Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. அறிக்கை தாமதம்; அரசின் வெற்றியே! மைத்திரிபால பெருமிதம்

Featured Replies

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த அறிக்கை ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை புதிய அரசு பெற்றுக்கொண்ட பெரும் வெற்றியாகும் என்று கூறியுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.  

 

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தனக்கு எந்தவிதமான உடன் படிக்கையும் இல்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிக நீண்ட ஆயுள் காலத்துக்காக கசப்பான உண்மைகளைப் பேசவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   கட்டுநாயக்காவில் நடைபெற்ற இரண்டு நாள் செயலமர்வில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

  "ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை விவகாரம் குறித்த அறிக்கை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளமை புதிய அரசு பெற்றுக்கொண்ட பெரியதொரு வெற்றியாகும்.    புதிய அரசின் அர்ப்பணிப்பு உள்ளக பொறி முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்களால் சர்வதேசம் இந்த நம்பிக்கையை வைத்துள்ளது. அதன்மூலம் புதிய அரசின் கோரிக்கைக்கு சர்வதேசம் செவிசாய்த்துள்ளது.'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  "ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்தவிதமான உடன்படிக்கையும் இல்லை. யதார்த்த பூர்வமான விடயங்கள் எப்போதும் இனிமையாக இருக்காது. ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிக நீண்ட ஆயுள் காலத்துக்காக கசப்பான உண்மைகளை பேசவேண்டியுள்ளது.    சுதந்திரக் கட்சியில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே அந்த மாற்றத்துக்கு ஏற்ப செயற்படாவிடின் சுதந்திரக் கட்சி எதிர்வரும் 10 முதல் 15 வருடங்களுக்கு எதிர்க்கட்சியில் இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

 

 http://onlineuthayan.com/News_More.php?id=654863889925335135#sthash.x7MfOavj.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின்.. இந்தப் பெருமிதம் பற்றி தாயக மக்களின் நிலைப்பாடு..

 

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் வெற்றிக்குக் காரணமானவர்களே ஐநாவின் அறிக்கையை உடன் வெளியிடுமாறு போராடுகிறார்கள்.ஆனால் மைத்திரியோ அதனை ஒத்திவைத்தது தங்கள் சாதனை என்று பெருமித்த்துடன் கொள்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் வெற்றிக்குக் காரணமானவர்களே ஐநாவின் அறிக்கையை உடன் வெளியிடுமாறு போராடுகிறார்கள்.ஆனால் மைத்திரியோ அதனை ஒத்திவைத்தது தங்கள் சாதனை என்று பெருமித்த்துடன் கொள்கிறார்.

 

மைத்திரியை  மாற்றியவர்கள்

எதற்கு என்பதில் தெளிவாகவே உள்ளனர்

அதைத்தாம் சொல்லித்தான் மக்கள் செய்தார்கள் என்பவர்கள் தான் வழமைபோல

குழப்பத்தில் உள்ளனர்

ஒரு வேளை மக்களின் முடிவுகளை இவர்கள் அறியாததால் இருக்கலாம்

ஊரில் சொல்வார்கள்

ஆட்காட்டி குருவி

காலை மேலே பிடித்தபடி நித்திரை கொள்ளுமாம்

விடிய எழும்பி ஊருக்கெல்லாம  சொல்லுமாம்

நான் இரவு முழுவதும் வானத்தை எனது கால்களால் பிடித்திருக்காவிட்டால்

நீங்கள் இன்று உயிருடன் இருப்பீர்களா என்று...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஐ.நா. அறிக்கை தாமதம்; அரசின் வெற்றியே! மைத்திரிபால பெருமிதம்...

 

சிங்களவன்  தன்ரை சுயகுணத்தை காட்டுறான் எண்டதுக்கு இதைவிட என்ன ஆதாரம் வேணும்? 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சந்திரிக்காவையே நம்புறன்.. இது மைத்திரியின் ரணிலின் சவடால்களுக்கு பிறகும்.. சம்பந்தன் சொல்லக் கூடியது.  :D  :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசின் சடுகுடு விளையாட்டுக்கள் இனித்தான் ஆரம்பிக்க இருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.