Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகர் கல்வெட்டு சாசனம் கண்டுபிடிப்பு

Featured Replies

article_1429347542-naga.jpg

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்துக்கு மேற்கே நான்கு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிடாக்குழி எனும் பிள்ளையார் ஆலயத்தில். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன். குறித்த ஆலயத்துக்கு சென்றிருந்த வேளை, ஆலயத்தின் முன் கிடந்த கல்லை அவதானித்தபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

 

கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டினை புகைப்படம் எடுத்து வரலாற்றுத்துறை பேராசிரியரும், யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களிடம் காட்டப்பட்டது. கல்வெட்டினை நேரடியாக ஆய்வு செய்வதற்காக கடந்த 08.04.2015 பேராசிரியர் சி.பத்மநாதன், வ.குணபாலசிங்கம், எஸ்.சுபாஸ்கரானந்தம் மற்றும் கிழக்கு பல்கழைக்கழக வரலாற்றுத்துறை மாணவன் தனராஜான் ஆகியோர் ஆய்வுக்காக சென்றிருந்தனர். கல்வெட்டிலுள்ள விடயங்களை ஆய்வு செய்வதற்காக கல்வெட்டு படி எடுக்கப்பட்டு பேராசிரியர் அவர்களால் கல்வெட்டில் எழுதப்பட்ட விடயங்கள் வாசிக்கப்பட்டது.

 

கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பற்றி பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகையில், இது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழ் பிராமிக் எழுத்து வகை சாசனம் என்றும் இச்சாசனத்தில் வேள் நாகன் எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வேள்  நாகன் எனும் நாமம் ஆனது குறு நில மன்னர்களை குறிப்பிடுகின்றது. இவர்கள் பேசிய மொழி தமிழ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மட்டக்களப்பில் பல பிரதேசங்களில் நாகர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு பல சாசனங்கள் கடந்த கால கட்டங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு அவற்றுள் இச்சாசனமும் ஒன்றாகுமென தெரிவித்தார்.

 

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சத்தில் பூர்வீக குடிகளாக இயக்கர், நாகர் குறிப்பிடப்பட்டுள்ளனர். எனவே மட்டக்களப்பு பிரதேசத்தில் பல இடங்களில் நாகர் வாழ்ந்துள்ளனர் என்பதனை இச்சாசனமும் சான்று பகர்கின்றது. 

 

article_1429347553-naga1.jpg

 

article_1429347586-naga2.jpg

 

 http://www.tamilmirror.lk/144176#sthash.XPvnyI7I.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கவனம்,

அந்தப் பக்கமா சுமங்கல தேரர் எண்ட ஒரு தூசன ஆமத்துறு இருக்கிறார்.

நாட்டில் உள்ள கெட்ட வார்த்தைகளை கற்றிந்த தவத்தேரர், வந்து நிக்கப் போறார், புத்தர் வரேக்க ஏதோ கீறிப் போட்டு தன்னட்ட தந்துட்டு போனவர் எண்டு...

  • கருத்துக்கள உறவுகள்

கல்லு காணாமல் போகப்போகுது..

நற்செய்தி ஆதவன், இதுபற்றி விபரமான ஆவணங்கள் கிடைத்தால் பகிரவும்.

  • தொடங்கியவர்

நற்செய்தி ஆதவன், இதுபற்றி விபரமான ஆவணங்கள் கிடைத்தால் பகிரவும்.

 

http://www.adankappattuvanni.com/melpatru.php

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் எட்டுக்கும் குறையாத நாகர் அரசர்களின் ஆட்சிக்கூடங்கள் இருந்துள்ளன 

 

article_1431432690-ee1.jpg

 

 
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்களின் அடிப்படையில் இப்பகுதியில் எட்டுக்கும் குறையாத நாகர் அரசர்களின் ஆட்சிக்கூடங்கள் இருந்துள்ளது என்று தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் க.பத்மநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நகரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் தொடர்பில் ஆராயும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கையின் கிழக்கு கரையில் நாகர் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்து வாழ்ந்தார்கள் என்பதற்கான தொல்லியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களுடன் விளக்கும் வகையில், இந்த நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பில் உள்ள பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வுகூடத்தில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்வில் தொல்லியல் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பொருட்கள் மற்றும் இப்பகுதியில் நாகர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் தொடர்பில் பேராசிரியரினால் விளக்கமளிக்கப்பட்டது.
 
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, நாவற்குடா, மாமாங்கம், வந்தாறுமூலை, வாகரை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது 40க்கும் மேற்பட்ட நாகர்களின் ஆதாரங்கள் கொண்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு விஜயன் வருகைக்கு முன்பாக கிழக்கு கரையினில் நாகர்கள் ஆட்சி அதிகாரங்களுடன் வாழ்ந்தார்கள் அவர்களின் நாகரிகம் வழிபாட்டு முறைகளின் ஆதாரங்கள் இங்கு பேராசிரியரின் விரிவாக சமர்ப்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே உள்ளதுடன் அறியமுடியாத, மறைந்து கிடந்த வரலாறுகள் தற்போது முகங்காட்டும் நிலை உருவாகிவருவதாக பேராசிரியர் பத்மநாதன் இங்கு தெரிவித்தார்.
 
குறிப்பாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் நாகர் இப்பகுதியில் வாழ்ந்துள்ளதுடன் அவர்கள் மணிநாகன் என்ற பெயரில் தெய்வ வழிபாட்டைக்கொண்டிருந்ததாகவும் இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி வன்னிப்பகுதியிலும் கடந்த ஆறு மாதகாலமாக மணிநாகன் தொடர்பான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இவ்வாறான வரலாற்று தடயங்கள் காணப்படுவதாகவும் அவற்றினையும் வெளிக்கொணரும் வகையில் பொதுமக்கள் பங்களிப்பினை வழங்கவேண்டும் எனவும் எங்காவது வரலாற்று சான்றுகள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் அறியத்தருமாறும் பேராசிரியர் தெரிவித்தார்.
 
இதேபோன்று தென்னிலங்கையிலும் பல பகுதிகளில் நாகர்கள் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக புத்தளத்தில் நாகர்களின் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவை மறைக்கப்பட்டன.
1986ஆண்டும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்ட நிலையில் அவற்றில் தமிழ் பிராமிய எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அது தொடர்பில் ஓர் ஆங்கில சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்தது.
 
article_1431432701-ee2.jpg
 
article_1431432718-ee.jpg
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கி.மு 2ஆம் நூற்றாண்டுக்குரிய நாகராட்சி அரசியல் மையங்கள் மூன்று கண்டுபிடிப்பு 

 

article_1432556092-1%20(3).jpg

 

 
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை கிராம சேவகர் பிரிவிலுள்ள கல்லடிச்சேனை வரம், பாலாமடு, கிடாக்குழி பிள்ளையாரடி, வந்தாறுமூலை பலாச்சோலை வில்லுத் தோட்டம் ஆகிய இடங்களில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்குரிய நாக அரசர்களின் மூன்று இராசதானிகள்; கண்டுபிடிக்கப்பட்டுள்;ளன.
வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான கே.பத்மநாதன் இவ்ராசதானிகளை இனங்கண்டதையடுத்து, குறித்த சான்றுகளை வரலாற்றுதுறை துறைசார் பேராசிரியரும் யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் கடந்த வாரத்தில், நேரடியாக சென்று ஆய்வினை மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்தினார்.
குறித்த பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாகர் கால சான்றுகள் பற்றி பேராசிரியர் குறிப்பிடுகையில்,
 
கல்லடிச்சேனை வேரம் எனும் இடத்தில் வந்தாறுமூலை விஷ்ணு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பத்துக்கும் மேற்ப்பட்ட கருங்கற்தூண்கள் மிக ஆழமான நிலையில் நிலைக்குத்தாக நடப்பட்டுள்ளது.
 
அவற்றுள் நிலத்திற்கு மேலாகவுள்ள 7' 6' நீளமும் 1' அகலமும் உடைய தூணையும், 9' 10' நீளமும் 1'அகமும் உடைய தூணையும் ஆய்வு செய்தபோது அதில் தமிழ் பிராமிக் வரிவடிவம் காணப்பட்டன. அதில் வேள் நாகன் மகன் வேள் நாகன்' என நாகரசர்களின் பெயரும் 'வேள் நாகன் பள்ளி' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் கருத்து நாகரசர்களின் அரண்மனையை குறிப்பதாகும். மற்றுமொரு தூணில் நாக பந்தத்தின் உருவமும் காணப்பட்டது.
 
பாவுகை கல் ஒன்றில் மணி நாகன் பள்ளி என செதுக்கப்பட்டடிருந்தது. இதன் கருத்து நாகரசர்களின் வழிபாட்டுத் தலம் ஆகும். இங்கு 'வேள்' எனக் குறிப்பிடப்படுவது அரசர்களுக்கு வழங்கப்படும் உயரிய சிறப்புப் பட்டம் ஆகும். இங்கு கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து சான்றுகளிலும் வேள்நாகன், வேள் கண்ணன், வேள் நாகன் பள்ளி, மணி நாகன் பள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளன.
 
பாலாமடு வயற்காணியில் ஆய்வினை மேற்கொண்டபோது ஐம்பதிற்கும் (50) மேற்ப்பட்ட கருங்கற் தூண்களும் அதிகளவான செங்கல்கற் இடிபாடுகளும் செங்கல் ஓடுகளும், செங்கபில கல் ஓடுகளும், சுடுமண்ணினால் செய்யப்பட்ட நாகத்தின் உருவம், சுடப்பட்ட நீரேந்தும் தாழி, மட்குடம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வேள் நாகன், வேள் கண்ணன், வேள் நாகன் மகன் வேள் கண்ணன், வேள் கண்ணன் மகன் வேள் நாகன் என நாகரசர்களின் பெயர்களும் வேள் நாகன் பள்ளி எனவும் தமிழ் பிராமி வரிவடிவில் எழுதப்பட்டிருந்தன. அத்தோடு 5'6' விட்டம் உடையை அரைவட்டக் கல்லிலும் 2'5' விட்டமுடைய கருங்கல்லிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தது.
 
வந்தாறுமூலை பலாச்சோலை வில்லுத்தோட்டம் எனும் இடத்தில் பரந்த நிலப்பரப்பில் 30ற்கும் மேற்பட்ட கருங்கற் தூண்களும் செங்கல் இடிபாடுகளும் ஈமைத்தாழித்துண்டம் செங்கல் ஓடுகளும், செங்கபில ஓடுகளும், வட்டமூடிக் கற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இக் கருங்கற் தூண்களிலும் நாக அரசர்களின் பெயரும் மணி நாகன் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தன. செங்கற்களிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தன. 1'10' விட்டமுடைய ஓரே அளவான ஏழு வட்டம் முடிக்கல் காணப்பட்டன. இதில் வேள் நாகன் என எழுதப்பட்டிருந்தது.
 
இலங்கையில் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ் அரசுர்களின் குடியிருப்பு உருவாகியுள்ளன. இதில் நாகர்கள் தமிழர்கள் ஆவர். இவர்கள் நாகரிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும் நகரங்களை நிர்மானித்து அரச ஆட்சிகளையும் நிறுவியுள்ளனர்.
 
கட்டடக்கலையில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும், விவசாயத்தை அறிமுகம் செய்தவர்களாகவும் விளங்கினர். நாகர்கள் அரண்மனையினை அமைக்கும்போது அதனுடன் வழிபாட்டுத்தலங்களையும் குடியிருப்புக்களையும் உருவாக்கியுள்ளனர்.
மட்டக்களப்பில் நாகரைப் பற்றி இதுவரையான ஆய்வுகளில் எட்டு நாகராச்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாக காணப்படுவது நான்கு ஆகும். அவற்றுள் மூன்று வந்தாறுமூலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை பெருங்கற் பண்பாட்டுடன் தொடர்புடையவை என வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதன் தெரிவித்தார்.
 
குறித்த பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாகர் காலத்துக்குரிய கல்வெட்டு சான்றுகளையும் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகளை வரலாற்றுதுறை துரைசார் பேராசிரியரும், யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன், ஆசிரியர் குழுவினர் ஆராய்;சியில் ஈடுபட்டனர்.
 
article_1432556108-1%20(11).jpg
 
article_1432556118-1%20(9).jpg
 
article_1432556128-1%20(5).jpg
 
article_1432556147-1%20(4).jpg
 

Archeology%20222524.jpg

 

Archeology%20222525.jpg

 

 

Archeology%20222523.jpg

 

Archeology%20222527.jpg

 

Archeology%20222522.jpg

 

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை கிராம சேவகர் பிரிவில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்குரிய நாக அரசர்களின் மூன்று இராசதானிகள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் இனங்காணப்பட்டுள்ளன. கல்லடிச்சேனை, வேரம், பாலாமடு, கிடாக்குழி பிள்ளையாரடி, வந்தாறுமூலை பலாச்சோலை வில்லுத் தோட்டம் ஆகிய இடங்களிலேயே இந்தச் சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இச் சான்றுகளை வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான கே.பத்மநாதன் இனங்கண்டதையடுத்து குறித்த சான்றுகளை வரலாற்றுத்துறை துரைசார் பேராசிரியரும், யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் கடந்த வாரம் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்தினார்.
 
குறித்த பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாகர் கால சான்றுகள் பற்றி பேராசிரியர் குறிப்பிடுகையில், கல்லடிச்சேனை வேரம் எனும் இடத்தில் வந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பத்துக்கு மேற்பட்ட கருங்கற்தூண்கள் மிக ஆழமான நிலையில் நிலைக்குத்தாக நடப்பட்டுள்ளன. அவற்றுள் நிலத்திற்கு மேலாகவுள்ள 7' 6' நீளமும் 1' அகலமும் உடைய தூணையும், 9' 10' நீளமும் 1'அகமும் உடைய தூணையும் ஆய்வு செய்தபோது அதில் தமிழ் பிராமிக் வரிவடிவம் காணப்பட்டது. அதில் "வேள் நாகன் மகன் வேள் நாகன்"என நாகரசர்களின் பெயரும் 'வேள் நாகன் பள்ளி' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் கருத்து, நாகரசர்களின் அரண்மனையை குறிப்பதாகும். மற்றுமொரு தூணில் நாக பந்தத்தின் உருவமும் காணப்பட்டது.
 
பாவுகை கல் ஒன்றில் மணி நாகன் பள்ளி என காணப்பட்டது. இதன் கருத்து நாகரசர்களின் வழிபாட்டுத் தலம் என்பதாகும். இங்கு 'வேள்' எனக் குறிப்பிடப்படுவது அரசர்களுக்கு வழங்கப்படும் உயரிய சிறப்புப் பட்டம். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து சான்றுகளிலும் வேள்நாகன், வேள் கண்ணன், வேள் நாகன் பள்ளி, மணி நாகன் பள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளன. பாலாமடு வயற்காணியில் ஆய்வினை மேற்கொண்டபோது ஐம்பதிற்கும் (50) மேற்பட்ட கருங்கற் தூண்களும், அதிகளவான செங்கல் இடிபாடுகளும், செங்கல் ஓடுகளும், செங்கபில கல் ஓடுகளும், சுடுமண்ணினால் செய்யப்பட்ட நாகத்தின் உருவம், சுடப்பட்ட நீரேந்தும் தாழி, மட்குடம் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகளிலும் வேள் நாகன் வேள் கண்ணன், வேள் நாகன் மகன் வேள் கண்ணன், வேள் கண்ணன் மகன் வேள் நாகன் என நாகரசர்களின் பெயர்களும் வேள் நாகன் பள்ளி எனவும் தமிழ் பிராமி வரிவடிவில் எழுதப்பட்டிருந்தன. அத்தோடு 5'6' விட்டம் உடையை அரைவட்டக் கல்லிலும் 2' 5' விட்டமுடைய கருங்கல்லிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தது.
 
வந்தாறுமூலை பலாச்சோலை வில்லுத்தோட்டம் எனும் இடத்தில் பரந்த நிலப்பரப்பில் 30இற்கு மேற்பட்ட கருங்கற் தூண்களும் செங்கல் இடிபாடுகளும் ஈமைத்தாழித்துண்டங்களும், செங்கல் ஓடுகளும், செங்கபில ஓடுகளும், வட்டமூடிக் கற்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றிலும் கருங்கற் தூண்களில் வேள் நாகன் வேள் கண்ணன், வேள் கண்ணன் மகன் வேள் நாகன், வேள் நாகன் மகன் வேள் கண்ணன் என நாக அரசர்களின் பெயரும், மணி நாகன் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தன. செங்கற்களிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தன. 1'10' விட்டமுடைய ஓரே அளவான ஏழு வட்டம் முடிக்கல் காணப்பட்டன. இதில் வேள் நாகன் என எழுதப்பட்டிருந்தது. இலங்கையில் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ் அரசுகளும் குடியிருப்புக்களும் உருவாகியுள்ளன. இதில் நாகர்கள் தமிழர்கள் ஆவர். இவர்கள் நாகரிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும் நகரங்களை நிர்மாணித்து அரச ஆட்சிகளையும் நிறுவினர். கட்டடக்கலையில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும், விவசாயத்தை அறிமுகம் செய்தவர்களாகவும் விளங்கினர். நாகர்கள் அரண்மனையினை அமைக்கும்போது அதனுடன் வழிபாட்டுத்தலங்களையும் குடியிருப்புக்களையும் உருவாக்கினர்.
 
மட்டக்களப்பில் நாகரைப் பற்றி இதுவரையான ஆய்வுகளில் எட்டு நாகராச்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாக காணப்படுவது நான்கு ஆகும். அவற்றுள் மூன்று வந்தாறுமூலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை பெருங்கற் பண்பாட்டுடன் தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. - என வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதன் தெரிவித்தார். குறித்த பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாகர் காலத்துக்குரிய கல்வெட்டு சான்றுகளை வரலாற்றுதுறை துரைசார் பேராசிரியரும், யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். 
 
 
 
 
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணுக்கு முன்னாலை நடந்ததையே....... ஒண்டும் நடக்கேல்லை எண்டு புலுடா விடுறாங்கள். :(

இதுக்குள்ளை குறுக்கெழுத்து கருங்கல்லை வைச்சு என்னதை வெட்டிப்புடுங்கிறது?????  :icon_idea:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் முக்கிய கல்வெட்டு

 

1434187129Kail-01.jpg

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசெயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமம் ஒன்றில் மக்கள் குடியிருப்புக்களை அண்மித்த பிரதேசத்தில் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கு முன் தமிழைப் பேச்சு வழக்கு மொழியாகக் கொண்ட தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததை உறுதி செய்யும் சாசனங்கள், அவர்களின் சமய,பண்பாட்டு வழமைகளை வெளிப்படுத்தும் சிற்பங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டு வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சாசனங்கள் மூலமாகவும், இதற்கு முன் வெல்லாவெளிப்பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்கள் மூலமாகவும் வெல்லாவெளியை மையமாகக் கொண்ட சிற்றரசு ( வேள்புலம் ) ஒன்றினை அமைத்திருந்தனர் என்பது உறுதியாகின்றது.
இச்சாசனங்களில் 3 தலைமுறைகளைச் சேர்ந்த வேளிர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இதன் மூலம் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே ஆதி தமிழ் மக்கள் மட்டக்களப்பை ஆட்சி செய்துள்ளனர் என்பது புலனாகின்றது.
 

 

 

  • 2 months later...
  • தொடங்கியவர்

நாகரசர் கால கிணறு, நாகக்கல் கண்டுபிடிப்பு

article_1441291425-qqqqq.jpg

 

வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு.2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு, நாகக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்புக்கு 29.08.2015 அன்று விஜயம் செய்த வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்.பல்கலைக்கழக வேந்தருமான சி.பத்மநாதனும் தொல்லியல் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசிரியருமான வி.பத்மநாதனும் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய காணியினுள் மேற்கொண்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக்கல் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

இது பற்றி பேராசிரியர் தெரிவிக்கையில்,

இலங்கையின் பூர்வீக குடியினராக காணப்பட்ட தமிழர் மூதாதையரான ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு நாகவம்சத்தினர் தென்னிந்தியாவின் சோழமண்டல கடற்கரையிலுள்ள காவிரி பூம்பட்டிணம் போன்ற துறைமுகப்பட்டிணம் மூலமாக மட்டக்களப்பு தேசத்துக்கு கடல்வழி மார்க்கமாக குடியேறினர்.

இவ்வாறு கடல் வழிமார்க்கமாக வந்த ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு நாகவம்சத்தினர் ஆற்றுவழி,தரைவழி மார்க்கங்களாக தங்களது குடியேற்றங்களையும்  குறுநில அரசுகளையும் நதிக்கரைக்கு அண்மையிலுள்ள உயர்வான இடங்களிலும் மலைச்சாரல்களிலும் காடுகளை எல்லைகளாக கொண்ட பிரதேசங்களிலும் வில்லு புல்நிலங்களிலும் வெட்டவெளி சமவெளி நிலங்களிலும் நிறுவினர்.

வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையாரடியில் நாகரால் நிறுவப்பட்ட குறுநில அரசானது கடல்வழி ஆற்று வழி தரை வழி என்பவற்றோடு தொடர்புடையதாகவும் காடுகளை எல்லையாகவும் சமவெளி நிலமாகவும் காணப்பட்டுள்ளது.

இங்கு கண்டுபிடிக்கபட்ட கிணரானது 3அடி பரப்பளவுடைய சதுரவடிவமும் 20அடி ஆழமுடைய கருங்கல் தூணினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.தூணின் வேள் நாகன் என்று தமிழ் பிராமி வரிவடிவம் காணப்படுகின்றது.

3அடி உயரமும் 2அடி அகலமுடைய நாகக்கல் காணப்படுகின்றது.இதில் மணி நாகன் என்று தமிழ் பிராமி வரிவடிவம் காணப்படுகின்றது.

கிணறுகள் மூலமாக நீரினை பெற்று பயன்படுத்தும் முறையும் தோட்ட பயிர் செய்கையும் இங்கு குடியேறிய நாகவம்சத்தினர் உருவாக்கினர்.

இவ்விடம் நாகர்களின் வழிபாட்டு தலமாக காணப்பட்டதோடு, கருங்கல் தூணினால் ஆலயத்தை அமைத்துள்ளனர் என்றார்.

article_1441291446-aaaaaaa.jpg

http://www.tamilmirror.lk/153340/-ந-கரசர-க-ல-க-ணற-ந-கக-கல-கண-ட-ப-ட-ப-ப-#sthash.RygiHn4e.dpuf

 

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு

வந்தாறு மூலையில் இருக்கும் இந்த கிணறு இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்கிறார் பத்மநாதன்

வந்தாறு மூலையில் இருக்கும் இந்த கிணறு இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்கிறார் பத்மநாதன்

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த கிணறு சுமார் இருபது அடி ஆழம் கொண்டிருப்பதாகவும், இந்த கிணற்றின் உட்சுவர் கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பத்மநாதன் தெரிவித்தார்.

இந்த கல்லும் இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்று கருதப்படுகிறது

இந்த கல்லும் இரண்டாயிரம் ஆண்டு பழமையானது என்று கருதப்படுகிறது

இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி நாகன்” என்று எழுதப் பட்டிருப்பதாக தெரிவித்த பத்மநாதன், தமிழ் பிராமி எழுத்துருக்கள் கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டுவரையில் புழங்கியதால், இந்த கிணறும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று தாம் கருதுவதாகவும் விளக்கினார்.
இலங்கையின் பூர்வீக குடியினரான நாகர்களின் கல்வெட்டுக்களில் காணப்படும் தமிழ் பிராமி எழுத்துருக்கள், நாகர்களும் தமிழரும் ஒன்றே என்கிற தமது கருதுகோளுக்கான மற்றும் ஒரு வலுவான ஆதாரமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார் பத்மநாதன்.


இது குறித்து அவர் பிபிசிக்கு அளித்த செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_nagarlegacy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

article_1429347553-naga1.jpg

உந்த கல்லு இனிமேல் வெள்ளாவி வேலைக்குத்தான் சரி. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.