Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசமான பந்துவீச்சினால் தோல்வியைத் தழுவிய இலங்கை

Featured Replies

அர்ஜூன் அண்ணை 

நீங்கள் எடுத்துவிட்டிருக்கும் பட்டியலில் முக்கால்வாசிப்பேர் இலங்கை கிரிக்கட்டில் அரசியல் ஊடுருவ முன் விளையாடியவர்கள் இவர்களில் சிலபேரை நீங்களும் விட்டுவிட்டீர்கள் (Roy Diaz போன்றவர்கள் )

அடுத்த அரைவாசி முழுதும் அரை வேக்காடுகள் தமிழ் பேசத்தெரியாத தமிழர்கள் Tyronne Mathews மகனிட்கு(அதுதான் உங்கள் Angelo Mathews) தெரிந்த மொழிகள் ஆங்கிலம் ,சிங்களம்.  சிங்களவர்களோடு கிடந்தது அவர்களோட வாழ்ந்து மொழி,பாரம்பரியம் முதற்கொண்டு பெயரை கூட இழந்து விட்ட இந்த அரை வேக்காடுகள் Wikipedia வில் தேடி தமிழர் என்று நீருபிக்கவேண்டியவர்கள் . இவர்களில் இன்னொருவரும் இருக்கிறார் கறுப்பையா raveendra Pushpakumaara (1996 Wills World cup squad)

இவர் தனது அப்பாவின் பெயரை எங்கும் பாவித்ததில்லை. சிங்கள அணியில் விளையாட முற்றிலும் சிங்களவர்களாக மாறிவிட்டவர்கள் இவர்கள் .

இன்னும் சில கேள்விகள் என்னிடம் உள்ளன  முரளிக்கு ஏன் அணித்தலைவர் பதவி வழங்கப்படவில்லை ....?

இது தவிர நீங்கள் மறந்து விட்ட ஒருவரும் இருக்கிறார்  Pradeep Jayaprakashdaran

Indian Oil Cup(2005) இல் அறிமுகமானவர் முதல் ஆட்டத்திலேயே சேவாக்கை பெவிலியனிட்கு திருப்பி அனுப்பியவர் அத்துடன் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள் . 

இதனை விட இன்னும் இருவர் உள்ளனர் எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்தவர்கள் ஒருவர் உயிரோடு இல்லை (கிரிக்கட் தான் ..அரசியல் கிரிக்கட் தான் காவு வாங்கியது) கொழும்பில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் அவரது குடும்பத்தார் அனுமதியில்லாமல் அவர் பெயரை வெளியிட முடியாது . சிங்களவன் கிரிக்கட் விளையாட திறமை போதும் தமிழன் விளையாட அதிதிறமை வேண்டும் அதாவது உலகத்தரம் ,உலகசாதனை படைக்கும் திறமை , மகெல ஜெயர்வர்தன ஒரு காலத்தில் சொதப்பிய சொதப்பலை விடவா ..?அவரோட மனிசியை சக வீரரே அடிச்சிட்டு ஓடிய காலமேண்டு நினைக்கிறேன் ,அதுக்குப்பெயர் கிரிக்கெட்டா ...? அப்போதும் அணியில் வச்சிருந்தாங்கோ தானே ...?

நிலைமை இப்படியிருக்க இந்துவில் இருந்து ஒருவரை விடவில்லையாம் ..?எப்படி விடுவார்

எந்த தாயார் தான் தனது பிள்ளை 

8,9 வருடம் கஷ்ட்டப்பட்டு பயிற்சி செய்து 2 கிரிக்கட் மேச் மட்டும் ஆட அனுமதிப்பார்

நிச்சயமாக எனது பிள்ளையை இப்படியொரு  கிரிக்கட் விளையாட அனுமதிக்கவே மாட்டேன்      

 

இந்த விடயத்துக்கும் மாஹெலவின் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. எல்லாம் தெரிந்த மாதிரி எடுத்துவிடவேண்டாம். :lol:

 

10399580_277807500614_7027378_n.jpg?oh=c


10400296_13361585614_4815_n.jpg?oh=3facd

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனவாதம் அரசியம் மற்றும் சமூக மயப்படுத்தப்பட்டது. தமிழரிகளின் போராட்டம் கூட தரப்படுத்தல், தொழில்வாய்ப்பு என்பவற்றை அடிப்படையாக வைத்தே உருவாகியதென்பதும் உண்மை. ஆகவே விளையாட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்காது என்று நான் நினைக்கவில்லை.

 

வடக்கிலும், கிழக்கிலும் பல திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். இனப் பிணக்குக் காரனமாக ஒன்றில் இவர்கள் கவனிக்கப்படாமலோ அல்லது வேண்டுமென்றோ புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

 

ஆனால் நான் அறிந்த சில விடயங்களை இங்கே பகிர்ந்துகொள்ளவும் விரும்புகிறேன்.

 

இறுதி 80கள் அல்லது 90களின் ஆரம்பம் என்று நினைக்கிறேன். இலங்கையின் தேசிய  கூடைப் பந்தாட்ட (Basketball) அணியில் கிழக்கும் மாகணத்தின் புகழ்பெற்ற புனித மிக்கேல் கல்லுரியிலிருந்து எனது நண்பர்கள் இருவர் தெரிவாகி இருந்தனர். இவர்கள் பலமுறை இலங்கையணியுடன் சர்வதேசப் போட்டிகளில் கலந்து சிறப்பித்துள்ளனர். கடுமையான போர்நடந்த காலமென்றாலும் கூட இவர்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. 


இதேபோல இலங்கையில் நடைபெற்ற சார்க் போட்டிகளில் கூட நீச்சல் பிரிவில் ஒரு தமிழர் பல சாதனைகளை நிகழ்த்தினார். இது நடந்தது பிரேமதாசா காலத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

ரகு உங்கள் கிரிகட் வர்ணனை வாசிக்க உண்மையிலேயே நன்றாக இருந்தது. நீங்கள் ஒரு பகுதிநேர வர்ணனையாளராக வர முடியும்.ரொம்ப பாராட்டுக்கள்.

 

ஆசிய நாடுகளில் அரசியல் பொருளாதார பலம் இல்லாவிட்டால் விளையாட இயலாது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகு உங்கள் கிரிகட் வர்ணனை வாசிக்க உண்மையிலேயே நன்றாக இருந்தது. நீங்கள் ஒரு பகுதிநேர வர்ணனையாளராக வர முடியும்.ரொம்ப பாராட்டுக்கள்.

 

ஆசிய நாடுகளில் அரசியல் பொருளாதார பலம் இல்லாவிட்டால் விளையாட இயலாது.

 

 

நன்றி ஈழப்பிறேன்.

 

எனக்கு அந்தத் தகுதி எதுவும் இல்லை.

 

நான் ரசித்ததை ஏதோ கிறுக்குகிறேன். சிலவேளை எனக்கே நான் எழுதியதை சகிக்க முடியாமலிருக்கும்.

 

உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றிகள் ! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முரளிக்கு எதற்காக அணித்தலைவர் பதவியோ அல்லது உப தலைவர் பதவியோ கொடுக்கப்படவில்லை என்று நான் அவ்வப்போது எண்ணிப் பார்ப்பதுண்டு. நீண்டகாலம் அணிக்காக விளையாடியவர், தனி ஆளாக நின்று அணியின் வெற்றிக்கு வித்திட்டவர், மிகச் சிறந்த பந்துவீச்சாளர், களத்தடுப்பாளர்....ஆனாலும் அவருக்கு பதவியேதும் கொடுக்கப்படவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு இப்போதும் இருக்கிறது. அணியில் அவருக்கு பிறகு வந்து இணைந்த மஹேல, சங்கக்கார ஆகியோருக்கு பதவிகள் தேடிவந்தபோதும்கூட, முரளிக்கு அவை வழங்கப்படவில்லை. 

 

ஆனால் முரளிபற்றி பலருக்கும் தெரிந்த ஒரு சம்பவத்தை இங்கு பகிரலாம் என்று நினைக்கிறேன்.

 

இது நடந்தது 1995 இல், அவுஸ்த்திரேலியாவில் பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் முக்கோணத் தொடர் போட்டியில் என்று நினைவு. இங்கிலாந்தணிக்கு எதிராக இலங்கை விளையாடியது. பந்துவீசும்போது முரளியின் பந்துவீச்சை தவறானது (No Ball) என்று போட்டியின் நடுவர் எமேர்சன் பலமுறை தடை செய்தார். இதனால் முரளி மிகவும் குழம்பிப் போயிருந்தார். அப்போது இலங்கையணியின் தலைவராகவிருந்த அர்ஜுன ரணதுங்க, முரளிக்காக போட்டி நடுவருடன் வாதாடியது மட்டுமல்லாமல், முழு அணியையும் அழைத்துக்கொண்டு வெளிநடப்புச் செய்தார். பிறகு முரளியை பந்துவீச்சிலிருந்து நிறுத்திவிட்டு போட்டி தொடர்ந்தது. இங்கிலாந்தணி 310 ஓட்டங்கள் எடுத்தபோதும் கூட, இலங்கையணி கடுமையாகப் போராடி இங்கிலாந்தணியை வீழ்த்தியது. போட்டி முடிந்தபின்னர் நடைபெற்ற பேட்டியில் இந்தப் போட்டியை முரளிக்காக வென்றோம் என்று இலங்கையணி கூறியது.

 

முரளிக்கு தலமைப் பதவி கொடுக்கப்படாமல் விடப்பட்டதற்கு  இனவாதம் காரணமென்றால் எதற்காக அன்று அர்ஜுன முரளிக்காக வெளிநடப்புச் செய்தார் என்பதும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை Chance கிடைத்தால் தான் Sachin Tendulkar 

வாய்ப்பு கிடைத்தால் தான் முத்தையா முரளிதரன் 

 

சான்ஸ் கிடைக்கும் எல்லோரும் முரளியும் தண்டுல்கரும் ஆகிவிட முடியாது .உங்கள் சிந்தனையில் தான் பிழை.

 

உங்களை மாதிரி சிந்தித்தால் ஒவ்வொரு ஆஸி குடிமகனும் எனக்கு சான்ஸ் தந்தால் வார்னே ஆகியிருப்பேன் பாகிஸ்தானில் இருப்பவன் சான்ஸ் தந்தால் வாசிம் ஆக்ரம் ஆகியிருப்பேன் என்று சொல்லிக்கொண்டு திரியலாம் .

ஆட தெரியாவிட்டால் மேடை சரியில்லை என்று சொல்லகூடாது .

அண்ணை இதுதான் விதண்டாவாதம் 

திறமையானவனுக்கு முதலில் வாய்ப்பு கிடைக்கவேண்டும், அதற்காக ரோட்டில் கிடப்பவனைஎல்லாம்

கொண்டு போய் வாய்ப்பு கொடுக்கவேண்டுமென்பதில்லை. முரளியும் தென்டுல்காரும் உருவானது வாய்ப்பினால் தான் என்பது தான் எனது வாதம், உங்களுக்கும் எனக்கும் வாய்ப்பு தருவதால் நாமிருவரும்

முரளியும் தென்டுல்காரும் ஆகமுடியாது அது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் .

 

நவீனன் அண்ணை

மன்னிக்கவும் தவறான தகவல் அது டில்ஷான் ,மனிசியை அடிச்சிட்டு ஓடியவர்  உபுல் தரங்க

அந்தகாலத்தில் தான் டில்ஷான் தொடர்ந்து முட்டை போட்டவர் (எனது தவறு தான் மகெலவை இதற்குள் இழுத்து விட்டது :lol: ) சரி அவர்கள் விடயம் நமக்கெதற்கு (சிலவேளை டில்ஷான் தொடர்ந்து போட்ட முட்டையை மறைப்பதற்காக எடுத்து விட்ட கதையாக கூட இருக்கலாம்,வெகு பிரபலமாக பேசப்பட்ட கதை இது )

அர்ஜுன் அண்ணை 

நாட்டில் இருப்பவன் என்ற ரீதியில் நீங்கள் வெளிநாட்டில் இருந்து புளுகும் அளவிற்கு இங்கு மாற்றம் ஒன்றும் வந்துவிடவில்லை, ஒவொரு நாளும் சிங்களவனுடன் வேலை செய்பவன் என்ற மட்டில் அவர்கள் எண்ணங்களில் மாற்றம் வரவில்லை நீங்களும் நானும் இது தொடர்பாக ஆயிரம் கருத்தெழுதலாம் ...அனால் எதுவும் மாறவில்லை என்பது தான் உண்மை, யாழ்ப்பாணத்தில் நீர் மாசுபட்ட விடயத்தைக்கூட நியாயப்படுத்தி பேசும்நிலையில் தான் இன்னும் இருக்கிறார்கள். இங்கு எதுவும் மாறவுமில்லை மாறப்போவதுமில்லை   

மேலே Pradeep  Aussie க்காக விளையாடுகிறாரா...?

 

Edited by அக்னியஷ்த்ரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான சந்தர்ப்பம் என்பது கொழும்பில் பிறந்துவளர்ந்த தமிழர்களுக்கு ஒருவிதமாகவும், வடக்குக் கிழக்கில் பிறந்து வளர்ந்த தமிழர்களுக்கு இன்னொரு விதமாகவும் வழங்கப்படுகிறதென்பதுதான் எனது வாதம்.

 

கொழும்பில் பிறந்துவளர்ந்த தமிழர்களை அணிக்குள் சேர்ப்பது சிங்களவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எதனால் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. எனது நெடுநாள் கொழும்பு வாழ்வினூடாக இதனை உணர்ந்திருக்கிறேன். பல்கலைக் கழகத்தில் சிங்கள மாணவர்கள் என்னுடன் பழகும் விதத்திற்கும், வடக்குக் கிழக்கிலிருந்து வந்த தமிழ் மாணவர்களுடன் பழகும் விதத்திற்கும் நிறையவே வேறுபாடு இருந்திருக்கிறது. பலமுறை காலி, கம்பஹா என்று அவர்களின் வீடுகளுக்குச் சென்று நாட்கணக்கில் தங்கியிருக்கிறேன்.

 

ஆனால் எனது சக தமிழ் மாணவர்கள் அப்படியில்லை. சிங்களம் தெரியாமையும், ஐய்யமும் அவர்களை சிங்கள மாணவர்களிலிருந்து ஒதுக்கியே வைத்திருந்தது.  பரீட்சயமில்லாமையும், மொழிரீதியான சிக்கல்களும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழர் சிங்களவர் என்று வரும்போது அவர்களைப்பொறுத்தவரையில் நாம் எல்லோரும் ஒருவரே.

 

ஆகவேதான் வடக்குக் கிழக்கு என்றவுடன் சிங்களவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள், தமிழரென்றால் எல்லோரும் புலிகள் என்கிற வறட்டு வாதம் வந்து அவர்களின் மூளைகளில் தங்கிவிடுகிறது. இதனால் வட கிழக்கு வீரர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாமல் இருக்கிறது. 

 

அடுத்தது வடக்கு-கிழக்கிற்கும் கொழும்பிற்குமான விளையாட்டுத் தொடர்புகள் 80 களின் ஆரம்பத்திலிருந்தே அற்றுப்போய் விட்டன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும், தமிழில் உள்ள சிறந்த வீரர்கள் பற்றிச் சிங்களவர்கள் அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அப்போது அதிகம் இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சிங்கள அணியில் விளையாடுவதற்கு எத்தனை தமிழர்கள் இப்போதும் ஆயத்தமாக இருக்கிறோம் ? போர்காலத்தில் சிங்களவருடன் ஒழுங்குசெய்யப்பட்ட பல விளையாட்டு நிகழ்வுகள் ரத்துசெய்யப்பட்டன, ஒழுங்கு செய்தவர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது அச்சுருத்தப்பட்டார்கள். இதற்கெல்லாம் முன்னர் நாங்கள் காரணம் கூறி நியாயப்படுத்தியிருக்கிறோம். அப்படியிருக்க சிங்களத்தை மட்டும் இதற்காக காரணம் கூறுவது சரியா??

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் அண்ணை 
மிகவும் ஆரோகியமான கருத்துகள் , முதலில் முரளி உலகசாதனை நிகழ்த்த காரணம் முரளி மட்டுமில்லை 
அர்ஜுன ரணதுங்கவே
இன்றும் நான் மதிக்கும் சிறந்த அணித்தலைவர், கொஞ்சமும் இனத்துவேசம் இல்லாதவர், முரளியை அணியில் வைத்திருந்ததால் வந்த பலமுட்டுகட்டைகளை தனித்தே எதிர்கொண்டவர் (பல விடயம் கேள்விப்பட்டேன் உண்மையா அல்லது பொய்யா என்று தெரியாததால் எழுதவில்லை,இதில் குறுசிங்க சம்பவமும் ஒன்று அதுவும் உண்மையா என்று தெரியாது), முரளி தொடர்ந்து விளையாடியதும் அர்ஜுனவினாலயே
எம்மிடையேயும் பிழைகள் இருக்கின்றன ...இப்படி தட்டு தடுமாறி வரும் ஒன்று இரண்டும் துவேசத்தால் தட்டிகளிக்கபபடுவதால் தான் இலங்கை அணியில் தமிழரே இல்லாமல் போய்விட்டது. அர்ஜுன என்ற தனி மனிதனின் முடிவால் அன்று இலங்கையே எழுந்து நின்றது 
நாடு என்று வரும் போது நான் கூட இலங்கை பின்னால் தான் நிற்ப்பேன் ஆனால் இவர்கள் இப்படியே இனத்துவேசம் பேசி எம்மிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச தேசபக்தியையும் இல்லாமல் செய்துவிடுவார்கள் 
கொழும்பு தமிழரை விட்டு விடுங்கள் அவர்களுக்கு சிங்களவருடன் எப்படி பழகவேண்டும் என்று அக்கு வேறு ஆணி வேறாக தெரியும்.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் அண்ணை 

மிகவும் ஆரோகியமான கருத்துகள் , முதலில் முரளி உலகசாதனை நிகழ்த்த காரணம் முரளி மட்டுமில்லை 

அர்ஜுன ரணதுங்கவே

இன்றும் நான் மதிக்கும் சிறந்த அணித்தலைவர், கொஞ்சமும் இனத்துவேசம் இல்லாதவர், முரளியை அணியில் வைத்திருந்ததால் வந்த பலமுட்டுகட்டைகளை தனித்தே எதிர்கொண்டவர் (பல விடயம் கேள்விப்பட்டேன் உண்மையா அல்லது பொய்யா என்று தெரியாததால் எழுதவில்லை,இதில் குறுசிங்க சம்பவமும் ஒன்று அதுவும் உண்மையா என்று தெரியாது), முரளி தொடர்ந்து விளையாடியதும் அர்ஜுனவினாலயே

எம்மிடையேயும் பிழைகள் இருக்கின்றன ...இப்படி தட்டு தடுமாறி வரும் ஒன்று இரண்டும் துவேசத்தால் தட்டிகளிக்கபபடுவதால் தான் இலங்கை அணியில் தமிழரே இல்லாமல் போய்விட்டது. அர்ஜுன என்ற தனி மனிதனின் முடிவால் அன்று இலங்கையே எழுந்து நின்றது 

நாடு என்று வரும் போது நான் கூட இலங்கை பின்னால் தான் நிற்ப்பேன் ஆனால் இவர்கள் இப்படியே இனத்துவேசம் பேசி எம்மிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச தேசபக்தியையும் இல்லாமல் செய்துவிடுவார்கள் 

கொழும்பு தமிழரை விட்டு விடுங்கள் அவர்களுக்கு சிங்களவருடன் எப்படி பழகவேண்டும் என்று அக்கு வேறு ஆணி வேறாக தெரியும்.    

 

 

அருமை அக்னியஷ்த்ரா,

 

முரளி ரணதுங்க எனும் தனி மனிதனால் மட்டுமே அணிக்குள் தொடர்ந்தும் இருந்தார் என்பதை பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றையவர்கள் முரளி பற்றி என்ன விதமான பார்வையைக் கொண்டிருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது.

 

ஆனால் அர்ஜுன பற்றி நீங்கள் அறியாததல்ல. அவர் சிகல உறுமபயக் கட்சியில் இணந்துகொண்டவர் என்பதும் சிறிதுகாலம் இனவாதத்தை கைய்யில் எடுத்திருந்தவர் என்பதும் நாம் அறிந்தவைதானே ??  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.