Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தில் சிறுவர் சிறிலங்கா மீது ஐ.நா. குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தில் சிறார் சேர்ப்பு: சிறிலங்கா மீது ஐ.நா. குற்றச்சாட்டு

[திங்கட்கிழமை, 13 நவம்பர் 2006, 19:42 ஈழம்] [ச.விமலராஜா]

சிறிலங்கா இராணுவமானது கருணா குழு மூலமாக சிறாரை இராணுவத்தில் சேர்க்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் தனது 10 நாள் இலங்கை பயணத்தின் நிறைவில் இன்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:

சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ்க் கிராமங்களுக்குச் சென்று சிறார்களை புகைப்படம் எடுக்கின்றனர். அதன் பின்னர் கிழக்கு மாவட்டங்களான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நெருக்கமான இணைந்து செயற்படும் கருணா குழு மூலமாக சிறாரை வலுக்கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கின்றனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் கேள்வி எழுப்பினோம். சிறார் சேர்ப்பு குறித்து உடனடியாக விசாரணை நடத்துவதாகவும் எந்த ஒரு அதிகாரியும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகிந்த உறுதியளித்தார்.http://www.eelampage.com/?cn=29751

சிறிலங்கா இராணுவத்துடன் கருணா குழு சேர்ந்தியங்குகிறது என்பது பொதுவாக அறியப்பட்ட விடயம். இது சட்டத்தின் ஆட்சியின் மரியாதையை அரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் சிறார்களை விடுதலைப் புலிகள் கடத்துவதற்கு இடமளிக்கிறது.

வயது குறைந்த பெண்களையும் இளைஞர்களையும் படையணிகளில் சேர்த்தமைக்காக சர்வதேச சமூகத்தின் கண்டனத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முகம் கொடுத்தனர். இந்த ஆண்டு இறுதிக்குள் படையணிகளில் உள்ள அனைத்து சிறார்களையும் விடுவிப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதியளித்துள்ளனர்.

தாங்கள் ஒப்புக்கொண்டபடியான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதை அறிய விரும்புகிறேன். இந்த அமைப்புக்கள் மீது சர்வதேச சமூகத்தின் கண் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீண்டகாலமாக நீடிக்கும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார் அலன் றொக்.

இராணுவத்தில் சிறார் சேர்ப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய நாடுகள் சபை முதல் முறையாக குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.eelampage.com/?cn=29751

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் முக்கியமான காலத்தில் இப்படியான அறிக்கை வந்துள்ளது. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6144200.stm

ஜநா சிறீலங்கா படைகள் சிறுவர்களை கடத்தி பலவந்தமாக துணை ஆயுதக் குழுக்களில் இணைப்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக குற்றம் சாட்டு.

http://www.eelamist.com/podcast/index.php?...0Media&p=42

  • கருத்துக்கள உறவுகள்

UN accuses Sri Lanka of recruiting child soldiers

COLOMBO (AFP) - A United Nations official accused Sri Lankan government security forces of recruiting child soldiers on behalf of an allied paramilitary group also fighting the Tamil Tiger rebels.

It is the first time the UN has made such a charge against Colombo. The Tamil Tigers have long been under fire for using child soldiers in their three-decade separatist war.

The special advisor to the UN Representative for Children and Armed Conflict, Allan Rock, told reporters here on Monday that he had evidence of direct involvement of troops in forcibly enlisting children for a paramilitary group.

"Sri Lankan security forces rounded up children to be recruited by the Karuna faction," Rock said at the end of a 10-day mission to study the situation of children in the embattled island.

The Karuna faction is a Tamil Tiger breakaway group, which the main Liberation Tigers of Tamil Eelam (LTTE) accuses of aiding the military.

http://news.yahoo.com/s/afp/20061113/wl_st...en_061113122515

தமது அமைப்பினரின் மீதான குற்றச்சாட்டை கருணா அணியினரும் மறுத்துள்ளனர்.[/color]

கருணா அணிக்காக சிறார்களை படைக்குச் சேர்ப்பதாக இலங்கைப் படையினர் மீது ஐ.நா குற்றச்சாட்டு

இலங்கையில் கருணா அணியின் சார்பில் இலங்கை அரசாங்கப் படையினர் சிறார்களை போர்ப் படைக்கு சேர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் உட்பட கிழக்கு மாவட்டங்களில் கருணா அணியினர் மிகவும் மோசமாக சிறார்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவு இருப்பதாகவும் இலங்கை சென்ற ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறார்கள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த விவகார சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் சிறார்களை கடத்தும் கருணா அணியினர் எவ்வித தடையும் இன்றி இராணுவ சோதனைச் சாவடிகள் ஊடாகச் சென்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆயுதக் குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்

அதுமாத்திரமன்றி சில கிராமங்களை சுற்றிவளைக்கும் படையினர் அங்கு இளைஞர்களைப் படம்பிடித்து, அவர்களில் எவரை கடத்தலாம் என்று கருணா அணியினருக்குக் கூறுவதாகவும் அலன் றொக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை விடுதலைப்புலிகளும் தொடர்ந்தும் சிறார்களை கடத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளா.

இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் தலைமையுடனான சந்திப்பின் போது அவர்களுக்கு சுட்டிக்காட்டியதாகவும் அலன் றொக் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், கருணாவும்(ஆவணப்படம்)

இலங்கையில் தான் சென்ற இடங்களில் மக்கள் அச்ச உணர்வுடனும், பாதுகாப்பற்ற உணர்வுடனும் காணப்படுவதாகவும், தமது பாதுகாப்புத் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

தமது பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இலங்கை மக்கள் இழந்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா அதிகாரியின் இந்த குற்றச்சாட்டுக் குறித்து கருத்துக் கூறிய இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேசவல்ல அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல அவர்கள், இது குறித்து ஏற்கனவே ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதாகவும், அவை குறித்து விசாரிக்க அவர் உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமது அமைப்பினரின் மீதான குற்றச்சாட்டை கருணா அணியினரும் மறுத்துள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐக்கிய நாடுகள் சபை பலகாலங்களுக்கு பின்னர் இதை புரிந்துகொண்டிருந்தாலும்.. இப்போதைய இந்த நேரத்தில் வெளிவந்துள்ளது அதிமுக்கியமான சந்தர்ப்பம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தசெய்தி ஏற்கனவே யாழில் பதியப்பட்டுவிட்டது..

கருனா குழுவின் பேச்சாளர் திருவாளர் சீ..ன் அங்கு இருகிறார்தானே

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தில் சிறார்: ஐ.நா. குற்றச்சாட்டுக்கு சிறிலங்கா விளக்கம்

சிறிலங்கா இராணுவத்தில் சிறார் சேர்க்கப்படுகின்றனர் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் குற்றச்சாட்டுக்கு சிறிலங்கா இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் விடுதலைப் புலிகளின் வன்முறைகளை ஒடுக்கவும் மட்டக்களப்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் எதுவித இரகசிய நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்பு பிரதிநிதி அலன் றொக் தெரிவித்திருந்த கருத்துகளால் சிறிலங்கா இராணுவத்தினர் அதிருப்தியடைந்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் தமிழர் கிராமங்களுக்குச் சென்று சிறார்களை படம்பிடித்து தங்களுடன் சேர்ந்தியங்கும் கருணா குழு மூலம் இராணுவத்தில் சிறார்களை வலுவில் சேர்க்கின்றனர் என்று அலன் றொக் குற்றம்சாட்டியிருந்தார்.

இலங்கைக்கு 10 நாள் பயணம் மேற்கொண்டிருந்த அலன் றொக் தனது பயணத்தின் இறுதிநாளன்று கொழும்பில் நேற்று இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார்.

இராணுவத்தில் சிறார் சேர்க்கப்படுவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபை முதல்முறையாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.

-புதினம்

நல்லா குடுத்திரிகிரார் சிறீலங்காவை பற்றி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கருத்துக்களையும் பதியுங்கள்!

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20061114022436

அவர் பொய் சொல்லவில்லையாம் யாரவ்து தான் சொல்லியிருக்கவேணுமென்கிறார

 பாதுகாப்பு நிலவரம்: வட பகுதியில் கைவிட்டுப் போகும் கடற்படையினரின் ஆதிக்கம்

கடற்படையினரின் கடலாதிக்கம் கைவிட்டுப் போய்விடும் நிலையேற்பட்டுள்ளது. அடுத்தடுத்து கடற்படையினரே இலக்கு வைக்கப்பட்டு வருகையில், சிறப்புப் பயிற்சி பெற்ற கடற்படையணிகளில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஹபரணவிலும் காலியிலும் கடற்படையினர் பேரிழப்புக்Pளை சந்தித்திருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினர் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இதைவிட, திருகோணமலை நிலாவெளி கடற்பரப்பிலும் வெள்ளிக்கிழமை கடற்சமர் நடைபெற்றுள்ளது.

இராணுவத்தினரைப் போலன்றி, கடற்படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவு. கடற்படையினரின் முழுப் பலமும் இன்று வடக்கு - கிழக்குப் பகுதிகளிலேயே ஒன்று குவிக்கப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கில், விஷேட பயிற்சிபெற்ற கடற்படையினரே கடமையில் இருக்கின்றனர்.

அண்மைக் காலங்களில் வடக்கு - கிழக்கிலும், அதற்கு வெளியேயும் தெற்கிலும் கடற்படையினர் மீது அடுத்தடுத்து கடும் அடிகள் விழுந்துள்ளன. இதில் அவர்கள், சிறப்புப் பயிற்சிகள் பெற்ற 200 இற்கும் மேற்பட்டவர்களை இழந்துள்ளதுடன் 150 இற்கும் மேற்பட்டவர்கள் நீண்ட காலத்திற்கு களமுனைக்குத் திரும்ப முடியாதளவிற்கு படுகாயமடைந்துள்ளனர்.

கிழக்கில் பாரிய படை நடவடிக்கைக்கு படைத்தரப்பு திட்டமிட்டு வருகையில் வடக்கிலும் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க படைத்தரப்பு முற்படுகிறது.

யாழ். குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை மூடியதன் மூலம் குடாநாட்டு மக்களை தனது இடுக்கிப் பிடிக்குள் வைத்திருக்கும் படையினர், இன்று அங்குள்ள மக்கள் தங்களின் ஒவ்வொரு தேவைக்கும் படையினரை நம்பியிருக்க வேண்டியதொரு இக்கட்டான சூழ்நிலைக்கும் தள்ளிவிட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டை கைப்பற்றாது அங்குள்ள மக்களை படையினரின் பிடியிலிருந்து மீட்பதாயின் குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை உடனடியாக மீளத் திறக்க வேண்டிய அவசர தேவை புலிகளுக்குள்ளது.

கிளாலி - முகமாலை பகுதிகளில் தனது நிலைகளை மிக நன்கு பலப்படுத்தியிருக்கும் படையினர் புலிகளின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ளும் விதத்தில் தங்களைத் தயார்படுத்தி வைத்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான மோதல்களை சாட்டாக வைத்து `ஏ-9' பாதை இன்று இறுக மூடப்பட்டுள்ளது.

`ஏ-9' பாதையை திறப்பதாயின், புலிகள் குடாநாட்டின் மீதான முற்றுகையை நிறுத்த வேண்டுமெனவும் `ஏ-9' வீதியூடாகச் செல்லும் பொருட்களுக்கு வரி அறவிடக் கூடாதெனவும் அரசு நிபந்தனை விதிக்கிறது. புலிகள் இதனை நிராகரித்துவிட்ட நிலையில் குடாநாட்டில் பெரும் பட்டினி நிலை தோன்றி வருவதால், குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை திறக்க வேண்டுமென்று சர்வதேச சமூகம் கடும் அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளது.

ஆனால், மீண்டும் `ஏ-9' பாதையை திறக்க மறுக்கும் அரசு அதற்கு மாற்றாக பூநகரி - கேரதீவுப் பாதையை திறக்க பெரிதும் அக்கறை காட்டுகிறது. இதற்கான யோசனைகளையும் அரசு புலிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதுடன் இது குறித்து இணைத் தலைமை நாடுகளுக்கும் கூறியுள்ளது.

`ஏ-9' பாதையை திறக்காது பூநகரி - கேரதீவுப் பாதையை திறப்பதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை விழுத்த அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி குடாநாட்டில் வெடித்த மோதல்களையடுத்து `ஏ-9' பாதை மூடப்பட்டுவிட்ட நிலையில் குடாநாட்டில் இன்று மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது. எங்கும் பசி,பட்டினி நிலை ஏற்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கான போக்குவரத்தின்றி மக்கள் திறந்த வெளிச் சிறைச்சாலைக் கைதிகள் போன்றே வாழ்கின்றனர்.

இவர்களின் தேவைகளுக்காக கப்பல்கள் மூலம் பொருட்களை தாராளமாக அனுப்புவதென்பது சாத்தியப்படாததால் தரை வழிப் பாதை திறப்பு குறித்து சர்வதேச சமூகம் கடும் நெருக்கடி கொடுத்து வருகையிலேயே பூநகரிப் பாதையை திறக்க அரசு அவசரப்படுகிறது.

பூநகரிப் பாதையில் சங்குப்பிட்டிக்கும் கேரதீவுக்குமிடைப்பட்டது சுமார் 500 மீற்றர் தூரமான ஆழ்கடல் பரப்பாகும். இதனால், புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் சங்குப்பிட்டிக்கும் படையினரின் கட்டுப்பாட்டினுள்ளிருக்கும

VN: leger Sri Lanka ronselt kinderen

Het regeringsleger van Sri Lanka ronselt kindsoldaten. Dat zegt de VN, die bewijzen hiervoor heeft gevonden. Een medewerker van de VN is tien dagen in het gebied geweest en hij heeft daar met kinderen en ooggetuigen gesproken.

De kindsoldaten worden gebruikt door een paramilitaire groep voor de strijd tegen de Tamil Tijgers. Sinds mei vorig jaar zijn volgens de VN al zeker 135 kinderen geronseld, vaak jongens van 13 en 14 jaar. De meesten zijn ontvoerd.

Het leger spreekt de beschuldigingen tegen, net als de paramilitairen. De Sri Lankaanse president stelt een onderzoek in naar het ronselen van kindsoldaten.

http://www.nos.nl/nos/artikelen/2006/11/ar...4DD3624C84.html

மகிந்தவின் முகமூடி கிழியும் காலம் இது.

ஐ-நா தூதுவர் ஆதாரங்கள் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதுக்கு கேகலிய என்ன பொய் சொல்லி சமாளிக்க போகிறார்? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

post-3095-1163521843_thumb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Britain to push Sri Lanka peace bid amid child soldier charge

COLOMBO (AFP) - A British envoy has arrived in Sri Lanka in a bid to salvage a tottering peace process as the former British colony faced UN charges of recruiting child soldiers.

British MP Paul Murphy held talks with Sri Lankan officials handling the Norwegian-backed peace process, officials said, adding he planned to meet with Tamil Tiger rebels before departing Thursday.

"He is also meeting the Sri Lanka Monitoring Mission (SLMM)," a British High Commission (embassy) official said.

Government officials said President Mahinda Rajapakse was hosting Murphy at a dinner and would discuss the collapsing peace process. Murphy will also separately meet with the government's four-member peace negotiating team.

Murphy arrived in the island a day after the United Nations accused government forces of forcibly recruiting child soldiers on behalf of "the Karuna group", an allied paramilitary force fighting Tamil Tiger rebels.

The special advisor to the UN Representative for Children and Armed Conflict, Allan Rock, told reporters that government soldiers had rounded up Tamil children to be recruited by the Karuna group.

The charge came on top of international condemnation of the killing of a large number of Tamil civilians during an artillery exchange between troops and the Tigers in the east last week.

Shells fired by security forces hit a refugee centre and killed up to 65 people. Rajapakse expressed regret over the killings and ordered an investigation.

Rock, who visited the area shortly after the military shelling, said civilians were living in fear and children were severely affected.

"People are even afraid to go to the bathroom, fearing that they will be hit by shells," he said at the end of a 10-day mission.

"People did not want us to leave," he said. "The situation is beyond desperate."

"Wherever I travelled, I saw with my own eyes that systems meant to safeguard children's rights are either deteriorating or absent," he added.

"There is an urgent need for an independent monitoring capacity to ensure children affected by the conflict are protected."

Rock did not elaborate on the proposed mechanism, but said he would report back to the Security Council on his findings.

The allegations over child recruitment marks the first time the UN has levelled such a charge against Colombo.

The Tamil Tigers have long been under fire for using child soldiers in their separatist war.

The army said the UN allegations were "completely misleading".

However, Rock said the president, who is army commander-in-chief, had pledged an "immediate" investigation and to punish anyone found guilty.

"The complicity of the security forces with the Karuna group is common knowledge. It corrodes respect for the rule of law and creates space for more LTTE abductions of children," he said.

Diplomats said the assassination of a moderate Tamil legislator Friday has also damaged Sri Lanka's human rights record and drawn condemnation from the island's main financial backers.

Rights violations have been on the rise as fighting between troops and Tamil Tiger rebels has escalated despite a truce in place since February 2002.

Over 3,300 people have been killed in the new cycle of violence in the past year, according to official figures.

Sri Lanka's Tamil separatist conflict has claimed over 60,000 lives since 1972.

http://news.yahoo.com/s/afp/20061114/wl_uk...cy_061114072537

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியின் குற்றச்சாட்டை கண்காணிப்புக்குழுவும் உறுதி செய்தது

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் வெளியிட்ட அறிக்கையை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவும் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ஃப்ஸ்டொட்டிர் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா. பிரதிநிதி வெளியிட்ட கருத்து சரியானது. சிறிலங்கா அரச படையினர், தமிழ்ச் சிறார்களைக் கடத்தும் சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டுள்ளதை நாங்களும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இதனை உறுதிப்படுத்த, கண்காணிப்புக்குழுவிடமும் போதிய ஆதாரங்கள் உள்ளன. கடந்த யூன், யூலை, ஓகஸ்ட் மாதங்களில் மிக அதிகமான சிறார் கடத்தல்களில், சிறிலங்கா இராணுவமும் கருணா குழுவும் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறார்களைக் கடத்தியதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இவற்றில் பல கடத்தல்களின் பின்னணியில் கருணா குழுவும், சிறிலங்கா அரச படையினரும் தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருணா குழுவுடன் சிறிலங்காப் படையினர் நேரடியாகச் தொடர்புபட்டுள்ளதற்கு பெருமளவு ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. கருணா குழுவுடன் சிறிலங்காப் படைகள் இணைந்து செயற்படுகின்றன.

கருணா குழுவினர், சிறிலங்காப் படையினரின் முகாம்களுக்குள் செல்வதும், வெளியேறுவதும், அரச படைகளின் தடைகளைத் தாண்டி நடமாடுவதும், மிக சாதாரணமாக நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கடத்தல் மற்றும் கொலைகளுக்குப் பின்னணியில் கருணா குழு இருப்பதையும், அதற்குத் துணையாக அரச படைகள் செயற்படுவதையும் நேரடியாக அவதானிக்கவும் உறுதிப்படுத்தவும் முடிந்துள்ளது.

கருணா குழுவினர் நடமாடுகிறார்கள் என்று தெரிந்திருந்தும், அரச படையினரும் காவல்துறையினரும் அவர்களைத் தடுக்கவோ கைது செய்யவோ முன்வரவில்லை.

கடந்த வாரத்தில்கூட, எட்டுக் கொலைகளும், மூன்று சிறார்கள் உட்பட, 17 ஆட்கடத்தல்களும் இடம்பெற்றுள்ளன. உண்மையான தொகை இதைவிட மிக மிக அதிகமாக உள்ள போதிலும், உயிருக்குப் பயந்து, பெற்றோர் தகவல் தர மறுத்து வருகின்றனர் என்றார் அவர்.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ரீதியில் அம்பலமாகும் இலங்கையின் "பொட்டுக்கேடு'!

இலங்கை அரசின் அதன் பாதுகாப்புப் படைகளின் "பொட்டுக்கேடு' அம்பலமாகத் தொடங்கிவிட்டது.

அரச பயங்கரவாதத்தின் உள்வீட்டு உண்மைகளைப் போட்டுடைத்திருக்கின்றார் ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி அலன்றொக்.

ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் தொடர்பான விசேட தொடர்பாளர் ராதிகா குமாரசுவாமியின் விசேட பிரதிநிதி யாக இலங்கைக்கு வந்திருந்த அலன் றொக், பத்து நாள்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து நேரடி யாக நிலைமைகளைக் கண்டறிந்த பின்னரே உள்வீட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றா

இந்த பொட்டுக் கேட்டுக்குள் ஜனநாயக வழிக்குத் திரும்பிய அரசியல் கட்சியாகிய கருணா குழுவை எதிர்வரும் பேச்சுவார்தையில் ஒரு தரப்பாக இணைக்க சிங்களத்தரப்பால் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது அதிகமாக உச்சரிக்கப்படும் ஜனநாயகம் பயங்கரவாதம் என்ற சொற்களுக்கான உண்மையான அர்த்தம்தான் என்ன?

விகிபீடியாவைக் தமிழில்கேட்டால் பயங்கரவாதத்திற்கு செஞ்சோலையையும் ஜனநாயகத்திற்கு விளக்கம் ஏதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை என்கிறது.....!!!!!????

உண்மையும் அதுதானோ?

:rolleyes:

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் வெளியிட்ட அறிக்கையை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவும் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஹெலன் ஒல்ஃப்ஸ்டொட்டிர் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா. பிரதிநிதி வெளியிட்ட கருத்து சரியானது. சிறிலங்கா அரச படையினர், தமிழ்ச் சிறார்களைக் கடத்தும் சம்பவத்தில் நேரடியாக தொடர்புபட்டுள்ளதை நாங்களும் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இதனை உறுதிப்படுத்த, கண்காணிப்புக்குழுவிடமும் போதிய ஆதாரங்கள் உள்ளன. கடந்த யூன், யூலை, ஓகஸ்ட் மாதங்களில் மிக அதிகமான சிறார் கடத்தல்களில், சிறிலங்கா இராணுவமும் கருணா குழுவும் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறார்களைக் கடத்தியதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இவற்றில் பல கடத்தல்களின் பின்னணியில் கருணா குழுவும், சிறிலங்கா அரச படையினரும் தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருணா குழுவுடன் சிறிலங்காப் படையினர் நேரடியாகச் தொடர்புபட்டுள்ளதற்கு பெருமளவு ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. கருணா குழுவுடன் சிறிலங்காப் படைகள் இணைந்து செயற்படுகின்றன.

கருணா குழுவினர், சிறிலங்காப் படையினரின் முகாம்களுக்குள் செல்வதும், வெளியேறுவதும், அரச படைகளின் தடைகளைத் தாண்டி நடமாடுவதும், மிக சாதாரணமாக நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கடத்தல் மற்றும் கொலைகளுக்குப் பின்னணியில் கருணா குழு இருப்பதையும், அதற்குத் துணையாக அரச படைகள் செயற்படுவதையும் நேரடியாக அவதானிக்கவும் உறுதிப்படுத்தவும் முடிந்துள்ளது.

கருணா குழுவினர் நடமாடுகிறார்கள் என்று தெரிந்திருந்தும், அரச படையினரும் காவல்துறையினரும் அவர்களைத் தடுக்கவோ கைது செய்யவோ முன்வரவில்லை.

கடந்த வாரத்தில்கூட, எட்டுக் கொலைகளும், மூன்று சிறார்கள் உட்பட, 17 ஆட்கடத்தல்களும் இடம்பெற்றுள்ளன. உண்மையான தொகை இதைவிட மிக மிக அதிகமாக உள்ள போதிலும், உயிருக்குப் பயந்து, பெற்றோர் தகவல் தர மறுத்து வருகின்றனர் என்றார் அவர்

http://www.eelampage.com/?cn=29770

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் வெளியிட்ட அறிக்கையில் காணப்படும் சில விடயங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு கவலையடைவதாக அரச செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நாள் பயணமாக சிறிலங்கா சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக், தனது சுதந்திரமான ஆய்வுகளின் பின்னர், அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

கருணா குழுவுடன் இணைந்து, சிறுவர் கடத்தலில் அரச படைகள் நேரடியாக ஈடுபட்டுள்ளன என்று, சிறிலங்கா அரசை வன்மையாகக் கண்டித்து அவரது அறிக்கையில் கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சிறிலங்கா அரச செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

அலன் றொக் வெளியிட்ட சில தவறான கருத்துக்கள், ஊடகங்களில் திரிவுபடுத்தப்பட்டுள்ளன.

சிறார்களை படையில் சேர்ப்பது அல்லது பயிற்சி அளிப்பது தொடர்பில், நூறு வீத உறுதிப்பாட்டுடன் சிறிலங்கா அரசு செயற்படுகிறது. இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு எதுவித மன்னிப்புமின்றி தண்டனை வழங்கப்படுகிறது.

இருப்பினும், கருணா குழுவினருடன் சிறிலங்காப் படையில் உள்ள சிலருக்கு தொடர்பிருப்பதாக மகிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு அலன் றொக் கொண்டு வந்துள்ளார். இதை மறுத்துள்ள மகிந்த ராஜபக்ச, இது தொடர்பில் ஆதாரங்கள் வழங்கப்பட்டால் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டால், உரிய விசாரணைகள் நடைபெற்று தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த செயற்பாட்டை அலன் றொக் பாராட்டியுள்ளார். அலன் றொக்கின் சுதந்திரமான ஆய்வுகளுக்கு, சிறிலங்கா அரசு முழுமையான உரிமையை அவருக்கு வழங்கியது. யாரை விரும்பினாலும் சந்திக்க வாய்ப்பளித்தது என்றும் அரச செயலக அறிக்கை

http://www.eelampage.com/?cn=29769

வினித்...

தயவு செய்து முடிந்தால் மொழிபெயர்த்து போடுங்கள்...

VN: leger Sri Lanka ronselt kinderen

Het regeringsleger van Sri Lanka ronselt kindsoldaten. Dat zegt de VN, die bewijzen hiervoor heeft gevonden. Een medewerker van de VN is tien dagen in het gebied geweest en hij heeft daar met kinderen en ooggetuigen gesproken.

De kindsoldaten worden gebruikt door een paramilitaire groep voor de strijd tegen de Tamil Tijgers. Sinds mei vorig jaar zijn volgens de VN al zeker 135 kinderen geronseld, vaak jongens van 13 en 14 jaar. De meesten zijn ontvoerd.

Het leger spreekt de beschuldigingen tegen, net als de paramilitairen. De Sri Lankaanse president stelt een onderzoek in naar het ronselen van kindsoldaten.

http://www.nos.nl/nos/artikelen/2006/11/ar...4DD3624C84.html

இங்கு இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள்

தொலைக்காட்சிகளிலும்

ஒரு இழவும் புரியவில்லை தமிழில எழுதுங்கோ அமாம் இது எந்த மொழி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.