Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் ரணிலும் ஒன்­றி­ணைந்து பாரிய அர­சியல் முடிச்சை அவிழ்த்­துள்ளோம்

Featured Replies

seresana-mp_0.jpg
நாட்டில் ஜன­நா­ய­கத்தை வெற்­றி­கொள்ளும் போராட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து செயற்­பட்டுள்ளேன். நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்­றி­ணைந்து மிகப்­பெ­ரிய அர­சியல் முடிச்சை அவிழ்த்­துள்ளோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.
 
நாட்டில் ஜன­நா­யகவாதிகள் இனியும் வாய்­மூடி இருக்­காது சமூ­கத்தின் நல­னுக்­காக குரல் எழுப்­ப­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
 
கொழும்பில் நேற்று கலைஞர் உபுல் சாந்த சன்­னஸ்­க­லவின் புத்­தக வெளி­யீட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
 
ஜனாதிபதி அங்கு மேலும் தெரி­விக்­கையில்,
 
நான் இன்று ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும் எனது முன்­னைய நிலைமை தொடர்பில் நான் இன்னும் மறக்­க­வில்லை. பல­காலம் அமை­தி­யா­கவும் மற்­ற­வர்­களில் கதை­க­ளுக்கு செவி மடுப்­ப­வ­னா­கவும் இருந்தேன். எனினும் ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்கும் போராட்­டத்தில் ரணில் விக்­க­ர­ம­சிங்க வுடன் இணைந்து வெற்­றி­பெற்­றுள்ளேன். எமது போராட்­டத்தில் ஜன­நா­ய­கத்தை விரும்பும் பலர் கைகோர்த்­தமை எமக்கு கிடைத்த வெற்­றி­யாகும்.
 
நல்ல ஊட­க­வி­ய­லா­ளர்கள், அர­சி­யல்­வா­திகள் என அன்­மைக்­கா­ல­மாக எனக்கு நல்ல நட்பு வட்­டாரம் உரு­வா­கி­யது . அர­சாங்­கத்தில் இருப்­பதை விடவும் எதிர்க் கட்­சி­யாக இருக்கும் போதே அதி­க­மாக ஊட­கத்­து­டனும், ஜன­நா­ய­க­வா­தி­க­ளு­டனும் பழ­குவோம். அது யதார்த்­த­மான விட­ய­மாகும். ஆனால் இன்று நாட்டின் நிலைமை மாறி­யுள்­ளது நான் இப்­போதும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டனும் ஜன­நா­ய­க­வா­தி­க­ளு­டனும் நெருக்­க­மா­கவே பழ­கு­கின்றேன்.
 
நாட்டில் ஜன­நா­யகம் சுயா­தீனம் ஆகி­ய­வற்றை நிலை­நாட்­டு­வதில் ஊட­கத்தின் செயற்­பா­டுகள் மிகவும் அவ­சி­ய­மா­னது. அந்த தேவை­யினை நாம் இனங்­கண்டு செயற்­ப­டு­கின்றோம் . நாட்டில் இரண்டு மிகப்­பெ­ரிய சிக்­க­லான முடிச்­சுகள் உள்­ளன. ஒன்று சாப்­பாட்டுக் கடையில் கட்­டித்­த­ரப்­படும் “ரசம்” பை முடிச்சி. மற்­றை­யது ஜே .ஆர் . ஜெய­வர்­த­னவின் அர­சியல் அமைப்பு முடிச்சி. நாம் இரண்­டா­வது முடிச்­சியை மிகவும் இல­கு­வாக அவிழ்த்து விட்டோம். நானும் பிர­தமர் ரணிலும் ஒன்­றி­ணைந்து ஜே. ஆர் ஜெய­வர்த்­த­னவின் அதி­கார குவிப்பு அர­சியல் அமைப்பை இல­கு­வாக மாற்­றி­விட்டோம். இதனால் எதிர்­கால அர­சியல் பரம்­பரை ஜன­நா­யக ரீதி­யி­லான வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்கும் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.
 
இந்த நாட்டில் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்தும் சிறந்த மனி­தர்கள் எதிர்­கா­லத்தில் செயற்­பட வேண்டும் என்­பதையே நாம் எதிர்­பார்­கின்றோம். இத்­தனை காலமும் எமது சமூ­கத்தில் பல நல்ல நபர்கள், சமூக அக்­கறை கொண்ட நபர்கள் இருந்­தாலும் அவர்கள் எதோ ஒரு கார­ண­த்திற்­காக வாய்­மூடி அமை­தி­யாக இருந்­தனர். ஆனால் எதிர்­வரும் காலங்கள் ஜனநாயக வாதிகளுக்கானது. அதற்கான சுதந்திர சூழலை நாம் அமைத்துக் கொடுத்துள்ளோம். எனவே சமூக ஆர்வலர்களின் வாய்கள் இனியும் மூடப்பட்டிருக்கக் கூடாது. நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் அவர்கள் தமது சேவையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றத்தை கொண்டு வாருங்கள். தமிழ் மக்களை ஏமாற்றாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

seresana-mp_0.jpg
 
 
நாட்டில் ஜன­நா­யகம் சுயா­தீனம் ஆகி­ய­வற்றை நிலை­நாட்­டு­வதில் ஊட­கத்தின் செயற்­பா­டுகள் மிகவும் அவ­சி­ய­மா­னது. அந்த தேவை­யினை நாம் இனங்­கண்டு செயற்­ப­டு­கின்றோம் . நாட்டில் இரண்டு மிகப்­பெ­ரிய சிக்­க­லான முடிச்­சுகள் உள்­ளன. ஒன்று சாப்­பாட்டுக் கடையில் கட்­டித்­த­ரப்­படும் “ரசம்” பை முடிச்சி. மற்­றை­யது ஜே .ஆர் . ஜெய­வர்­த­னவின் அர­சியல் அமைப்பு முடிச்சி

 

தமிழரது பிரச்சினை ரசம் கட்டும் முடிச்சு அளவுக்கே இல்லை என்கிறார்....

இவரிடம் தமிழருக்கான நியாயமான தீர்வு கிடைக்குமாம்..

எங்க போய் முட்ட....??

தமிழரது பிரச்சினை ரசம் கட்டும் முடிச்சு அளவுக்கே இல்லை என்கிறார்....

இவரிடம் தமிழருக்கான நியாயமான தீர்வு கிடைக்குமாம்..

எங்க போய் முட்ட....??

இல்லை இல்லை 

 

அதுதான் முதலாவது சிக்கல், அதை தான் அவங்க உங்க மகிந்தரை வைத்து முள்ளி வாய்க்காலில் முடிச்சிட்டாங்கள்.

 

அவங்களும் எத்தின தரம்தான் தீர்க்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
ஓரினசேர்க்கை திருமணத்தை 
சட்டபூர்வம் ஆக்குவாங்க போலத்தான் இருக்கு ....
  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட தமிழரின் சுயஇருத்தல் மற்றும் அரசியல் வேணவாவிற்குத் தாம் ஆப்புவைத்துவிட்டதாகவே குறிப்பிடுகின்றார். தமது வெற்றியை இப்படியுரைக்கிறார். இதனையும் தமது ராயதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியென்று அறிக்கையிடும் ஒரு குழு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.