Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீரும் புலம்பலும் விட்டு காரியமாற்ற....

Featured Replies

கண்ணீரும் புலம்பலும் விட்டு காரியமாற்றத் துணிந்து எழுக!

இலங்கையில் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தவறான கண்கொண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை "பயங்கரவாதமாக" சித்திரித்து நோக்கிய இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இப்போது மெல்ல மெல்ல உண்மை புரியத் தொடங்கியிருக்கின்றது போலும். இலங்கையின் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவும் சர்வதேச சமூகமும் காட்டும் பிரதிபலிப்புகள் அதனை வெளிப்படுத்துகின்றன.

வாகரையில் கடந்த எட்டாம் திகதி ஐம்பதுக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களின் அகதிகளின் உயிர் குடிக்கக் காரணமான இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல், பீரங் கித் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசுத் தலைமை கூறிய சமா தானங்கள் சமாளிப்புகள் ஏற்கவே முடியாதவை என்பதை சர்வதேச சமூகம் திட்டவட்டமாகவும் வெளிக்காட்டி விட்டது.

ஏதுமற்ற தமிழ் அகதிகளை விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்தியமையால் வந்த விளைவு என்ற சாரப்பட இலங்கை அரசுத் தரப்பு முன்வைத்த சமாளிப்பு, சமாதானம் சர்வதேச சமூகத்திடம் எடுபடவேயில்லை. இந்த மனிதப் படுகொலைக் கொடூரம் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டிருக்கின்றது. பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிர்ச்சி தெரிவித்திருப்பதோடு கண்டனமும் வெளியிட்டுள்ளன. ஐ.நா. சபையும் இக்கொடூரத்தைக் கண்டித்துள்ளது. இந்த அநியாயச் சாவுகளால் அனுசரணைத் தரப்பான நோர்வே குழப்பமடைந்துள்ளது.

இந்தியாவிலோ அளவுக்கு அதிகமாக அதிர்ச்சி அலைகள் எழுந்துள்ளன. அங்கு புதுடில்லியிலும் சரி, சென்னையிலும் சரி மத்திய அரசிலாகட்டும், மாநில அரசிலாகட்டும் அரசியல் தலைமைகளும் அதிகாரவர்க்கமும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திலிருந்து தூர விலகி நிற்பதையே விரும்பினாலும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அங்கு எழுந்துவரும் மக்கள் ஆத ரவு அலை காரணமாகத் தங்கள் நிலைப்பாட்டை ஒரேயடியாக மாற்றிக்கொண்டு, ஈழத்தமிழர்களின்பால் கரிசனை உள்ளவர்கள் தாங்கள் என்பது போல குறைந்த பட்சம் வெளிப்பாட்டுக்கு நடிக்கவாவது வேண்டும் என்ற இக்கட்டு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

தமிழக முதல்வர் மு.கருணாநிதி சுமார் ஐந்து ஆண்டு காலம் அதிகார அஞ்ஞாதவாசத்திலிருந்து விட்டு, இப்போதுதான் மீண் டும் ஆட்சிக்கு வந்திருக்கின்றார். ஏற்கனவே இரண்டு தடவை கள், ஈழத்தமிழர் விவகாரங்களை ஒட்டி தமது ஆட்சி அதிகாரத்தை குறுகியகாலத்தில் இழந்து, பதவியைப் பறிகொடுத்த அனுபவம் அவருக்கு உண்டு. "சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது" என்ற மொழிக்கு ஒப்ப இப்போது ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் ஈழத்தமிழர் விவகாரத்தில் தலைநீட்டுவதேயில்லை என்ற பாணி யில்தான் செயற்பட்டு வந்தார். இலங்கைத் தமிழர் விவகாரத்தை தொடுவானேன், வம்பை விலைக்கு வாங்குவானேன் என்ற கணக்கில் அவர் ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையாள முற்பட் டார். அதனால்தான் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர் பான விவகாரங்களில் பட்டும் படாமலும் பிடி கொடுக்காமலும் காய்நகர்த்தி வந்தார் அவர்.

ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எதிரான தென்னிலங்கை சிங் கள அரசின் அராஜகக் கெடுபிடிப்போக்கு, தமிழகத்தில் பாமர மக்கள் மத்தியிலும் அதிர்ச்சி மற்றும் உணர்ச்சி அலைகளை எழுப்பிவிட்டதால், அதற்கு அடிபணிந்து காரியமாற்றவேண்டிய நெருக்கடி கட்டாயம் அவருக்கு உருவாகியிருக்கின்றது.

"இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியா இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமை காப்பது என்ற நியாயமான கேள் விக்குப் பதிலளிக்கவேண்டிய வேளை வந்துவிட்டது." என அவரே குறிப்பிடும் நிலைக்கும், அது குறித்து அவரே இந்திய மத்திய அரசிடம் வினாத் தொடுக்கும் கட்டத்துக்கும் நிலைமை இலங்கையில் கட்டுமீறியுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான தென்னிலங்கைச் சிங்களத்தின் அராஜகமும், கொடூரமும் அதிகரித்துள்ள பின்னணியில், இனி மேலும் அதைக் கண்டும் காணாமலும்போல, புறமொதுக்கி வாளா விருப்பது இயாலாத காரியம் என்ற நெருக்குதலான உண்மையை கட்டாய யதார்த்தத்தை புரிந்துகொண்ட நிலைமையில்தான் அவர் இந்த விடயத்தில் கருத்து வெளியிடவேண்டிய நிலைக்கு அது வும் ஈழத்தமிழர்களின் பரிதாப நிலைக்கு எதிராகக் குரல் எழுப் பும்படி இந்திய மத்திய அரசைத் தூண்டும் அளவுக்கு வந்திருக் கின்றார்.

இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய நாடு இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமை காத்திடப்போகின்றது என்ற நியாயமான கேள்வியை மத்திய அரசிடம் எழுப்பும் வேளை வந்து விட்டதாக கலைஞர் கருணாநிதி குறிப்பிடுகின்றார்.

அதே கருணாநிதியிடம் உலகத் தமிழினமும் அதேபோன்ற ஒரு நியாயமான கேள்வியை முன்வைக்கும் வேளையும் வந்து விட்டது.

ஈழத்தமிழர் விவகாரத்தில் அவர்களோடு தொப்புள்கொடி உறவு போன்ற தொடர்பை வைத்திருக்கும் தமிழகம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமைகாக்கப்போகின்றது? என்பதே அக்கேள்வி. தமிழகத்தின் தற்போதைய முதல்வர் என்ற முறையில் மட்டு மல்லாமல் உலகத் தமிழினத் தலைவர் என்ற மகுடத்தை சூடிக் கொண்டவர் என்ற முறையிலும் இந்த வினாவை தமிழக முதல் வரிடம் உரிமையுடன் கோர ஈழத்தமிழர்கள் விரும்புகின்றார்கள்.

இந்தியாவின் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறுபான்மை அரசு, ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதற்கு கலைஞர் கருணாநிதி போன்ற மாநிலக் கட்சிகளின் முழுத் தயவில்தான் தங்கியுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் ஆட்சி நீடிக்கும் விடயத்தில் ஆட்சி வண்டியின் மூக்கணாங்கயிறு கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது என்பது ஊரறிந்த உண்மை. இப்படியான வலிமையுள்ள தமிழர் தலைவர் உலகத் தமி ழரின் தலைவர் இந்திய மத்திய அரசைப் பார்த்து அதைச் சமாளிக்கும் விதத்தில் "ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா இன னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமை காப்பது என்ற நியாயமான கேள்விக்குப் பதிலளிக்கும் வேளை வந்துவிட்டது" என்று கூறுவது போதுமானதல்ல; பொருத்தமானதல்ல.

"பொறுமை காக்கும் எல்லை கடந்து விட்டது பொறுத்தது போதும் பொங்கி எழுவோம்!" என்ற சாரப்பட புதுடில்லிக்கு அவர் சூடு கொடுத்திருக்கவேண்டும். அதுவே பொருத்தமானது. உலகத் தமிழினத்தின் தலைவர் என்ற மகுடத்தைச் சூடுவதற் கான தகுதியுடையவர் தாம் என்பதை அத்தகைய செயற்பாடு மூலமே அவர் நிரூபிக்கமுடியும். அந்த வகையில் ஈழத்தமிழினத்துக்கு உரியதை அவர் ஆற்று வதற்கு இன்னும் காலம் கடந்துவிடவில்லை. இன்னும் உரிமையோடு இன்னும் உறுதியோடு இன்னும் தமிழின மானத்தோடும் பொறுப்போடும் அவர் பொங்கி எழ வேண்டும்.

ஈழத்தமிழினத்துக்காகக் கண்ணீர் விடுவதும்,விட்ட கண் ணீர் காயமுன்னர் அடுத்த கண்ணீரா என்று புலம்புவதும் இப்போது காலம் கடந்த விவகாரங்கள். கண்ணீரை விடுத்து காரியமாற்ற முன்வாருங்கள்; கருமமாற்ற துணிந்து நில்லுங்கள்! அதுவே இன்றைய தேவை.

Uthayan.com

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதலையடுத்து கொழும்பு தொடர்பான நிலைப்பாட்டில் இந்தியா நம்பிக்கையிழப்பு

இலங்கை இராணுவத்தால், கிழக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எறிகணை, ரொக்கட் தாக்குதல்களால் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா கொழும்பின் மீது கொண்டிருந்த சாதகத்தன்மையை இழந்துள்ளதாக இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து இந்தியாவின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையிலேயே பெண்கள், சிறுவர்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படும் நிலையில், இலங்கை தொடர்பாக இந்தியா தனது கொள்கையை மீள் பரிசீலனை செய்யவேண்டுமென தமிழக முதலமைச்சர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கை கோரியுள்ளார்.

இதேவேளை, இச்சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நடத்துமாறு அரசை வலியுறுத்தியுள்ளது.

எனினும் இந்தியா இது தொடர்பாக எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இம்மாத இறுதியில் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வரும்போது, இது தொடர்பில் இந்திய அரசாங்கம் கடுமையாக விவாதிக்கும் என இராஜ தந்திரிகள் கருதுகின்றனர்.

மேலும் இதன்போது இலங்கையின் வடக்குகிழக்கு மாகாணப் பிரிப்பு தொடர்பான விடயத்திலும் இந்தியா தனது கருத்தை வலியுறுத்தும் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.