Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த வெற்றி கொண்டாடப்படமாட்டாது! இலங்கை அரசாங்கம்

Featured Replies

தமது நாட்டில் ஒரு பிரிவு மக்களின் மனங்களை நோகடிக்கும் விதத்தில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
 
எனினும், விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக வெற்றிகொள்வதற்கு தம்மை அர்ப்பணித்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் முகமாகவும், இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் விதமாகவும் மே மாதம் 19ஆம் திகதி மாத்தறையில் நிகழ்வொன்று நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 
தனியார் வானொலியொன்றில் நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோதே அவர்  இதனைத் தெரிவித்தார்.
 
''பிரிவினைவாதத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். பிரிவினைவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும். தமது நாட்டிலேயே ஒரு பிரிவு மக்களுக்கு எதிராக யுத்தமொன்று முன்னெடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக வெற்றிகொள்வதற்கு தம்மை அர்ப்பணித்த இராணுவ வீரர்களை நாம் நினைவுகூர வேண்டும். இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் நாம் நினைவுகூர வேண்டும். இதனை மையப்படுத்தியே இம்முறை அரச நிகழ்வு நடைபெறும்'' என்று அவர் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை கேட்டு சம்பந்தன் சுமன்திரன் கூட்டம் கெதகளிக்கபோகுதுகளே எல்லாம் தங்களால் தான் என்று  :icon_mrgreen:

தமிழனுக்கு ஒண்டுக்கும் உதவாத சட்ட திருத்தம் 19 க்கு இரண்டு பேரும் அடிச்ச வாய்ஸ் இருக்கே அப்பப்பா எதோ தமிழ் ஈழமே எடுத்த மாதிரி எல்ல .

முள்ளிவாய்க்காலில் பொலிசார், புலனாய்வாளர்கள் திடீரென குவிப்பு 

இறுதி யுத்தம் நிறைவு பெற்ற மே 18 நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்காலில் பொலிசார், புலனாய்வாளர்கள் திடீரென குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

mulli_police_01.jpg

mulli_police_02.jpg

mulli_police_03.jpg

mulli_police_04.jpg

http://www.newjaffna.com/moreartical.php?newsid=38286&cat=nnews&sel=current&subcat=14

இராசித சேனா இரத்தின.....என்னங்க சார் பீத்துரிங்க :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் பொலிசார், புலனாய்வாளர்கள் திடீரென குவிப்பு 

இறுதி யுத்தம் நிறைவு பெற்ற மே 18 நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்காலில் பொலிசார், புலனாய்வாளர்கள் திடீரென குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எங்களுக்கு முள்ளிவாய்க்காலில் வெளிச்சம் (விளக்கு) வரணும் 

இன்றிலிருந்தே காவல்த்துறையும் இராணுவமும் புலநாய்வுத்தறையும் தூங்கப்போவதில்லை

அங்கே இருந்து வெளிச்சம் போட்டு காவல் இருக்கப்போகிறார்கள்

அவர்களே நாம் விரும்புவதை செய்கிறார்கள்

தர்மம் எப்படியும் வெல்லும்....

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் மே மாதம் 19 நாள் நினைவு கூருகிறீர்கள். வேறு ஒரு நாளில் செய்யலாம் தானே.இது வெளிப்பார்வைக்கு இப்படிச் சொல்லப்பட்டாலும் உள்ளே நடப்பது யுத்த வெற்றிக் கொண்டாட்டம் தான்.வெளிநாடுகளுக்கு நல்லவர் போல் படம் காட்டவே இது உதவும்.சரத் பொன்சேகா யுத்தத்ததை வெனறதைக் கௌரவித்து பீல்ட மார்சல் பதவி கொடுத்தது எதுக்கு?சம்பந்தரும்இசுமத்திரனும் தங்கடை இராசதந்திரம்தான் யுத்த வெற்றி கொண்டாடுவதைத் தடுத்தது என்று நல்லாட்சி அரசுக்கு வக்காலத்து வாங்கி தமிழ்மக்களிடம் வாக்கு வேட்டையாட நல்ல காரணம் கிடைத்து விட்டது.இதே மாதிரி தமிழர்களும் பெரும் அளவில் முள்ளி வாய்க்காலில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு அனுமதிப்பார்களா?ரணிலின் நரித் தந்திரம் இது யுத்த வடுக்களை தமிழர்கள் மறக்க வேண்டும் என்பதற்காகக் செய்யும். தமிழர்களின் பிரதிநிதியான விக்கி ஐயாவுடன் கைகுலுக்குவதை விரும்பாத ரணிலா தமிழர்களுக்கு நல்லது செய்வார். இதை விட யுத்த வெற்றியைக் கொண்டாடி நீங்க வேறு இனம் நாய்க வேறு இனம் என்பதை அடிக்கடி ஞாபகப் படுத்தும் மகிந்த எவ்வளவோ மேல். மகிந்த கண்ணுக்குத் தெரிந்த எதிரி.ரணில் கண்ணுக்குத் தெரியாத எதிரி.

இதுக்குதான் படிச்சு படிச்சு சொன்னம் யாரு கேட்டாகா 

கடந்த ஆண்டு படைவீரர்களுக்கான வாரமொன்று அறிவிக்கப்பட்டது இந்த ஆண்டு அவை எங்கே? – மஹிந்த

Mahi%20shocked_CI.jpg

கடந்த ஆண்டு படைவீரர்களுக்கான வாரமொன்று அறிவிக்கப்பட்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாகவும் இந்த ஆண்டு அவ்வாறான நிகழ்வுகள் ஏன் நடைபெறவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டை மீட்டெடுத்த படைவீரர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

படைவீரர் குடும்பங்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பிலான சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டை மீட்டெடுத்த படைவீரர்களது பிள்ளைகள் இவ்வாறா நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக நாடு இருந்த  நிலைமையை சிலர் மறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் படைவீரர் குடும்பங்களுக்கு உச்சளவில் சலுகைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையில் சேர பலர் தயக்கம் காட்டிய போது எமது குடும்பம் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதற்காக யோசித ராஜபக்ஸவை படையில் இணைத்தோம் எனவும் தற்போது அவர் இவ்வாறு இணைந்தார் அதற்கான தகுதிகள் உண்டா என விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படைவீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சகல கொடுப்பனவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் மே மாதம் 19ம் திகதி யுத்த வெற்றிக்கொண்டாட்டங்கள் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றதாகவும் ஒரு வார காலம் படைவீரர்கள் வாரமாக அறிவிக்க்பபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த ஆண்டு அவ்வாறான எவ்வித கொண்டாட்டங்களும் நடத்தப்படுவதாக தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119682/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தாளுக்கு எப்பவும் கொண்டாட்டம், கட்டவுட், பவனி எண்டு உலா வரவேணும். அதுக்காக ராணுவத்தை உசுப்பேத்துகிறார். பொன்சேகாவை உள்ளுக்கை போட்டமாதிரி உடனேயே போட்டிருந்தால் அடக்கிக் கொண்டிருக்கும். சும்மா வெளியில விட்டிட்டு.......அப்பப்ப உளறிக் கொண்டு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.