Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்

Featured Replies

வடமொழிப் பெயர்கள் தமிழின் தொனியில் அமைந்திருக்கின்றன என்பது ஒரு மாயை. பல நூறு ஆண்டுகளாக நீங்கள் வடமொழிப் பெயருக்கு பழக்கப்பட்டு விட்டதனால், உங்களுக்கு அப்படி தோன்றுகிறது.

சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், கோதிக், செல்டிஸ், பழம்பெர்சியன் ஆகிய ஆறு பழைய மொழிகளும் ஒரே மொழியில் இருந்து வந்தவை என்று மொழியியல் வல்லுனர்கள் நிறுவி உள்ளார்கள். இதற்கு எதிரான வலுவான வாதத்தை இதுவரை எந்த மொழியியலாளரும் முன்வைக்கவில்லை.

தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

ஆகவே தமிழும் வடமொழியும் ஒத்துப் போகின்றன என்ற புதுக் கண்டுபிடிப்பை செய்ய வேண்டாம்.

இதில் இன்னும் ஒன்றையும் சொல்லலாம்.

ர, ட, ல, ய போன்ற எழுத்துக்களிலும் அதன் மற்றைய வரிசை எழுத்துக்களிலும் சொற்கள் ஆரம்பிப்பதை தமிழ் மொழி தடை செய்கிறது.

ஆனால் எத்தனையோ தமிழர்கள் இந்த எழுத்துக்களை முதல் எழுத்துக்களாக கொண்டு தங்களின் பெயரைக் கொண்டிருக்கிறார்கள்.

(நீங்கள் ஒரு பிராமணரிடம் உங்கள் பிள்ளைக்கு பெயர் வைக்க கேட்டீர்கள் என்றால் 90 விழுக்காடு மேற்சொன்ன எழுத்துக்களில்தான் பெயர் வைப்பார்கள். அதன் காரணம் பலருக்கு விளங்குவதில்லை)

இப்படி வடமொழி எந்த வகையிலும் தமிழ் மொழிக்கு ஒத்த ஒரு மொழி அல்ல.

ஏன் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெயர்கள் பற்றி எதுவும் கூறுவதில்லை என்று கேட்டிருந்தீர்கள். நல்ல கேள்வி.

நாம் ஒரு போதும் வட மொழியில் பெயர் வைக்காதீர்கள் என்பதோடு நிறுத்துவதில்லை. அப்படியே தூய தமிழில் பெயர் வையுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறோம். அது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.

யேசுதாஸ், மரியதாஸ், என்பவைகளும் வடமொழிப் பெயர்களே. எங்களின் அழைப்பு அனைவருக்கும் பொதுவானது.

ஆனால் எமது சமூகம் பெரும்பான்மையாக இந்து சமூகமாக இருப்பதால், அது குறித்து அதிகம் பேசுகிறோம்.

எமது சமூகம் இஸ்லாமிய சமூகமாக இருந்திருந்தால், ஷரியத் பற்றி பர்தா பற்றி பேசியிருப்போம்.

இதில் நாம் தெளிவாகவே இருக்கிறோம்.

இன்னும் ஒன்று!

எமது மக்கள் மதத்தின் பெயரால் செய்கின்ற மூடத்தனமான வேலைகளை நாம் கேட்காமல் வேறு யார் கேட்பது?

மதத்தின் பெயரால் சிலர் மக்களை ஏமாற்றிப் பிழைப்பார்களாம். ஆனால் நாம் அதைப் பற்றி ஒன்றும் சொல்லக் கூடாதாம். நல்லா இருக்கு உங்கள் கருத்து!

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே தேவயற்று ஆதாரமற்ற சில விடயங்களை எழுதி உள்ளீர்கள், உங்கள் கருத்துப் படியே உந்தத் தூக்குக்காவடி ஒண்டப் பெருசாச் செய்து சிதழ் குத்தி இழுத்து ,இந்த கிபிரை விழுத்த ஏலாதோ? சும்மா ஏன் கன காசுக்கு நாங்கள் ஏவுகணை வாங்க உலகம் முழுக்க அலைய வேணும்,சிம்பிளா சில ஆயிரம் ரூபாவோட எந்த உயிர்ச் சேதாரமோ சண்டையோ பயிற்சிகளோ இல்லாம வேலை முடிச்சிடும்.

தலைவருக்கு வல்வெட்டித் துறையில் கோவில் இருக்கின்றது என்று நீங்கள் நம்பவல்லையா? அல்லது தலைவர் திருமணம் முடித்தது தமிழ்நாட்டில் உள்ள இந்து ஆலயம் ஒன்றை நீங்கள் அறியவில்லையா?அந்தத் திருமணத்தை அன்ரன் பாலசிங்கம் தான் நடத்தி வைத்தார்.அது தொடர்பான படங்கள் இணையத்தில் வந்திருந்தன. தேடினால் கிடைக்க கூடும்.

கிபிரை அடிக்க வேண்டும் என்று போராளி செய்கின்றான் என்று சொல்வது அவனது செயற்பாட்டைஅவமானப்படுத்துவ

  • கருத்துக்கள உறவுகள்

வடமொழிப் பெயர்கள் தமிழில் கலந்ததால் தான் அவ்வாறன தோற்றம் என்றில்லை. இராகவன் என்பதை ராகவன் என்று எழுதுவார்கள். ராமசாமிநாயிடு என்பதை, இராமசாமி நாயுடுவாக எழுத வேண்டும். எனவே நீங்கள் சுகத்துக்காக பலதை இழந்ததுக்கு பிழை பிடிப்பது என்றால் பாப்பாணி தான் முடிவாம்.

வடமொழியின் உச்சாரிப்பு தமிழோடு ஒத்துப் போக நிறையக் காரணங்கள் இருக்கின்றன. வட சொல்லில் ஒரே ஓசை நயத்துக்கு நிறையச் சொல்கள் இருக்கின்றன. எனவே பெயர் அமைப்பதில் எவ்வித ஒலிநயப் பிரச்சனையும் வருவதில்லை. அது சரி என்று நான் சொல்லவில்லை.ஆனால் இந்தத் திராவிட வெறியர்கள், வடமொழியை மட்டும் குறி வைப்பது தான் இந்தச் சந்தேகத்துக்கு காரணம்.

தமிழில் தொல்காப்பியர் வரைத்த இலக்கணம் இப்போது முழுமையாகச் செயற்படுத்த முனைந்தால், சாத்தியமில்லாமல் போகலாம.; பின் வந்த நாலடியார் சில சொற்களை வேதனையோடு ஒப்புக் கொள்கின்றார்.

வடமொழியை நீக்கினால் தமிழிற்கு எவ்வகையான சொற்களை சபேசன் வைத்திருக்கின்றார் என்று சொல்ல முடியுமா? ஒரு சொல்லுக் கூட அவர் கைவசத்தில் இல்லை என்றே என் கருத்து. வடமொழி மட்டுமல்ல, எந்த மொழியும், ஏன் இப்போது ஆங்கில மொழிச் சொற்கள் அதிகம் தமிழில் நுழைகின்றன. சபேசன் இதற்கு என்ன செய்யப் போகின்றார். அவரது தளமானலும் சரி, அவரது செயற்பாடாகும் சரி, எவ்வகைத் தமிழ் சொற்களை உள்வாங்கின.

உங்களிடம் நல்ல கேள்வியா இல்லையா என்ற பாராட்டு வாங்க நான் எழுதவில்லை.நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கின்றீர்கள் என்பது தான் என் கேள்வி! வடமொழியை மட்டுமே தூசிக்க முடிந்த உங்களுக்கு ஏன் மற்றய பெயர்களைத் தூசிக்க முடியவி;லை. ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு எவ்விதமான பதிலைத் தருவார்கள் என்று தெரியும்.இந்து மதம் தான் சகிப்புத் தன்மையோடு இப்பதால் அரைக்க முனைகின்றீர்கள்.

அவர் வடமொழியை மட்டும் திட்டுவராம். மற்றவர்களுக்கு பொதுவாகச் சொல்வாராம். நல்ல கூத்துப் போங்கள்.

யேசு வடமொழிப் பெயரல்லவே! தாஸ் மட்டும் தானே வடமொழி.

இந்து சமயம் மட்டும் இருப்பதால் தான் பொதுவான பேச்சு என்பது பொய்க் கதை. அங்கே உங்களுக்கு உள்ள ஆரிய எதிர்ப்பு வெறி என்பது மட்டும் தான். உண்மை. யாழ்களத்தில் நீங்கள் எழுதிய பல கட்டுரைகள் அதை மட்டும் தான் மையப்படுத்தி வந்தன என்பது உண்மை.றோ மீது உள்ள வெறுப்பை இதனூடாகப் பாவிக்க முயல்கின்றீர்கள் என்பது தான் உண்மை.

மூஸ்லீம்கள் தான் இங்கே குறைவு. ஆனால் கணிசமான கிறிஸ்தவ நண்பர்கள் இருக்கின்றார்களே! ஏன் அவர்களின் பெயர்கள் பற்றிச் சொல்ல முடியவில்லை. பீற்றர், அல்போன்ஸ், என்று பெயர்கள் வைக்க எவ்வாறு உங்களின் தமிழ் உணர்வு அனுமதித்தது.

கருணாநிதிக்கு எங்கோ பிறந்த ஸ்ராலினின் பெயர் வைக்க முடிகின்றது. ஆனால் ஆரியப் பெயர் தான் வைக்க கூடாதாம்.

உங்களுடைய திராவிடத்துக்கு ஒரு உருப்படியான கொள்கையும் இல்லாதால் தான், ஆரியத்தைத் திட்டித் தீர்க்கின்றீர்கள். ஏனென்றால் உங்களுக்கு என்று ஒரு கொள்ரக இருந்தால் தானே உங்களுக்குள் விவாதிக்க முடியும். இல்லாவிட்டால் அடுத்த காணியில் தானே மேய முடியும்.

மூடநம்பிக்கையைத் தகர்க்கின்றோம்என்று தங்களைப் புத்திசாலியாக்க காட்ட நிறையப் பேர் முயல்கின்றார்கள் என்பது கண்கூடு. ஆனால் நீங்கள் மூட நம்பிக்கையை மட்டும் தானே தகர்க்கஎ வேண்டும்.ஏன் நம்பிக்கையில் கை வைக்கின்றீர்கள். உங்களுக்கு எவ்வளவு புத்திசாலித் தனம் இருக்கின்றது என்று நினைக்கின்றீர்களோ, அதே அளவு மற்றவர்களுக்கு உண்டு என்று நீங்கள் நினைக்கும் வரை இந்த ஆரியம் என்ற கூக்குரல் மட்டும் தான் உங்களுக்குச் சொந்தம்.

சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் இருந்து வருகின்ற "முழக்கம்" பத்திரிகை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் பேபிசுப்ரமணியத்தை பேட்டி கண்டது.

அப்பொழுது அவரிடம் "தேசியத் தலைவர் வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு சென்று வழிபவது உண்மையா" என்று முழக்கம் கேட்டது.

பேபிசுப்ரமணியம் பதறிப் போய், தலைவர் எந்தக் கோயிலுக்கும் போவதில்லை என்றும், அவர் பகுத்தறிவுச் சிந்தனையை ஆதரிக்கின்ற ஒருவர் என்றும் விளக்கினார்.

நம்பவில்லை என்றால் கனடாவில் இருக்கும் உறவுகளை விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

தேசியத் தலைவர் இந்து மதம் சொல்கின்ற புராணங்கள், மனுதர்மம், பார்ப்பனியம் போன்றவைகள் குறித்து என்ன கருத்து வைத்திருக்கிறார் என்பதை தற்பொழுது வருகின்ற கட்டுரைகளில் இருந்து வாசித்து அறிந்து கொள்ளுங்கள். சில கட்டுரைகள் யாழிலும் இணைக்கப்பட்டுள்ளன.

தேசியத் தலைவர் ஆரம்பகாலத்தில் ஒரு கடவுள் பக்தி மிகுந்தவராக இருந்தது உண்மை. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் உண்மையை உணர்ந்த அவர் இன்று ஒரு பகுத்தறிவுவாதி.

இன்றைக்கு இத்தனை பேசுகின்ற நீங்களும் நாளை மாறலாம். யார் கண்டது?

ராகவன், ராமசாமி போன்றவைகள் தமிழ் பெயர்கள் அல்ல. அவைகளை தமிழில் எழுதுகின்ற பொழுது "இ" போட்டு எழுதுவார்கள். இது இன்றுவரை தொடர்கிறது.

ஆகவே ர"என்ற எழுத்து முதலில் வரக்கூடாது என்பது தொல்காப்பியர் காலத்தோடு முடிந்துவிடவில்லை.

தூய தமிழ் பெயர்களை ஆதரிக்கின்ற கலைஞரும், தேசியத் தலைவரும் தங்களின் பிள்ளைகளுக்கு ஸ்டாலின் என்றும், சார்லஸ் என்றும் பெயர் வைத்தற்கான காரணங்கள் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன்.

அண்மையில் அமெரிக்காவில் சில தமிழ் இளைஞர்கள் ஆயுதம் கடத்த முயன்றார்கள் என்று கைது செய்யப்பட்ட விவகாரம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அதில் கைது செய்யப்பட்ட கனடாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடைய தாய் ஒரு சாத்திரி ஒருவரை பார்க்கப் போயிருக்கிறார். ஏதோ ஒரு வழியில் என்னுடைய மகனுக்கு விடுதலை கிடைத்தால் போதும் என்கின்ற அங்கலாய்ப்பு அவருக்கு.

அந்த சாத்திரி என்ன சொன்னான் தெரியுமா?

"உன்னுடைய மகன் முற்பிறப்பில் பூப்படைந்திருந்த ஒரு பெண்ணை முறை தவறிப் பார்த்து விட்டான். அந்தப் பாவித்திற்குத்தான் இப்பொழுது தண்டனை அனுபவிக்கிறான். அதற்கு 108 பரிகார பூசைகள் செய்ய வேண்டும்" என்று சொன்னானாம்.

அவன்தான் பூசையும் செய்வான் என்றும், ஒரு பூசைக்கு 20 டொலர் முடியும் என்று சொன்னான்.

பாருங்கள்! அந்தத் தாய் தன்னுடைய மகன் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் எவ்வளவு தூரம் நொந்து போயிருப்பார். கடைசியில் கடவுளை நம்பிப் போனவருக்கு 2160 டொலர் மேலும் போய்விட்டது.

இப்படி கடவுளையும், மதத்தையும் வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்ற பொழுது, நாங்கள் "அவரவர் நம்பிக்கை" என்று பேசாது இருக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

வற்றப்பளையில் தலைவர் சமர் வெற்றிக்காக சென்று வழிபடுவதாக, அற்புதன் தான் முந்திக் கதை விட்டவர் என நினைக்கின்றேன். ஆனால் வற்றப்பளைக்கு துணிந்து போகக் கூடிய நிலை ஓயாத அலைகள் 1 சமருக்கு பின்னர் தான் வந்தது. அதற்கு முன்னர் முல்லைத்தீவு நகரத்தில் இருந்து பார்த்தால் வற்றாப்பளையில் ஆள் நடமாடுவது தெளிவாகக் காணக் கூடிய நிலையில் தலைவர் போயிருக்க மாட்டார். ஓயாத அலைகள் 3 இன் போது அற்புதன் உயிரோடு இல்லை. ஆக இடையில் ஓயாத அலை 2 நடவடிக்கை தான் புலிகள் முன்னெடுத்த சமர் என்பதால் இது சாத்தியமில்லை.

மற்றும்படி பேபி சுப்பிரமணியமமோ, வேறு யாருமோ தலைவரின் நடவடிக்கைகள் குறித்து வெளியே சொல்ல மாட்டார்கள். அவரின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அது உங்களுக்குத் தெரியும். தலைவரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆரய்வதில் சிலர் ஈடுபடுவது என்பதை சென்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தலைவரின் உணவுப் பழக்கவழக்கம் குறித்து சில நாட்டு பத்திரிகையாளர் முக்கியத்துவம் கொடுத்து, கேள்வி கேட்டதை அவதானிக்கலாம்.

முள்ளியவளை ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலில் ஒரு தளபதி வழிபாடு செய்வதைத் துரோகிகள் மூலம் அறிந்து கொண்ட சிறிலங்கா அரசு, முல்லைத்தீவில் இருந்து ஆட்லறித் தாக்குதலை அப்போது நடத்தியது. ஆனால் அன்று அவர் வராததால் அவர் தப்பித்தார். ஆனால் ஆலயத்தின் தேர் சேதமடைந்தது. பின்னர் தான் முல்லைச் சமர் நடந்தது. அதன் பாடல்களிலும் சித்திரத் தேர் சேதம் குறித்து வரிகள் வரும். பிற்பாடு அவர் வருவதில்லை. இதை ஏன் சொல்கின்றேன் என்றால் சில ஊடகங்கள் முட்டாள்தனமான கேள்விகள் கேட்க கூடாது என்பதை.

மனுதர்மம் என்பது மதக் கொள்கையல்லவே! அது ஒரு மன்னர் தனது ஆட்சிப் பகுதிக்கு கொண்டு வந்த சட்டம். அது மதக் கொள்கையல்ல. தலைவர் அதை எதிர்ப்பதில் தப்பில்லை.

தேசியத் தலைவர் பகுத்தறிவாளர் என்று நீங்கள் நம்புவது கூட வழமையான ஊகத்தின் அடிப்படையிலான சிந்தனை என்பதால் அதைக் கண்டு கொள்ளத் தேவையில்லை என நினைக்கின்றேன்.

என்னைக் குறித்துச் சொன்னீர்கள். நிச்சயமாக நான் மாற மாட்டேன். எனக்கு ஆரிய வெறியோ, இன்னுமொரு கோட்டை அழித்துத் தான், எம் கோட்டை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற போக்கிரித்தனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தொல்காப்பியம் வெறுமனே ரவை மட்டும் வைத்து இலக்கணம் அமைக்கவில்லை. அதன் விதிப்படி நடக்க வெளிக்கிட்டால் பல சொற்கள் இயல்பிளந்து விடும்.

போராட்டத்தின் ஆரம்பத்தில், 84ம் ஆண்டு தான் சார்ள்ஸ் பிறந்தார். அந்தக் காலத்தில் தமிழில் பெயர் வைப்பது குறித்து முக்கியத்துவம் கொள்ளப்படவில்லை. ஆனால் கருணாநிதியின் அடிப்படையே தமிழ் என்றிலிருந்து தானே ஆரம்பிக்கின்றது. அப்படியிருக்க ஏன் முடியவில்லை.

அதை விட, கிறிஸ்தவப் பெயர்களுக்கு ஏன் என்னும் தமிழ்மொழிப் பெயர் வைக்க வேண்டும் என்று உங்களின் ஆக்ரோசம் பொங்கவில்லை என்று பல தடவை கேட்டு விட்டேன். உங்களிடம் இருந்து என்னும் பதில் வரவே இல்லை.

போலிச் சாத்திரிகள் உருவாக இன்று யார் காரணம். உண்மையான ஆட்கள் வராமல் ஏளனம் செய்தும் ஒதுங்கச் செய்தது யார்? ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் போக்கு சாத்திரத்தில் மட்டுமல்ல, எல்லா விடயத்திலும் இருக்கின்றது. இன்று பாருங்கள் யாழ்பாணத்தில் இத்தனை பட்டினிக் கொடுமை நடக்கவும் எங்களுக்குள் கள்ள வியாபாரிகள், பதுங்கி வைத்துக் கொள்ளை வியாபாரம் செய்யவில்லையா? இப்படியான ஏமாற்றும் கொடுமைகளுக்கு தகுந்த தண்டனை தான் சரி!

அவ்வறே பாருங்கள். தமிழீழ விடுதலைப் போர் என்று வெளிக்கிடும்போது, எத்தனை பேர், நீங்களும் நாங்களும் தான். பணம் சம்பாதிக்கலாம். புலத்தில் சந்தோசமாக வாழலாம் என்று தானே சிந்தித்தோம். அவ்வாறு தான் சாத்திரத்தை ஏமாற்றிப் பிழைக்கும் போக்கிரிகள் எம் மத்தியில் இருக்கின்றார்கள் என்பது உண்மை. இதைச் சீர் திருத்தங்கள் மூலம் தான் கண்டிக்கலாமே தவிர, ஒதுக்கித் தள்ளுவதால் அல்ல.

சாத்திரம் சரியா, பிழையா என்று எனக்குத் தெரியாது. அதில் கை தேர்ந்தவனும் அல்ல. ஆனால் வெறுமனே, யோனியையும், பிட்டத்தையும் மட்டும் கொண்டு அது அமையவில்லை என்று தெரியும். அந்தக் காலத்திலேயே, வானநட்சத்திரங்களைக் கணிக்கும், திறமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது கண்கூடு. அது கிரேக்கர்களுக்கு நிகராக, அல்லது மேலாகக் கூட இருந்திருக்கலாம். எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, 2 வரியைச் சொல்லி இது சாத்திரம். இதை ஒட்டுமொத்தமாகத் தூக்கி வீசுவோம் என்ற முட்டாள்தனமான சிந்தனைகள் வேண்டாமே!

  • தொடங்கியவர்

நாரதர் அவர்கள் தன்னைத் தான் நான் சுட்டி எழுதுவதாக நினைத்துக் கொள்வது மிகவும் வேதனைக்குரியதாகும். நாரதர் அவர்களை என்றைக்குமே தனிப்பட்டரீதியில் பாதிக்க வேண்டும் என்று எக் கருத்துக்களையும் எழுதவில்லை என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நான் சொல்லவருவது எல்லாம் பெரியார் என்பவர் காட்டிய திராவிடக் கொள்கை பிழையாது என்பது மட்டுமே!

உங்கள் கருத்தாடலில் உள்ள முரண்பாட்டை நீங்கள் உணரவில்லையா?

மேலே பெரியார் காட்டிய திராவிடக் கொள்கை பிழையானது என்று காட்டி உள்ளதாகச் சொல்கிறீர்கள், கீழே திராவிடத்துவம் என்றால் என்ன என்றோ அல்லது அதன் கொள்கை என்ன என்றோ கட்டுரை எதனையும் பார்க்க வில்லை என்கிறீர்கள், மேலும் திராவிடத்துவம் என்பதற்கு சுயமான வியாக்கியானம் எதுவும் இல்லை என்கிறீர்கள்.எனது கேள்வி இவ்வாறு இல்லாத ஒரு திராவிடக் கொள்கையை நீங்கள் எவ்வாறு பிழை என நிறுவி உள்ளீர்கள்.இல்லாத ஒன்றை எவ்வாறு பிழை என நிறுவ முடியும்? உங்களது கருத்தாடல் முழுக்க பெரியாரைத் தூற்றியும் இது பற்றி குறிப்பாக இந்து மதம் பற்றி, நீங்கள் உங்கள் பெற்றோரைப் போல எதுவித சந்தேகமுமின்றி நம்பிக் கொண்டிருக்கும் உங்கள் பிறப்பால் வந்த எந்த வித மாற்றமும் அடையாமல் காலம் காலமாக நிலையாக இருக்கும் உங்கள் மதம் என நீங்கள் நம்பும் இந்து மதம் பற்றி விமர்சனம் செய்வதே உங்களுக்குப் பிழையாகத் தெரிகிறது. அதனால் வரும் கோவமே உங்களை இவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு அவதூறைச் செய்யத் தூண்டி உள்ளது.

ராமசாமி நாயிடு காலத்தில் இருந்து, இன்று வரைக்கும் திராவிடத்துவம் கதைப்பவர்கள் எந்தப் பிரச்சனையிருந்தாலும், அதை எலல்லாம் விட்டு விட்டு, ஆரியத்தையும், பிராமணர்களையும எங்கே சாட வேண்டும் என்று சந்தர்ப்பம் தேடிக் கதைப்பதைப் பார்க்கப் புரியவில்லையா? ஜாதியை ஒழிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு, பார்ப்பாணர் என்று ஒரு சமுதாயத்தை ஒதுக்கியது அப்பட்டமான ஜாதி வெறி தானே! ஜாதியை ஒழிக்கும் விதம்?

திராவிடத்துவம் என்றால் என்ன என்றோ, அல்லது அதன் கொள்கை என்னவென்று இது வரைக்கும் உங்களால் ஒரு கட்டுரை இணைக்க முடிந்ததா? வெறுமே இந்து மதத்தைப் பற்றி வசைபாடுகின்ற ஆக்கங்கள் தானே இங்கு பதியப்பட்டன. திராவிடத்துவம் என்பதற்கு சுயமான வியாகிக்கியானம் இன்றி, மற்றக் கோட்டை அழித்து, உங்களின் கோட்டை பெரிதாகக் காட்டுவதற்காக தானே இத்தனை காலமும் கட்டுரைகள் புனையப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியாது என்பதற்காகவோ அன்றி யாழ்க் களத்தில் அவற்றை நீங்கள் பார்க்கவில்லை என்பதற்க்காக்வொ அவை இல்லை என்று ஆகிவிடாது.உங்களுக்குத் தெரியாததை நீங்கள் தான் தேடிப் பெற வேண்டும்.அந்த தேடல் இல்லாவிட்டல் உங்களுக்கு அது தெரியாது.பூனை கண்னை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடாது.

திராவிடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர்.

திராவிட மொழிகள்

திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது.

சொல்லின் தோற்றம்

திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றும் அச்சொல் திரிபடைந்தே தமிழ் என்ற சொல் உருவானதென்றும் தொடக்கத்தில் ஆய்வாளர்கள் கருதினர். பெரும்பாலும் வெளிநாட்டவரான அக்கால ஆய்வாளர்கள், சமஸ்கிருதப் பின்னணியுடனேயே திராவிட மொழி ஆராய்ச்சியில் இறங்கியவர்கள் ஆதலால், இந்த எடுகோள் அவர்களுக்கு இயல்பாக இருந்தது. வேறு சில ஆய்வாளர்கள், முக்கியமாகத் தமிழ் நாட்டினர், தமிழ் என்ற சொல் மருவியே திரவிட என்னும் சமஸ்கிருதச் சொல் உருவானதாக வாதிடுவர். இவ் விடயத்தில் ஒத்த கருத்து ஏற்படுவதற்கு ஏதுவாகத் தக்க சான்றுகள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றும் வெவ்வேறு சாராரைக் குறிப்பன என்றும் கனகசபைப்பிள்ளை போன்றவர்கள் கருதினார்கள். எனினும் இக்கொள்கைக்குப் போதிய ஆதரவு இல்லை.

திராவிட இனம் பற்றிய கருத்துரு

19 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் புறம்பாக அம் மொழிகளுடன் அடிப்படையில் தொடர்புகளற்ற மொழிக்குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்பட்டு வருவதை அறிந்தார்கள். இதனால், பொதுவாக கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். அதற்கு இணங்கத், திராவிடர் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் ஆரியர் வருகையினால் ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி இடம் பெயர, ஏனையோர் ஆரிய மொழி பேசுவோருடன் கலந்துவிட்டதாகவும் கருதினர்.

திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லான திரவிட என்பதிலிருந்து பெறப்பட்டது. திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages)என்னும் ஆங்கில நூல் 1856 இல் வெளியிடப்பட்ட பின்னரே இச் சொல், தற்காலப் பொருளுடன் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. மேற்படி நூலே திராவிட மொழிகளை உலகின் முக்கிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியது.

திராவிட இனத் தோற்றம்

திராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் இல்லாததால், இது தொடர்பான சர்ச்சைகள் முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இது, பெரும்பாலும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்களுட் சிலர் திராவிடர் மத்தியதரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர். பெரும்பாலும் தமிழ் ஆய்வாளர்கள் சிலரே இக் கருத்தைத் தீவிரமாக ஆதரித்தார்கள். இந்தியாவுக்குத் தெற்கே, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற இலெமூரியா எனக் குறிப்பிடப்படும் ஒரு நிலப் பகுதியையும், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் பேசப்படும் குமரிக்கண்டம்[1] என்பதையும் ஒன்றாக்கி, அப்பகுதியே தமிழர் (திராவிடர்) தோன்றிய இடம் என இவர்களில் சிலர் வாதிட்டனர். சிலர், மனித இனமே இங்கேதான் தோன்றியது என்றும், முதல் மனிதன் திராவிடனே என்றும் காட்டமுயன்றனர். தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வுகள் வலுவடைந்திருந்த ஒரு காலத்தில், இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன எனினும், இத்தகைய முன்மொழிவுகள் பிற ஆய்வாளர் மத்தியில் போதிய ஆதரவைப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

இன வகைப்பாடு

மானிடவியலாளர், இந்தியர்களை, குறிப்பாக, திராவிடர்களை, இன அடிப்படையில் வகைப்படுத்துவது தொடர்பில் நீண்ட விவாதங்களை நடத்தியுள்ளனர். ஒரு வகைப்பாட்டின்படி, திராவிடர்கள், ஆஸ்திரலோயிட் அல்லது வெத்தோயிட் என்னும் இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டது.

பரம்பரையியல் வகைப்பாடு

மக்களை இனங்களாக வகைப்படுத்துவது தொடர்பான பரம்பரையியல் நோக்குப் பெருமளவு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான தற்கால மானிடவியலாளர், பரம்பரையியல் அடிப்படையில் இனங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை[2]. ரிச்சர்ட் லெவொண்டின் (Richard Lewontin) என்பவர், ஒவ்வொரு மனித மரபணுவும் இன்னொன்றிலிருந்து வேறுபடுவதை எடுத்துக்காட்டி, இனங்களை வரையறை செய்வதில் பரம்பரையியல் பயன்படாது என்று கூறுகிறார்[3]. எனினும் பல ஆய்வாளர்கள், பரம்பரையியல் முறைகளைப் பயன்படுத்தி இனங்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு முயன்றுள்ளனர். கவல்லி-ஸ்ஃபோர்சா (L.L. Cavalli-Sforza) என்பவர், எல்லா இந்தியர்களுமே பரம்பரையியலின் அடிப்படையில் காக்கேசியர்களே (Caucasian) என்றார்[4]. லின் பி. ஜோர்டே (Lynn B Jorde), ஸ்டீபன் பி. வூடிங் (Stephen P Wooding) போன்றவர்கள், தென்னிந்தியர்களைப் பரம்பரையியல் அடிப்படையில், ஐரோப்பியர்களுக்கும், கிழக்கு ஆசியர்களுக்கும் இடையில் வைத்தார்[5][6][7]. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் சில, உயிரியல் ரீதியான திராவிட இனம் என்ற கருத்துரு தொடர்பில் ஐயப்பாடுகளை உண்டாக்குவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புகள்

↑ குமரிக் கண்டம், தெற்கில் கடலையும், மேற்கில் மடகாஸ்கர் தீவையும், கிழக்கில் சாவகத்தையும், வடக்கில் விந்திய மலையையும் எல்லையாகக் கொண்டிருந்தது என்றனர்.

↑ Bindon, Jim. அலபாமா பல்கலைக்கழகம். மானிடவியற் பிரிவு. ஆகஸ்ட் 23, 2006. <http://www.as.ua.edu/ant/bindon/ant275/presentations/POST_WWII.PDF#search=%22stanley%20marion%20garn%22>.

↑ Lewontin, R.C. Biology as Ideology The Doctrine of DNA. Ontario: HarperPerennial, 1991.

↑ Sailer, Steve. Interesting India, Competitive China. xbiz. இணைப்பு 2006-09-12 அன்று அணுகப்பட்டது.

↑ Jorde, Lynn B Wooding, Stephen P. Nature Genetics. Department of Human Genetics. 2004. <http://www.nature.com/ng/journal/v36/n11s/full/ng1435.html>.

↑ Bamshad, M.J. et al. Human population genetic structure and inference of group membership. Am. J. Hum. Genet. 72, 578−589 (2003).

↑ Rosenberg, N.A. et al. Genetic structure of human populations. Science 298, 2381−2385 (2002).

[தொகு] வெளியிணைப்புகள்

இஸ்லாத்துக்கு முற்பட்ட சிந்துவெளியின் மக்களும், மொழிகளும் (ஆங்கிலம்)

திராவிடர் - வி.சிவசாமி (தமிழ்)

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D" இலிருந்து மீள்விக்கப்பட்டது

மேலே உள்ளது விகிபிடியாவில் எந்தவித அரசியல் கலப்பும் அற்ற ஒரு கட்டுரை.திராவிடம் சம்பனத்தமான பல் துறைத் தகவல்களைத் தருகிறது.இங்கே நோக்கப் பட வேண்டியவை,எந்த ஆய்வுமே ஆரிய திராவிட மொழிக் குழுமங்கள் வெவ்வேறானவை என்பதை ஏற்றுக் கொள்கின்றன.ஆரிய மொழிக் குழுமத்தைப் பேசும் மக்களும் அதில் இருந்து முற்று முழுதாக வேறுபட்ட தனித்துவமான திராவிட மொழிக் குழுமத்தைப் பேசும் மக்களுமிருந்தனர் என்பதை மறுதலிக்கவில்லை.சர்ச்சைக்கு

Edited by narathar

  • தொடங்கியவர்

தலைவருக்கு வல்வெட்டித் துறையில் கோவில் இருக்கின்றது என்று நீங்கள் நம்பவல்லையா?

அவரின் மூதாதையர் வழி பாடு செய்ததற்கும் தலவரது நம்பிக்கைகளுக்கும் என்ன சம்பந்தம்?

அல்லது தலைவர் திருமணம் முடித்தது தமிழ்நாட்டில் உள்ள இந்து ஆலயம் ஒன்றை நீங்கள் அறியவில்லையா?அந்தத் திருமணத்தை அன்ரன் பாலசிங்கம் தான் நடத்தி வைத்தார்.அது தொடர்பான படங்கள் இணையத்தில் வந்திருந்தன. தேடினால் கிடைக்க கூடும்.

தலவர் ஒருவரைத் திருமணம் செய்கிறார்.அந்த ஒருவருக்கும் சில நம்பிக்கைகள் இருக்கும்.அந்த நம்பிக்கைகளுக்கும் மதிப்புக் கொடுப்பதே சம உரிமை. நாம் எமது விருப்பத்தை திருமணம் என்னும் பந்தத்தின் மூலம் இனொருவர் மீது திணிக்க முடியாது.இந்து முறைப்படி திருமணம் செய்வாதால் தலைவரின் கொள்கைகள் இந்துமத ரீதியானவை என்று நீங்கள் நிறுவ முற்படுவதே மோசடியானது என்று கூறுகிறேன்.அங்கு என்ன நடந்தது என்பதை நான் அறிவேன்,அது தனி நபர் சார்ந்த விடயம் அது பற்றி மேலும் எழுதவோ விமர்சிக்கவோ நான் விரும்பவில்லை.

கிபிரை அடிக்க வேண்டும் என்று போராளி செய்கின்றான் என்று சொல்வது அவனது செயற்பாட்டைஅவமானப்படுத்துவ
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ஆரியம் திராவிடம் என்பதெல்லாம் பெரியார் போன்றவர்களின் அரசியல் புஷ்வாணங்கள்.

இதுதான் திராவிடம் என்பதற்கான வரலாற்று வடிவம் கிடையாது. திராவிட மொழிகள் என்பதில் அதென்ன திராவிடம் என்றால்..அதற்கு விளக்கம் இல்லை.

உண்மையில் ஆரிய திராவிட பாகுபாடின்றி இந்தியாவின் வடக்கிலும் தெற்கிலும் மக்கள் ஒற்றுமையோடு வாழ்ந்துள்ளனர் என்ற உண்மை வரலாற்றியல் ஊடாகவும் பெரியாரின் காலத்துக்குப் பின்னரான நவீன ஆர்கியோலொஜி மூலமும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் திராவிடர்களா ஆரியர்களா என்பது அல்ல அவசியம். தமிழ் மொழியும் அம்மொழி சார்ந்தோரின் வரலாறு இருப்பும் அவற்றிற்கான வரலாற்றுச் சான்றுகளுமே தமிழர்களின் வரலாற்றை நவீன உலகியல் ஒழுங்கில் அதிகம் வலியுறுத்திச் சொல்லப் போகின்றன. பண்டைய திராவிடம் என்பதற்கு ஊடாக தமிழர்கள் சாதிக்க நினைப்பது என்ன? தமிழர்களுக்கு ஆரிய திராவிட பாகுபாட்டினின்றும் எழும் ஆரிய எதிர்ப்பு அவசியம் தானா? திராவிடர்கள் என்பதற்காக தமிழர்கள் அல்லாதோர் எமது விடுதலைப்போராட்டத்துக்கு உதவி அளிக்கின்றனரா? தெலுங்கர்கள் மலையாளத்தவர்கள் கர்னாடகத்தவர்கள் தமிழகத்தில் உள்ள தமிழர்களையே உணர மறுக்கிறார்கள்...எமக்கு..என்ன செய்யப் போகிறார்கள்.

அநாவசிய ஆரிய திராவிட எதிர்ப்பை தமிழர்கள் மத்தியில் விதைத்து தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை ஆரிய,பார்ப்பர்ணிய எதிர்ப்பு போராட்ட வடிவமாக்கி சிக்கல் தன்மைக்குள் கொண்டு செல்வதைச் சிலர் செய்ய முனைகின்றனர். உலக அரங்கில் தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்துக்கான ஆதரவை வேண்டி நிற்கும் இவ்வேளையில் தமிழர்களின் மொழியியல் சார்ந்த இருப்புக்கள் நோக்கி அவர்கள் வலுவான வரலாற்றுச் சான்றுகளை தேட வேண்டிய தேவையில் அநாவசிய கற்பனைப் பதங்களான ஆரிய திராவிடம் பேசி ஆரிய திராவிட வெறியைத் திணிப்பதைச் செய்வதில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பெரிய அளவில் நன்மை கிடைக்கப் போவதில்லை.

இவை தவிர்க்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது. நவீனத்துவ வரலாற்று ஆய்வுகளை நோக்கி தமிழர்கள் நடைபோட்டு தங்கள் மொழி மற்றும் இன அடையாளங்களுக்கான வரலாற்றுத் தொன்மைகளை நிரூபிக்க முனைவதை விடுத்து பல தசாப்தங்கள் பழமையான ஆரிய திராவிட பழமை வாதம் பேசிக் கொண்டு காலம் கழிப்பதில் எந்தப் பயனுமில்லை.

"An Aryan invasion of India from the outside around 1,500 B. C. did not occur. People of North

and South India have lived together in peace as two branches of one family since antiquity.

People who talk of an Aryan conquest of India parrot the 19th century British viewpoint and do

disservice to the cause of unity of India."

http://www.uwf.edu/lgoel/documents/AMythof...ionsofIndia.pdf

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

குதர்க்கமாகக் கதைப்பது அன்று தொடக்கம் இன்று வரை பெரியார் வழி வந்தவர்களின் பழக்கம் என்பது ஏதோ உண்மை தான். தேங்காய் உடைத்தால் பரிட்சையில் சித்தி என்று அல்ல. பரீட்சைக்குப் போறகின்றவனுக்கு ஒரு துணிவைக் கொடுக்க கூடும். பலருக்கு பரிட்சை என்றால் கைகால் நடுங்கும். அல்லது டொய்லட்டுக்கு தொடர்ந்து போகின்றவர்களுக்கு, இறைவன் துணை இருப்பார் என்று நம்புவது தப்பல்ல.

பலர் மேலே சிவமயம் கூடப் போடுவார்கள். அது அவர்களது தனிப்பட்ட நம்பிக்கையாகும்.

இதைத் தானே நான் சொன்னேன் கடவுள் இல்லை என்று நம்பி பரீட்சை எழுத துணிவு வேண்டும் என்று.. :D

புலத்தில் பணம் கிடைப்பதாக ஆலயம் உருவாவது உண்மை தான். ஆனால் ஊரை எடுத்தால் பெரும்பாலனவர்களுக்கு உரித்துடைய ஆலயங்கள் என்று இருக்கின்றன. அங்கே பணத்தைச் சம்பாதிக்கும் எண்ணமிருக்காதே! அப்படிப் பார்த்தால் அன்னதானம் செய்வது எல்லாம் எதற்காக.

ஒரு நாள் சனத்தை கூட்டுவதற்காக வழங்கப் படும் அன்னதானத்தால் மக்களின் பசிபட்டிணி ஒழிந்து விட்டதா? ஊரில் உள்ள கோவில்களுக்கு வருமானங்கள் பல நில புலங்களில் இருந்து வந்தது.பண்டைய காலத்தில் கோவில்களுக்கான சொத்துக்கள் அரசர்களிடம் இருந்து வனததன.அரசர்கள் மக்களிடம் கொள்ளை அடித்தனர். நில புலன் உள்ள வேளாளர் உழைக்கும் மக்களிடம் இருந்து கொள்ளை அடித்ததை தமது பாவங்களைக் கழுவ கோவில்கள் மூலம் பிராமணர்களிடம் வழங்கி முக்தி பெற்றனர்.

வேண்டாததை இழக்கலாம் என்றால், வயது போனவர்களை விவேக் பாணியில் தூக்கிப் போடுவீர்களா?

வயது போனவர்கள் வேண்டாதவர்கள் என்று விவேக் வடிவேலு சொல்வது தான் உங்களின் தரம் என்றால் அதையே கேட்டுக் கொண்டிருங்கள்

இந்தக் கேள்வி உங்களிடம் கேட்கப் பட்டது என்பதைப் புரிவீராக. ஆரியர் அப்போது செய்த தவறுக்காக ஆரியரை எதிர்ப்பதாக நீங்கள் சொன்ன பதிலுக்காகவே உங்களைக் கேட்டேன்.

ஆரியர் கொண்டு வந்த அடக்குமுறைச் சித்தாந்தமான பார்ப்பனீயம் இன்றைய தமிழரின் சமூக நலத்திற்கு உகந்தது அல்ல என்பதால் தான் அது களையப்பட வேண்டுமென்று சொல்கிறோமே தவிர அது ஆரியரால் கொண்டுவரப்பட்ட ஒன்று என்பதற்காக அல்ல.

நல்லதை மட்டுமே உள்வாங்குவோம் என்பது தான் என் கருத்தே தவிர, எல்லாம் என்றில்லை.

மேலே சொன்னது கீழ்ச் சொன்னதற்கு முரணாக இல்லை?

வேண்டாததை இழக்கலாம் என்றால், வயது போனவர்களை விவேக் பாணியில் தூக்கிப் போடுவீர்களா?

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

தமக்குத் தெரியாத விடயங்களில் மேதைகளாகப் பலர் உள்ளனர் போலுள்ளது.

A great many people think they are thinking when they are merely rearranging their prejudices.

"William James"

  • கருத்துக்கள உறவுகள்

தமக்குத் தெரியாத விடயங்களில் மேதைகளாகப் பலர் உள்ளனர் போலுள்ளது.

இப்படிச் சொல்லிச் சொல்லியே வாழும்... நவீனத்துவத்துவத்தூடு உண்மைகளை ஜீரணிக்கத் தகுதியற்ற பல மேதைகளும் உள்ளனர். :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லிச் சொல்லியே வாழும் நவீனத்துவத்துவத்தூடு உண்மைகளை ஜீரணிக்கத் தகுதியற்ற பல மேதைகளும் உள்ளனர். :P

A great many people think they are thinking when they are merely rearranging their prejudices.

"William James"

:D:D :P :P

  • கருத்துக்கள உறவுகள்

A great many people think they are thinking when they are merely rearranging their prejudices.

"William James"

Opinions founded on prejudice are always sustained with the greatest violence :D

  • கருத்துக்கள உறவுகள்

Opinions founded on prejudice are always sustained with the greatest violence :D

Prejudices, it is well known, are most difficult to eradicate from the heart whose soil has never been loosened or fertilised by education; they grow there, firm as weeds among stones.

Reasoning against a prejudice is like fighting against a shadow; it exhausts the reasoner, without visibly affecting the prejudice.

குருவிகள் ஆரிய படையெடுப்பு நடக்கவில்லை என்று சைக்கிள் கப்பில முருங்க மரத்தில ஏறுறார். இவருடை புஸ்வாணங்கள் எப்ப நிக்க போகுது :D

தூயவன் போன்றவர்களிற்கு

யாருக்கும் எந்த நம்பிக்கையையும் தொடர பின்பற்ற முழு உரிமை இருக்கு. ஆனால் அவை மற்றவரை பாதிக்காத வரை. மற்றவரை பாதிப்பது என்பது மதத்தின் பெயரால் மற்றவரின் உரிமைகளை மறுப்பது உடமைகளை உரிமை கோருவதும் அபகரிப்பதும் தான்.

அரசமரத்தை சாட்டாக வைத்து விகாரை கட்ட நிலங்களை அபகரிப்பதோ, இராமாயணத்தின் பெயரால் பாபரி மசூதியை இடித்து இராமருக்கு கோயில் கட்டுவதோ, கடவுளின் பெயரால் வேதங்களின் பெயரால் பிறப்பால் மக்களை பிரிப்பது, அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்குவது, சூத்திரர்கள் கெட்டவர்கள் என்று தரப்படுத்துவது என்பது ஒரு மதத்தை பின்பற்றுபவர்களின் தனிப்பட்ட உரிமை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. பலருக்கு இந்து மதமும் அது எமது சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கங்களும் அவர்களுடைய தனிமனித உரிமையாக தெரிவது அவர்கள் பிறந்ததில் இருந்தே அந்த சமூக கட்டமைப்பில் அதிகாரங்கள் கொண்ட வர்க்கமாக இருப்பது தான் ஒரே காரணம். அதிகார வர்க்கங்களிற்கு பிறப்பில் இருந்தே அனுபவித்த அதிகாரங்களை விட்டுக் கொடுப்பது தனிமனித உரிமைப் பிரச்சனையாக தெரிவது ஒன்றும் புதிய விடையம் அல்ல. அவர்கள் மதத்தின் பெயரால் தாள்த்தப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்களின் பிரிவில் இருந்தால் அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்து மதத்தை விமர்சிப்பது தனிமனித உரிமை மீறலாக பினாத்த வைக்காது.

கிறீஸ்தவ மதமோ இஸ்லாம் மதமோ மற்றவர்களை பிறப்பால் தரப்படுத்தி உரிமைகளை மறுக்கும் பொழுது அதை மற்றவர்கள் மீது திணிக்கும் நிலைக்கு செல்லும் பொழுது அதுவும் ஒரு சமூகப்பிரச்சனையாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எந்த ஒரு இனத்திற்கும் மற்றவர்களை பிறப்பால் தரப்படுத்தி தீர்பு சொல்ல விசேட உரிமை இல்லை. ஆனால் பார்ப்பணியம் அதைத்தான் கடவுளின் பெயரால் செய்கிறது. அதை அவர்களது நம்பிக்கை சார்ந்த உரிமை என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

இங்கு தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்து மதத்தினதும் பார்ப்பணியத்தினதும் விடையங்களானது அவற்றின் பெயரால் ஒருவர் இன்னொருவர் மீது செலுத்தும் ஆதிக்கம் மேலாண்மை அதிகாரங்கள் பற்றியது. அடுத்து யதார்தமான வாழ்வில் பகுத்தறிவின் மூலம் முன்னேறியுள்ள விடையங்கள் பற்றியும் அவற்றிற்கு முரணாக இந்து மதத்தில் உள்ள விடையங்கள் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டப்படுகிறது. இது மக்கள் முற்பிறப்பு பாவ புண்ணியம், பிராயச்சித்தம், விரதம், உபவாசம், அபிசேகம், நேர்த்திக்கடன் என்று சவால்களை நேரடியாக எதிர்கொள்ளாது சுற்றி வழைத்து நேரத்தையும் வளங்களையும் விரயமடித்து ஏமாரக் கூடாது. தன்னம்பிக்கையோடு தகுந்த தயார்படுத்தலோடு நேரடியாக எதிர்கொள்ள வேண்டும் அதைச் செய்து தான் ஏனைய இனங்கள் நாடுகள் முன்னேறியுள்ளன என்ற தெளிவை உண்டாக்கவே. இது எம்மை வளமுள்ள இனமாக்க அடிப்படையானது. வளமற்ற இனங்களிற்கு சுதந்திரம் கிடைக்காது. யாருடை கைக்கூலியாகவோ அடிவருடியாக நிழலில் தற்காலிகமாக ஒதுங்கி கொள்ளலாம். இது தான் வரலாறு. இல்லாவிட்டால் அழிவு தான் மிஞ்சும்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆரிய படையெடுப்பு நடக்கவில்லை என்று சைக்கிள் கப்பில முருங்க மரத்தில ஏறுறார். இவருடை புஸ்வாணங்கள் எப்ப நிக்க போகுது

இப்படிச் சொல்வதுதான் புஸ்வாணமாகி பஸ்பமாகிவிட்டது.

இணைப்பைப் படிக்க.

குறித்த கட்டுரை தவறு என்றால் குறித்த பல்கலைக்கழகத்துக்கு எழுதி அது தவறுதான் என்று நிரூபியுங்கள்...! சும்மா புஸ்வாணம் கதையளப்பதால் அது அப்படியாகிடாது,

ஏற்கனவே களத்தில் விடுக்கப்பட்ட அறிவித்தலை நோக்கம். இவர் அவர் என்று கருத்தெழுதுதல் தவிர்க்கப்பட வேண்டும். நீங்கள் எழுதிய பெயருக்கும் நமக்கும் தொடர்பில்லை. கருத்தை திசை திருப்பும் நோக்கோடு மீண்டும் நீங்கள் களத்தை உங்கள் இஸ்டம் போல பாவிக்க முற்படுகிறீர்கள். :P

நாம் தருகின்ற இணைப்புக்களை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வது இல்லை. நீங்கள் தருகின்ற இணைப்புக்களை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

நீங்கள் 10 இணைப்புக்களை கொடுத்தால், எம்மாலும் 10 இணைப்புக்களை கொடுக்க முடியும். மாறி மாறி இணைப்புக்களை கொடுத்து என்ன பயன்? இப்படி இணைப்புக்களை கொடுத்து விவாதத்தை திசைதிருப்பியதுதான் நடந்தது.

ஆகவே நீங்கள் அவைகளை படித்து அதை இந்த விவாதத்திற்குள் நின்று தர்க்கரீதியாக எமக்கு விளக்குங்கள். சரி என்று சொன்னால், ஏற்றுக் கொள்வதில் எமக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

குருவிகள் போன வருடம் விட்ட புருடா தொடருது. :D

எல்லா பல்கலைக்கழகங்களிலும் உள்ள விரிவுரையாளர்கள் ஆய்வு செய்பவர்களிற்கு சொந்த (accademic & research staff) இணையம் (personal home page) நடத்த ஒரு பிரிவு கொடுக்கப்படுகிறது. அதில் அவர்கள் தமது CV போடுவார்கள், தமது பொழுது போக்கு, கலாச்சாரம், நம்பிக்கை, மதம், இனம், நாடு சம்பந்தப்பட்ட விடையங்களை எழுதுவார்கள்.

ஈழத் தமிழர் சிலர் கூட தமிழீழம் பற்றி இவ்வாறான இணையங்களில் எழுதியிருந்தனர்.

அது அந்த பல்கலைக்கழகங்களின் உத்தியோகப+ர்வ நிலைப்பாடு அல்ல. இந்த பழய புளிச்சுப் போன புருடாக்களை விட்டுட்டு ஏதாவது புதுசா விடலாமே :P

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பல்கலைக்கழகங்களிலும் உள்ள விரிவுரையாளர்கள் ஆய்வு செய்பவர்களிற்கு சொந்த (accademic & research staff) இணையம் (personal home page) நடத்த ஒரு பிரிவு கொடுக்கப்படுகிறது. அதில் அவர்கள் தமது CV போடுவார்கள், தமது பொழுது போக்கு, கலாச்சாரம், நம்பிக்கை, மதம், இனம், நாடு சம்பந்தப்பட்ட விடையங்களை எழுதுவார்கள்.

ஈழத் தமிழர் சிலர் கூட தமிழீழம் பற்றி இவ்வாறான இணையங்களில் எழுதியிருந்தனர்.

அது அந்த பல்கலைக்கழகங்களின் உத்தியோகப+ர்வ நிலைப்பாடு அல்ல. இந்த பழய புளிச்சுப் போன புருடாக்களை விட்டுட்டு ஏதாவது புதுசா விடலாமே :P

எந்தப் பப்ளிகேசனிலும் பல்கலைக்கழகத்தின் பெயரைப் பாவிக்க வேண்டின் அந்த பல்கலைக்கழகத்தின் துறைசார் அனுமதி பெறப்பட வேண்டும்.

அந்தக் கட்டுரையில் பல்கலைக்கழகத்தின் பெயர் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

http://www.uwf.edu/lgoel/documents/AMythof...ionsofIndia.pdf

நீங்கள் இந்தக் கதைகளை வேறு யாருக்கும் அவியுங்கள். வேகலாம்.

இதோ..இதையும் வாசியுங்கள்...

http://www.tamilnation.org/heritage/agrawal.htm

சென்ற தசாப்தப் புராணங்களை கிழித்தெறிய வேண்டிய வேளைகள் வந்தாயிற்று. ஆரிய பார்ப்பர்ணியப் பெயர்களில் கட்டுரைக் கூத்தாட்டம் முடியும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும், புதிய ஆய்வுகளையும் சான்றுகளையும் நோக்கி தமிழர்களின் நவீன ஆர்கியோலொஜி பயணிக்க வேண்டிய கட்டாயத்தையும் சொல்வதே நம் கடன். பெரியாரும் புடலங்காயும் அழிக்கிப் போன 4/5 தசாப்தத்துக்கு முந்திய சரக்குகள். அதை வைத்து இன்னும் குப்பை கொட்ட நினைப்பவர்களை என்னென்பது.

இந்திய எழுதறிவு வீதம் 25-45% ஆக இருக்கும் போது பெரியார் அவிழ்த்தவை பகுத்தறிவாக தெரிந்திருக்கலாம். இன்று இலங்கையே 90% மேல் கல்வி அறிவு பெற்ற மக்களைக் கொண்டிருக்கும் வேளையில் மக்கள் நவீனத்துவத்தை விளங்கக் கூடிய வகையில் முன்னேறி இருக்கும் போது மக்களை எருமை மாடுகளாக எண்ணி பெரியார் மழையைப் பொழிந்து கொண்டிருப்பதில்..பயனில்லை. மாற வேண்டியவர்கள் மாறுங்கள்.

நமது தேவை நவீனத்துவ கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே. மக்களைப் பகுத்தறிவற்றவர்களாக நாம் காணவோ உச்சரிக்கவோ போறதில்லை. இன்று மக்களுக்கு நல்ல பகுத்தறியும் ஆற்றல் பிறந்துள்ளது. அவர்களே தீர்மானிப்பார்கள் எவை அவசியாமனவை எவை சான்றுகளோடு பிறக்கின்றன என்று.

எனியும் பெரியார் வார்த்தையில் விஞ்ஞானம் வளர்த்ததும் ரொக்கற் விட்டதும் அவசியமில்லை. இந்தியாவே சந்திரனுக்கு கலம் அனுப்பும் நிலையை அடைந்துவிட்டிருக்கிறது. உலகமே வியக்கும் வகையில் தகவல்தொழில்நுட்பத் துறையில் விருத்தி கண்டிருக்கிறது. அதற்காக இந்தியா இன்னும் அடிமட்டத்தில் உள்ளதாக எண்ணிக் கொண்டு பெரியார் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் குஷ்பு சொன்னா என்று மக்களைப் பிராக்காட்டி ஏய்க்கலாம் என்பது நடக்கப் போறதில்லை.

மக்களுக்கு தகவல்களை வழங்கினால் போதும் அவர்கள் தீர்மானிப்பார்கள் அவற்றின் முக்கியத்துவம் என்னென்று. அதுதான் இன்றைய உலகியல் போக்கு. பெரியாரின் வார்த்தைகள் இறந்து தசாப்தங்கள் கடந்தாயிற்று. அதை இன்னும் அரைச்சுக் கொண்டிருப்பவர்கள் தான் இன்னும் பிற்போக்கான சிந்தனையோடு இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக இருக்கிறது. :P

Edited by nedukkalapoovan

God of small things- A Review, Oneness in Hindusim போன்றனவும் உண்டு. pdf இல் தான் வேலை செய்யும் இடத்தின் பெயரை போட்டு விட்டால் அது offical publication ஆகிவிடாது. :P

அது துறைசார் நிபுணர்களின் விமர்சனங்களை எதிர் கொண்ட (defended in a professional conference) ஒரு ஆய்வு ஆராச்சியின் அடிப்படையில் உருவான அறிக்கை அல்ல. மேலே கூறியது போல் தான் ஆர்வம் காட்டும் பல விடையங்கள் பற்றிய தனது சொந்த கருத்துக்களை pdf ஆக போட்டிருக்கிறார். அதை offical publication என்று based on scientific evidence என்று சுத்துமாத்து பண்ணிற அளவிற்கு அறிவற்றவர்கள் அல்ல இங்கு உள்ளவர்கள்.

பரதநாட்டியம் பற்றி முன்னய விவாதத்திலும் geocities உள்ள தனிநபர் ஒருவரின் இணையத்த ஆதாரமாக காட்டிய விற்பன்னர் அல்லவா நீர். வேறு என்னத்தை உம்மிடம் எதிர்பார்க்க முடியும்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

God of small things- A Review, Oneness in Hindusim போன்றனவும் உண்டு. pdf இல் தான் வேலை செய்யும் இடத்தின் பெயரை போட்டு விட்டால் அது offical publication ஆகிவிடாது. :P

அது துறைசார் நிபுணர்களின் விமர்சனங்களை எதிர் கொண்ட (defended in a professional conference) ஒரு ஆய்வு ஆராச்சியின் அடிப்படையில் உருவான அறிக்கை அல்ல. மேலே கூறியது போல் தான் ஆர்வம் காட்டும் பல விடையங்கள் பற்றிய தனது சொந்த கருத்துக்களை pdf ஆக போட்டிருக்கிறார். அதை offical publication என்று based on scientific evidence என்று சுத்துமாத்து பண்ணிற அளவிற்கு அறிவற்றவர்கள் அல்ல இங்கு உள்ளவர்கள்.

குறிப்பிட்ட கட்டுரை (Article) என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. Research paper publication அல்ல. குறித்த எழுத்தாளர் அப்பல்கலைக்கழகப் பேராசிரியர் என்ற வகையில் அவருக்கு பல்கலைக்கழகம் கொடுத்த அனுமதிகளின் கீழேயே தனது இணைய பப்பிளிக்கேசன் பற்றிய பட்டியலின் கீழ் இதை இணைத்துள்ளார். எந்த ஒரு புரவெசனல் ஆளும் தன்னுடைய profile details ஆக வெறும் பம்மாத்துக் கட்டுரையை இணைக்கமாட்டார். நீங்கள் மீண்டும் அநாவசியமாக அதை ஆராய்ச்சிக் கட்டுரை என்ற தோறணையில் சொல்ல வருகின்றீர்கள். ஆனால் அக்கட்டுரை பல ஆராய்சிக்கட்டுரைகளின் சாரங்களை உள்வாங்கி வரையப்பட்டுள்ளது. அதற்காகத்தான் அடுத்த இணைப்பு வழங்கப்பட்டது.

முடிந்தால் நீங்கள் ஒரு கட்டுரையை எழுதி பல்கலைக்கழகம் ஒன்றின் பெயரின் கீழ் இப்படிப் பிரசுரியுங்கள். உங்கள் தகுதிநிலை மற்றும் அனைத்து விபரங்களையும் உள்ளடக்கி( As your profile detail) அப்படிச் செய்தீர்கள் என்றால் நீங்கள் சொல்வதான எவரும் தங்கள் தங்கள் கட்டுரைகளை பல்கலைக்கழகங்களின் இணைய சேமிப்பு வசதிகளைப் பயன்படுத்தி வெளியிடலாம் என்பதை நம்பலாம். அதைவிடுத்து அடுத்தவரை முட்டாள் என்று எண்ணிக் கொண்டு கருத்தெழுதுவதைத் தவிருங்கள்.

சும்மா எதிலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற தோறணையில் கருத்தெழுதுவதை விடுத்து சொல்லப்படும் விடயங்களில் குழப்பமான உங்கள் பார்வையை மற்றவர்களின் குழப்பமாகக் காட்டித்து தப்பிக்காமல் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். இவை போலித்தனமான கட்டுரைகள் அல்ல. அவர்களின் முகவரிகள் மின்னஞ்சல் வசதிகள் எல்லாம் அளிக்கப்பட்டுள்ளன. நீங்கள் அவசியம் என்றால் தொடர்பு கொண்டு மேலதிக உறுதிப்படுத்தல்களைச் செய்யலாம்.

இது link to profile

http://www.uwf.edu/lgoel/

பல்கலைக்கழக துறைசார் ஆசிரியர்களின் கட்டுரைகளின் இணைப்பிலும் உண்டு..இக்கட்டுரை....

http://www.uwf.edu/govt/facultyforums/

பரதநாட்டியம் பற்றி முன்னய விவாதத்திலும் geocities உள்ள தனிநபர் ஒருவரின் இணையத்த ஆதாரமாக காட்டிய விற்பன்னர் அல்லவா நீர். வேறு என்னத்தை உம்மிடம் எதிர்பார்க்க முடியும்? :lol:

இது பற்றி எமக்குத் தெரியாது. நீங்கள் கனவில் கற்பனையில் யாரையோ எண்ணிக்கொண்டு எம்மோடு அநாவசியக் கருத்தாடலை செய்ய முனைகின்றீர்கள் என்பதற்கு இது சாட்சி. நீங்கள் யாதும் அறிந்தவர் என்றால் உங்களின் பப்ளிக்கேசங்கள் ஏதாவது பல்கலைக்கழக தளத்தில் இருந்தால் உங்களின் விபரங்களோடு வெளியிடுங்கள்.

Tamilnation.org கூட மேற்குறிப்பிட்ட ஆரியர் வருகையை நிராகரிக்கும் நவகால ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த கட்டுரைகளின் சாரங்களை வெளியிட்டுள்ளது.

http://www.tamilnation.org/heritage/agrawal.htm

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்கால போவான் இது பற்றி பலமுறை எழுதியாயிற்று, ஆரிய படயெடுப்பு என்பது நடைபெறவில்லை ஆரியக் குடிப்பெயர்வு சிறு சிறு கூட்டமாக் நடைபெற்றது என்பதியே மேற் கூறிய கட்டுரைகள் கூறுகின்றன.இதானால் ஆரியர் கைபர் கணவாயினூடாக இந்தியாவிற்குள் வந்தனர் என்பதுவோ, திராவிட மொழி பேசும் மக்கள் அதற்கு முன்னர் இருந்தனர் என்பதுவோ இல்லை என்று எந்த ஆராச்சியும் கூறி விடவில்லை.

மேலும் பெரியார் கூறியவை செய்தவை அந்தக் காலகட்டைதின் தேவையாக இருந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள், அதனடிப்படையிலயே அவரை விமர்சிக்கமுடியும்.அவரின் அதே அணுகுமுறைய இப்போதும் கைக்கோள்ள வேண்டுமென்று எவரும் கூறிவிடவில்லை.

அரசியல் அதிகாரம் இருக்கும் போது தான் அறிவை வளர்க்ககூடிய கல்வி முறமையை, சாதிய பொருளாதார வேற்றுமைகள் அற்ற எல்லோருக்காமன கல்வியை ஏற்படுத்த முடியும்.எந்த விடயமும் தன்னால் எற்பட்டு விடப் போவதில்லை.அதற்கான நிறுவனங்கள் அவசியம்.அறிவியல் ரீதியான பாடத்திட்டம் ,பயிற்றுவிக்கப்பட ஆசிரியர்கள் என்று இது ஒரு அரசியல் அதிகார ரீதியாக , நிறுவனப்பட்டலேயே சாத்தியப் படும்.பெரியார் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி இவ்வாறான நடை முறைகளை ஏற்படுத்தி இருக்கலாம்.அது அவர் மீதான நியாயமன விமர்சனமாக இருக்கலாம்.அதற்காக அவர் செய்தவற்றை வெறி என்றும் அவர் மடையர் என்றும் நிறுவ முற்படுபவர்கள் சாதிய அடக்குமுறையையும் இந்து மததின் பிற் போக்குத் தனத்தையும் மறைக்க முயலும் சாதிய,மத வெறியர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதரே உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இன்னும் மெதுவாகப் போங்கள். பெரியாரின் ஒவ்வோரு கருத்தும் ஆழமாக நோக்கப் பட வேண்டியவை. மிக நல்ல பணியை நீங்கள் செய்கிறீர்கள். எங்களைப் போன்ற பெரியாரியவாதிகளுக்கு நன்றாக புரிகிறது. ஆனால் மற்றவர்கள் கருத்துக்கள் நீண்டிருந்தால் பொறுமையாக படிப்பார்களோ என்ற அச்சம் எனக்குள் எழுகிறது. பெரியாரின் கருத்துக்களை அனைவரும் நன்றாக உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்.

நன்றி நாராரே உங்கள் பணி தொடர மீண்டும் என் வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.