Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி அஞ்சலி

Featured Replies

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தினார்.
 
இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரணசிங்க பிரேமதாஸவின் மனைவி, அவரின் புதல்வர் அமைச்சர் சஜித்பிரேமதாஸ ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
 
IMG_0099.jpg
 
IMG_0026.jpg
 
IMG_0189.jpg
 
IMG_0238.jpg
 
IMG_0105.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஏழை மக்களுக்காக பாரிய சேவையை செய்த ஒரு தலைவர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 22வது நினைவு தினம் இன்றாகும். இதன் நிமித்தம் புதுக்கடை பகுதியிலுள்ள ரணசிங்க பிரேமதாஸவின்  சிலைக்கு அருகில் ஞாபகார்த்த நிகழ்வு இடம்பெற்றது.

ரணசிங்க பிரேமதாஸவின் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொள்ளும் முதலாவது ஜனாதிபதி தான் என இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன கூறினார்.

இதேவேளை பிரேமதாஸ இனபேதங்களுக்கு எதிராக செயற்பட்ட தலைவர் என இங்கு கருத்து வளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன், பிரேமதாஸ இறந்த போது யாழ்ப்பாணத்திலும் வௌ்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு மக்கள் சோகத்தை வளிப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பிரேமதாஸ எதிர்பார்த்த சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் ஆட்சி தற்போது உண்மையாகியுள்ளதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தில் 700 குடும்பங்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரமும், 1,100 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டன.

 

 

 

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119278/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், பிரேமதாஸ இறந்த போது யாழ்ப்பாணத்திலும் வௌ்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு மக்கள் சோகத்தை வளிப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

பிரேமதாச இறந்த போது யாழ்ப்பாணம்.. முழுமையாக (தீவகம் தவிர) சிங்கள இராணுவ ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தது. அங்கு பிரேமதாச இறந்ததற்கு மக்கள் யாரும் வெள்ளைக்கொடி கட்டல்ல. ரணில் வந்து கட்டினாரோ தெரியாது.

 

பிரேமதாசவும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு இனப்படுகொலையாளி. கிளாலி பயணிகள்..படகுப் படுகொலைகளை நடத்திய மிக முக்கிய மானுடத்துக்கு எதிரான குற்றச்செயலை செய்தவர் அவர். மேலும் 1983 இனக்கலவரத்தின் போது தமிழ் மக்களை படுகொலை செய்யத் தூண்டிய நபர்களில் ஒருவர். :icon_idea:

ஊரியானில் குண்டுத் தாக்குதலை நடத்தி தமிழ் மக்கள் கொல்லப்படவும் காரணமாக இருந்தவர். தீவக ஆக்கிரமிப்பின் முழுச் சூத்திரதாரி. தீவகத்தில் தோண்டப்படும் புதைகுழிகளுக்கு இவரே முக்கிய பொறுப்பு. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யு என் பி காரன்ரை நினைவு தினத்துக்கு சுதந்திரகட்சிக்காரன் போய் மாலை போடுறான் எண்டால் கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ.... :(

சிங்களவன் எந்த அளவுக்கு ஒற்றுமையை கட்டி காக்கிறான் எண்டு....... :icon_idea:

எங்கடையள் என்னடாவெண்டால் இவ்வளவு அவலத்துக்குப்பிறகும் மாறிமாறி காறித்துப்பிக்கொண்டு திரியுதுகள். :(

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தாளம் மாறுது ...........??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.