Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தர்மசங்கடத்தினில் முதலமைச்சர்! தவறான குற்றச்சாட்டா?

Featured Replies

 

பிரதமர் ரணிலிடம் பணம் பெற்றதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பினில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தனது அமைச்சரான ஜங்கரநேசனின் தகவல் அடிப்படையினில் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது நெருங்கிய வட்டாரங்களிடையெ கவலை வெளியிட்டுள்ளார்.

தகவலை கொண்டுவந்திருந்த ஜங்கரநேசனிடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா அல்லது நேரடியாக பணம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு  வழங்கப்பட்டதாவென தான் கேள்வி எழுப்பிய போதும் அமைச்சர் ஜங்கரநேசன் பணம் நேரடியாக கைகளினில் வழங்கப்பட்டதாக தகவல் வழங்கியதாகவும் இதையடுத்து விடயத்தை அம்பலப்படுத்த வேண்டியிருந்ததாகவும் முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

இத்தகைய நிதி ஒதுக்கீட்டினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரனை அம்பலப்படுத்துவதாக கருதி ஜங்கரநேசனே முதலமைச்சரிடம் போட்டுக்கொடுத்திருந்தமை அம்பலமாகியுள்ளது.

எனினும் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரனென பலரும் இதனில் அகப்பட்டுள்ளனர்.இந்நிலையினில் நேற்று முதலமைச்சரினை மாவை,சரவணபவன்,சிறீதரன் என பலரும் சந்தித்து பேசியிருந்தனர்.இச்சந்திப்பின் பின்னரே தனது செயலாளர்களிடம் உண்மையினை போட்டுடைத்துள்ளார் முதலமைச்சர்.

ஏற்கனவே சுன்னாகம் குடிநீர் விவகாரத்தினில் ஜங்கரநேசனின் தகிடுதங்களால் முதலமைச்சர் தர்மசங்கடங்களை எதிர்கொண்டுள்ளமை தெரிந்ததே.  http://www.pathivu.com/news/40991/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இங்கையும் ****க்கு தர்மசங்கடமான நிலைதான்! முயற்சி செய்கிறம் சிக்ஸர் மாதிரி இருக்கு ஆனால் கடைசியில பவுண்ட்றியில வச்சு காட்ச் ஆகிடுதே! அதுகிடக்க தாயக மக்களுக்கு போராட்டத்துகு எண்டு வாங்கின காசுக்கு கணக்கு காட்டுவினமா? முந்திச் சொல்லிச்சினம் நீங்கள் குடுத்தனீங்களோ கேக்க குடுத்தவை தான் கேக்கலாம் எண்டு! சரி அதில கொஞ்சமல்ல கனக்க நியாயம் இருந்திச்சு. அப்ப ஒரு கதைக்கு இலங்கை அரசாங்கம் எம்பிக்களுக்கு காசு குடுத்திருந்தால் அதைக் கேக்க இவையள் ஆரு ஆக்கள்? இவையளே காசு குடுத்தவை. இப்ப ஏமாத்தி மக்களுக்கு எண்டு வாங்கின காசில வாங்கின சொத்துகளிண்ட படத்தையாவது காட்டுங்கோவன்! :D 

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

அன்றும், இன்றும் சிவியின் பலமும், பலவீனமும் அவர் ஒளிவு மறைவு இல்லாத தன்மையே.

ஒரு அரசியல் வாதியாக இந்த குணம் அவருக்கு பாரிய தலையிடியை கொடுக்கிறது என்பது வெளிப்படை.

யாகாவாயினும்.........

  • கருத்துக்கள உறவுகள்

இங்கையும் ****க்கு தர்மசங்கடமான நிலைதான்! முயற்சி செய்கிறம் சிக்ஸர் மாதிரி இருக்கு ஆனால் கடைசியில பவுண்ட்றியில வச்சு காட்ச் ஆகிடுதே! அதுகிடக்க தாயக மக்களுக்கு போராட்டத்துகு எண்டு வாங்கின காசுக்கு கணக்கு காட்டுவினமா? முந்திச் சொல்லிச்சினம் நீங்கள் குடுத்தனீங்களோ கேக்க குடுத்தவை தான் கேக்கலாம் எண்டு! சரி அதில கொஞ்சமல்ல கனக்க நியாயம் இருந்திச்சு. அப்ப ஒரு கதைக்கு இலங்கை அரசாங்கம் எம்பிக்களுக்கு காசு குடுத்திருந்தால் அதைக் கேக்க இவையள் ஆரு ஆக்கள்? இவையளே காசு குடுத்தவை. இப்ப ஏமாத்தி மக்களுக்கு எண்டு வாங்கின காசில வாங்கின சொத்துகளிண்ட படத்தையாவது காட்டுங்கோவன்! :D 

வாக்களிச்ச மக்கள் காசை பற்றி கதைக்கலாமோ இல்லையோ எண்டதை நீங்களே என்ன செய்யலாம் என்டு சொன்னால் நல்லாய் இருக்கும். அதென்ன ******* போட்டு தூசணத்தில் எழுதும் புதுப்பாணி. சிலரின் வருத்தம் உங்களுக்கும் தொத்தி விட்டதா? எவ்வளவு நல்ல சொல்லுகள் இருந்தும் உங்களின் வாய்க்குள் புகவில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

அன்றும், இன்றும் சிவியின் பலமும், பலவீனமும் அவர் ஒளிவு மறைவு இல்லாத தன்மையே.

ஒரு அரசியல் வாதியாக இந்த குணம் அவருக்கு பாரிய தலையிடியை கொடுக்கிறது என்பது வெளிப்படை.

யாகாவாயினும்.........

உச்ச நீதிமன்றில் நீதிபதியாக பலகாலம் பதவி வகித்ததனால் உலக நாட்டு பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களினால் பெரும் மதிப்பு பெற்றுள்ளவர் விக்னேஸ்வரன். ஒரு சாதாரண ஆய்வாளரே தான் பெறும் தகவல்களை நன்கு ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வருவார்.  தனக்கு முன் வைத்த தகவல்களின் அடிப்படையில் எத்தனயோ  பேரை பல வருடகாலம் சிறைக்குள் அடைத்து அழிந்து போக வைக்க கூடியவர் ஒரு நீதிபதி. ஆகவே இந்த உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் மக்கள் இவ்வாறான ஒரு தவறை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

திரு விக்னேஸ்வரன் தனது தன்மரியாதை கருதியாவது இனிமேலாவது மிகவும் கவனமாக தகவல்களை ஆய்வு செய்ய வேண்டும். திட்டமிட்டு அவரின் மதிப்பை அழிக்க கூடிய சர்வதேச சதி நிறுவனங்களின் கூலிகள், மற்றும் முட்டாள் பிற்போக்கு அரசியல்வாதிகளை கொண்ட கூடாரத்துள் தான் வேலைசெய்வதை திரு விக்னேஸ்வரன் அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 

இன்னும் ஒரு அழிவு வந்து கொண்டிருப்பதை இந்த நிகழ்வு கட்டியம் கூறுவதாக எனக்கு படுகிறது.

 

 

 

Edited by Jude

முதலமைச்சரையும் எங்களையும் எவராலும் பிரிக்கமுடியாது

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணைப்புக்குழு கூட்டத்தினைக் கூட்டி வடமாகாணத்தைப் பிரநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாணசபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் சேர்ந்து இயங்க கூடிய வலுவான கட்டமைப்பு ஒன்றினை தற்போது உருவாக்க முன்வந்துள்ள எமது தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்……

எப்போதும் எந்த வேளையிலும் அனைத்து விடயங்களிலும் வடமாகாண முதலமைச்சருடன் சேர்ந்து இயங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள எமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு என்றும் பக்கபலமாக இருப்பேன்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குள் எந்தவொரு பிளவும் இல்லையெனவும் தமிழரசுக் கட்சியினர் வடமாகாண முதலமைச்சருடன் புரிந்துணர்வு அடிப்படையிலும் வலுவான ஒற்றுமையுடனும் செயற்பட்டு வருகிறார்கள் எனவும் முதலமைச்சரையும் எங்களையும் எவராலும் பிரிக்கமுடியாது….

முதலமைச்சர் எமக்கும் எமது மக்களுக்கும் கிடைத்த பெரும் சொத்தாகும்.

வெளிப்படைத் தன்மையுடனும் யாருக்கும் அஞ்சாது தமிழ்த்தேசியத்தின் கொள்கைகளை எங்கேயும் எவ்வேளையிலும் ஆணித்தரமாக தெரிவிக்கக் கூடியவர் என்பதை அனைவரும் அறிவர். 
அந்த வகையிலே வடமாகாணசபையை புறக்கணித்துவிட்டு வடக்கின் அபிவிருத்திக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தனியாகத் தெற்கிற்கு அழைத்து பாரிய நிதியுதவி வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாது.

கூட்டமைப்புக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் செயல் என்பதையும் முதலமைச்சர் ஆணித்தரமாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.

இதைவிட அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதுஇ அவர்கள் அதை சட்டைப்பையில் (பொக்கற்) போட்டுவிட்டார்கள் என தெரிவித்திருக்கவில்லை.

இணையத்தளங்களில் வரும் செய்திகளையும் முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்களையும் தொடர்புபடுத்தி மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு சிலர் மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க முனைந்துள்ளார்கள்.

ஆனால் முதலமைச்சரைப் பற்றி நாமும் எமது மக்களும் நன்கு அறிவோம்.

முதலமைச்சர் ஜனாதிபதியிடம் கூறிய கருத்துக் குறித்து தமிழ்ப்பத்திரிகை ஒன்றில் அண்மையில் செய்தி பிரசுரமாகி இருந்ததை யாவரும் அறிவர்.

அது தொடர்பில்இ நான் தனிப்பட்ட முறையில் தெற்கிற்கு சென்று அரசாங்கத்திடம் இருந்து அபிவிருத்திக்கென எந்த நிதியினையும் பெறவில்லை என்பதை எமது மக்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

Shritharan Sivagnanam

Shritharan Sivagnanam இன் புகைப்படம்.

 

 

 

http://www.yarl.com/forum3/topic/159295-முதலமைச்சர்-cvயுடன்-இணையத்-தயார்-மாவை/

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் யூட்.

எப்படி பிரபா-கருணா பிரிவு வரவிருந்த பேரவலத்தின் கட்டியமாய் அமைந்ததோ அப்படி இதுவும் அமைந்து விடலாம் என்று நானும் அஞ்சினேன்.

ஆனால் இந்த முறை சம்பந்தபட்டோர் எல்லோரும் வன்முறையை விட பேச்சில் நம்பிக்கை உடையவராய் இருப்பதால், ஆளையாள் கொன்று தீர்க்காமல், பேசித்தீர்த்து கொண்டார்கள் என்பதே சந்தோசம்.

இந்த பிளவை கண்டு குதூகலித்து, இதைச் சாட்டாக வைத்து சம்பந்தமே இல்லாமல் சம் சும் மீது சேறடித்து ( விக்கி சொன்னது வடக்கு எம்பிகள் சிலரை) தமிழ் மக்கள் மீதான தம் கரிசனையீனத்தை வெளிப்படுத்திய புல வாலுகளின் உண்மை முகத்தை இதில் காணவும் முடிந்தது.

நாங்க கஷ்டப்பட்டு லைற் போட்டு கருத்து குப்பைகளை கொட்டினால் செய்தி இபிடியும் வருதே? 

 

அபாடினா நாங்க கொட்டின குப்பையை நாங்களே தின்னவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.