Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்

 

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நிதி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக அர­சாங்­கத்­தினால் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­படி தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லான பொலி­ஸாரின் விசா­ர­ணைக்கு தான் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்கத் தயார் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார் .

Picture-1.jpg_3.JPEG

 

இதே­வேளை நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை வென்று பல வரு­டங்­க­ளாக அர­சியல் செய்து வரும் ராஜ­பக்ஷ குடும்­பத்­தினர் ஒரு போதும் மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யிட்­ட­து­மில்லை: கொள்­ளை­யிட போவ­து­மில்லை என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பிற்­பாடு அமெ­ரிக்கா சென்ற முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ நேற்று மீண்டும் இலங்கை வந்­த­டைந்தார். டுபாய் நாட்­டி­லி­ருந்து கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வந்து இறங்­கிய பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே பஷில் ராஜ­பக்ஷ இவ்வாறு தெரி­வித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

ராஜ­பக்ஷ குடும்­பத்­த­வர்கள் எப்­போதும் மக்­களின் நல­னுக்­காகவே போராடி வந்­துள்­ளனர். 1931 ஆம் ஆண்டு காலப்­ப­குதி முதல் எமது குடும்­பத்­தினர் அர­சியல் செய்து வரு­கின்­றனர். இத­னூ­டாக மக்­களின் நம்­பிக்­கையை வென்­றுள்­ளனர். எனினும் எந்த சந்­தர்ப்­பத்­திலும் ராஜ­பக் ஷ குடும்­பத்­தினர் மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யிட்­ட­தில்லை. அவ்­வாறு கொள்­ளை­யிடப்போவ­து­மில்லை.

 

எவ்­வா­றா­யினும் எனக்கு எதி­ராக சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்கு என்னால் முடி­யு­மான அனைத்து ஆத­ர­வி­னையும் வழங்க தயா­ராக உள்ளேன். நான் எந்­த­வொரு குற்­றத்­தையும் செய்­ய­வில்லை. இதனை என்னால் உறு­திப்­ப­டுத்த முடியும். ஆகவே பொலி­ஸாரின் விசா­ர­ணைக்கு முன்­னு­ரிமை அளிக்கும் வகை­யி­லேயே நான் நாடு திரும்­பினேன்.

 

இதே­வேளை நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் என்ற வகையில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் எனது சகோ­த­ர­ரு­மான மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தோல்­விக்கு முழு­மை­யான பொறுப்பை நானே ஏற்­றுக்­கொள்­கிறேன். எனினும் தோல்­விக்கு நானே பிர­தான கார­ண­மாக அமைந்­ததை போன்று அவரின் முன்னைய வெற்றிகளுக்கும் நானே பொறுப்பாவேன்.

ஆகவே அர­சியல் ரீதி­யாக பிழை­யான தீர்­மா­னங்கள் எடுத்­தி­ருப்­பினும் நான் ஒரு­போதும் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­ட­வில்லை என்பதனை என்னால் உறுதியாக கூறமுடியும்.

 

எவ்வாறாயினும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் வகையில் எதிர்வரும் காலங்களில் செயற்படுவேன் என்று முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

http://www.virakesari.lk/articles/2015/04/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87

ஒரு முடிவுடன் தான் களமிறங்குகிறார்கள்

எந்த கள்ளன் தான் திருடியதை ஒத்துகொண்டுள்ளான் ... திருடாமல் இருப்பது எப்படி என்றுதான் உங்கள் குடும்பத்திக்கு தெரியாது    .... மிஸ்டர் கள்ளன் 

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாமில் தங்கி இருந்ததாக செய்திகள் சொல்கிறது. அரச சம்பளத்தில் ஆசியாவின் பெரும் பணக்காரர்களாக மகிந்த வருவார் எனில் சிறிலங்காவில் பலர் ஆசியாவின் பணக்காரர்கள் ஆகி இருப்பார்களே?? புலிகளை வென்றதால் சிங்கள மக்களின் வாக்கை வென்ற நீங்கள் ஊழலால் அதே மக்களால் தோற்கடிக்கப்பட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் செய்ததனை ஒப்புக்கொள்கின்றார் மஹிந்த – அஜித் பெரேரா:- 22 ஏப்ரல் 2015 Bookmark and Share குற்றம் செய்ததனை ஒப்புக்கொள்கின்றார் மஹிந்த – அஜித் பெரேரா:- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தாம் குற்றம் இழைத்ததனை ஒப்புக்கொள்கின்றார் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரோ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் குற்றவாளிகளை தண்டிக்கவில்லை எனவும் அவர்களை பாதுகாத்ததாகவும், குற்றவாளிகளை சுத்தவாளிகளாக்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகிரங்கமாக கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த கால குற்றவாளிகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸவிடமே விசாரணை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ பாதுகாத்த குற்றவாளிகள் யார்? ஏன் அவ்வாறு செய்தார்? போன்ற கேள்விகளை எழுப்பும் உரிமை அவருக்கு வாக்களித்த 58 லட்சம் மக்களுக்கு உண்டு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரின் ஊடாகவேனும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் சென்று வாக்கு மூலம் அளிக்க ஏன் தயங்குகின்றார்? இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிக்க நேரிடும் என்பதாலா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பதவியில் இருந்த காலத்தில் இவ்வாறு மஹிந்த கூறியிருந்தால் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வந்து தண்டனை விதித்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் வாய்க்கு பிரேக் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் என்ன சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அவர் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு செல்வதனை தடுத்து வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118921/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.