Jump to content

இலங்கையில் வரலாறு எது?


Recommended Posts

வணக்கம்,

என்னை போன்றவர்களுக்காக ஒரு உதவி.இலங்கையின் உண்மையானா வரலாறு என்ன? முதலில் வந்து குடியேறியவர்கள் யார்?

தெரிந்ததை சொல்லுங்கள், தமிழ் ஆங்கில இணைப்புகள் இருந்தால் தாருங்கள்

நன்றி

Link to comment
Share on other sites

ஆம் இந்த வரலாறு சம்பந்தமாக பல வாதங்கள் கருத்தாடல்கள் யாழில்

நடைபெற்று கொண்டிருக்கின்றன...

அதை போய் வடிவாக தெழிவாக படியுங்கள்...

குறிப்பாக படித்ததை மறவாமல் நினைவில் வைய்யுங்கள்..துயா...

நன்றி...

Link to comment
Share on other sites

சிங்களவர்தான் முதல் வந்தவை அதில என்ன சந்தேகம்.

இனி எப்ப தமிழர்கள் வந்தவை என்று ஆய்வு செய்தா...

தமிழர்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தது ஜரோப்பியர்கள் தமக்கு விசுவாசமாக வேலை செய்வார்கள் என்று. முக்கியமாக பிரித்தானியர்கள் தான் தமிழர்களை கொண்டு வந்தனர். அப்படி பாத்தா 1815 பின்னர் தான் வந்தருக்கிறார்கள்.

;)

Link to comment
Share on other sites

இலங்கையின் வரலாறு பற்றி இன்று வரை சரியான சான்றுகளுடன் கூற முடியாது உள்ளது.

சில கணிப்பீடுகளின் அடிப்படையில் நடந்த பலவிதமான ஆய்வுகள் உள்ளன.

எனக்கு தெரிந்த வரலாற்றின்படி இலங்கைக்கு யாரும் வரவில்லை.

சிங்களவர்களும், தமிழர்களும் இலங்கையின் பூர்வீகக் குடிகளே.

சிங்களவர்கள் ஆரியர்கள் அல்ல. அவர்களும் திராவிடர்களே!

மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் போன்று தமிழில் இருந்து உருவான ஒரு இனமே சிங்களம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறு!!!!!! தமிழரே இலங்கையின் தொன் குடிகள். சிங்களவர்கள் வந்தேறு குடிகள்தான் அதில் சந்தேகம் வேண்டாம். இடத்தைக் கொடுத்தான் தமிழன் மடத்தைப் பறித்தான் சிங்களவன். நிழலுக்கு ஒதுங்கிய சிங்களவன் மரத்தை வெட்டன கதையைக் கூறுகிறேன் தயவு செய்து பொறுமையாகப் படியுங்கள்.

சிங்களவர்களே இலங்கையின் தொன் குடிகள், தமிழர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்த அந்நியர்கள், வந்தேறு குடிகளான தமிழர்களுக்கு தனி நாடு எதற்கு என்று இலங்கையில் உள்ள சிங்களக் கட்சிகளும் ஊடகங்களும் ஆண்டாண்டு காலமாகக் கருத்து தெரிவித்து வருகின்றன. இது தெரியாமல் தமிழர்களில் சிலர் சிங்களத்தின் காலை நக்கிக் கிடக்கிறார்கள். எது நடந்ததோ அதுதான் வரலாறு. தன்னை நியாயப்படுத்துவதற்காக வரலாற்றைத் திரித்து வருகிறது சிங்களம். இலங்கையின் தொன் குடிகள், யார்? ஏன்ற வினாவுக்கு வரலாறு என்ன விடையளிக்கிறது என்று பார்ப்போம்.

கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இங்கிலாந்து நாட்டின் ரோயல் சொசைட்டி உறுப்பினராக இருந்த பி.எல். ஸ்கிலேட்டர் என்ற உயிரியல் அறிஞர் கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது என்றும் அதற்கு லெமூரியா என்றும் பெயர் சூட்டினார். இக்கூற்று பல வரலாற்று அறிஞர்களால் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளை உற்று நோக்கையில் லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகத் தெரிகிறது. இதில் வரும் குமரிக் கண்டத்தில்; ஈழமும் தமிழகமும் ஒரே நிலப்பரப்பைக் கொண்டு இருந்தன. பின்னாள்களில் ஏற்பட்ட கடற்கோள்களினால் இரண்டும் தனித்தனியே பிரிந்தன. பல வரலாற்று ஆசிரியர்களால் ஆய்வு செய்து கூறப்பட்ட இவ்வுண்மை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசை யாண்ட தென்னவன் வாழி!

ஈழத்தோடு இணைந்திருந்த தென்பாண்டி நாடு தமிழ் பேசும் மக்களைக் கொண்ட நாடு, ஈழத்தின் ஆதி குடிகளான வேடர், நாகர், இயக்கர் ஆகியோர் பேசிய மொழி தமிழ்தான் என்றும் கூறப்படுகிறது மற்றும் சங்க காலத்து நூல்களான எட்டுத்தொகை, பத்துப் பாட்டு போன்றவற்றில் வரும் செய்திகளையும் உற்று நோக்கின் இலங்கையின் தொன் குடிகள் தமிழரே என்பது ஐயத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது. அதன் பின் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழித்து கி.மு 6 ஆம் நூற்றாண்டில் ஆரிய இளவரசன் விசயனின் வருகையிலிருந்தே சிங்களவரின் வரலாறு தொடங்குகிறது, சிங்களவர்கள் வந்தேறு குடிகள்தான் என்பதை சிங்களவர்களாலே போற்றிக் கொண்டாடப்படும் மகாவம்சம் பின் வருமாறு கூறுகிறது.

வங்க நாட்டு இளவரசியான சுபதேவி ஒரு நாள் அரண்மனையை விட்டு வெளியேறி லாலா எனும் நாட்டை அடைந்தபோது அங்கு மனிதர்களைக் கொன்று தின்னும் சிங்கன் என்பவன் அவளைக் கடத்திக் கொண்டு போய் குகை ஒன்றில் அடைத்து வைத்தான் பகலில் வெளியில் போய் மனிதர்களை வேட்டை ஆடுவதும் இரவில் குகைக்குள் வந்து சுபதேவியுடன் காலம் கழிப்பதுமாய் இருந்து வந்தான், நாளடைவில் இருவருக்கும் சிங்கபாகு சிங்கவல்லி என ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாய் இரு குழந்தைகள் பிறந்தன. சிங்கபாகு வளர்ந்து பெரியவனானதும் தன் தந்தையைக் கொன்று விட்டு தாயையும் தங்கையையும் கூட்டிக்கொண்டு தன் பாட்டனின் நாடான வங்கத்திற்குச் சென்று அங்கு தன் தங்கை சிங்கவல்லியையே பட்டத்து அரசி ஆக்கி நாட்டை ஆண்டு வந்தான் அவர்களுக்கு 32 பிள்ளைகள் பிறந்தன அவர்களுள் மூத்தவனான விசயனை இளவரசனாக்கினர். விசயன் பெரியவனானதும் பல தீய செயல்களில் ஈடுபட்டதால் அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் அவனது தந்தை சிங்கபாகு நாடு கடத்தினான். விசயனும் அவனது தோழர்களுடன் பல நாள்கள் கடலில் அலைந்து இறுதியில் இலங்கைத் தீவை வந்தடைந்தான், அங்கு இயக்க இனத்தைச் சேர்ந்த இளவரசி குவேனியை மணம் முடித்தான் அவனது தோழர்களும் இயக்க இனத்தைச் சேர்ந்த பெண்களை மணம் முடித்தனர்

இவ்வாறே இலங்கையில் சிங்களவர்; குடியேறினர். ஆரியர்கள் எந்த நாட்டில் குடியேறுகிறார்களோ அந்த நாட்டு மண்ணின் மக்களை சூழ்ச்சியால் வென்று தங்கள் வழி இன மொழிப் பண்பாட்டைத் திணிப்பது வழக்கம் ஈழத்திலும் அவ்வாறே நடந்தது அதற்குப் பின்பும் பெருவாரியான ஆரியக் கூட்டங்கள் ஈழத்தில் வந்து குடியேறியதாக மகாவம்சம் கூறுகிறது. விசயனின் வருகைக்கு முன் ஒட்டு மொத்த இலங்கையும் ஒரு காலத்தில் தமிழர்களுக்குத்தான் சொந்தமாய் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் சிங்கள அரசு ஒரு முத்திரையை வெளியிட்டது. விசயன் கப்பலில் இருந்து இறங்குவது போலவும் இளவரசி குவேனி அவனை வரவேற்பது போலவும் அம்முத்திரை சித்தரிக்கப்பட்டிருந்தது. தன்னையும் அறியாமல் உண்மையைக் கக்கிவிட்ட சிங்கள அரசு அவசர அவசரமாக முத்திரையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

1833 ஆம் ஆண்டு தனித்தனியாக இருந்த தமிழ் அரசையும் சிங்கள அரசையும் கோல்புறூக்-கமரோன் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின்படி ஆங்கிலேயர்கள் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். அப்போது மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பில் தமிழர்கள் இலங்கைத் தீவின் 35 விழுக்காடு நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டிருந்தனர். 1995 இல் வெறும் 17 விழுக்காடு நிலப்பரப்பே தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தது. 1833 இற்கும் 1995 இற்கும் இடைப் பட்ட நூற்றி அறுபத்தியிரண்டு ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் 50 விழுக்காடு நிலப் பகுதியை சிங்களவர் கைப்பற்றி உள்ளனர். ஓட்டு மொத்த இலங்கையையும் சிங்களவருக்குச் சொந்தமாக்க வேண்டும் என்ற நோக்கோடு கடந்த 50 ஆண்டுகளாக இன அழிப்பை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது சிங்களம். இனி இதை அனுமதிக்க முடியாது என்ற நோக்கோடு எழுந்த போராட்டமே தமிழீழ விடுதலைப் போராட்டம்.

Link to comment
Share on other sites

தகவல்களுக்கு மிக்க நன்றி உறவுகளே.....மேலும் சொல்லுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தலையங்கம் தூயா

உண்மை தான் இலக்கியன்... உடல் அங்கங்களில் தலை சரி இல்லாது இருந்த போதும், தலையங்கம் நல்லது தான்...

Link to comment
Share on other sites

சும்மா, சும்மா அலட்டாமா உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிங்களவர்தான் முதல் வந்தவை அதில என்ன சந்தேகம்.

இனி எப்ப தமிழர்கள் வந்தவை என்று ஆய்வு செய்தா...

தமிழர்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தது ஜரோப்பியர்கள் தமக்கு விசுவாசமாக வேலை செய்வார்கள் என்று. முக்கியமாக பிரித்தானியர்கள் தான் தமிழர்களை கொண்டு வந்தனர். அப்படி பாத்தா 1815 பின்னர் தான் வந்தருக்கிறார்கள்.

இதற்க்கு முன்னாடி வந்தாங்கள் என்று சிலர் சொல்லிறாங்களே..அந்த ஆண்டுகள் தற்போது நினைவில் இல்லை....

எனக்கும் யாராச்சும் சொல்லிங தாங்கப்பா நானும் பள்ளி கூடம் போகல... :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

நான் பள்ளிக்கு சென்றேன்..ஆனால் இங்கு இதெல்லாம் சொல்லிதரலையே!!! ;)

Link to comment
Share on other sites

சிங்களவர் தாங்கள் தான் முதல் வந்ததாக சொல்லுகிறார்கள்.

எனவே, அவர்கள் தான் முதல் வந்தவர்கள்.

ஆனால், திராவிட தமிழர்களாகிய நாம் அங்கேயே (லங்காவிலே/இலங்கையிலேயே)அறிந்த காலம் தொட்டு இருந்துவந்திருக்கிறோம்.

எதற்க்கும் இராவணனை கொஞ்சம் கேட்டு சொல்லுகிறேன். நான் அவன் வம்சத்தில் வந்தவன். B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரே ஈழத்தின் தொன் குடிகள். வன்னி மைந்தன் மலையகத் தமிழர்களையும் ஈழத் தமிழர்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கூறுகிறார்.

எனது முந்தைய பதிவில் தெளிவாக விளக்கியுள்ளேன். தயவு செய்து மறுபடியும் படித்துப் பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிடன் என்று சொல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். திராவிடத்திலிருந்து தமிழ் வரவில்லை. தமிழில் இருந்துதான் திராவிடம் என்ற சொல் வந்தது. ஏனெனில் திராவிடர் என்ற சொல் தமிழின் திரிபே!.(தமிழ்-தமிள-த்ரமிள-த்ரமிட-திரபிட-திராவிட). மத்தளம் என்ற தமிழ்ச் சொல் மிருதங்கம் ஆனதும் இதே போல்தான்.

நாம் தமிழர். மொழியாலும் இனத்தாலும் தமிழர்.

திராவிடம் என்ற சொல்லை பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால்தான் மிக உயர்த்திப் பிடித்தார்கள். நான் அதைப் பிழை என்று சொல்லமாட்டேன் அன்றைய காலகட்டத்தில் அது ஒரு வரலாற்றுத் தேவையாக இருந்தது. ஆனால் 1955 ஆம் ஆண்டிற்குப் பின் பெரியார் திராவிடத்தை கைவிட்டுவிட்டு தமிழ் தேசியத்தையே மிக உயர்த்திப் பிடிக்கிறார். அறிஞர் அண்ணாவும் பின்னர் தமிழ் நாட்டுக்குத்தான் மானில சுயாட்சி கேட்டாரே தவிர திராவிடத்துக்கல்ல. பெரியாராலே கைவிடப்பட்ட தேசியத்தை நாம் தூக்கிப் பிடிக்கவேண்டிய தேவை இல்லை.

திராவிடத் தேசியம் மறைந்து தமிழ்த் தேசியம் மலர்ந்தது வளர்ச்சியை நோக்கிய பாதையே! ஈழத்தின் எழுச்சியுடன் இன்று அது வீறு கொண்டு நிற்கிறது.

இந்தியத் தேசியம், இலங்கைத் தேசியம், திராவிடத் தேசியம் அனைத்துமே தமிழர்களுக்குப் பிணி(நோய்). தமிழ்த் தேசியமே இனி..................

Link to comment
Share on other sites

திராவிடன் என்று சொல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். திராவிடத்திலிருந்து தமிழ் வரவில்லை. தமிழில் இருந்துதான் திராவிடம் என்ற சொல் வந்தது. ஏனெனில் திராவிடர் என்ற சொல் தமிழின் திரிபே!.(தமிழ்-தமிள-த்ரமிள-த்ரமிட-திரபிட-திராவிட). மத்தளம் என்ற தமிழ்ச் சொல் மிருதங்கம் ஆனதும் இதே போல்தான்.

நாம் தமிழர். மொழியாலும் இனத்தாலும் தமிழர்.

திராவிடம் என்ற சொல்லை பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால்தான் மிக உயர்த்திப் பிடித்தார்கள். நான் அதைப் பிழை என்று சொல்லமாட்டேன் அன்றைய காலகட்டத்தில் அது ஒரு வரலாற்றுத் தேவையாக இருந்தது. ஆனால் 1955 ஆம் ஆண்டிற்குப் பின் பெரியார் திராவிடத்தை கைவிட்டுவிட்டு தமிழ் தேசியத்தையே மிக உயர்த்திப் பிடிக்கிறார். அறிஞர் அண்ணாவும் பின்னர் தமிழ் நாட்டுக்குத்தான் மானில சுயாட்சி கேட்டாரே தவிர திராவிடத்துக்கல்ல. பெரியாராலே கைவிடப்பட்ட தேசியத்தை நாம் தூக்கிப் பிடிக்கவேண்டிய தேவை இல்லை.

திராவிடத் தேசியம் மறைந்து தமிழ்த் தேசியம் மலர்ந்தது வளர்ச்சியை நோக்கிய பாதையே! ஈழத்தின் எழுச்சியுடன் இன்று அது வீறு கொண்டு நிற்கிறது.

இந்தியத் தேசியம், இலங்கைத் தேசியம், திராவிடத் தேசியம் அனைத்துமே தமிழர்களுக்குப் பிணி(நோய்). தமிழ்த் தேசியமே இனி..................

saandilyanin kadalpuravil muthal aathaaram undu.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர் தான் தமிழர்ளைக் கொண்டுவந்ததென்றால் போர்த்துக்கேயர் ஒல்லாந்தரிடம் சண்டை போட்டவர்கள் யார்?

சிங்களவர்தான் முதல் வந்தவை அதில என்ன சந்தேகம்.

இனி எப்ப தமிழர்கள் வந்தவை என்று ஆய்வு செய்தா...

தமிழர்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தது ஜரோப்பியர்கள் தமக்கு விசுவாசமாக வேலை செய்வார்கள் என்று. முக்கியமாக பிரித்தானியர்கள் தான் தமிழர்களை கொண்டு வந்தனர். அப்படி பாத்தா 1815 பின்னர் தான் வந்தருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

பிரித்தானியர்களால் கொண்டு வரப்பட்ட தமிழர்கள் மலையகத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களுக்காகவே கொண்டு வரப்பட்டவர்கள். ஆனால் அதற்கு முதலிலேயே இலங்கையில் தமிழ் அரசுகள் இருந்துள்ளன. உதாரணம் எல்லாளன். அதேபோல் இலங்கையில் தற்போதுள்ள சிங்கள மக்கள் பெரும்பாலானவர்கள் தென்னிந்தியக் கலப்புடையவர்கள். (தென்னிந்தியா என நான் குறிப்பிடுவது தமிழகத்தை மட்டுமல்ல) இதனை இலங்கையை ஆண்ட விக்கிரமராஜசிங்கன்களின் வரலாறுகளைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். தற்போதுள்ள வரலாறுகள் பல திரிக்கப்பட்டு உண்மையான வரலாறுகள் மறைக்கப்பட்டுவிட்டன.

எனவே இதனை நாம் ஆராய்ந்து நிலைநாட்டப் புறப்பட்டால் அது முடிவின்றி நீண்டு கொண்டே போகும் என்பதே உண்மை. எனவே பிரித்தானிய அரசு இறுதியாக இலங்கையை கைப்பற்றிய போது இலங்கையில் வாழ்ந்த மக்களின் விபரங்கள் அவர்களின் கைவசமிருந்த நிலங்கள் போன்றனவற்றின் ஆதாரங்கள் தற்போதும் பிரித்தானியா வசமுள்ளது. எனவே அதனடிப்படையை வைத்துத் தொடர்வது நல்லது என்றே நான் நினைக்கின்றேன். எனவே பிரித்தானிய அரசிடமிருக்கும் அந்த ஆதாரங்களை முடிந்தால் அதன் பிரதிகளைப் பெற்று வெளியிட்டால் ஓரளவாவது நமது தமிழர் வரலாற்றை தற்போதைய தமிழ்மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கும்.

Link to comment
Share on other sites

தமிழர் ஒல்லாந்தரோடை சண்டை பிடிச்சவை என்றதுக்கு ஆக்கியலொஜிக்கலா சன்றுகள் இருக்கா அறிவுப+ர்வமாக விஞ்ஞானத்தினூடு நிறுவிறதுக்கு? எல்லாளன் ஏன் சிங்களவனாக இருக்க முடியாது? தமிழ் பேசும் சிங்களவன் இல்லை என்று காபன் வயது மூலமே விஞ்ஞானத்தினூடு நிறுவவேணும். ஏன் என்றெல்லா உலகம் அதை நோக்கி மிக வேகமாக போய் கொண்டிருக்கு. :rolleyes:

ஏன் பனங்கொட்டையளை கிள்ளினால் தேயில கொழுந்து கிள்ளுப்பட மாட்டன் எட்டுட்டுதாமோ? :lol:

Link to comment
Share on other sites

வணக்கம்,

என்னை போன்றவர்களுக்காக ஒரு உதவி.இலங்கையின் உண்மையானா வரலாறு என்ன? முதலில் வந்து குடியேறியவர்கள் யார்?

தெரிந்ததை சொல்லுங்கள், தமிழ் ஆங்கில இணைப்புகள் இருந்தால் தாருங்கள்

நன்றி

http://www.tamilnation.org/heritage/index.htm

http://kataragama.org/research/krishnapillai.htm

http://www.infolanka.com/org/srilanka/hist/hist1.html

Link to comment
Share on other sites

அந்தாள் பகிடிக்கு சொல்லப்போக நீங்கல் எல்லாம் அதஒ சீரியசாய் எடுத்துக்கொண்டு வாதாடுறீங்கள் :lol:

சான்றுகளின் அடிப்படையில் நாகரும் இயக்கரும் திராவிட தமிழர்கல் என்கிரார்கள்.அதுக்குபிறகுதா

Link to comment
Share on other sites

இஞ்ச என்ட சொந்தகாரங்களை பற்றி என்ன கதை உங்களுக்கு..பிறகு அடுத்த முறை சிட்னி வரும் போது...அவ்வளவு தான்...எப்பிங்கில் உங்களை சந்திக்க வேண்டி இருக்கும்..சொல்லிட்டன்..

தகவல்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.