Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்த தவறை ஒப்புக்கொண்ட மகிந்த! சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டார்

Featured Replies

4bd6883f84951e6d2d1f98d201ae7ada_L.jpg
 
'தவறு எதுவும் செய்யவில்லையென நான் கூறவில்லை. சில தவறுகளைச் செய்தவர்களை, சில விடங்களில் இருந்து நாம் அழுத்தங்களைக் கொடுத்து அவர்களை அவற்றில் இருந்து விடுவித்தோம். இது தவறாகும். அவர்கள் செய்த தவறுகளுக்காக நாம் தண்டனை வழங்கவில்லை. அவற்றை நாம் மறைக்க முற்பட்டோம். நான் நினைக்கின்றேன், நான் இதனைச் செய்தது தவறு என்று. இதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்'' என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் மிகவும் பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
மகிந்த ராஜபக்ச குறிப்பிடும் குற்றவாளிகள், அவர்கள் செய்த தவறுகள் என்ன என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மகிந்த ராஜபக்ச காப்பாற்றிய குற்றவாளிகள் யார்? ஏன் அவ்வாறு காப்பாற்றப்பட்டனர்? என்ற கேள்வியை கேட்பதற்கு அவருக்கு வாக்களித்த 58 லட்சம் மக்களுக்கும் உரிமை உள்ளது என பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
அத்துடன், மகிந்த ராஜபக்சவின் இந்தக் கூற்றினால் அவருக்கு இருந்த 58 லட்சம் வாக்குகள் தற்போது 20 லட்சமாக குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
நாட்டைக் காக்க 100 மின்சாரக் கதிரைகளில் கூட (சர்வதேச விசாரணை) அமர்வதற்குத் தயார் என அன்று கூச்சலிட்ட மகிந்த ராஜபக்ச இன்று லஞ்ச ஊழல், விசாரணை ஆணைக்குழுவிற்குச் சென்று வாக்குமூலமொன்றை வழங்குவதற்குப் பதிலாக ஆதரவாளர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது நகைப்பிற்குரிய விடயம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் சட்டப்படி நிறைவேற்று அதிகாரம் உள்ள அரசதலைவருக்கு அவரின் சேவையின் பின்னரும் பொறுப்புக்கூறும் கடமை உண்டா என்பது பல காலமாகவே இலங்கையில் இருந்துவரும் கேள்வி, ஆனால் மகிந்தருக்கு அப்படி அவசியம் இல்லை என்று வைத்துக்கொண்டாலும் மகிந்தரின் சகோதர்களுக்கு பொறுப்புக்கூறும் கடமை இருக்கவே இருக்கிறது. ஆகவே இப்போது நடப்பதை பார்க்கும் போது மகிந்தவின் சகோதர்களை வைத்து தான் மகிந்தவை மண்டியிட வைக்கிறார்கள் போல் தெரிகிறது. மகிந்த செய்த மிகப் பெரிய தவறு ஆட்சியை குடும்பமயமாக்கி உறவினர்களை முக்கிய பொறுப்புகளில் வைத்ததுதான். மகிந்தவின் குடும்பத்தில் மகிந்த மட்டுமே அப்போது ஆட்சியிலிருந்திருந்தால் மகிந்தவை எவரும் இன்று ஒன்றும் செய்திருக்க முடியாது.

ஆசை யாரைத்தான் விட்டது. 

அனாலும் இதெல்லாம் வெறும் கண் துடைபாகவே எனக்கு படுகிறது. அடுத்த தேர்தலோடு நிலைமை தலை கீழாக மாறலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.