Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னைக் கைது செய்ய முயற்சி - மஹிந்த

Featured Replies

lanka-rdv-tmagarticle_4.jpg

 

எனது மீள்­வ­ருகை அர­சாங்­கத்­திற்கு அச்­ச த்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புலம் பெயர் அமைப்­பு­க ளின் தேவைக்­காக என்னை கைது­செய்ய முயற்­சிக்­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.
 
பழி­வாங்­கலின் பின்­ன­ணியில் பிர­தமர் ரணிலே உள்ளார். என்­னையும் குற்­ற­வா­ளி­யாக்கி பழி­வாங்­கவே ரணில் முயற்­சிக்­கின்றார். ஆனால் சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நான் தயார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
 
யுத்­தத்தில் உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர்­களின் உற­வி­னர்­களை நேற்று நாரா­ஹேன்­பிட்டி அபே­ய­ராம விகா­ரையில் சந்­தித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். மேலும் அவர் கூறு­கையில்,
 
இந்த நாட்டை தீவி­ர­வா­தி­க­ளிடம் இருந்து மீட்­டெ­டுக்க நாம் பாரிய தியா­கத்தை செய்தோம். இரா­ணுவ வீரர்­களின் தியா­கமும் எனது அர­சாங்­கத்தின் துணிச்­ச­லுமே இந்த நாட்டை வெற்­றி­கொண்­டது. ஆனால் அவை அனைத்­தையும் இன்­றுள்ள அர­சி­யல்­வா­திகள் மறந்­து­விட்­டனர். அன்று இருந்த நிலைமை இன்று நாட்டில் இல்லை. இரா­ணு­வமும் மக்­களும் புறக்­க­ணிக்­கப்­பட்டு விட்­டனர். அன்று எம்­முடன் இருந்­த­வர்கள் இன்று விலை போய்­விட்­டனர். சேரக்­கூ­டாத கூட்­ட­ணிகள் இன்று ஒன்­றாக சேர்ந்து சதி செய்­கின்­றன.
 
நாட்டில் அபி­வி­ருத்­திகள் நிறுத்­தப்­பட்­டு­விட்­டன. இரா­ணுவ வீரர்­க­ளுக்கும் அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்கும் கிடைக்க வேண்­டுய சேவைகள் தடை செய்­யப்­பட்­டுள்­ளன. நான் சரி­யான பொரு­ளா­தார வளர்ச்­சியில் இந்த நாட்டை ஒப்­ப­டைத்தேன். ஆனால் புதிய அர­சாங்­கத்தின் குறு­கிய காலத்தில் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­கண்­டுள்­ளது. அரச ஊழியர்களுக்கு சம்­பளம் கொடுப்­ப­தற்­கான நிதி அர­சாங்­கத்­திடம் இல்லை. அர­சாங்­கத்தின் நிதி முகா­மைத்­துவம் மோச­மான நிலையில் உள்­ளது. குறு­கிய காலத்­தி­லேயே இந்த அர­சாங்கம் முட்டி மோதி­விட்­டது. நாட்டை எப்­படி ஆட்சி செய்­வது என்­பது இவர்­க­ளுக்கு தெரி­ய­வில்லை.
 
இந்த நாட்டு மக்­களை பாது­காத்­தது யார் என்­பதை மக்கள் சிந்­தித்து பார்க்க வேண்டும். நான் மக்­க­ளுக்கு செய்த நன்­மை­களை மறந்­து­விட வேண்டாம். நாட்டில் மீண்டும் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்தை பலப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது,.ஆனால் இந்த அர­சாங்கம் அவற்றை கவ­னத்தில் கொள்­ள­வில்லை. புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவை­களை இந்த அர­சாங்கம் நிறை­வேற்றும் வகையில் செயற்­ப­டு­கின்­றது. அர­சாங்கம் முழு­மை­யாக பழி­வாங்­க­லையே செய்­கின்­றது. புலம்­பெயர் அமைப்­பு­களின் தூண்­டு­தலில் என்­னையும் கைது செய்ய பிர­தமர் ரணில் முயற்­சிக்­கின்றார்.
 
அர­சாங்கம் எமது உறுப்­பி­னர்­களை கைது செய்­வதன் பின்­ன­ணியில் புலம்­பெயர் அமைப்­பு­களின் தூண்­டுதல் உள்­ளது. என்­மீது குற்றம் சாட்­டு­வதும் எனது குடும்­பத்தை குற்­ற­வா­ளி­யாக்­கு­வதும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தனிப்­பட்ட பழி­வாங்கல் மட்­டு­மே­யாகும்.
 
நான் தேர்­தலில் தோற்­றதும் அமை­தி­யாக நாட்டை புதிய அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைத்­து­விட்டு ஒதுங்கிக் கொண்டேன். நான் அமை­தி­யாக இருந்­தாலும் மக்கள் என்னை அமை­தி­யாக செயற்­பட அனு­ம­திக்­க­வில்லை. அதனால் தான் நான் மக்­களை சந்­திக்க வந்தேன். ஆனால் எனது மீள் வருகை இந்த அர­சாங்­கத்­திற்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. என்னை கண்டு இவர்கள் அஞ்­சு­கின்­றனர். இவர்­க­ளுக்கு சவா­லான நபர்­களை கைது செய்து சிறையில் அடைக்கப் பார்க்கின்றனர். எனது ஒரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மற்றைய சகோதரர் மீது அரசாங்கம் இலக்கு வைத்துவிட்டது. நாமும் இவர்களின் இலக்காக மாறிவிட்டேன். ஆனால் நான் சவால்களுக்கு முகம் கொடுக்க தயாராக உள்ளேன். எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை, கைது செய்யும்.... "முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்." :D 

  • கருத்துக்கள உறவுகள்

பயப்படாதீங்க ராசா, உங்கள கோவனத்தோட உட்டுறுவாங்க, உங்க, கைத்தடியள், அடிப்பொடிகள், எல்லாரும் கம்பி எண்ணுவினம். :D

பயப்படாதீங்க ராசா, உங்கள கோவனத்தோட உட்டுறுவாங்க, உங்க, கைத்தடியள், அடிப்பொடிகள், எல்லாரும் கம்பி எண்ணுவினம். :D

பாஸ்,

அவர் அது கட்டிறது இல்லை எண்டு கேள்வி :lol:

  • கருத்துக்கள உறவுகள்
புலம் பெயர் அமைப்­பு­க ளின் தேவைக்­காக என்னை கைது­செய்ய முயற்­சிக்­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.
இதுக்குத்தான் கம்பவாரிசு புலம் பெயர்ந்தவர்களை இப்படி.

தங்கள் பாதுகாப்பை மட்டும் கருதி இந்த நாட்டை விட்டு ஓடிச் சென்று தங்கள் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் உறுதி செய்து கொண்டு வேறொரு தேசத்தில் குடியுரிமை பெற்றவர்கள் சிறிதும் நாணம் இல்லாமல் எங்கள் பிரச்சினைகளில் தலையிடுவதும் பிரச்சினைத் தீர்வுகளுக்கு வழிகாட்டி எங்களை மேய்க்க நினைப்பதும் சற்றும் பொருத்தமில்லாத விடயம்
திட்டினவரோ?
  • கருத்துக்கள உறவுகள்
சிறைப்பிடிக்க முயற்சி :பின்னணியில் ரணில் : மகிந்த குற்றச்சாட்டு
4bd8070e5e921db8ec647ae993b3dfac.jpg
எனது மீள்வருகை அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக என்னைக் கைதுசெய்ய அரசு முயற்சிக்கின்றது." இவ்வாறு கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. 
 
"பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி பழிவாங்கவே ரணில் முயற்சிக்கின்றார். ஆனால், சவால்களுக்கு முகம்கொடுக்க நான் தயார்" - என்றும் அவர் கூறியுள்ளார். 
 
போரால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினரின் குடும்பத்தினரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கொழும்பு - நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விஹாரையில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
 அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
 "இந்த நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க நாம் பெரும் தியாகத்தை செய்தோம். நாம் ஆட்சியைக் கையளித்தபோது நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசு பணம் இல்லை என்று கூறுகின்றது.
 
முன்னாள் ஜனாதிபதிகூட பணம் இல்லை என்று கூறுகின்றார். இவர்களது முகாமைத்துவத்தில் பிரச்சினை இருக்கின்றது என்பது இதிலிருந்து தெரிகின்றது. அத்துடன், ஆட்சி நடத்த முடியாத நிலைமையையும் இது காட்டுகின்றது. 
 
குறுகிய காலத்துக்குள்ளேயே முட்டி, மோதிவிட்டனர். இது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். கள்வர், கள்வர் என்று ஒருவரை 100 தடவைகள் கூறினால் மக்கள் அதை நம்பிவிடுவார்கள். அதைத்தான் இந்த அரசு செய்கின்றது. தேர்தல் காலத்தின்போது கள்வர்களைப் பிடிக்கப்போகின்றோம் என்றனர். 
 
இப்போது கள்வர்களைக் கைதுசெய்கின்றோம் என்கின்றனர். என்னிடம் 18 பில்லியன் ரூபா சொத்துகள் இருப்பதாகக் கூறுகின்றனர். இலங்கைக்குக் கிடைத்த பணத்தைவிட நாம் எடுத்த பணம்தான் அதிகமாக இருக்கிறது என்று கூறுகின்றனர்.
 
18 பில்லியன் ரூபா சொத்தைக் காட்டுங்கள். எனக்கும் பார்க்க ஆசையாக உள்ளது. இந்தப் பணம் எத்தியோப்பியா,சுவாஸிலாந்து, உக்ரேன் போன்ற நாடுகளில் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். இந்த நாடுகளில் பணத்தை வைத்திருந்தால், இறுதியில் கடதாசிகளை மட்டும்தான் எடுக்கமுடியும். 
 
அமெரிக்கப் பிரதிநிதிகளிடம்கூட இதைத்தான் கூறுகின்றனர். எமக்குள்ள கெளரவத்தை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர். 
 
புலம்பெயர் தமிழர்களின் பழிவாங்கல் தற்போது வேறு வழியில் நடக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் என்னைச் சிறைப்பிடிக்க முயற்சித்தனர். இவர்களின் தேவைக்கேற்பவே அரசு செயற்படுகின்றது. என்னையும் கைதுசெய்ய முயற்சிக்கின்றனர். 
 
நான் எதற்கும் தயாராக இருக்கின்றேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் இந்தக் கைதுகளுக்கான உத்தரவைப் பிறப்பிக்கின்றார். 
 
சமுர்த்தி நிதி மோசடி எனக் கூறி பஸில் ராஜபக்ஷவை கைதுசெய்தனர். அடுத்ததாக சதொச நிதி மோசடி எனக் கூறி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைதுசெய்தனர்.
 
 வாகன மோசடி எனக் கூறி சஜின் வாஸ் குணவர்தனவை கைதுசெய்தனர். 
 
முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் எனது சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவையும் கைதுசெய்ய முயற்சிக்கின்றனர். 
 
அவன்கார்டன் மூலமாக அவர் இராணுவத்தினருக்கு நன்மைதான் செய்தார். ஆனால், அவரைக் கைதுசெய்ய முயற்சிக்கின்றனர். 
 
தமக்குப் போட்டியாக நினைப்பவர்களை அரச தரப்பினர் கைதுசெய்ய நினைக்கின்றனர். நான் தேர்தலில் தோல்வியடைந்ததும் அமைதியாகத்தான் இருந்தேன்.
 
 ஆனால், மக்கள்தான் கோரிக்கை விடுத்து என்னை மீண்டும் அழைத்தனர். அதனால், நான் சிறு சிறு சந்திப்புகளை நடத்தினேன். அதைக் கண்டு இவர்கள் அஞ்சிவிட்டனர். நான் எந்தச் சவால்களுக்கு முகம்கொடுக்க தயாராக உள்ளேன்'' - என்று கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=885724030213652177#sthash.nrJzufR8.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.