Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூட்டமைப்பு தொங்கு நிலைக்கு வரப்போகின்றது? உட்கட்சிப் போட்டி! களத்தில் சுமந்திரன், கஜேந்திரன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம்…?

Featured Replies

ஈழத்தில் ஜனநாயகம் தளைத்தோங்குகிறது என்பதைக் காட்டுவதாகவே அங்கு இடம்பெறும் உருவப் பொம்மைகள் எரிப்புப் போராட்டங்கள் காட்டி நிற்கின்றன. ஆனால் தலைவர்களின் உருவப் பொம்மைகளை எரிக்கும் செயல்கள் மக்களின் எழுச்சியால் இடம்பெறவில்லை.

என லங்காசிறி வானொலியின் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்வைத்து அரங்கேற்றப்படும் ஒரு நாடகம் இந்த உட்கட்சிப் போட்டி என்பதை தெளிவாகக் காண்கின்றார்கள். மாறாக தமிழினம் தனது துன்பங்களிலிருந்து சிறிதாவது மீளக்கிடைத்துள்ள சூழ்நிலையைக் குழப்புவதற்காக உணர்ச்சி அரசியலை சிலர் முன்னெடுக்கின்றனர்.

யாழ் தேர்தல் மாவட்டப் பிரதிநிதித்துவம் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதில் இருந்து 7 பாராளுமன்ற உறுப்பினர்களாகக் குறைகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் யார் போட்டியிடுவது என்ற குழப்பங்களை போட்டியிட விருப்புக் கொண்டோர் ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2010ல் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 6 ஆயிரம் வாக்குகளை மாத்திரம் பெற்றது. இந்த வாக்குகள் கூட்டமைப்பிலிருந்து பிரிந்ததால். இதனால் ஈ.பி.டி.பி இன்னொரு ஆசனத்தை கைப்பற்றியது.

அதுபோலவே இந்த முறையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடுகிறது. ஈ.பி.டி.பி அல்லது ஐ.தே.கவிற்கு இது மிகவும் சாதகமாக அமைந்து அவர்களிற்கு மேலதிக ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக்கொடுக்கும் என்பது உள்ளிட்ட பல மிகமுக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

- See more at: http://www.canadamirror.com/canada/39103.html#sthash.QCCvCyTq.dpuf

  • கருத்துக்கள உறவுகள்


859f782c5ad8d52de41b046ce0576245
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பை இல்லாது ஒழிப்பதே....
சம்பந்தன், சுமந்திரனது நோக்கம்.
அது நிறைவேறிக் கொண்டு வருகின்றது.
இந்த அல்லக்கைகளின் நடவடிக்கைகளை.... ஆரம்பத்தில் இருந்து கவனிக்கும் போதே புரிந்துவிட்டது.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரும் சுமந்திரனும் எதிர்பார்ப்பதுபோல யாழ் மாவட்டத்திலும்
சிங்களக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் இருந்தால்தான் இன ஒற்றுமையை
கட்டிக்காக்க முடியும்

சம்பந்தரும் சுமந்திரனும் எதிர்பார்ப்பதுபோல யாழ் மாவட்டத்திலும்

சிங்களக்கட்சிகளின் பிரதிநிதித்துவம் இருந்தால்தான் இன ஒற்றுமையை

கட்டிக்காக்க முடியும்

 

உண்மை இன ஒற்றுமையை வளர்க்க சிங்கள கட்சிகளுக்கு யாழ்மாவட்டத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் சலுகைளை நேரடியாக சிங்களத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம். சம்பந்தன், சுமந்திரன் போன்ற தரகர்கள் தேவையில்லை. எமது கிழக்கு வாழ் தமிழ் மக்களும் இந்த விடயத்தை சிந்திக்கவேண்டும்.

சுதர்மா -கனடாவில் இப்படி ஒரு ஆள் இருப்பதாக இன்றுதான் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

சுதர்மா -கனடாவில் இப்படி ஒரு ஆள் இருப்பதாக இன்றுதான் தெரியும் .

 

இல்லையே, முன்னர் விடுதலைப் புலிகளையும் புலம்பெயர் தமிழர்களையம் குளிர்விக்கும் முகமாக பல கட்டுரைகளை இணையத்தில் எழுதியும் கனடாவில் இயங்கிய 'தமிழ்ச்சோலை' வானொலி ஊடாக பல பேட்டிகளையும் தனது மற்றும் பிறரது கட்டுரைகளையும் வாசித்தவர் இவர்.

இவர்கள் காலத்துக்கு காலம் தமது வித்துவத் தன்மையினைக் காட்டுவதற்கு களம் தேடுபவர்கள். என்ன இவர்கள் கூறிய எதிர்வுகூறல் எதுவும் நடைபெறவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

விடுங்க அப்பு, அவரவர் தமது கொள்ளளவுக்கு ஏற்ப செய்யட்டும். விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இவர்களைப் போன்றவர்கள்தானே தேவை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.