..

ஆள் மாறி அழைத்தாயோ..

வெண்ணிலாவே..

உன்னொளியில் பால் வெளியில்

துள்ளித்திரிந்த காலம்..

நெஞ்சிலிக்கிறதோ...

..

நேசம் மறந்த நிலை

மாறிப் பேசத்துடிக்கிறதோ...

இருளில் மூழ்கி இருந்தவன்தான்..

வெண்ணிலா வெளிச்சத்தில் தெரிந்தவன்தான்..

இன்று

நான்.. அவனில்லை

புஜங்கள் திணவெடுத்து..

எரிவிழியில்..தணலெடுத்து..

வெறுப்புமிழ்ந்து..

வேறான.. இவன்..

நிலாவுக்கும் பொருந்தான்.

உலாவுக்கும்.. பொருந்தான்..

எரிமலை மேல் பூவுக்கு

ஏதடி மெத்தை..என்..

இளையவன்..

வருவான்.. காட்டங்கே வித்தை.. :blink:

வித்தை காட்ட

விருப்பப்பட்டே நானும்

இங்கே வந்தேன்!

மெத்தை மீது

தத்தை தவழ்கின்ற

காலம் எப்போது வரும்?

உலகுக்கு ஒளியூட்டும்

வானத்து நிலாவே...

மண்ணகத்தில் உலவுகின்ற

பெண்ணவளின் உள்ளத்தை

உளவு பார்த்துச் சொல்லாயோ?

களவு போனதெந்தன்

உள்ளம் மென்று

நிலவு நீயும்

சொல்லாயோ?

அழகு நிலா ஓடி வந்து

அருகில் அமர்ந்தால் போதும்...

பங்கயக் கன்னம் வருடி

என்கையில் முகத்தை ஏந்தி

இதழிலே எழுதுவேன்

பல கவிதை நான்!

எழுத எழுத

ஏதேதோ உளறுகிறேன்

கள்ளுண்டு மயங்கலாம்

கன்னியவள் இதழ் உண்டும் மயங்கலாம்

கன்னித் தமிழ் அறிய அறிய மயங்கலாம்

எதனால் நான் மயங்கினேன்?

ஏன் இப்படி உளறினேன்?

பெரியவர்(ன்) வந்து

என் சிந்தை

தெளிய வைப்பீர்(பான்) என்றெண்ணிப்

போகிறேன் - மீண்டும்

இங்கு ஏகுவேன்!

மிடுக்காகப்

பல கதை பேசுவேன்!

பல கதை பேசுவேன்

மண்ணோடு நான்

சில நிமிடம் என்னை

மூடாதே முகிலே

விண்ணில் இருக்கும்

வெண்ணிலாவின்

செல்லக் காதலன்

மண்ணில் இருக்கிறான்

அவனோடு சற்று

அன்போடு பேச

என்னை மூடாதே

கரும் முகிலே

வித்தைகள் காட்ட

மெத்தையருகே வந்து

நத்தை போல ஊரும்

தத்தை எனை வாரி

அணைக்க வரும் என்

அன்பானவனைக் காண

கண்திறந்து காத்திருக்கிறேன்

கருமுகிலே எனை மூடாதே

  • கருத்துக்கள உறவுகள்

கருமுகிலே எனை மூடாதே -- என

காவிறையும் காரிகையே

கருமுகில்தான் நினைத்தாலும்

கன்னியுன்னை மூடாதே!

கடுகி வரும் காற்று

கருமுகிலில் மோதிடும் போதே

கண்ணீராய்க் கொட்டிடுமே

காய்ந்த நிலம் களிகொள்ளுமே!

கன்னிநிலா முறுவலிக்க

கருங் குவளையும் ப+த்திடும்பார்.

பார் வேடிக்கை

வினோத..இவர்

நிகழ்ச்சி..

ஏட்டில் முதலெழுதும்... நாள்...

"அ"வும்.. "ஆ"வும்...

கடமை என...

ஏடு தொடக்கல்..

இன்று..நாடு விட்டு நாடு வந்து..

நம் தமிழ் வளருதென்று..

பெருமை எதற்கு...

யாரைக்கேட்டாலு..

தமிழ் எழுதத் தெரியவில்லை..

படிக்கதெரியவில்லை...

பேசத்தெரியவில்லை..

கடமை..

ஏடு தொடக்குதல் அல்ல..

தமிழை நம் பிள்ளையிடம் வளர்த்தல்..

செய்வாயா

புலத்தே வாழ் தமிழா...

தமிழா எனக்கொன்றும்

புரியவில்லையடா...

எங்கேயோ தொடங்கி

பேச்சை வேறு திசையில்

நகர்த்திப் போவதென்ன?

நிலாவொன்று முகம்

காட்டக் காத்திருக்க

நின்று ரசிக்கக் கூட

நேரமில்லையா?

ஒன்றுக்கு இரண்டு வேலை

ஓயாமல் "ஐ யாம் பிஸி"

சேர்த்துச் சேர்த்து

என்ன கண்டாய்?

பால் போல பல நிலா

இங்கே பவனி வருகையில்

கால் மேல் கால் போட்டு

கண்ணடிச்சு ரசிக்க வேண்டாமோ?

வேல் எறியும் விழிகளுக்கு

உன்னிதயம் காட்டவேண்டாமோ?

கீல்ஸ் போட்டு நடக்கும்

வெள்ளைக் காரி கதை விடு

பார்க்காமல் பார்கின்ற

நிலாவுக்காய் உயிரை விடு!

நிலாவுக்காக உயிரை விடு

உன்னைச் சரணடைவேன்

வெள்ளைக் காரி கதை மற

என்னையே தினமும் நினை

எங்கோ தொடங்கி

எங்கோ முடிவதுதானே

எங்கள் வாழ்க்கை

ஏங்காதே கண்ணா நீ

பால்போல நிலா தினம்

உலா வருவாள் இங்கு

கால் மேல் கால்போட்டு

வேல்விழிகளை ரசித்திடு

கலங்காதே தயங்காதே

கலங்கரை வெளிச்சமாய்

ஒளித்திடு மங்கலாகாதே

ஓயாமல் நீ வரவேண்டும்

படைப்போம் நாம் காவியம்

உடைப்போம் நம் தடைகளை

வந்திடு கவிதை பல படைத்திடு

வானத்து நிலாவை பிடித்திடு

நிலாவைப் பிடித்திடுவென்று

நிலாவே சொல்லும் போது

இன்னொரு

கலாவை நான் நினைப்பேனா?

கற்பனைத் தேரேறி

கவிதை கூட எதுமா என் பேனா!

பலாவை மொய்கின்ற

ஈயாவேன்...

மார்போடு உனை அணைத்து

உனக்கொரு தாயாவேன்!

இராவை இன்னும்

கொஞ்சம் நீளச்செய் - இந்தப்

புறாவை நான் இன்னும்

முத்தமிட!

நாம் காவியம்

படைக்கவேண்டாம் கண்ணே

நம் உறவு கண்டு

பலர் இங்கே கவிகளாவார்!

நாம் படைக்கின்ற காவியம்

உன் வயிற்றில் வளரப்போகும் ஓவியம்!

ஓயாமல் நான் வருவேன்

கலங்காதே கண்ணே

என் நெஞ்சில்

சாயாமல் சாய்ந்திடு

சல்லாபம் புரிந்திடு!

புரிந்திடு என்னை

பிரியாதே என்னவனே

ஓவியம் என்னில் வளர

காவியங்கள் நீ எழுது

சிரித்திடுவேன் உனைக்கண்டு

சிலிர்த்திடுவேன் எனை மறந்து

அணைப்பேன் கனவில் உனை

துணையாவாயா நனவில் நீ

நீ

எய்கின்ற கவிப் பூக்கள் நன்று

நிமிடத்தில் பல கவிதை

எனக்குள்ளே தோன்றதடி இன்று!

பூ

பூக்கின்ற மெல்லிய ஓசை

செடி அறிந்திடும்

பெண் மனசில் பூக்கின்ற

காதலின் பாஷை

அவள் கண்ணில் புரிந்திடும்!

விழியாலே அழைப்பாள்

விரதங்கள் உடைப்பாள்

மெளன மொழி பேசுவாள்

மயக்கத்தில் ஆழ்த்துவாள்

முதல் ஸ்பரிசத்தில்

இதயத்தில் சிறகு முளைக்கும்

அவள் அருகிருந்தால்

எல்லாமே அந்நியமாகும்!

காதல்

சொல்வது போல்

அழகானதல்ல - அது

அழகிய

அவஸ்தையானது!

அவஸ்தையானது உன் காதலா

அருவருப்பாகின்றேன் நான்

உன்னதமானது நம் காதல் என

உன்னை எண்ணி நானிருந்தேன்

காதலால் தவித்தேன் அன்று

காதலால் துடிக்கின்றேன் இன்று

காதலே எனக்கு வேண்டாம்

காதலே என்னை நீ நெருங்காதே

காதலை மறக்கின்றேன்

கவிதையை துறக்கின்றேன்

உன்னிடமிருந்து விலகுகிறேன்

உத்தமனே நீ நீடூழி வாழ்க

வாழ்கவென வாழ்த்தியென்னை

போகின்ற ஒளி நிலாவே...

மறக்கின்றேன் காதலையென்று

மற்றவர் அறியச் சொன்னாய்

துறக்கின்றேன் கவிதையையென்று

துறவறம் பேசி நின்றாய்

அவஸ்தையானது காதலென்று

நான் உரைத்தேன்

காதல் ஆகாதது என்று

எங்கேனும் நான் உரைத்தேனா?

'அழகிய' என்ற அடைமொழி

கவனிக்க கன்னியே...

சொல்லுகின்ற சொல்லுக்கு

நேர் பொருள் நோக்கின்

நேருகின்ற பெருந் தவறு

உன்னாலே அறிந்தேன்!

எழுதுகின்ற எழுத்துக்குள்

எழுதாத பொருள் ஒன்று

ஏங்கிக் தவிக்குமே

ஏனடி மறந்தாய்!

கட்டை விரல் மண் தேய்க

கடைக் கண் எனைப் பார்க்க

அறிந்தவர் சொல்வார்

இதற்குப் பெயர் காதலென்று

அறியாதவர் சொல்வார்

அவளுக்கு ஏதோ வியாதியென்று!

ஏதும் அறியாது

ஏங்கித் தவிக்கின்றாய்

போதும் விளையாட்டென்று

விலகிப் போகின்றாய்!

மண் மீது கொண்ட காதலை

வானத்து நிலா என்றேனும்

மறந்ததுண்டா...?

ஒளி தர மறுத்ததுண்டா?

கல் மனமடி பெண் மனம்

காட்சி புரியாவிட்டால்

கல் எறியும்!

புரிந்து விட்டால்

கற்கண்டு போல்

கசிந்துருகும்!

கசிந்துருகும் கன்னி மனம் கண்டு

நேசித்திடு என்னவனே

குடைகள் மோதியதால்

கடைவிழி பார்வையில்

உன்னில் விழுந்தவள் நான்

என்னை விட்டு போகாதே

அழகிய அவஸ்தையை

அவசரத்தில் மறந்தேன்

மீண்டும் வருகின்றேன்

மாண்டு போகாத காதலோடு

போகாதே நீ போகாதே

வந்தேன் நான் வந்தேன்

உனக்காகவே வந்தேன்

எனக்காக நீ போகாதே

போகாதே தள்ளிப்போகாதே

என் தேசம் விட்டுப்போகாதே

போர்மேகம் சூழுதடா

புலி வீரர் வெற்றிவாகை சூடுறாருடா

புகழ்பாடா வாடா நீயும்

புத்தம் சரணம் கச்சாமி

சத்தமில்லாமல் செத்தும்போச்சு

களமாடிய புலி எல்லாம் - இன்று

கரும்புலியாகி கொடியேற்றுதடா

விழியெல்லாம் நீர்சொரிய

தமிழன்னை வெற்றியள்ளித்தாறளடா

போகாதே தமிழா தள்ளிப்போகாதே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.