Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களுக்கு அனுமதி இல்லை என்பது சமூகத்தின் முடிவு: இலங்கை மீனவர் பிரதிநிதி சதாசிவம் திட்டவட்டம்

Featured Replies

Tamil_News_large_1262706.jpg
 
இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்பது, அரசின் தனிப்பட்ட முடிவு அல்ல; சமூகத்தின் ஒட்டுமொத்த முடிவு. இதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,'' என, இலங்கையின், தேசிய மீனவர் மகா சம்மேளன அமைப்பாளர் சதாசிவம் கூறினார்.
 
பாக்., நீரிணை பகுதியில் மீன்பிடித்தல் தொடர்பாக, தமிழக - இலங்கை மீனவர்களுக்கிடையே, 30 ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று கட்ட பேச்சு நடந்தது.மூன்றாம் கட்ட பேச்சு, மார்ச், 24ல் நடந்தது. இதில், தமிழக மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து, 'இலங்கை வடக்கு மாகாண மீனவர் மாநாட்டில் பேசி, முடிவை அறிவிப்போம்' என, இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், 'தமிழக மீனவர்களுக்கு ஆண்டுக்கு, 65 நாட்களுக்கு அல்ல; 63 மணி நேரத்திற்கு கூட அனுமதி தர முடியாது' என, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் அமரவீரா தெரிவித்தது, தமிழக மீனவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 'அமைச்சரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்; பேச்சில் பங்கேற்ற, மீனவ பிரதிநிதிகள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை' என, தமிழக மீனவர்கள் கூறினர்.
 
இதுகுறித்த பேச்சில் பங்கேற்ற, இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் தலைவரும், தேசிய மீனவர் மகா சம்மேளன அமைப்பாளருமான சதாசிவம் கூறியதாவது:மூன்றாம் கட்ட பேச்சில், 'ஆண்டுக்கு, 83 நாட்கள் மீன்பிடிக்க அனுமதி வேண்டும்' என, தமிழக மீனவர்கள் கோரினர். இந்திய துாதரகம் சார்பில், '65 நாட்களுக்காவது அனுமதி வேண்டும்' என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.இம்மாதம், 11ம் தேதி, வடக்கு மாகாண மீனவர் மாநாடு, நடந்தது. தமிழக மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்தோம்.இதில், ஏற்கனவே, இலங்கையில் இழுவை வலைக்கு தடை உள்ள சூழலில், தமிழக மீனவர்களுக்கு எப்படி அனுமதிக்க முடியும் என, கேள்வி எழுந்தது.
 
'தமிழக மீனவர்களை அனுமதித்தால், உள்நாட்டில் இழுவை படகுகளுக்கும் அனுமதி வேண்டும்' என, மீனவர்கள் சிலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதையெல்லாம், ஆராய்ந்து பார்த்தே, 'தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை' என, முடிவெடுத்தோம். அமைச்சர் வெளியிட்ட தகவல் அவரது தனிப்பட்ட கருத்து அல்ல; மீனவ சமூகத்தின் ஒட்டுமொத்த முடிவு.
 
பேச்சு வீணானது என, கூற முடியாது. பேச்சால் தான், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்; அவர்களின் உடைமைகளும் திருப்பித் தரப்பட்டுள்ளன.அந்த வகையில், பேச்சு வெற்றி அடைந்துள்ளது.தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாட்டை விட்டு விட்டு வந்தால், மீன்பிடிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை. அப்படி ஒரு கோரிக்கை வந்தால், மீண்டும் ஆலோசிப்போம்.இரு நாட்டு அரசுகளும் முடிவு செய்து, அடுத்த கட்ட பேச்சுக்கான தேதியை வெளியிட்டால், பங்கேற்போம்.இவ்வாறு, சதாசிவம் தெரிவித்தார்.
 
தமிழக மீனவர்கள் சொல்வது என்ன?
 
 
'தொடர்ந்து பேசுவோம்':''இந்திய அரசு, மாற்று மீன்பிடி தொழிலுக்கு மீனவர்களை மாற்றும் முயற்சியை எடுத்துள்ளது. இது செயல்பாட்டிற்கு வரும் வரை, ஆண்டுக்கு, 60 நாட்களாவது, தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிப்பது, மனிதாபிமான செயல். இலங்கை வடக்கு மாகாண மீனவர் அமைப்பு தலைவர்களுடன் தொடர்ந்து பேசுவோம்.
 
- எம்.இளங்கோ, 
தேசிய மீனவர் பேரவைத் தலைவர்
 
'எதிர்பார்க்கவில்லை':'இது, மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை. நீண்டகால சிக்கலுக்கு, பேச்சில் தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்தோம். மூன்று கட்ட பேச்சு நடந்தும், இலங்கை அரசு இப்படி மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளது கவலை அளிக்கிறது; இதை தமிழக மீனவர்கள் எதிர்பார்க்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் தான் அடுத்த கட்டம் குறித்து, முடிவெடுக்க வேண்டும்.
 
- யு. அருளானந்தம்,
நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பு.
 
 

மஹிந்த அமரவீரவின் கருத்து அதிருப்தி அளிக்கின்றது - இந்தியா

 

vikas%20swarp_CI.jpg



மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கருத்து அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கையுடன் இணைந்து செயற்படவே விரும்புவதாக இந்தியா அறிவித்துள்ளது.


அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என தெரிவித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பில் 65 நாட்கள் அல்ல 65 மணித்தியாலங்கள் கூட இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் அமரவீர தெரிவித்திருந்தார்.


இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்களும் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வராப் தெரிவித்துள்ளார்.


இந்தியா இந்தப் பிரச்சினையை வாழ்வாதாரப் பிரச்சினையாகவே நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் நட்புறவுடன் கூடிய ஓர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்கே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120231/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனைத் திருப்திப்படுத்த.. தமிழக உறவுகளோடு பகைக்காமல்.. மீன் வளத்தின் எதிர்காலம் கருதி.. புரிந்துணர்வோடு இரு தரப்பும் திருப்திப்படக் கூடிய முடிவை எட்டுவதே நல்லது.

 

தமிழக மீனவர்களை எம்மிடமிருந்து துருவப்படுத்தி விட்டு.. எமது மொத்தக் கடல்வளத்தையும் சிங்களவன் திருடும் போது நாம் கையாலாகாதவர்களாய் நிற்பதிலும்.. தமிழக உறவுகளோடு இணைந்து எமது கடல்வளத்தைப் பாதுகாத்து.. எதிர்கால சந்ததியும் பாவிக்கத்தக்க வகையில்.. அதனை எமதாக்குவதே நல்ல சிந்தனை. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் படித்த ஒரு நெருங்கிய நண்பர், இப்போது மீன்வளத் துறையில் பெரிய நிலையில் உள்ளார்! உண்மையில் அன்றாடம் மீன்பிடித்து வாழும் தமிழக உறவுகளால் 'எமது கடல்வளத்துக்குப்' பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை எனினும் தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளும், பண முதலைகளும் இந்தச்                     சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பெருமளவில் 'இழுவை வலைகள்' மூலம் கடலடித் தள மேடையை வழித்தெடுக்கின்றார்கள்! குஞ்சு, குருமான் என்ற எந்த வேறுபாடுமில்லாமல் ' பாரிய அளவில்' மீனை அள்ளுவது, பல மீன் வகைகள் அருகிப் போவதற்கே வழி வகுக்கும்! அத்துடன் பெருமழவான எமது மீனவர்களின் வலைகளும் இவர்களது இழுவைப் படகுகளால் அழிக்கப்படுகினர்ண! வெறும் உணர்வுகளால் உந்தப் படாமல், தீர்க்கமாக யோசித்து எமது மீனவர்கள் முடிவெடுத்திருக்கின்றார்கள் என்றே நினைக்கிறேன்!!

இரவு நேரத்தில் நெடுந்தீவுக் கரையில் இருந்து பார்த்தால் , கரைக்கு அவ்வளவு தூரம் இவர்கள் நெருங்கி வந்து கடலை வழிக்கிறார்கள் என்று தெரியும்!

தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாட்டை விட்டு விட்டு வந்தால், மீன்பிடிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை. அப்படி ஒரு கோரிக்கை வந்தால், மீண்டும் ஆலோசிப்போம்.

இந்த கருத்தையும் கவனத்தில் கொள்வது நல்லது. தமிழக மீன்பிடியின் பின்னால் அரசியல்வாதிகளின் மொத்த வியாபாரமும் நடப்பது டி.ஆர்.பாலுவுக்கு தெரியாதது அல்ல.

எத்தனையோ படகுகள் சாதாரண மீனவர்களை வைத்து பிழைக்கும் பெரிய அரசியல் கைகளின் உடையது.

அதைவிடவும் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகள் மூலம் ஈழ கடல் வளத்தை சுரண்டுவதை எக்காலத்திலும் அனுமதிக்கமுடியாது.

இதனுள் ஈழ அரசியலை ஓட்ட நினைப்பது உண்மையில் தவறான போக்காகும். உண்மையில் ஈழ மீனவர்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் போருக்கு பின்னர் தான் மீன் பிடிக்க வரும் ஈழ மீனவர்களுக்கு விட்டுகொடுத்திருக்க வேண்டிய தார்மீக கடமையுள்ள தமிழக உறவுகளே, சுருக்கு வலைகளையும் இழுவை படகுகளையும் பயன்படுத்தி கடல்வளத்தை சுரண்டுவதை எந்த அரசியல் கொண்டும் உணர்வு பூர்வமாக கூட நியாயபடுத்தமுடியாது.

ஒருபக்கத்தால் சிங்களவன் கடல்வளத்தை திருடவும் மறுபக்கத்தால் தமிழக உறவுகள் கடல்வளத்தை திருடவும் ஈழ மீனவர்கள் என்னதான் செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பத் திரும்பச் சொல்லியாச்சு இதில் சமரசத்துக்கே இடமில்லை. நல்ல முடிவு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.