Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

கண்ணம்மா

கண்ணம்மா

வந்துயொரு

பதில்

சொல்லம்மா....

பெத்தெடுத்து

உன் பிள்ளையை

கொன்ற பாவி

யாரம்மா....???

சட்டம்

உன்னை

கேட்குதம்மா

சாட்சி நீயும்

சொல்லிடம்மா...

அச்சமது

ஏனம்மா

பெத்தவளே

உனக்கம்மா....???

பிள்ளையதை

இழந்தம்மா

பிரிவினிலே

நீயம்மா...

இருந்தும்

ஏனம்மா

சொல்ல

உன்னால்

முடியலயோ....???

கொன்றுவிட்டு

போனவங்க

உனை

மிரட்டிவிட்டு

போனதாம்மா...???

என்ன இது

கொடுமையம்மா

எங்கே போயு

சொல்வோமம்மா....???

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

சொல்வோமம்மா....

சமையலறைச் சுவர்களிடம்..

அவற்றின் சகிப்புத்தன்மையை

பாராட்டி சபாஸ் ஒன்று..-இப்

பெண்ணின் சங்கீதம்

சலிக்காமல் கேட்கிறதே..

கேட்கிறதே

கேட்கிறதே

ஜயோ தினம்

கேட்கிறதே...

எம்

தமிழர்

அவல குரல்

ஜயோ தினம்

கேட்கிறதே....

காலையில

வந்து

மரணம்

கதவையது

தட்டுறதே...

ஊரெல்லாம்

கூடி அங்கே

ஒப்பாரி

வைக்கிறதே...

நடைக்கையிலே

படுக்கையிலே

உண்ணையிலே

உலவையிலே

ஜயோ பாவி

எடுக்கிறானே

உயிரையது

பறிக்கிறானே....

புன்னகையை

இழந்து தேசம்

புலம்பி

அங்கு அழுகிறதே....

சுடுகாடாய்

எம் தேசம்

சுதந்திரம்

இழந்து கிடக்கிறதே...

தலைவிரி

கோலமதாய்

தமிழனமே

அலைகிறதே...

ஏய்

தமிழா

சொல்லிவிடு

என்று வரும்

எமக்கு விடியல்....???

விடியல்..எது விடியல்

கைதிக்கு விடுதலை விடியல்

பள்ளிக்கு விடுமுறை விடியல்

புள்ளிக்கு கோலம் விடியல்

பூவுக்கு மாலை விடியல்

ஆற்றுக்கு கடல் விடியல்

நிலவுக்கு பகல் விடியல்

உழைப்புக்கு ஓய்வு விடியல்

இழப்புக்கு ஆறுதல் விடியல்

மங்கையர்க்கு மணம் விடியல்

மானிடருக்கு மரணம் விடியல்

விடியல் வருமோ என்று

அன்னை முகம் தன்னை

பிஞ்சு கரங்களால் தட்டி

சின்னவள் கேட்ட போது

அகதி முகாம் இருட்டுக்குள்

விடியல் தேடி

விடியல் தேடி

விரைகிறோம்...

எங்கள்

விடுதலையை

கண்டிடவே

விரைகிறோம்...

வழியில் உள்ள

தடைகளையே

உடைக்கிறோம்..

நாங்கள்

விடுதலையை

கண்டிடவே

தகர்கிறோம்...

ஆண்டுகளாய்

ஆண்டுகளாய்

உழைக்கிறோம்..

அந்த

விடுதலையை

கண்டிடவே

துடிக்கிறோம்...

எத்தனையோ

வேங்கையரை

நாம்

இழந்தோம்...

இந்த

விடுதலைக்காய்

நாமவரை

தான்

கொடுத்தோம்....

எத்தனையோ

மக்களதை

நாம்

இழந்தோம்...

இந்த

விடுதலைக்காய

தானே அவரை

நாம்

கொடுத்தோம்...

இருந்தும்

இன்னும்

கிடைக்கலயே

ஏன்

விடுதலை....???

விடுதலை வேண்டிய..

ஆடைகள் எறிந்து..

இருட்டுக்கு..மெழுகு

தீபங்கள் ஏற்றி..

நொடிநொடியாய்...

உன்னை ரசிக்கிறேன்..

நுரையிரல்வரை வாசம்..

சுவாசிக்கிறேன்..

உன்னை நினைக்கும்போது

ஆசை அரும்புதே..

மோகம் பூப்பூக்குதே..

ஐந்துவிரலும் வந்து

அளந்ததால் தேகம்

அனலானதோ.அடிப்

பாதம் என்னிதழ்கள்..

படர்ந்ததால்..வெட்கிச்

சிவப்பானதோ..

உன்னை அணைக்கும்போது

இந்த தேகம்..

பஞ்சுப்பொதியானதே..

பஞ்சில் தீப்பொறிகள் பட்டு

பத்தியெரிகின்றதே..

பத்தியெரிகின்றதே

பத்தியெரிகின்றதே

பகை எறிந்த

கணைபட்டு

இல்லம்

பத்தியெரிகின்றதே....

செத்து மடிகிறதே

செத்து மடிகிறதே

உள்ளிருந்த

ஜீவனெல்லாம்

செத்து மடிகிறதே....

கருகிய

உடல் கண்டு

மனம்

கத்தியடிக்கிறதே...

குந்த

இடமின்றி

மனம்

குமிறி அழுகிறதே...

கோர பகை

செயல்கண்டு

மனம்

வெம்பி

வெடிக்கிறதே....

தினம்

தினம்

வந்தெம்

தலையில்

குண்டு

வெடிக்கிறதே...

பிஞ்சு

உறவெல்லாம்

இங்கு

பிய்ந்து கிடக்கிறதே...

துண்டங்களாய்

அவர் உடல்

பிண்டங்களாய்

பிய்ந்து கிடக்கிறதே...

ஜயோ

நிதம்

அதை

காணயிலே

நெஞ்சு வெடிக்கிறதே

என்

நெஞ்சு வெடிக்கிறதே....

வெடிக்கிறதே..காதல்மொட்டு..

கன்னியவள் பார்வை பட்டு..

அவளிதழ்களில் தேன் சொட்டு..

எனக்களித்தாள் வெட்கம் விட்டு..

வெண்டைவிரல் தொட்டு..

மார்பில் கோலமிட்டு..

மாயமான சிட்டு..

சிட்டு

உந்தன்

குரல் பட்டு

விழுந்தது

எத்தனை

பாட்டு....

லட்சங்கள்

லட்சங்கள்

மக்களின்

நெஞ்சத்தில்

போனதே

கஸ்ரம்

உந்தன்

குரலது பட்டு...

அன்றது

உந்தன்

பாட்டது

கேட்டு...

மறந்தேன்

என்னையே

நானன்று

விட்டு...

எத்தனை

ஆயிரம்

நெஞ்சத்தை

தொட்டு...

வாழந்தாயே

நீ தான்

எங்களின்

சிட்டு...

இன்றது

எங்களை

தவிக்கே

விட்டு...

எங்கய்யா

போனாய்

நீதான்

சிட்டு....???

சிட்டுக்குருவி இரண்டு

பூச்செடிகள் நடுவினிலே..

தத்தித் தாவிக்கொண்டு..

கூடிக்குலவிக்கொள்ள...

பார்த்த பாவி நான்

பக்கமாய்ச்சென்று..மெல்ல..

சிறை செய்யத் தவிக்கிறேன்.

தவிக்கிறேன்..

தாய் மடி...

தொலைத்தபின்னே..

உன் நினைவால்..

நாளும் நெருப்பில்..

நீந்திக் குளிக்கிறேன்..!

சுவாசத்தை கடன் தா,

உந்தன் சுவாசம்

நானாய் இருக்க...

சுந்தரனே...

அழகாய் ஒரு

ஆக்கிரமிப்பு செய்யவிடு...

உன்னுள் அழகான

இராட்சசி ஆகியே..

உன்னை நான்

ஆட்சி செய்யவிடு!

ஆட்சி செய்யவிடு

எம்மண்ணை நாமே..

ஆட்சி செய்யவிடு..

மாட்சிமை பொருந்திய

மறத்தமிழன் நாடாய்..

ஈழத்தை ஆகவிடு..

அன்புக்கும் பண்புக்கும்..

நம்நாடே.தாய்நாடு..

அந்த மேன்மைக்கு

தலை சாய்ந்துவிடு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாய்ந்து விடு என்றவுடன் சாய்கின்றபோதே

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்ற பாடல் பாடி

ஊஞ்சலில் வைத்து ஆட்டிய ஞாபகங்கள் இன்னும்

சாகாமல் சாஸ்வதமாய் நினைவினில் நீக்கமற

சயணித்திருக்கும் மனதினிலே

கறுப்பி நீங்க முந்திட்டிங்க இருந்தாலும் நான் எழுதினது :rolleyes:

சாய்ந்துவிடு சாவை

தத்தெடுத்த பூமியே நீ

கொஞசம் ஓய்ந்து விடு...

பசுக்களை கொன்றபின்

பாலுக்கு அழும்

நிலை ஆனதே- வாழ்வு!

சிசுகளை கூட கொல்கிறார்....

இனி சிரிப்பின் முகவரி- தேடி

அலைவதாய் போகுமோ

எம் வாழ்வு!!

கறுப்பி எழுதினதுக்கு

மனதிலே மனதிலே..

மனமே நீ..

மெளனம் கொள்..

கொஞ்சமுயிரிலே...

ஊஞ்சல்..

ஆகி ஆடாதே..

என் உணர்வுகளை..

கொன்று போடாதே.....!

போடாதே போட்டாதே

எனச்சொல்லியியும் பொடுவதில்

குறியாக சிங்கள காடயர்-அதனால்

மடிகின்றனர் அப்பாவி தமிழர்

தமிழர்

என்ற

மனித குலம்

செய்தென்ன

பாவமோ....???

தரனியெங்கும்

அகதியாக

அலைவதென்ன

கோரமோ....???

சிலுவையாக

இன்னல்களை

சுமப்பதென்ன

துயரமோ....???

குந்த ஒரு

நாடு இன்றி

குத்தகைக்கு

வேறு நாடேனோ..??

நின்மதியை

தொலைத்து

இன்று

நிர்கதியாய்

நிற்பதேனோ....???

சுதந்திரங்கள்

அற்று

இன்று

சுடுகாட்டில்

வாழ்வதேனோ....???

எம் தமிழர்

வாழ்வியலில்

வந்ததேனோ

இத் துயரமோ....???

துயரமோ..என்

பாதையில் முற்களாய்..

இந்தப் பட்டுவண்ணப்

பாதங்களை ரணப்படுத்தி..

திரும்பிடவும் வழியின்றி..

சேர்ந்திடவும் முடியாமல்..

வழித்துணைக்கு ஆள்தேடி..

வலிகள் மட்டும் எச்சமாய்..

வெயிலும்..மழையும்..

புயலும்..எரிமலையும்..

சுனாமி என்றுவேறு..

புதிதாய் இன்னுமொன்று..

ஏகப்பட்ட.. இயற்கைச் சீற்றஙகள்..

யார் செய்தது..

யாரைக்கேட்பது..

ஏனிந்த கோரங்கள்..

எவரிழைத்த பாவங்கள்..

என்றெல்லாம் நினைக்கமுன்னே..

கலவரங்கள் கண்ணெதிரே..

கண்ணிவெடி காலடியில்..

கைக்குழந்தை கையில் துப்பாக்கி..

மங்கையரும் மனிதவெடிகுண்டுகளாய்..

அணுகுண்டு ஆராய்ச்சியில்

நாடுகள் சாதனை.. குதூகலமாய்

கொண்டாட்டம்..குத்தாட்டம்..

உறவுகள்..எரிச்சலாய்..

நட்பு..தொல்லையாய்..

வாழ்க்கை சுமையாய்..

இதயங்கள் சாக்கடையாய்..

மனிதம் செத்துப்போன..

மாமிசங்கள் ஆட்சியிது...

ஆட்சியிது இரத்தக்காடேரிகளின் ஆட்சி

உலகமெங்கும் மனிதவோலம்

பணக்காரரின் யுத்தமிது

ஏழைகளின் அவலம்

ஈராக்கில் பலியெடுப்பு

தமிழீழதில் அறிவுரை

சிறீலங்காவில் ஆயுத பேரம்

உலக பொலிசின் கோரமிது

தன்னலம் காக்க பகடையாய்

அடக்கப்பட்டவர்கள்-

தன் பொருளாதாரம் காக்க

ஒடுக்கப்படவர்கள்

ஏனிந்த இரட்டை வேடம்

நீயும் அடக்கப்படவர்கள்தானே

நீயும் போராடினாய்தானே-எம்

மக்களின் கதறல் உனக்கு கேட்கவில்லையா??

கேட்கவில்லையா..

என்பது

கேள்விதானே..

கேள்வி கேட்டால்..

பதில் இங்கே..

மழுப்பல்தானே..

பேர் கேட்டால்..

ஓடுகிறார்..

வயதைக்கேட்டால்

சாடுகிறார்..

ஏனோ என் கேள்விகள்

தோல்விமுகம்

கண்டு..

விடைகாண முடியாமல்..

முடியாமல் தவிக்கின்ற உள்ளமே

முடிவில் பதில் கிடைத்துவிடும்

முயன்று பார் சிலந்தி போல

முடிவில் உனக்கு வெற்றிதான்

வெற்றி பெற்ற..நாளை

நான் மறந்து போவேன்..

தோல்வியின் சுவட்டை மட்டும்..

நெஞ்சிலே சுமப்பேன்..

வலி செய்து..வலி செய்து

புலியாக ஆவேன்..

வெறி கொண்டு வெறி கொண்டு..

விளையாட வருவேன்..

இளக்காரம்..ஏளனங்கள்

விருதாக்கொண்டேன்..

முயற்சிக்கு முழுதாக..

எனை வார்த்துக் கொண்டேன்..

சின்ன சின்ன தோல்விகளால்..

நம்மைச் செப்பனிட்டு..

சிறந்த வெற்றி பெறுவோம்..

பெறுவோம் தமிழுக்கு வெற்றி

புனைவோம் பரணி நாமும்

வலிகள் சுமைகள் இன்றி

பெற்றால் சுகந்திரம் இனிக்குமா?

இனிக்குமா??

நிச்சயமாக இனிக்கும்

இன்னொரு சிங்கபூராக

பொருளாதாரத்தில்

இன்னொரு இஸ்ரேலாக

பாதுகாப்பில்

இந்துசமுத்திரத்தின்

நித்திலத்தில்

தமிழ்ழீழ தேசம்

இனித்திடும்

கடல் சூழ் வளமும்

அயராத உழைப்பாளிகளும்

வளமான மண்ணும்

அருமையான கலாச்சாரமும்

எழில் கொஞ்சும் கடற்கறையும்

புதிதான எண்ணைவயலும்

என்ன வேறு வேண்டும் எமக்கு

இலக்கியா நிச்சயம் இனிக்கும்

இனிக்கும் இலக்கியா

இனித்திடுமா..மணவாழ்வு-அன்றிக்

கசக்குமா..சொல்லுங்கள்..

மெய்யுரைத்து...என்வாழ்வை-நீவீர்.

நல்வழிப்படுத்துக...

கட்டு..கட்டு என்று..

அன்னை விரட்டுகிறார்..

கட்டியவர் பலர்..

தப்பு..தப்பு என்றார்..

மெய்யுரைத்து...என்வாழ்வை-நீவீர்.

நல்வழிப்படுத்துக...

இனிக்குமா..மணவாழ்வு-அன்றிக்

கசக்குமா..சொல்லுங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.