Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா! இன்னுமேன்??

Featured Replies

*யாழ்ப்பாணத்தில் மட்டும் நாளாந்தம் 5 -10 தமிழர்கள் சர்வசாதாரணமாக கொல்லப்படுகிறார்கள்.

*கொத்துக் கொத்தாய் தமிழரைக் கொன்றொழிக்கும் வேலையை சிங்களம் யாருக்கும் பயப்படாமல், குறிப்பாக இந்தியாவிற்கு கொஞ்சம் கூட பயப்படாமல் செய்துகொண்டிருக்கிறது.

*யாழ்ப்பாணத்தில் ஓர் சோமாலியா விரைவில் வரப்போகிறது.

*ஒரு நெருப்பு குச்சியின் விலை(1பெட்டியல்ல 1குச்சி) ரூ15.00

ஒரு கிலோ பூண்டு ரூ2000.00

இப்படிப் பல!

*கிழக்கு மாகாணத்தில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்கள் பற்றி இந்தியா கேட்காவிட்டாலும் ஏனைய நாடுகள் கேட்டதற்கு, இலங்கை வரைபடத்தில் ஒரு பாடசாலை இருப்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று சர்வ சாதாரணமாக பதிலளித்து விட்டு கொலை நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் இராணுவத் தளபதி.

*ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களால் தேர்தல் மூலம் தெரிந்தெடுக்கப்பட்டு, அம்மக்களுக்காய் இலங்கையின் தலைநகரில் நின்று குரல் கொடுத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் பட்டப்பகலில் இலங்கையரசின் கைக்கூலிகளால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்

இன்னும் பலப் பல

இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு இந்தியா இன்னுமேன் மெளனமாய் இருக்கிறது.

யாராவது பதில் சொல்லுங்களேன். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா தனக்கு சாதகமாக எதையோ எதிர்பாத்துக்கொண்டிருக்கிற

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தியாவில் 11 வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அவர்களின் தமிழ் உணர்வு மிக வித்தியாசமானது. அத்துடன், ஈழ விவகாரங்களை அங்குள்ள ஊடகங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கையாள்கின்றன. உளவுத்துறையின் கண்காணிப்பு வேறு உள்ளது.

ஓரு சில மக்களைத் தவிர, ஏனையோருக்கு எங்களைப் பற்றிக் கவலை ஏதும் இல்லை. கேட்டால் ராஜீவைக் கொன்றது நீங்கள்தானே என்பார்கள். இந்தியப் படையின் அட்டூழியம் பற்றிப் பேசினால் காதில் போட்டுக்கொள்ளமாட்டார்கள்.

தமிழ் ஈழத்தில் நிரந்தரவாசி கோரி அவர்கள் விண்ணப்பிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்.

;)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நம்பி எந்த நன்மையும் இல்லை. தமிழ்நாட்டுத் தமிழன் தூங்கும்வரை இதுதான் நிலை. தமிழ்நாட்டில் சிறிது மாற்றம் தோன்றியுள்ளது போல் தெரிகிறது. அவர்கள் நெருக்கினால்தான் மத்திய அரசு ஏதாவது சொல்லும் அல்லது செய்யும்.

  • தொடங்கியவர்

தமிழர் தரப்பிற்கு சாதாகமான முறையில் தீர்வை பெற்றறுத்தர சில மேற்குலக நாடுகள் முன்வந்த போதும்(தங்கள் நலனிற்கும் முன்னுரிமை கொடுத்தே) அண்டை நாடான இந்தியாவுடன் தொடர்ச்சியாக நல்லுறவை பேண வேண்டும் என்ற முறையில், அவ் முன்மொழிவுகளை தமிழர் தரப்பு தட்டிக் கழித்த நிகழ்வுகள் இந்தியா அறியாததல்ல. இவற்றையெல்லாம் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழினீ

நீங்கள் உங்கள் blogஐ பிரபலப்படுத்த இங்கு மாய்ந்து மாய்ந்து ஒவ்வொரு பக்கத்திலும் செய்தி இணைப்பு எனும் பெயரில் ஏதேதோவெல்லாம் எழுதுகின்றீர்கள். தயவுசெய்து கனவுகண்டு உடன் எழும்பிவந்து இங்கு கருத்தெழுதாதீர்கள் please. :lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தரப்பிற்கு சாதாகமான முறையில் தீர்வை பெற்றறுத்தர சில மேற்குலக நாடுகள் முன்வந்த போதும்(தங்கள் நலனிற்கும் முன்னுரிமை கொடுத்தே) அண்டை நாடான இந்தியாவுடன் தொடர்ச்சியாக நல்லுறவை பேண வேண்டும் என்ற முறையில், அவ் முன்மொழிவுகளை தமிழர் தரப்பு தட்டிக் கழித்த நிகழ்வுகள் இந்தியா அறியாததல்ல. இவற்றையெல்லாம் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.
அட, புரியாத ஆளா இருக்கிறீர்களே? மேற்குல நாடுகள் வந்து களமிறங்கி(சில விட்டுக்கொடுப்புகளால்தான்) ஈழத்தமிழர்களுக்கு உதவத் தொடங்கினாலும் தன் இராஜீய தொடர்புகள் மூலம் ஈழம் மலர்வதை இயன்றவரை தடுக்கவே இந்தியா முயற்சிக்கும். அதையும் மீறி ஈழம் மலர்ந்தால் வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றி அங்கீகரிக்கும். இதுவே இன்றைய யதார்த்தம்.

தமிழர்களின் எதிர்கால உயிர்வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும்போது, துயர்துடைக்க உதவிக்கு வராதவர்களின் நல்லுறவிற்கு ஏங்குவது ஏனோ?

தமிழ் ஈழத்தில் நிரந்தரவாசி கோரி அவர்கள் விண்ணப்பிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்.
பழிக்குப் பழி? :lol: எனக்காவது உண்டா? :P
  • கருத்துக்கள உறவுகள்

பழிக்குப் பழி? :rolleyes: எனக்காவது உண்டா? :P

தமிழனின் விடியலில் தானே உங்களுக்கு நாட்டம்? அப்படியென்றால் நிச்சயம் உங்களுக்கு இடமுண்டு! :)

உங்கள் பெயர் என்னை நானே கேள்வி கேட்பது போல் இருந்தது. :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.