Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜாம்பவான்களுக்கான பலப் பரீட்சையில் நூலிழையில் ஜெயித்த மக்கலமும் வீரர்களும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு போட்டி இன்று நடைபெற்றது. இந்த எதிர்பார்ப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் குறிப்பிடத்தக்க காரணம் கடந்த இரு மாதங்களாக இலங்கையணியை துவம்சம் செய்து வரும் நியுசிலாந்தணியின் ஆரம்பத் துடுப்பாட்டக் காரரும், அணியின் தளபதியுமான பிரண்டன் மக்கலத்தின் ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தை யாராவது தடுத்து நிறுத்த மாட்டார்களா என்கிற அங்கலாய்ப்பே முதலாவது. 

 

இரண்டாவது காரணம், இந்த முறை உலகக் கிண்ணத்தை எப்படியாவது தூக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மக்கலத்தின் அணிக்குச் சவாலாக யாராவது வரமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு.

 

மூன்றாவது காரணம், எனது இரண்டாவது அபிமான அணியான அவுஸ்த்திரேலியா (எனது முதலாவது அணி எதுவென்பதை நான் விளையாட்டுத் திடலில் முன்னர் எழுதிய சில நகைச்சுவைப் பதிவுகளில் கண்டிருப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு....) விளையாடும் போட்டி என்பது. 

 

ஆக, இன்று வீட்டில் இருக்க நேரம் கிடைத்ததால் இரு பலமான அணிகளுக்குமிடையிலான இந்தப் போட்டியை கண்டு களிக்கலாம் என்று ஆவலுடன் தொலைக்காட்சியின் முன்னால் உட்காந்திருந்தேன். இதில் ஒரு விடயத்தைச் சொல்லவேண்டும், அவுஸ்த்திரேலிய அணி விளையாடும் போட்டிகளை மட்டுந்தான் இலவசமாக சனல் 9 இல் ஒளிபரப்புகிறார்கள் இங்கே. ஏனைய போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதில்லை. கேட்டால், பொக்ஸ் (Foxtel) குழுவினர் இந்த உலகக் கிண்ணப் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிவிட்டார்களாம், அதனால் அவர்களது இணைப்பு உள்ளவர்கள் மட்டுமே ஏனைய போட்டிகளையும் கண்டுகளிக்க முடியும் என்று கைய்யை விரித்துவிட்டார்கள். இதனால் அவுஸ்த்திரேலிய கிரிக்கெட் சபை மீதும் சிறிய கோபம் உண்டு எனக்கு. அவுஸ் விளையாடவிருந்த பங்களாதேசுடனான முதற் போட்டி மழையினால் ரத்துச் செய்யப்பட்டபோது எனக்கு உள்ளூர திருப்தியையும், காசுக்காக ஏனைய போட்டிகளைக் காட்டாது விட்டு விட்டு தமது போட்டிகளை மட்டுமே காட்டவிருந்த சனல் 9 இன் கனவில் மண் விழுந்துவிட்டது எனக்கு சிறிய மகிழ்வைக் கொடுத்தது.

 

சரி, இன்றைய போட்டிக்கு வருகிறேன், போட்டி நடைபெற்ற ஈடின் பார்க் ஒரு ரக்பி மைதானம். வழமையான ஓவல் வடிவத்துக்கு மாறாக செவ்வக வடிவில் இந்த மைதானம் அமைந்திருந்தது. ஆகவே அளவில் மற்றைய மைதானங்களை விடவும் இது சிறியது. பிட்ச்சின் மத்தியிலிருந்து எல்லைக் கோட்டுக்கான குறுகிய தூரம் வெறும் 55 மீற்றர்கள்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவுஸ்த்திரேலியாவின் அதிரடி ஆட்டக் காரர்களான வோர்னர், ஆரன் பின்ச், கிளென் மக்ஸ்வெல் ஆகியோருக்கு இந்த மைதானம் பெரும் உதவியாக இருக்கும். அதுபோலவே நியுசிலாந்தின் மக்கலத்திற்கும் இந்த மைதானம் அதிர்ஷ்ட்டமாக இருக்கும், பந்துகள் நாலாபக்கமும் சிதறியோடும், குறைந்தது 300 ஓட்டங்களையாவது ஒவ்வொரு அணியும் பெறக்கூடும் என்றெல்லாம் பல கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஆருடம் சொல்லியதால் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. இன்றைக்கு செம வேட்டைதான் என்று உட்காந்து கொண்டேன்.

 

நினைத்தவாறே எனது அபிமான ஆஸி அணியின் ஆரம்பத் துடுப்பாட்க் காரர்களான வோர்னரும், பிஞ்சும் களமிறங்கினார்கள். முதல் ஓவரிலேயே (சவுத்தியின் ஓவரில்) 15 ஓட்டங்கள் , இதில் அவர் வீசிய 2 வைட்டுக்கள் அடங்கும். அதேபோல போல்ட்டின் முதலாவது ஓவரில் இன்னும் 15 ஓட்டங்கள் குவியவே எனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பெரிய போலர் எண்டெல்லாம் இலங்கையணியோடு சவுண்டு விட்டாங்கள், இப்ப என்னடாவெண்டால், ஆஸியிட்ட வாங்கோ வாங்கென்று வாங்குறாங்கள் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன். 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

எங்க மிச்சம் ரகுநாதா,, வேலைக்கு போய்ட்டாரோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது ஓவரில், சவுத்தியின் பந்தை அடித்தாட முயன்ற பிஞ்சின் ஸ்டம்ப் புடுங்கி எறியப்பட தொலைக் காட்சியை நிப்பாடிப் போட்டு எழுந்துவிட்டேன். இருக்கப் பிடிக்கவில்லை, சரி, எங்கேயாவது வெளியில் போகலாம் என்று மனைவியையும், பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு ஒப்டோமெட்ரிஸ்ட் (கண்ணாடி பார்க்க) கிளம்பிவிட்டேன். அங்கு போயும் இருப்புக் கொள்ளவில்லை. அடிக்கடி தொலைபேசியில் ஸ்கோரைச் செக் பண்ணிக் கொண்டிருந்தேன். ஆஸி அணி 12 ஓவர்களில் 80 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்று மிகவும் பலமான நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறதென்கிற திருப்தியில் கொஞ்ச நேரம் வேறு வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் சரி, இப்போது எப்படி அடிக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று தொலைபேசியை தட்டினால், ஆஸி அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்தது. சரியான ஏமாற்றமும், கோபமும் வரவே மனதிற்குள் திட்ட ஆரம்பித்தேன். கண்ணாடி பார்த்தது போதும், நடவுங்கோ வீட்டுக்குப் போகலாம் என்று நான் அவசரப்பட்டதை மனைவி ஆச்சரியமாகப் பார்த்தாள். இப்பத்தானே வந்தம், அதுக்குள்ளவா என்று கேட்காத குறை. 

 

வரும் வழியெங்கும் காரில் ஒலிபரப்பைக் கேட்டுக் கொண்டு வந்தேன். ஆஸ் அணியின் ஒவ்வொரு விக்கெட்டும் அடுத்தடுது கொட்டுப்பட ஆத்திரத்துடன் காரின் ரேடியோவையும் நிறுத்திவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். நான் வீடு வந்து சேரும்போது ஆஸி அணியின் அனைத்து விக்கெட்டுக்களும் வெறும் 32 ஓவர்களில் புடுங்கி எறியப்பட்டு  151 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது. இனி மட்ச் பார்ப்பதில் பிரியோசனமில்லை என்று நினைத்துக்கொண்டே, வீட்டில் வேறு வேலைகள் இருந்தால் பார்க்கலாம் என்று திரிந்து கொண்டிருந்தேன். அப்படியிருந்தும், ஒரு சிலவேளை ஆஸி அணியின் பந்துவீச்சாளர்கள் சரியாக வீசினால் அஸி அணிக்கு வாய்ப்பிருக்கும் என்றும் மனம் அங்கலாய்த்துக்கொண்டிருந்தது. 

Edited by ragunathan

எங்க மிச்சம் ரகுநாதா,, வேலைக்கு போய்ட்டாரோ

 

அவர் ஆஸி தோல்வி அடைந்த டென்ஷன் இல எழுத்துகிறார் கொஞ்சம் பொறும் :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவமே,ஆழ்ந்த அனுதாபங்கள் ரகு

அட பாவமே,ஆழ்ந்த அனுதாபங்கள் ரகு

 

இதுக்கு ஏன் அனுதாபம் :D  ரகு மிகுதியை எழுதாமல் போய்விட்டார்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி, இருந்ததும்தான் இருந்துவிட்டோம், மாட்சை முடியும்வரை பார்த்துவிடுவோம், இப்ப என்ன நடக்கப்போகிறது? மக்கலம் அடிப்பார், 10 ஓவரில் அலுவல் முடியப் போகுது, அவ்வளவுதானே?? விளையாட்டில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு மீண்டும் அதே டீவியின் முன்னால் அமர்ந்துகொன்டு நடப்பதைப் பார்க்க ஆயத்தமானேன்.

 

நான் பயந்தவாறே, மக்கலமும் கப்டிலும் அசுரத்தனமாக ஆடத் தொடங்கினார்கள். மக்கலம் ஒரு வெறிகொண்ட மிருகம்போல எல்லாப் பந்துகளையும் விளாசித் தள்ளிக்கொண்டு இருந்தார். அடிப்பதைப் பார்த்து சந்தோசப்படவா, அல்லது எனது அணி தோற்கப் போகிறதே என்று கவலைப்படவா என்று தெரியாத இரண்டு கெட்டான் நிலை எனக்கு !

 

எப்படியும் தோற்கத்தான் போகிறோம், அதில் மக்கலத்தின் அடியையாவது பார்க்கலாமே என்று தொடர்ந்தும் டீவியின் முன்னால் அமர்ந்திருப்பதற்கு காரணம் தேடிக்கொண்டு உட்காந்திருந்தேன். அடியோ அடி, அசுர அடி! மனுசன் எப்படித்தான் இப்படியெல்லாம் அடிக்கிறாரோ?? ஆஸிக்கே இந்த அடியென்றால், இலங்கைக்கு விழுந்தது பரவாயில்லைப் போலக் கிடக்கு என்று எனக்குள் சமாதானம் வேறு !

 

4 ஓவர்களில் 40 ரண்கள். மக்கலம் இன்னும் களத்தில். போகிற போக்கைப் பார்த்தால் 15 ஓவரில் அலுவல் முடியப் போகுதென்று எண்ணிக்கொண்டேன். 7 ஓவர்களில் காட்டடி அடித்து 78 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில்  24 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களைக் குவித்து மக்கலம் எனும் சூராவளி ஓய்வுக்குக் கொண்டுவரப்பட்டது. மனதில் ஒரு சிறிய பொறி தட்டியது எனக்கு. கூடவே 1995 இல் சிங்கப்பூரில் நடைபெற்ற பாக்கிஸ்த்தானுக்கெதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 17 பந்துகளில் 50 ஓட்டங்களை சனத் ஜயசூரிய சாதனையோடு குவித்தபோதும்கூட, வெறும் 180 ஓட்டங்களைக் கூடப் பெறமுடியாமல் இலங்கையணி தோற்றுப்போனதும் நினவிற்கு வந்துபோனது. ஆக, மக்கலத்தின் ஆட்டம் சோபித்தாலும், ஆஸிக்கு சந்தர்ப்பம் இருக்கென்பதுதான் எனது நினவின் பொருள் !

 

சரி, மக்கலத்தை அனுப்பியாச்சுது, இனி எங்கடை ஆட்கள் பார்த்துக்கொள்ளுவாங்கள், ஆனால் என்ன, போலிங் செய்வதற்கு போதுமானளவு ஓட்டங்கள்தான் இல்லை என்று கவலைப் பட்டுக்கொண்டே போட்டியை சற்று கூடிய ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினேன். நான் எதிர்பார்த்தவாறு 79 ஓட்டங்களில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்கள் விழவே, நியுசிலாந்தணி 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள் என்கிற நிலையை அடைந்தது. ஆனால் இருந்த ஒரேயொரு பிரச்சினை, இன்னும் 41 ஓவர்கள் போட்டியில் மீதமிருந்தது, வெறும் 8 ஓவர்களில்தான் மக்கலத்தின் திருவிழாவும், ஏனையவையும் நடந்து முடிந்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! இன்னும் 73 ஓட்டங்கள்தான் வேண்டும், ஓவருக்கு 2 ஓட்டங்கள் படி அடித்தால்க்கூட, இலக்கை அடைந்துவிடுவார்களே என்கிற பயமும் இருந்தது. 

 

நான் பயந்தவாறே, அன்டேர்சனும், வில்லியம்சனும் நிதானமாக ஆடத் தொடங்கினார்கள், சிறிது நேரத்திற்கு விக்கெட்டுகளே விழவில்லை. போதாக்குறைக்கு ஆஸி அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோன்சனுக்கு சாத்தோ சாத்தென்று சாத்திக்கொண்டிருந்தார்கள். மனுசன் 6 ஓவருக்கு 68 ஓட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார். "ஏன் தான் இவனெல்லாம் போலிங் போட வாறானோ?" என்றும் மனதில் சிறு கறள். இவருடன் ஒப்பிடும்போது மலிங்கவுக்கு விழுந்த அடி பரவாயில்லைப் போல கிடக்கு என்று  நினைத்துக்கொண்டேன். 

 

ஆனால் 131 ஓட்டங்கள் பெற்றிருந்த போது 5 ஆவது விக்கெட் விழுந்ததும், சுதாரித்துக்கொண்டேன். மாட்ச் இன்னும் முடியேல்லை, இனித்தான் விளையாட்டிருக்கு என்று சொல்லிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் இன்னும் 21 ஓட்டங்கள்தான் தேவை என்பது அப்போது எனக்கு மறந்துவிட்டது. ஏதோ 300 அடித்துதுபோல நினைப்பு எனக்கு !

 

எனது ஆர்வத்தைக் கூட்டிக் கொண்டே, நியுசிலாந்தணியின் விக்கெட்டுக்கள் மெல்ல் மெல்லச் சரிய ஆரம்பித்தன. 139-6,  145-7, பிறகு 146 ஓட்டங்களில் இரு விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழவே நான் அடைந்த மகிழ்சிக்கு அளவேயில்லை. சொல்லி வேலையில்லை, நம்மட ஆட்கள் கெட்டிக் காரங்கள்தான். அமத்திப் போட்டாங்கள் என்று நான் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க இறுதி விக்கெட்டாகக் களமிறங்கிய போல்ட்டுடன், இணைந்து வில்லியம்சன் நிதானமாக ஆடி ஆட்டத்தை முடித்து விட்டார். அட கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே என்று மனம் சலித்துக்கொண்டது.

 

ஆனாலும், ஒருபக்க போட்டியாக இருக்கப் போகிறதே என்று நான் கவலைப் பட்ட இந்த போட்டி இறுதி வரை பரபரப்பாகப் போனதையிட்டு மகிழ்ச்சியே ! வெறும் 151 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தபோதும்கூட இன்று ஆஸி அணி காட்டிய போராடும் திறன் போற்றுதற்குரியது. 

 

வேறு அணிகளாக இருந்தால் 151 ஓட்டங்களுக்குச் சுருண்டவுடனேயே, ஆட்டத்தை எதிரணிக்குக் கொடுத்துவிட்டு போட்டியின் போக்கில் ஆடிக்கொண்டு, தடுக்கமுடியாத வெற்றியை தாமாகவே வழங்கியிருப்பார்கள்.

 

300, 400 என்று ஓட்டங்கள் குவிக்கப்படும் இன்றைய போட்டிகளில், வெறும் 151 ஓட்டங்களை மட்டுமே பெற்று, அதைக்கூட போராடி ஒரு அணியினால் காப்பாற்ற முடியுமென்றால் அஸி அணி ஆஸி அணிதான் !

 

சந்தேகம் வேண்டாம், இந்தமுறை கப் எங்களுக்கே (யாருக்கென்றெல்லாம் கேட்கக் கூடாது ).!

Edited by ragunathan

 

சந்தேகம் வேண்டாம், இந்தமுறை கப் எங்களுக்கே (யாருக்கென்றெல்லாம் கேட்கக் கூடாது ).

 

இங்கதான் பொடி வைத்து சொல்லி விட்டீர்கள் :lol::D

 

  • கருத்துக்கள உறவுகள்

கப் இலங்கைக்குத் தானே :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கப் இலங்கைக்குத் தானே :D

 

 

நான் சொல்லமாட்டேன், அதை மட்டும் நான் சொல்ல மாட்டேன் ! :D

கப் இலங்கைக்குத் தானே :D

 

இன்றைய அடியோடு ரகு முடிவெடுத்து விட்டார் ரதி :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய அடியோடு ரகு முடிவெடுத்து விட்டார் ரதி :D

 

 

 

என்ன சொல்லுறீங்கள் ???  :(

  • கருத்துக்கள உறவுகள்

அவுசுக்கு மண்டக்கனம் கூட,இந்த அடி தேவைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுசுக்கு மண்டக்கனம் கூட,இந்த அடி தேவைதான்.

 

 

அதுவும் ஒரு வழியில சரிதான் !! மண்டைக்கனம் கூடாது ! :(

என்ன சொல்லுறீங்கள் ??? :(

இல்லை ரகு, கப் இந்த முறை எங்களுக்குத்தான் என்பதில் 2 அர்த்தம் இருக்கு அதுதான்.

மற்றது உண்மையை சொன்னால் இன்று johnson இன் பந்து வீச்சுக்கு நடந்த அடியை பார்த்த போது உங்களைத்தான் நினைத்தேன். ரகு இன்று ஒரு ஆய்வு எழுதினால் எப்படி எழுதுவார் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ரகு, கப் இந்த முறை எங்களுக்குத்தான் என்பதில் 2 அர்த்தம் இருக்கு அதுதான்.

மற்றது உண்மையை சொன்னால் இன்று johnson இன் பந்து வீச்சுக்கு நடந்த அடியை பார்த்த போது உங்களைத்தான் நினைத்தேன். ரகு இன்று ஒரு ஆய்வு எழுதினால் எப்படி எழுதுவார் என்று.

எனக்கென்றால் நியுசிலாந்து அல்லது தென்னாபிரிக்கா தூக்கும்போலத்தான் கிடக்கு. ஆனால் எனது விருப்பம் எதுவென்று கேட்டால்.........பலர் உடனேயே அரசியல் பேச வந்துவிடுவார்கள் !!

ஆகவே எனது இரண்டாவது அபிமான அணி ஆஸி தூக்கினால்க் கூடப் பரவாயில்லை என்று விரும்புகிறேன் !

பார்க்கலாம் !

ஆகா நீங்கள் இப்படி பயப்படுகிறீர்கள். அரசியல் பேசுவர்கள் பேசி விட்டு போகட்டும். இதுக்கெல்லாம் பயந்தால் வாழமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நீங்கள் இப்படி பயப்படுகிறீர்கள். அரசியல் பேசுவர்கள் பேசி விட்டு போகட்டும். இதுக்கெல்லாம் பயந்தால் வாழமுடியாது.

 

 

உண்மையைச் சொன்னால் நான் போட்டிருக்கும் தேசியவாதி என்கிற வேசம் என்னவாகிறது ??? ஒரு வழி பண்ணிவிடமாட்டார்கள் என்னை ?? அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லையே ?? :(

 

அதனால்த்தான் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது ! :)

நல்ல ரசிப்புடன் கூடிய விமர்சனம் ரகு ,தொடர்ந்து பல ஆட்டங்களை கண்டு கழித்து விமர்சனங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் .

நியூசிலாந்து இலகுவாக வெல்லபோகுது என்று மக்கலம் பட் செய்யும் போது நித்திரைக்கு போய்விட்டேன் காலை எழும்பி ஸ்கோர் பார்த்தால் அட இருந்து பார்த்திருக்கலாம் என்று நினைத்தேன் .

 

starc ஆறு விக்கெட்டுகள் எடுத்தது சந்தோசம் .அரவிந்தனின் போட்டியில் புள்ளிகள் எகிற போகுது . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்றால் நியுசிலாந்து அல்லது தென்னாபிரிக்கா தூக்கும்போலத்தான் கிடக்கு. ஆனால் எனது விருப்பம் எதுவென்று கேட்டால்.........பலர் உடனேயே அரசியல் பேச வந்துவிடுவார்கள் !!

ஆகவே எனது இரண்டாவது அபிமான அணி ஆஸி தூக்கினால்க் கூடப் பரவாயில்லை என்று விரும்புகிறேன் !

பார்க்கலாம் !

ஏன் எங்கட சிறிலங்கா கப் எடுக்கும் எண்டு சொல்ல என்ன பயம்? என்ன வெக்கம்?

ரகு உங்கள் கிரிக்கெட் ஆய்வை எதிர்பார்க்கிறேன் இன்றைய இங்கிலாந்து vs சிறிலங்கா போட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகு உங்கள் கிரிக்கெட் ஆய்வை எதிர்பார்க்கிறேன் இன்றைய இங்கிலாந்து vs சிறிலங்கா போட்டி

 

 

உங்களின் பிரதான திரியில் சற்று எழுதியிருக்கிறேன். கடந்த 2 நாட்களாக கடும் வேலை அலுவலகத்தில். நேரம் இருக்கவில்லை.

உங்களின் பிரதான திரியில் சற்று எழுதியிருக்கிறேன். கடந்த 2 நாட்களாக கடும் வேலை அலுவலகத்தில். நேரம் இருக்கவில்லை.

 

நன்றி ரகு :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.