Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்தவ மதப்போதகர் ஒருவர் என்னை 15 வயதில் இருந்து 5 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்தார்

Featured Replies

fghjkuwcr.jpg

 

தாய், தந்தையரை இழந்த நிலையில் சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த தன்னை அச்சபையின் மதபோதகர் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து துஸ்பிரயோகம் செய்து வந்தார் என்று 20 வயது யுவதி ஒருவர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் குறித்த யுவதியும், யுவதியை சிறு வயதில் பராமரித்து வந்த பெண் ஒருவரும் இணைந்து இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.
 
இதனையடுத்து குறித்த யுவதி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி தனது தாய், தந்தையை இழந்த நிலையில் வேறு ஒருவரின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்து வந்த நிலையில் அவர் தொடர்ந்து கற்பதற்காக கிறிஸ்தவ சபை ஒன்றின் பராமரிப்பு நிலையத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு அவரது 11 ஆவது வயதில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றின் மதபோதகர், பராமரிப்பு நிலையில் இருந்து குறித்த யுவதியை பொறுப்பெடுத்து தனது வீட்டில் வளர்த்து வந்தார் என்றும், மதப்போதகரின் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த யுவதியை மிரட்டி (அப்போது 15 வயது) பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனவும், ஐந்து வருடங்களாக இவ்வாறு தொடர்ச்சியாகத் தான் துன்புறுத்தப்பட்டுவந்தார் எனவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிக் கொஞ்சப்பேர், வெளிநாடுகளில இருந்து தேவாலயம் நடாத்த எண்டு வாற காசில, கொழுப்பெடுத்து திரியினம்.

இங்க மட்டுமில்ல, தென்னிந்தியாவிலும் தான்... :o

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும் கணவனைப் பிரிந்த.. விதவைப் பெண்களை... உவை ராகட் பண்ணினம். குறிப்பாக.. இந்த வகை இந்து அல்லது சைவப் பெண்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி காட்டிறம் என்று மதம் மாற்றம் செய்யினம். அப்புறம்.. அந்தப் பூசை.. இந்தப் பூசை என்று அவையை இவை தங்க கூட இழுத்துக்கிட்டு திரியினம்..! இதெல்லாம்.. ஜேசுவுக்கே அடுக்குமா..?! பாவம் அவர் ஒரு பிரமச்சாரி..! அவரை பெயரை வைச்சு இவங்க.. போடுற வேசம் தாங்க முடியல்ல.  :icon_idea:  :rolleyes:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களிலும் பிரேமாநந்தாக்கள், நித்யாநந்தாக்கள் இருப்பார்கள்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களிலும் பிரேமாநந்தாக்கள், நித்யாநந்தாக்கள் இருப்பார்கள்தானே.

சின்னப்பிள்ளைகளை, நித்தியானந்தாகளும், பிரேமானந்தாகளும் சீரளித்ததாக தெரியவில்லையே...

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா சின்ன பிள்ளயலில் கைவைத்தாய் கேள்வி படவில்ல ஆனால் தேவானந்தா சீ.. பிரேமாநந்தா இப்படி செய்ததா முன்பு சொல்லப்பட்டது.

நித்தி மாட்டின சமயம் இன்னொருத்தரும் மாட்டினவர் சென்னையில பேர் நியாபகம் இல்லை. பசுவையும் கன்றையும் ஒன்றாக அவிழ்த்தார் என்பது அவர் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

இது எல்லா சமயத்தில் இருக்கு ஆனாலும் சின்ன பிள்ளைகளை (ஆண்/பெண்) சீரழிக்கும் விடயத்தில் உலகளாவிய ரீதியில் கத்தோலிக்க திருச்சபைக்குரிய குருமாருக்கு ஒரு தனியிடம் இருக்கு. அவர்கள் ஒஸ்ரேலியா மாரி ரெக்கார்டை உடைக்கிறது கஸ்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலியே பயிரை மேய்ந்த கதை.....

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையின் பெயரால் ஒரு சமூகப் பெரியவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட குழந்தையொன்று இங்கே பலவந்தப் படுத்தப்பட்டுள்ளது!

 

நாங்கள் வெறும் மதங்களையும், நித்தியானந்தாக்களையும், பிரம்மானந்தாக்களையும் 'உதாரணம்' காட்டி விட்டு நம்ம பாட்டில் போய்க்கொண்டிருக்கிறோம்!

 

இதன் பொருள்... இப்படியான சம்பவங்களைச் சாதரணமாக எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்களா... அல்லது 'போரின் பின்னான' அன்றாட வாழ்வில் இவையெல்லாம் சாதாரண விடயங்கள் என்ற வகையில் அடக்க முயற்சிக்கிறோமா என்பது மட்டும் எனக்கு விளங்கவில்லை!

 

இப்படியான சம்பவங்கள் வருங்காலத்திலாவது நடை பெறாதிருக்க, ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! :o  

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை என் கருத்தில் அப்படி ஒரு மறை பொருள் இழையோடி இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பிள்ளைகள் மீதான அக்கிரமத்தை சாதாரணமாக எடுக்கும் படி சொல்லவில்லை.

எடுக்கவும் கூடாது, முடியாது. இந்த மாதிரியான கேவலம் கெட்ட ஜென்மங்கள் கிறிஸ்தவத்தில் மட்டும் இல்லை, மதம் எனும் சுரண்டல் அமைப்புகள் சகலதிலும் உண்டு என்பதை சுட்டவே அப்படிக் கூறினேன்.

வருங்காலத்தில் இப்படியான சம்பவம்கள் நடப்பதை தடுக்க திராணியற்றவர்கள் நாங்கள்.

கருத்து மட்டுமே எழுத முடியுமானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை என் கருத்தில் அப்படி ஒரு மறை பொருள் இழையோடி இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பிள்ளைகள் மீதான அக்கிரமத்தை சாதாரணமாக எடுக்கும் படி சொல்லவில்லை.

எடுக்கவும் கூடாது, முடியாது. இந்த மாதிரியான கேவலம் கெட்ட ஜென்மங்கள் கிறிஸ்தவத்தில் மட்டும் இல்லை, மதம் எனும் சுரண்டல் அமைப்புகள் சகலதிலும் உண்டு என்பதை சுட்டவே அப்படிக் கூறினேன்.

வருங்காலத்தில் இப்படியான சம்பவம்கள் நடப்பதை தடுக்க திராணியற்றவர்கள் நாங்கள்.

கருத்து மட்டுமே எழுத முடியுமானவர்கள்.

வணக்கம் கோசான்!

 

ஒரு பிரச்சனையுமில்லை! இது கருத்துக் களம் தானே! கடி படுகிறது ஒரு நல்ல நோக்கத்துக்காகத் தானே!

 

ஒரு விதமான தனிப்பட்ட கடுப்பும் உங்கள் மீது இல்லை!

 

நாங்கள் கருத்து மட்டும் எழுதுவதுடன் நின்று விடக்கூடாது என்பது உண்மை தான்!

 

எனினும் எமது கருத்துக்கள் பல மட்டங்களில்.. பலரால் வாசிக்கப் படுகின்றன!

 

ஒவ்வொருவரது கருத்துக்களும் மொத்தமாகச் சேரும் போது... அதுவே சமூகத்தின் கருத்தாகக் கணிக்கப் படுகின்றது!

 

அதனால் தான் அவ்வாறு எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

பெத்த தகப்பனே பிள்ளையை துஸ்ப்பிரயோகம் செய்கிற கலியுக காலத்தில, ஜேசுவை எல்லாம் ஏன் இதுக்க? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.