Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் துடைத்தால் சாய்ந்திடுவேன் தோள்மீதினிலே

கண்களும் இமை மூடிடும் கனவுகளும் கரைபுரண்டோட

மண் மீது கொண்ட காதலும் மறைந்திட மன்னவனே உன்தோள்

இணைவு கண்டு தவித்து துடித்திருப்பேன் எந்நாளுமே

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

துடித்திருப்பேன் என்நாளுமே

தங்கையே உன் பிரிவினால்

தாயகம் காத்திட

தலைவன் வழி சென்றாய்

பயிற்சிகள்தனை முடித்து

மன்னார்க் களம் சென்றாய்

ஓய்வே இல்லாமல் எதிரியின் நகர்வை

அங்கு எதிர்த்து நீ நின்றாய்

உன் தோழர் தேழியருடன் பலமுறை

எதிரியை பந்தாடி புறமுதுகிட வைத்தாய்

முகமாலையில் முதல்நாள் மூக்குடைபட்டதற்கு

பழி தீர்க்க மன்னாருக்கு வந்த பகைவனை

உன் தோழியருடன் பந்தாடினாய்

வெறியுடன் வந்த பகைவனை வெற்றி கொண்டு - நீ

வழிமூடி வீரவரலாறாகிப் போனாய்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போனாய் நினைவுகளின் வலியையும் அதன் தழும்மையும் சேர்த்தே

மனசெல்லாம் முள்ளாய் ரணமாய் சிதைந்து வலிக்கிறதே

போகாமல் நான் இருந்தால் என் வாழ்க்கையின் பாதை தடுமாறாமல்

உன்விழி அசைவில் அதன் தண்நிழலில் வாழ்ந்திருப்பேனோ

வாழ்ந்திருப்பேனோ..

என்ற சந்தேகக்கணைகளை...

உனக்கான சாதகக்கணைகளாக.. நீ

மாற்றிக் கொள்ளக் கூடிய கைகாரிதான்...

ஆனால்..வெளுத்ததெல்லாம் பால்...

வெந்ததெல்லாம் பருப்பு என்று

நம்பும் வெள்ளை மனம் கொண்ட அப்பாவி

ஆண்கள் கரணம் தப்பினால் மரணம்...

காதலி கழட்டிவிட்டால் கருமாதி... மாறிப்

போன மண்டுகளாகவே வாழ்வதால்...

எல்லாம் முடிந்த பிறகு..கல்லறை வந்து

நீலிக்கண்ணீர் வடிக்கும்..பெண்களை

கட்டி வைத்திருக்கும் கர்வம்....

ஆட்டிப்படைக்கும் ஆணவம்...

கூட்டிக்கொண்டுபோகும்..கயமை...

பெண்..எப்படியோ வேற்றானுக்கு

பத்தினியாய்விடுவாள்..பாவம்..இ

விடுவான் இனி என்

பக்கம் வராது என்றெண்ணி

அண்ணாந்து நிலவு

நோக்கி

ஏதோ முணுமுணுத்து

ஏகாந்தம் தேடி

வீட்டுவாசல் மீது

அமர

அவன் நினைவன்றி

வேறேதும் தோன்றக் காணோம்!

பின் தொடர்ந்து

வருகையில் தேடாத

என்னுள்ளம்

இனி வராதே என்று

அவனை முறைத்த பின்

ரோசக் காரன் அவனும்

மறைந்துவிட்டான்

கண்களிலிருந்து!

அருகிலிருக்கும் போது

நினைக்காத என்னுள்ளம்

தொலைவில்

ஒரு புள்ளியான பின்

அருகில் வரானோ என்று

ஏங்கித் தவிக்கும்!

ஏங்கித் தவிக்கும்

மங்கையிவளை

வாஞ்சயோடு கட்டியணைக்க

விரைந்து வா அன்பே

இல்லையேல்

கங்கையில் மூழ்கி

உயிரை மாய்ப்பேன்

வருவாயா வருவாயா

வெண்ணிலவு மறையுமுன்

வெண்ணிலவு மறையுமுன்

தூக்கம் வரவேண்டி

கண்ணிரண்டு இறுக மூடி

ஜன்னலோரம் படுத்திருந்தேன்...

பலமுறை புரண்டுபடுத்தும்

வரவில்லை கண்ணுறக்கம்

கண்திறந்து ஜன்னலூடு

கண்கள் உலவவிட்டேன்...

பளிச்செனச் சிரித்தது

பால் நிலா...!

"உன் நிலா அருகில் இல்லாது

ஏதடா உனக்கு

கண்ணுறக்கம்..." என்று

கேட்பது போலிருந்தது

பால் வெளிச்சம்!

சிறிது நேரத்தில்

முகில் போர்வை

இழுத்துப் போர்த்தி

உறங்கப் போனது

வான் நிலா!

மீண்டும் புரண்டு

படுக்கிறேன் நான்...

நான் உன்னை தேடி

நீண்ட இரவுகள்

தனிமையில் தினமும்

தவிக்கையில் கூட

இதே வானிலாதான்

இதமாக என்னை

தாலாட்டி கண்ணயர்த்தி

தூங்க வைத்தது

உனக்கும் எனக்கும்

உறவாக இருக்கும்

இவ்வானிலாவை

இப்பெண்ணிலவுக்காக

விண்ணிலிருந்து

மண்ணுக்கு வர சொல்லாயோ

வெண்ணிலவோடு

கரம்கோர்த்து ஓடியாடி

விளையாட ஆசை எனக்கு

வெண்ணிலாவோடு கைகோர்த்து

விண்ணேறி உலாவரவேண்டும்

என் பெண்ணிலவோடு கைகோர்த்து

அந்த வெண்ணிலவையே வாங்கவேண்டும்

நினைக்கிற மனசு

நிஜமாக்க துடிக்கிறது

நிஜமாக்கத் துடிக்கிறது

மனசு!

பல பிரமாக்கள் கூடி

படைத்த பெண்ணவளை

என் புஜத்தோடு அணைத்து

புன்முறுவல் பூக்கும்

இதழில் இளைப்பாறி

இமை மூடி

அவள் மடியில்

படுத்துறங்கும்

நினைவு அத்தனையும்

நிஜமாக்கத் துடிக்கிறது

மனசு!

மனசு தறிகெட்டோடுது

மரத்துக்கு மரம் தாவிப்பாயுது

சொல்லத்துடித்தும்

சோகத்தால் மறுக்கிறது

மறைந்து மறைந்து

கருமுகிலினுள் கரைந்து போகின்றது

கரைந்து போகின்றது என் மனசு

விரைந்து சென்ற உனை நினைத்து

உதிர்ந்து நான் வீழுமுன்னே

உதயமாகிடு என்னவனே

உதயமாகி என்னுள்ளே

உறைவிடம்தான் தேடாயோ

கவிழ்ந்து நிற்கும் காதல் ஓடம்

கரையை தொட்டு நிற்காதோ

அறிந்திருந்தும் ஆழம்

விரும்பி வீழ்ந்துகொண்டேன்

எட்டித்தொடும் தூரம்

உன் பட்டுக்கரம நீட்டாயோ ?

உன் பட்டுக்கரம் நீட்டாயோ?

பயிலப் பல பாடம் உண்டு!

கண் எட்டும் தூரம் வரை

விண்ணோடு விளையாடும்

வெண்ணிலா அன்றி

வேறொரு காட்சியில்லை!

என்னோடு நீ இருந்தால்

எதிர் வரும் இடர் எல்லாம்

கால் தூசு!

கண்ணோடு கண் உரசும்

கவி மலரே

உனக்குள்ளே பதுங்கியிருக்கும்

சுகமெல்லாம் சுடரச் செய்வேன்

தொடத் தொட

பட படவெனப் பறக்கும்

பல பறவை

உள்ளிருந்து...

எழுந்து வா

என் எழிலே...

கொழுந்து ஆய்வது போல்

நோகாமல்

உன் சின்னிடை

நுடங்காமல்

அருந்துவேன் அழகத்தனையும்!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருந்துவேன் அழகத்தனையும்

அருகே நீ இருந்தால் தீரா தாகம் தீருமடி

சுவைப்பேன் உன் இதழமுதம்

என் தாகம் தீரும் வரை

அணைப்பேன் உன் இடைஅழகை

அது என் அணப்பில் நொறுங்கும் வ்ரை

மகிழ்வேன் அன்பே நீ என்னை நேசிப்பது

புரிந்தால் தருவாயா அத்தனையும்

அத்தனையும் இழந்தங்கு ஆதரவுக்காய் ஏங்கும்

சத்தின்றி நலிகின்ற என்னுறவே கலங்காதே!

எத்தனையோ துயரங்களை தாண்டிவந்த என்னுறவே

சித்தம்உறை நம்பிக்கையை நலியவிடல் ஆகாது!

தாயகத்தின் வேரினிலே தன்மானச் சுடரேற்றி

வெளிச்சத்துக்காய் காத்திருக்கும் என்னுறவே கலங்காதே!

காலம மாறும் காரிருள் அகலும்

விடியல் வந்து உன்பொருள் பகரும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகரும் காகங்களை பார் அதுபோல் மனிதன்

பகிர்ந்து வாழ்ந்திருந்தால் இப்புவியில் மானிட யுத்தம் இல்லை

பகிரமுடியாமனங்களும் மதிப்பில்லாமல் மனசு பகிராமல்

பகட்டுக்காக வாழும் வாழ்க்கையின் போலி

புரியாமல் வாழ்க்கை ஓடுகிறது

ஓடுகிறது நதி

சலனமேதுமின்றி...

யாரோ எறிந்த கல்

நதியில் எழுதியது

விளங்க முடியாப்

புதுக் கவிதை...!

படித்துப் பார்த்த

பாமரன் சொன்னான்

"அலை" அதுவென்று

உற்றுப் பார்த்து

கவிஞன் சொன்னான்

"நதி நடக்கின்ற

பாதச் சுவட்டை

எறிந்த கல்

காட்டிக் கொடுத்தது" என்று!

அருகில் வந்த

அறிவாளி சொன்னான்

"கவனிக்க சங்கதி பல உண்டு

வேறு திசை நோக்கி

நடக்க இந்த வையம்

சிறக்குமென்று..."

இவை ஏதுமறியாது

நதி ஓடுகிறது

சலனமின்றி!

சலனமின்றி என் மனசுக்குள்

வலம்வந்த இனியவனே

நலமா இன்று நீ?

காதல் கொண்டு கன்னியவள்

சாதலை சந்திக்கும்வரை

மோதல் இன்றி இரவுபகல்

கூடல்கொள்வாய் என்றிருந்தவேளை

ஊடல் வந்து எனைப் பிரிந்ததால்

வாடி வதங்குகின்றேன்

தாண்டி வா தடைகளை

வேண்டும் நீ எனக்கு

மீண்டும் எனைத்தேடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை தேடி வந்த என் வாழ்கை

மாற்றங்களில் நான் மட்டும் மாறவில்லை

மாறியது வாழ்க்கைமட்டும் தான் மனசு இல்லை

அதில் எப்போதும் உன் நினைவுகளும் அதன் வலிகளும் தான்

கனவுகளில் தான் இப்போ என் வாழ்க்கை போகிறது காவியமாய்

காவியமாய் என் காதல்...

ஓவியமாய் உன் உருவம்..

இதயச்சுவரில் ஈட்டிவிழி

ஆணி தட்டி மாட்டி வைத்தாய்

இருந்துமென்ன..

ஓவியம் மட்டும்..

உயிர் வாழ்கிறது.....

காவியம் காலங்களால் கரைந்து..

கண்ணீரில் நனைந்து

வாழ்க்கை புத்தகத்தி;ல்

கறை படிந்த பக்கங்களால்..

திருப்பி படிக்கமுடியாத...

சோகச்சுருக்கமாயே...

சோகச் சுருக்கமாயே

நினைவுகளும் கனவுகளாய்

மாறாத தளும்புகளாய்

சொறியும்போதெல்லாம்

ஆனந்தமும்...

பின் வலிகளுமாய்...

கால வளர்ச்சியில்

உடலின் மாற்றத்தில்

குழந்தை உருவையும்

விடலை வடிவையும்

படத்தில் பார்த்து

தொலைத்த ஏக்கமாய்...

கால வளர்ச்சியில்

சூழலின் மாற்றத்தில்

பிறந்த மண்ணையும்

திரிந்த ஊர்களையும்

மனதில் நினைத்து

தொலைத்த ஏக்கமாய்...

சுகித்த வசந்தங்கள்

சுருங்கிய கோலத்தில்

நெருக்கும் சுமைகள்

நிலத்துள் அழுத்துமோ

நினைவுப் பயத்தில்

துடித்தெழுந்த போதெல்லாம்

தேறுதலாக தாயகத்தில் மறவர்!

ஆறுதலாக உடலுக்குள் இறைவன்!!

  • 2 weeks later...

இறைவன் இசைத்தான்

நான் ஆடினேன்

இசைத்த இறைவனையும்

மறந்தேன்..

கேட்டேன்

யாரவன் என்று?? :)

அப்ப நான் வரட்டா!!

யாரவன் என்று

ஆழந்த உறக்கத்தில்

இருந்த வேளை வந்த

தொலைபேசி அழைப்பில்

கேட்ட போது

கண்டுபிடி கண்டுபிடி என

கண்ணாமூச்சி ஆடியதை

இன்றுவரை மறக்க முடியலை

மறக்க முடியவில்லை

அந்த நாட்களை..

மறக்கும் நாட்களும்

இல்லை

அந்த

நாட்கள்..

ஆனால் மறக்க

நினைக்கிறேன்

மனதால்..

முடியவில்லை.. :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.