Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

ஆற்றுவேன் நான்

ஆறுதல் சொல்லி

தேற்றுவேன் என்

தோளோடு சாய்த்து

காதலில் தோல்வியுற்ற

காளையே நீ

கவலைப்படாதே

நண்பியாக என்றும்

நான் உன்னுடன் :P

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

உன்னுடன்..என்னுயிர்

சங்கமம்..என்றவள்..

நீயென்றால் நானென்று

அனுதினம் சொன்னவள்..

காதலில் உருகி உருகி..

என்னுள் ஆசையாய் விதைந்தவள்...

இதயத்தில் நூறடி பள்ளம்

தோண்டித் தன்னையே.. புதைத்தவள்..

பார்வையில் மின்னல் தந்து..

தொடுகையில் தூரல் தந்து..

முத்த்தில் முழக்கமிட்டு..

சித்தமெல்லாம் நிறைத்தவள்..

என்னவன் என்னவன் என்று..

ஆளில்லாக் கடற்கரையில்..

உரக்க கூவியவள்..

படகுமறைவில்..பக்கமிழுத்து

உயிரை உறிஞ்சியவள்..

போய்வா..என்றென்னை

அனுப்பிவைத்தவள்...

தொடர்பறுத்து என்னை

துடிக்க வைத்தவள்

பித்தனாக்கி என்னை

அலைய வைத்தவள்..

இன்னொருவன் மனைவியாக

இன்று அவள்..

உத்தமி என் காதலி..

அவள்என்

பக்கத்தில்

வந்தும் எனைப் பார்க்காமல்

வாழ்கிறாள்..-நான்

பேசாமல் போகிறேன்..

அவன் மனைவி

மிகவும் நல்லவள்..

நல்லவள் எவளோ

நீ அவளை நேசி

யாரவள் என தேடி

நீ அவளை யாசி

அன்பாக பேசி :lol:

பேசிப் பேசியே..பல.

கோடிப்பேர்களின்

நாக்கு வறலினும்..எம்

தமிழ் வார்த்தைக்

களஞ்சியம்

வற்றுவதேயில்லை..

வற்றுவதேயில்லை

உனை நினைத்து

நான் வடித்த கண்ணீர்

வற்றியதேயில்லை

காய்ந்ததில்லை

நான் வடித்த கண்ணீர்

கன்னங்களில் இன்றுவரை

காய்ந்ததேயில்லை

காய்ந்ததேயில்லை..

என் மண்ணில்

குருதியின்

ஈரங்கள்

காய்ந்ததேயில்லை..

விழுவதேயில்லை..

என் மண்ணில்

சந்தோசக்கீற்று

விழுவதேயில்லை..

வரவேயில்லை

என் மண்ணுக்கு

விடுதலை காற்று

வரவேயில்லை..

வரவேயில்லை இன்றுவரை

வைகாசியில் நீ அனுப்பிய மடல்

பார்த்து பார்த்து கண்கள்

பூத்திருந்தேன் நேற்றுவரை

ஆதலால் தான் நானே

அழியாத காதலுடன்

உனைத் தேடி ஓடி வந்தேன்

வா இதயமே எனை ஆதரி

ஆதரி..

ஆதரவில்லாத..

அன்பைத் தேடுகின்ற.

சின்னச்சின்ன குழந்தைகளை..

கணவன்..மனைவி

இருவரும்..இணைந்தே..

இயன்றவரை....

இறுதிவரை..

இறுதிவரை உன்

இலட்சியத்துக்காக

இனிய நண்பி நான்

இறுதிவரை கைகொடுப்பேன்

இலட்சியபாதை நோக்கி

இன்றே நடக்க ஆரம்பி..

ஆரம்பி ஆனந்தகூத்து-அட

போதாது போதைகள் ஏத்து..

என்று பீர்பீரா ஏத்தி

நான் தூங்காம நேத்து..

குத்தாட்டம் கும்மாளம்..போட்டேன்..

வானத்தில் ஜிவ்வுன்னு போனேன்..

ஆப்பிள்போல் பொண்ணு...

அழகான கண்ணு..

அசைந்தாட சுதியேறிப்போச்சு..

அவக்காக..பை காலியாச்சு..

அது போனாப் போது..அவ

அழகான மாது..என்னை..

எங்கெங்கோ அவ கூட்டிப்போனா..-அட

என்னாட்டம் ஆட்டம்..

எவ்வளவு கூட்டம்..

வெறியோடு தெருவில்

விழுந்தாலும்..நாளை..

மீண்டும் நான்

கடன் வாங்கவேணும்..புதுசு

புதுசா பொண்ணோட

நான் ஆடவேணும்..

பட்டாலும் நானே..

பரதேசிதானே..

கெட்டாலும்..செத்தாலும்

ராஜா..புத்தி

சொல்லாதே..

எவன் கேட்கப்போறான்..

கொஞ்சந்தான் வாழ்க்கை..

சந்தோசச் சேர்க்கை..

ஐயோ எனக்கு இந்த

எஜ்.ஐ.வி யார் தந்தா..

எங்கேன்னு கேட்க

கேட்க கேட்க

தேனாக இனிக்கும்

உன் குரல்

பார்க்க பார்க்க

பரவசம் ஊட்டும்

உன் அழகு

கேட்கவோ பார்க்கவோ

பேதை நான்

உன்னருகில் இல்லையே

இருப்பினும் உனக்காகவே

இன்றுவரை காத்திருக்கிறேன்

உன்குரல் கேட்கவும்

உன்னழகை பார்க்கவும்

ஒடோடி வா என்னருகே

என்னருகே..

அழுக்கு சாக்கு..

கந்தல் துணிகள்..

துர்நாற்றம் வீசும்

சாக்கடை..

என்னைப் பார்..

அழுக்கேறிய..

பரட்டைத்தலைமுடி..

காவிப்பற்கள்..

கண்ணின் கீழ்

கருவளையம்..

கிழிந்த வேட்டி

பழுப்புவண்ணத்தில்..

புரிந்து கொண்டிருப்பாய்..

நான்

அங்கீகரிக்கப்பட்ட

பிச்சைக்காரனென்று..

இருந்தும்..இரண்டு

நாள்..பசி பொறுத்த

என்னையே பார்த்து..

எதை யாசிக்கிறாய்..

நன்றியுள்ளதென்று..

மூன்றாவது...வீட்டில்..

மூக்குமுட்டத்தருவார்கள்

போய் சாப்பிடு..

என்ன யோசிக்கிறாய்

என்னைப் பற்றியா..

வாழ்நாள்வரை..

உழைத்துக் காத்த..

மனைவி மக்களுக்கே..

இல்லாத அக்கறை

உனக்கெதற்கு..

உனக்கெதற்கு என்மேல் அக்கறை

என் உணர்வுகளை புரியாமல்

என் காதலைப் புரியாத முட்டாளே

உனக்கெதற்கு வீணான அக்கறை

என் உணர்வுகளை கொன்றாய்

உன் மீதுள்ள உரிமையை

உடனே பறித்தாய்

உன் நிழலை கூட காணது

உருகிப்போகும் என் வேதனை

உனக்கு தெரியுமா?

உனக்குத் தெரியுமா..

நிலம்

நீர்

தீ

காற்று

ஆகாயம்..

இவை

அனைத்திடமுமே..

என் காதலை..

சொல்லியிருக்கிறேன்..

என்

மௌனத்திற்காய் நீ

யோசிக்கிறாய்..

என் யோசனை

எல்லாம்..

நான் வேறொருத்தியை

காதலித்ததை

அவை வந்து

உன்னிடத்தில்

சொன்னால்..

நீ

தாங்கிக் கொள்வாயா

என்பதுதான்..

உனக்கு தெரியுமா....???

அன்பே

தேடி வந்து

என்னையன்று

காதலித்தாய்...

இன்று

தேவை

இல்லை

என்றேன்

என்னை

வீசி

எறிந்தாய்....??

நெஞ்சு

முட்ட

வேதனைகள்

ஏன்

அழித்தாய்....???

நான்

கண்ணீர்

சிந்தி

கதறியழ

ஏனோ

வைத்தாய்....???

உத்தரவு

இன்றி வந்து

உள்

நுழைந்தாய்...

இன்று

குந்தியிருந்த

இதய வீட்டை

ஏன்

இடித்தாய்....??

இத்தனை

இன்னல்களை

ஏன்

அழித்தாய்....???

உன்னை

மறக்க முடியா

என் மனசு

துடிக்குதடி....

வேதனையால்

துடி துடித்து

கதறுதடி...

அடி

நான் படும்

வேதனைகள்

உனக்கு தெரியுமா....???

தாங்கி கொள்வாயா

இத்தனை

சுமையை

நீ பாவம்.....

யார்

எனக்கு

உதவுவார்....???

ஊரிழந்து

உறவிழந்து

வீதியிலே

அநததையாய்

நீ....

பாவம்

என்

செய்வாய்....

நாளுக்கு

அரை கூலி

நாள்தோறும்

நீ வேண்டி...

பசிபோக்கி

பாவம்

வீதியலே

உறங்குகிறாய்...

கொட்டு

மழையிலும்

கொடிய

குளிரிலும்

நடு நடுங்கியபடி....

தூக்கம்

தொலைத்து

உனக்குள்

அழுகிறாய்....

குந்த

இடமில்லை

கலவியாட

உறவில்லை....

பள்ளி போக

வில்லை

படிப்பறிவில்

நீ

தேறவில்லை...

நல்ல துணி

மணிகள்

நல்தோறும்

காணவில்லை...

கஞ்சல்

உடையுடனே

உன்

காலங்கள்

கழிகிறதே....

அதை

எண்ணி

எண்ணி

பார்க்கையிலே

என் மனசு

நோகிறது....

என்

செய';வாய்

நீ....???

நீதானே

அநாதை....!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநாதை என்று யாரும் இந்த

அவணியில் இல்லை

ஆதரவற்றோரை அன்புடன்

அணைத்திட அன்பு நெஞ்சம் இங்கே

அலைபோல துடித்திருக்க

ஆறாத மனதுடன்

அஞ்சாதவாசம் எதற்கு

வந்திடுவீர் கவி பல படைத்திடுவீர்

படைத்திடுவீர்

படைத்திடுவீர்

கவி கவியாய்

படைத்திடுவீர்....

கண்ட காட்சி

அத்தனையும்

கவி கவியாய்

படைத்திடுவீர்...

உள்ளமதில்

கிடந்தவற்றை

உணர்வாக்கி

படைத்திடுவீர்...

படிக்கையிலே

விழியிலது

கண்ணீரதை

கொட்ட

வைப்பீர்....

கண் முன்னே

நடந்தது போல்

கவியாலே

விளக்கிடுவீர்...

எம்

உள்ளத்து

உணர்வுகளை

நீரும்

இன்று

உசுப்பிடுவீர்...

இத்தனையும்

கண்டு பொறுக்கா

சிலதுயிங்கு

கலைக்கிறதே...

பெண்ணவளை

இழித்துயிங்கு

தன்னை

பெருமையாக

எண்கிறதே...

தன்னை

கவிதையில

மன்னன்

என்று

கதைகள் வேறு

விடுகிறதே...

பெண்ணவளின்

கவிதைகளை

ஒப்பாரி

என்கிறதே...

இத்தனையும்

கேட்டு

பெண்ணே

ஏன்

சும்மாக

நிக்கிறாயோ....???

சும்மா நின்றென்ன?

சுமந்து கொண்டு நின்றென்ன?

அம்மாமார் துடிந்தெழுந்து

ஆக்கினைகள் செய்வதெப்போ?

கண்ணான தாயகமே..

காயமுறல் கண்டிருந்தும்

பெண்ணான பதுமையெல்லாம்

பூகம்பம் ஆவதெப்போ?

பூகம்பம் ஆவதெப்போ?

பெண்

புதுமைகள்

செய்வதெப்போ....???

அடிமை

விலங்கதனை

பெண்ணே

நீ

அறுத்தெறிவதெப்போ....???

கலங்கிய

விழிகளது

கண்ணீரை

துடைப்பதெப்போ....???

அடிப்படியை

விட்டு

நீ

அகிலத்தை

பார்ப்பதெப்போ....???

உன்

அறிவால்

நீ

உலகத்தை

ஆழ்வதெப்போ....???

தன் மாணம்

உள்ளவளாய்

தரணியில்

நீ

எழுவதெப்போ....???

அடி

கண் முன்னே

உன்னை

உமிழ்கிறான்

நீ

கை கட்டி

நிற்பதுவோ....???

உன்

முந்தானை

விலக்கியவன்

முதுகு

சொறிகிறான்...

அடி

பெண்ணே

இன்னும்

என்ன

பார்த்திங்கு

நிற்கிறாய்....???

நிற்கிறாய் நீ

மரம் போல்..

நெடுநேரம்..-நெஞ்சம்

தாங்குமா..

தோழி

வகுப்புக்கு

தாமதமாய்

நீ

வந்தே..

இருந்தாலும்..

சொட்டைத்தலை..சுப்பையா..

உன்னை நிற்க வைத்து

விட்டானே..பெண்ணே..

அழுகிறாய்..அடி விழுந்த

கையை உதறி..

நீ

வீட்டுப்பாடம்

செய்யாமலே..

விட்டிருந்தாலும்..

காவிப்பல் காசிலிங்கம்

பிரம்பெடுத்து

உன்னை அடித்துவிட்டானே..

கலங்குகிறாய்..திட்டு

பல விழுந்ததென்று..

நீ

பாடத்ததை கவனிக்காமல்

விட்டேயிருந்தாலும்..

பூசணிக்காய் பூரணி..

உன்னை எப்படி

திட்டலாம்..

உன் வேதனைகளை நூறு

மடங்கு நானும்

சுமக்கிறேனடி..

ஏனென்றால்..

நேற்று உன்னிடம்..

நான் காதல்

சொன்னதால்தானே..

இவ்வளவும்... நேர்ந்தது..

நிற்கிறாய்...

நாளுக்கு நாலு பேர்

நாய்போல் கொல்லப்பட

நீயோ இங்கு

நான்காமவன் போல்

நாவடக்கி நிற்கிறாய்!

எழுதுகோல்களில் மட்டுமே

நரம்பை பொருத்திவிட்டு

உடம்பில் உணர்ச்சியற்றுக் கிடக்கின்றாய்.

உன் உறவுகளை எரித்த தீயில்

நீ இறைச்சி வாட்டித் தின்கிறாய்.

அவர்கள் விழிநீரில் நீ

குளிர்பானம் செய்து குடிக்கிறாய்.

குருதியைப் பருகி

போதையேற்றுகிறாய்.

உன்னை வர்ணிக்க இவைதவிர

என்னிடம் வேறு உவமைகள் இல்லை.

ஆம்

மனிதன் மிருகத்திலிருந்தும்

வேறுபட்டவன் என்

ஆன்றோர் சொன்னது உண்மைதான்.

எந்த மிருகமும் தன்னினம் அழிவதைக்கண்டும்

சடமாய் இருப்பதில்லை.

காதலென்பாய்

கனவு என்பாய்

கண்களை மூடிகொண்டும்

விட்டில் பூச்சியாய்

விளக்கில் விழுந்து

நாளும் மடிவாய்!

இடிந்த சுவராய்

மனம் ஆகும்போதும்

கொட்டுது பனிமழை

என்பாய்!

பொய் சொல்ல

உனக்கு கற்று கொடுத்ததே

காதல் -அது...

மெய் தடுமாற்றமே....

அந்த வித்தையென்று

என்றேனும் உனக்கு

உறைக்க தலையில்

குட்டி சொல்லியிருக்கா? :lol:

:lol: ஆஹா சுஜீந்தன் முந்திட்டிங்களா?

என்றேனும் ஒரு நாள்..

உனைக் காண்பேன்..

என்று..

ஏக்கங்கள் சேர்த்து

வைத்தேன்..

ஆனால்..

ஏக்கத்தின் தேக்கத்தில்

இடியாய்..

விழுந்தது..உன் திருமண..

அழைப்பிதழ்...

எங்கிருந்தாலும் வாழ்க..

(வேற வழி...)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தாலும் வாழ்க

ஏற்றமாய் வாழ்ந்திடுக

என்றே தேவதாஸ் தாடியுடன்

வாயிலே புகையுடன்

கையில சிகரட்டுடன் நீ தினமும்

குடியும் கும்மாளமுமாய்

கூத்தடிப்பதை எந்த

கணக்கில் வைப்பது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.