Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறும்படப்போட்டியில் தாயகப்படங்கள் பல பரிசில்களை வென்றன. மதி சுதா சிறந்த நடிகராகத்தேர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் நடாத்தப்படும் முத்தமிழ் விழாவுக்கான முன்னோடி நிகழ்வுகளான அறிவுத்திறன் போட்டிகளைத்தொடர்ந்து நேற்றைய தினம் குறும்படப்போட்டிக்கான தெரிவு நிகழ்வு இடம் பெற்றது. குறும்படப்போட்டிக்கு இம்முறை 27 குறும்படங்கள் பார்வைக்கு வந்தன.  அதிலும் தாயகத்திலிருந்து 9 படங்கள் வந்திருந்தன.

பிரித்தானியா நோர்வே டென்மார்க் கனடா சுவிசிலிருந்தும் மற்றும் பிரான்சிலிருந்தும்

 மொத்தமாக 27 படங்கள் வந்திருந்தபோதும் ஒருபடம் ஒலி அமைப்பு சரியாக எமக்கு கிடைக்காததால் நின்றுவிட 26 படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பொதுவாக 9 படங்களே தெரிவுக்குள் வருவதாக  விதிகளில் இருந்தாலும் இம்முறை அதையும் மீறி கலைஞர்களுக்கும் அவர்களது திறமைகளுக்கும் இடம்தரணும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக 11 படங்கள் தெரிவுக்குள் வந்துள்ளன.

 

இம்முறை தெரிவுக்குழுவின் பிரதான நடுவராக இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமாகிய அருமைத்தம்பி  Myskinn அவர்கள் தாய்த்தமிழகத்திலிருந்து வந்திருந்து எமக்குதவினார்.

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சானது எத்தனையோவலிகளையும்  இன்னல்களையும் துயரங்களையும் பயங்கரங்களையும் கடந்து வந்துள்ளது. அவை அனைத்தையும் சுமந்து கொண்டு அவை அனைத்தையும் யீரணித்தபடி தனது கடமைகளைச்செய்யும். ஒரு போதும் தனது கடமைகள் பொறுப்புக்களிலிருந்து பின் வாங்காது.

அதன் கடமைகள் தொடரும்..

 

 

image.jpg

 

image.jpg

 

 

https://www.facebook.com/hashtag/navalarshortfilmfestival2015?source=feed_text&story_id=1016011888432133

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறும்படப்போட்டியில் தாயகப்படங்கள் பல பரிசில்களை வென்றன. மதி சுதா சிறந்த நடிகராகத்தேர்வு

 

.

 

நாவலர் விருதுக்கான விருதையும் 1500 ஈரோக்களையும் பிரான்சில் தயாரிக்கப்பட்ட 

அவதாரம் குழுவினரின் இங்க ஏன் வந்தனீ? என்ற படம் தட்டிச்சென்றது.

 

 

இரண்டாவது பரிசுத்தொகையான 1000 ஈரோக்களை வெள்ளம்  படம் பெற்றுள்ளது.

 

மதி சுதா 2 விருதுகளை வென்று சிறந்த நடிகராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 

மொத்தமாக 7 சிறப்பு பரிசில்கள் உட்பட இரண்டாவது பரிசுத்தொகையையுயும் வென்று மொத்தம் 8 பரிசில்களையும்

ரொக்கப்பணமாக 2 ஆயிரம்  ஈரோக்களையும் இந்த முறை தாயகப்படங்கள் வென்றிருப்பது பெரு மகிழ்ச்சிக்குரியது 

கலைஞர்களிடையே ஒரு உற்சாகத்தையும் தரமான படங்கள் வரக்கூடிய சிறந்த தளத்தையும் திறந்துவிட்டிருக்கிறது

 

 

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் பங்குகொண்டு வெற்றி பெற்ற  அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குறும்படக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்....!

 

பகிர்வுக்கு நன்றி...!

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=fH0bNGqbNJU

 

பாரிஸில்... பரிசு பெற்றவர்களுக்கு... வாழ்த்துக்கள்.
இணைப்புக்கு.. நன்றி விசுகு. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

 

பொறுப்பின் பெயரால்...

 

வித்தியாவின் ஆயுட்க்காற்று நிரம்பிய கறுப்பு நெகிளிக்குமிழ்களும்

அவள் ஏஞ்சலாகி நின்றுலவும் வெள்ளை நெகிளிக்குமிழ்களும்

ஆழப்படர்ந்திருந்த ஒரு இறுகிய மண்டபத்தினுள்

ஒரு கடமை மறவா தாயாய் எது நடப்பினும் எல்லாம் தாங்கியபடியே

குழந்தைக்கு பாலூட்டுவது போல்,

வலிகளைச்சுமந்தபடி,

கூறிய வார்த்தைகளுக்குப் பொருள் சேர்த்தபடி...

பகலிரவாய் பணியாற்றி சின்ன சின்ன அங்கீகாரங்களுக்காக,

எம்சமூக ஆளுமைகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் தமது படைப்புக்களை காண்பிப்பதற்காக

புலம்பெயர் தேசங்களிலிருந்தும்,

தாயகத்திலிருந்தும் தமது படைப்புக்களை அனுப்பி விட்டு காத்திருக்கும் படைப்பாளிகளுக்காகவும், மண்ணையும், மக்களையும், தாய்மொழியையும் ஆழமாக நேசித்து

வளரும் இளம்தலைமுறையினரின் கலைத்திறன் வளர்ச்சிக்கும்,

சமூகப்பணியாற்றிய பெருந்தகைகளையும் மதிப்பளிக்கவுமாக

பிரான்சு - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 6வது முத்தமிழ் விழாவும்,

நாவலர் குறும்பட போட்டியும் நடந்தேறியது.

 

 

26 குறும்படங்கள் கலந்து கொண்டபோதும்

அவற்றில் சில தவிர அத்தனையும் சின்ன சின்ன காரணங்களுக்காக

வெற்றிப்படியின் ஓரத்திலே நின்றபடி அடுத்தபாச்சலுக்காக போராடிக்கொண்டிருக்க...

இந்தியாவிலிருந்து வருகை தந்த திரைப்பட இயக்குனர் திரு. மிஸ்க்கின் அவர்கள்

முகத்தில் அறைந்த வார்த்தைகளோடு இப்படி பேசத்தொடங்குகிறார்..

 

."எதற்கு நீ படம் எடுக்கிறாய் ... உன் வலிகளையும், உன்னையும் சொல்லுவதற்க்கு...

அப்படியாயின் தமிழ்நாட்டு படங்கள் உதவாது(?)

உனக்கு. உனக்கான திரைமொழி உனது மொழியிலும்,

உனது உழைப்பிலும் உருவாக்கு அது தான் உனது பலம்,

உன்னை வெல்லவும், உன் விடுதலையை வெல்லவும் ஆயுதங்கள் அவைகள் தான். நிறையப்படியுங்கள்,

அகிரா குரோசோவாவையும், Bresson போன்றோரையும் இன்னும் பல இயக்குனர்களையும் படியுங்கள், உலக அறிவை ஆழமாக வளருங்கள், நிறைய புத்தகங்கள் படியுங்கள்... நான் நினைக்கிறேன் எங்களை நீங்கள் மிக வேகமாக துரத்திக்கொண்டு வருகிறீர்கள் கடந்து செல்வதற்கான இடைவெளி வெகு தூரமில்லை..."

இப்படி நிறையவே... 
சிறப்பு என்னவெனில் இம்முறை முதலாம், இரண்டாம், மூன்றாம் இடம் என்று வரிசப்படுத்தாமல் கதை சொல்லிகளின் படைப்பாளுமை, நேர்த்தி, சிந்தனைச்செழுமை போன்ற திறன்களின் அடிப்படையிலே தெரிவு செய்யப்பட்டிருந்தன. இதில் சுமார் எட்டு விருதுகளை தாயகத்திலிருந்து வந்த குறும்படங்கள் அள்ளிச்சென்றன (அவ்வளவு ஆனந்தம் எனக்கு) அவர்களுக்கு மட்டும் சுமார் நான்கு லட்சம் பெறுமதியான பணப்பரிசுகளும், வெற்றிக்கிண்ணங்ளும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் பிரான்சிலிருந்து கலந்து கொண்ட NS Jana இயக்கிய "ஏன் இங்க வந்தனி" என்ற குறும்படம் சிறந்த குறும்படமாக தெரிவாகியது... இது இப்படியிருக்க பிரித்தானியாவிலிருந்து கலந்து கொண்ட echo8 நிறுவனத்தயாரிப்பில், Prem Kathir இயக்கிய "அறன்" குறும்படம் சிறந்த இசையமப்பாளருக்கான விருதை Vernon G segaram உம், சிறந்த "கருத்தியலுக்கான" விருதினையும் பெற்றுக்கொண்டது. இதில் நானும் துணை இயக்குனராக பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. எம்மோடு பணியாற்றிய சக கலைஞர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

-கோகுலன்.

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
தளமமைத்த புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தளத்தை பயன்படுத்திய கலைஞர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தொடர்க உங்கள் பணி.
 
 துயரங்கள் எம்மைத் துரத்தினாலும் அதனூடேதான் எமது எழுதலும் நிகழவேண்டியிருக்கிறது. அது எந்தத்துறையாயினும்...... ஆனால் காட்சியூடகம் சக்திவாய்ந்தது எமது வலிகளைப் பேசக்கூடியது. பேசுங்கள் துன்பப்பட்டவர்களாலேயே துன்பத்தை இயல்பாகக் கூறமுடியும்.  அனைத்தலக தளங்களை இலக்குவையுங்கள்இ ஏனென்றால் அவதானிக்கவும் பேசவும் தொடங்கியிருக்கிறார்கள். அண்மையில் என்னோடு வேலைசெய்யும் ஒரு ருஸ்யநாட்டவர் ' Gun & A Ring ' என்ற படம்பற்றி உரையாடினார். எனவே இளைய தலைமுறையே உனக்கான கடமைகள் நிறைய உள்ளது. எமதினத்தை நிமிர்த்திடும் வலிமையும் உள்ளது. பாய்ச்சலை தொடர் இலக்கு உனதாகும்..
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தமிழ் விழா 2015.

6/05/2015 11:19:00 PM Pungudutivu Makkal Onriyam

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6வது தடவையாக பிரான்சில் 31/05/2015 அன்று நடைபெற்ற முத்தமிழ் விழாவானது பல கலைநிகழ்வுகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் இவ்விழாவின் முன்னோடி நிகழ்வாக நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மற்றும் நாவலர் குறும்படப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய குறும்படங்களுக்கும் அதில் தெரிவுக்குள்ளான படங்களின் சிறந்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பவியலாளர்களும் பரிசளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்வில் தென்இந்திய தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகத் திகழும் திரு மிஷ்கின் அவர்கள் குறும்படத்தெரிவில் பிரதான நடுவராக பங்குபற்றியதுடன் விழாவில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார். இவ்விழாவில் ஈழத்தில் இருந்தும் பல குறும்படங்கள் பங்குபற்றியதுடன் பரிசில்களைத் தட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்

போட்டியில பங்குபற்றிய குறும்படங்கள் படங்கள்

 

nsff_notice.jpg

தெரிவினுள் உள்வாங்கப்பட்ட குறும்படங்கள்

11312769_1016011888432133_20562504633797

 

பரிசில்களைத் தட்டிக்கொண்ட கலைஞர்களும் படங்களும்

சிறந்த குழந்தை நட்சத்திரம் (பெண்) – அரபியா (எண்ணம்) - France

சிறந்த குழந்தை நட்சத்திரம் (ஆண்) – சாருஜன் (காவோலை) -இலங்கை

சிறந்த துணை நடிகை – இந்து (கருவறை தோழன்) - இலங்கை

சிறந்த துணை நடிகர் – ஆனந்தன் (மன்னிப்பாயா) - France

சிறந்த நடிகர் – மதிசுதா (கருவறை தோழன்)- இலங்கை

சிறந்த நடிகை - யாழினி (கல்லுச்சாறி)- France

சிறந்த ஒலி வடிவமைப்பாளர் - பொன் கேதாரன் மற்றும் பொன் தயா ( பகடை) - France

சிறந்த VFX – யசிதரன் (Sucide)- இலங்கை

சிறந்த கலை இயக்குனர் – மதிசுதா (கருவறை தோழன்)- இலங்கை

சிறந்த இசை – வெரோன் (அறன்)- United Kingdom

சிறந்த படத்தொகுப்பு – மனஸ் ஸ்டீபன் (காவோலை)- இலங்கை

சிறந்த திரைக்கதை – ரோய் (மன்னிப்பாயா)- France

சிறந்த ஒளிப்பதிவாளர் – எஸ்.எஸ்.ராய் (காவோலை) - இலங்கை

சிறந்த இயக்குனர் – NS ஜனா (ஏன் இஞ்ச வந்தனி)- France

 

 

சிறந்த நடுவர் விருது - (Black Forest)- France

 

சிறந்த Concept விருது – (அறன்) - France

சிறந்த Critical விருது – (வெள்ளம்)- இலங்கை

சிறந்த குறும்படம் – (ஏன் இஞ்ச வந்தனி)- France

 

  • 2 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.