Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சதைகள் – அனோஜன் பாலகிருஷ்ணன்.

11209732_965713813441770_2753083109381003380_n
 
குருநாகல் புகையிரத நிலையத்தில் நியோன் வெளிச்சத்தில் நுளம்புகளை விரட்டிக்கொண்டு நின்றேன். குலுங்கலுடன் சிலுப்பி அதிர்ந்து புகையிரதம் பிளட்ஃபோமில் என் கால்விளிம்பருகே பாரிய உலோக அதிர்வுடன் நின்றது. அதிஷ்டவசமாக ஜன்னல் இருக்கை கிடைத்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமர்ந்தேன். வேகமாக இருட்டில் பதுங்கிய தென்னைமரங்கள் நீண்ட இலைகளுடன் என்னைக் கடந்துகொண்டிருக்க, தடக் தடக் ஒலிகள் காதின் சவ்வுகளை அதிர்வித்துக்கொண்டிருந்தன. சூடான மூச்சுக்காற்று என் மூக்கிலிருந்து புறப்பட்டு என் நெஞ்சில் மையம்கொண்டது. நேரத்தைப் பார்த்தேன் ஏழுமணியைக் கடந்திருந்தது. கொட்டுவை போய்ச்சேர பதினொரு மணியாகும். புகையிரதக் குலுங்கல் மத்தியிலும் பக்கத்திலிருந்த சிங்களவர் மூக்குக் கண்ணாடியுடன் சாகவாசமாக அமர்ந்து தினமின பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு பெட்டியாகச் சிற்றுண்டிகள் விற்கும் பையன்களின் “கோப்பி..கோப்பி…ரஸ்னே..கிரி கோப்பி” சந்தங்கள் சளைக்காமல் ஒலித்துக்கொண்டிருந்தன.

காரணமின்றி ஜன்னனில் தென்படும் தென்னை மரங்களை எண்ணிக்கொண்டிருந்தேன். காற்பாதம் சுவாரசியம் இழந்து உளைச்சலைத்தந்தது. முன் இருக்கைகளின் கீழே காலைநுழைத்துச் சாகவாசமாக நீட்டியமர்ந்தேன். தூக்கம்வராமல் அசௌகரியமாகத் துன்பப்படுத்தியது. பொல்காவல புகையிரதநிலையம் வந்துசேர்ந்தது. கிரீச்சிடும் ஒலியுடன் புகையிரதம் குலுங்கி நிற்கும்போது காத்திருந்த பயணிகள் சோர்வுகளின்றி ஏறுவது தெரிந்தது. நான் இருந்த பெட்டியில் என் முன்னால் உள்ள இருக்கையைத்தவிர்த்து பெரும்பாலான இருக்கைகள் நிரம்பியிருந்தன. ஜன்னனில் தலைசாய்த்து வெறுமையாப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“எக்ஸ்கீயுஸ்மீ… ககுலக் பொட்டக் ஐயங்வெண்ட புளுவன்த?” மெலிதாகச் சத்தம்வந்த திசையைப்பார்த்தேன். சிங்களப் பெண்மணியொருவர் நீலநிறப்புடைவையுடன் நின்றுகொண்டிருந்தார். ஒருகணம் ஸ்தம்பித்தேன், மடையா காலை எடுக்கச்சொல்கின்றாள், அவசரமாகக் காலையெடுத்தேன். புன்னகையுடன் என்முன் இருக்கையில் அமர்ந்தாள். சீலைகட்டியவிதம் இமைகள் நெளிந்து படர்ந்தவிதமும் கடும்சிங்களப் போக்கை அவளிடம் மெலிதாகக் காட்டியது.

மடியில் ஹான்ட் ஃபாக்கை அழுத்திப்பிடித்து வைத்திருந்தாள். ஹான்ட் ஃபாக்கிலிருந்த நுட்பங்களைப் பார்க்கும்போது அவள் நிச்சயம் மேட்டுக்குடியாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். குவிந்த இதழ்கள் சிவந்து புத்தரின் கைகளின் முன்னால் நனைந்திருந்த சிவந்த தாமரைப்பூவை நினைவுபடுத்தியது. அவளின் மார்புப்பகுதி அபாயகரமாகவிருந்தது. சேலையிறங்கிக் காற்றில் படபடத்துக்கொண்டிருந்து. எனக்கு என் மனைவியின் தட்டையான மார்புகள் நினைவுக்கு வந்தது.

நிமிர்ந்து அவளைப்பார்த்தேன். என் கண்ணையே நேராகப்பார்த்தாள். இயல்பாகச் சிரித்தாள். இவள் அபாயகரம் அற்றவள். உரையாடத் தொடங்கினேன். எங்கே போகின்றேன் என்பது முதற்கொண்டு சிங்களத்தில் சொல்லத்தொடங்கினாள். அலுப்பான பயணம் இன்பமான பயணமாக மாறத்தொடங்கியது. ஒவ்வொரு கணமும் வினோத உந்துதலுடன் உற்சாகமாகத் தகிக்கத்தொடங்கியது.

அவளின் நீண்டகேசங்கள் காற்றின் படபடப்பில் அவளின் வாயினுள் நுழைந்தது. தன் நகச்சாயம் பூசப்பட்ட நீண்ட மெலியவிரல்களால் தடங்கள் இல்லாமல் விலக்கிக்கொண்டு உரையாடினாள். என் பக்கத்தில் இருந்த சிங்களவர் பத்திரிகையைச் சுருட்டிக்கையில் பிடித்துக்கொண்டு தலைகள் குலுங்க நித்திரையில் இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் உள்ளீர்க்கப்பட்டேன். சிலபெண்கள் பார்த்துக்கொண்டே பேசமட்டுமே இரவுநேரங்களில் ரொம்பவே இனிமையாகவிருக்கின்றார்கள்.

கந்தானை டொயட்டா ஷோரூமில் ரிஷப்ஷனிஸ்ட்டாக வேலைபார்கின்றாளாம். இப்போது கொழும்பில் இருக்கும் மைத்துனியின் வீட்டுக்குச்செல்வதாகச் சொன்னாள். அவள் குரல் மிகமெலிதாகவிருந்தது. ஹான்ட்ஃபாக்கில் கையநுழைத்துத் தண்ணீர்ப் போத்திலையெடுத்து வாய்வைத்துக்குடித்தாள். போத்திலில் மிக்கிமௌஸ்களின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. சிலநேரத்தில் மௌனமாகினாள். கையை இறுக்கமாக் கட்டிக்கொண்டு இமைகளை அடிக்கடி மூடுவதும் திறப்பதுமாகவிருந்தாள். சில நேரம் செல்லச்செல்ல களைப்பின் மிகுதியில் தலைசாய்த்து நித்திரையில் தன்னை இணைக்க ஆரம்பித்தாள். வெறுமையாக ஜன்னலைப் பார்த்தேன்.

மிகுந்த அயர்ச்சியாவிருந்தது. அவளின் நீண்ட இமைகளைப்பார்த்தேன். நெளிவின் சுழிப்புக்கள் ஆச்சரியப்படுத்தியது. நிச்சயம் அழகுநிலையத்தில் சீராக ஒழுங்குபடுத்தப்பட்டது. சில அபாய வளைவுகளின் பிரதேசத்தில் என் பார்வைகள் ஊடுருவிச்சென்றது. அவளின் மார்பு திமிரியவண்ணம் செழிப்பாகத் திரண்டு இருந்தது. என் பார்வையின் எண்ணத்தினை மாற்றமுடியவில்லை. சிக்கல்ப்பட்டு மறுபடி மறுபடி எழுச்சியடைந்து தோற்றுக்கொண்டிருந்தேன். அவள் தூங்கியவிதம் அவளின் மார்பின் பிளவுகளை அபாயகரமாகக் காட்டிக்கொண்டிருந்து. கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி அவளின் மார்புப்பிளவுக்குள் ஆழமாக உள்நுழைந்து ஒளிந்திருந்தது.

கொட்டுவ போய்ச்சேரும்போது மணி ஏறக்குறைய பத்தரையதாண்டியிருந்து. புகையிரத நிலையத்தைவிட்டு வெளியேவந்தேன். இன்னும் கொழும்பின் மையம் சுவாரசியம் இழக்காமல் இயங்கிக்கொண்டிருந்தது. “கோல்பேஸ்..கொள்ளுப்பிட்டி.. பம்பலப்பிட்டி… வெள்ளவத்தை” பஸ் நடத்துனர்களின் பழக்கப்பட்ட ஒலிகள் இரவின் குளிர்ச்சியிலும் மீடிறன் சிதையாமல் ஒலித்தது. நடைபாதை வியாபாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை நைலோன் உரைபாக்கில் பத்திரப்படுத்திவிட்டு விரிந்திருந்த பாயை சுருட்டிக்கொண்டிருந்தார்கள். என் மகனுக்குக் கையில் குலுக்கிவிளையாட கிலுகிலுப்பை வேண்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். மேன்பாலத்தால் கடந்து முதலாவது குறுக்குசந்தைக்கு நடந்துவந்தேன். இப்பொது நல்ல லொஜ் ஒன்றுக்குச் செல்லவேண்டும். முச்சக்கர ஒட்டுனர்களிடம் வினவவேண்டும். முதுகில் கொழுவியிருந்த பயணப்பைபை சரிபார்துகொண்டேன்.

அப்போது அந்தக்குரலைக் கேட்டேன் “அப்பி யமுத?” (நாங்கள் போவமா?) நீண்ட மேலங்கியை கைவரை இழுத்துவிட்டவாறு அவள் இருந்தாள். உதடு முழுவதும் கருஞ்சிவப்பு நிறத்தில் உதட்டுச்சாயம் அடித்திருந்தாள். மெலிதான ஃபேர்பியூம் வாசனை வீசிக்கொண்டிருந்தது. முழங்காலுக்கு மேல் அவளின் இறுக்கமான பாவாடை வெண்மையான மஞ்சள் நிறத்தில் முட்டைகருவின் நிறச்சாயலில் இருந்தது. சில நொடியில் அடையாளம் கண்டுகொண்டேன். விபச்சாரியேதான். இரவுநேரத்தில் பல விபச்சாரிகளைக் கொட்டுவையையில் காணமுடியும். பலசமயம் புகையிரத்தில் இருந்தோ பஸ்ஸில் இருந்தோ தனியாகச் சுமைப்பையுடன் வருபவர்களை அடியாளம்கண்டு பேரம் பேசுவதைக் கண்டுள்ளேன். சற்றேண்டு முடிவுகள் எடுக்கப்பட்டு முச்சகரவண்டியில் ஏதோவொரு மலிவான விடுதியைநோக்கி நகர்வார்கள்.

கண்டியில் அருனின் அறையில் வேலைதேடி தங்கியிருந்தபோது பக்கத்து அறையில் தங்கியிருந்த மேசன்தொழிலாளிகள் வாரத்துக்கு ஒருமுறை மூன்றுபேராகச் சேர்ந்து விபச்சாரிகளுடன் கூட்டுக்கலவியில் ஈடுபடுவார்கள். அவர்களின் கிளர்ந்தெழும் புணர்ச்சி ஒலிகளை மிக அருகில்கேட்டு நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்திருந்தேன். ஒருமுறை அவர்கள் என்னையும் கூட்டுக்கலவிக்கு அழைத்தார்கள் என் கால்துடைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று அடித்துக்கொண்டு நடுங்கியது நினைவுக்கு வந்தது. அன்றைய ராத்திரி முழுவதும் நிம்மதியிழந்திருந்தேன்.

அவள் மறுபடியும் சிங்களத்தில் கேட்டாள் “நாங்கள் போவமா” அவளின் கண்களைப்பார்த்தேன். அலட்சியமாக என்னை ஊடுருவிப்பார்த்தாள். தடுமாறினேன் என்றாலும் அதனை வெளிக்காட்டாமல் இருந்தேன். “எவ்வளவு ?” என்றேன். வலது கைவிரல்களை உயர்த்தி “நான்காயிரம்..” என்றாள். ஒருகணம் திகைத்தேன். “ அறையோடு சேர்த்து..” என்றாள். “எங்கே அறை?” “ஹொட்டகேனா” என்றாள். வேண்டாம் என்று சொல்லிவிட்டு நிலத்தைப் பார்த்தாவாறு வேகமாக நகர்ந்தேன். அவள் சிங்களத்தில் ஏதோ சொல்லிக்கொண்டு சென்றாள். பக்கவாட்டில் அவள் திரும்பும்போது அவளின் மார்பைப்பார்த்தேன் இறுக்கமான மேலங்கியில் திமுறிக்கொண்டு பருமனாகவிருந்தது.

எதிர்ப்பட்ட முச்சக்கரவண்டியில் ஏறி ஒரு லொஜ்ஜிக்குப் போகச்சொன்னேன். துறைமுகச் சந்தியைக்கடந்து பயணித்தோம். பஞ்சிகாவத்தையில் நிறுத்தினான். இங்கே அறை கிடைக்கும் கேட்டுப்பார்க்க ஓட்டுனர் சொன்னார். ஒரேயொரு டியூப்லைட் வாசலில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. வயதானநபர் ஒருவர் பழுப்புக்கண்களுடன் இருந்தார். விநோதமாக நிமர்ந்து சோர்வுடன் நிம்மதியிழந்த என் கண்களை ஊடுருவினார். அவர் பார்வையில் தமிழ்தான் என்பதினைக் கண்டுகொண்டேன்.

“விடிய வெளிக்கிட்டுவன் இண்டைக்கு ராத்திரி நிக்குறதுக்கு ரூம் வேண்டும்” என்றேன். அவர்விரித்த தடிமனான புத்தகத்தில் என் விலாசம் தேசிய அடையாள அட்டை எண்களை எழுதிவிட்டுப் படிகளில் ஏறி நகரமுற்பட்டேன்.

“தம்பி தனியாவா நிக்கப்போறீங்க..” என்றார். “ஓம் ஏன்?” என்றேன். பக்கத்தில் வந்தார். “தமிழ் பொண்ணுங்க இருக்காங்க வேணுமா?” என்றார். என் கழுத்து நரம்புகள் ஒருமுறை புல்லரித்து அடங்கியது. “எவ்வளவு என்றேன்?” அவர் நிதானமாக “இரண்டாயிரத்தி ஐநூறு” என்றார். “வேண்டாம்” என்றேன். அவரின் முகத்தைப்பார்க்காமல் படியிலேறிச்சென்றேன்.

பிரம்புக்கட்டிலில் அமர்ந்தவண்ணம் மேலே சுழலும் மின்விசிறியைப்பார்த்துக் கொண்டிருந்தேன். புகையிரத நிலையத்தில் கண்ட பெண்ணின் மார்புகளும் மினுங்கும் தங்கச்சங்கிலி நுழைந்த அடியாழங்களும் நினைவுக்குவந்தது. சிந்தனையைத் திசைதிருப்ப முயன்றேன். கொட்டுவையில் சந்தித்த விபச்சாரியின் மஞ்சள் நிற உடையும் கனத்த மார்பும் நினைவடுக்குகளில் வந்து இன்பமாகத் துன்புறுத்தியது. ஜன்னலால் பார்த்தேன். பொலித்தின் ஷோப்பிங் பைகள் பறந்துகொண்டிருந்தன.

அந்தயோசனை மறுபடியும் வந்தது. இது யாருக்குத் தெரியப்போகின்றது, ஒருமுறை மென்மையான சதைகளின் இன்பங்களை அனுபவித்தால் என்ன? செழிப்பான தசைகளின் திரட்சியான பரப்புகளின் வடிவங்கள் எழுச்சியாகக் கண்முன்னே தோன்றியது. குளிர்ந்த நீரை தொண்டைக்குள் வார்த்தேன். தொண்டையைக் குளிர்வித்தபடி நீர் இரப்பையைத்தொட்டது.

உடைகளை மாட்டிக்கொண்டேன். பர்ஸை சரிபார்த்துக் கொண்டேன். படிகளில் இறங்கி கீழேவந்தேன். இங்கே வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அடையாள அட்டை எண் தொடக்கம் அனைத்தும் இவருக்குத்தெரியும். வெளியேபோய்வருவதாகச் சொல்லிவிட்டு விரைந்தேன். அவர் பொருட்படுத்தவில்லை. நேரத்தைப்பார்த்தேன் ஏறக்குறைய பதினொன்று நாற்பது காட்டியது. நடந்துசெல்ல முச்சக்கர வண்டி அணுகியது. மறுபடியும் கொட்டுவை போய்ச்சேர்ந்தேன். சோகையிழந்து பெரும்பாலான சந்திகள் அவசரம் இழந்து காட்சியளித்தன. புதிய பஸ் தரிப்பிடத்தை நோக்கி நகர்ந்தேன். வழியில் ஏ.டி.எம்மில் பணத்தை எடுத்துக்கொண்டேன்.

நடையின் வேகத்தைக் குறைத்தேன். நுட்பமாக அவதானித்துக்கொண்டு நகர்ந்தேன். பஸ் தரிப்பிடத்தில் பெண்கள் நின்றார்கள். நீண்ட கருப்புக்குடையுடன் உள்ள பெண்களைப்பார்த்தேன். குடைகள்தான் விபச்சரிகளுகான அடையாளம். திரும்பவும் போய்விடலாமா என்று யோசித்தேன். சூடான வியர்வைகள் காதின் நுனியில் வடிவதினை தற்செயலாக உணர்ந்தேன். பலவீனங்கள் அலையலையாக என்னுள் உற்பத்தியாகி சாய்க்கத் தொடங்கியது. நடையின் வேகத்தினை ஆர்முடுக்கினேன். அவர்கள் அருகில்நின்றேன். அவர்களை உற்றுப்பார்க்க பின்னால் நின்ற ஒல்லியான வாலிபன் அணுகினான். சிறிய குறுந்தாடி வைத்திருந்தான். வெற்றிலை அவன் உதடுகள் முழுவதும் தெரிந்தது. “கேல்லோ ஒனத?” (பெண்கள் வேண்டுமா?) கால்பெருவிரலை பாதணியில் அழுத்திக்கொண்டேன். “ கோடாக் இன்னவா, ஓயா செலட்காரணப் புளுவன்” (நிறைய இருக்குறாங்க நீங்க தேர்வுசெய்ய முடியும்) என்றான். அவனுடன் தயக்கங்கள் களைந்து நடக்கத் தொடங்கினேன்.

நடைபயணமாக அடுக்குமாடிகுடியிருப்பு ஒன்றுக்குக் கூடிச்சென்றான். இருண்மையா இருளில் அக் கட்டிடம் உறங்கிக்கொண்டிருந்தது. மிகப்பழைய கட்டிடமாக இறுக்கமான மரவேலைப்பாடுகளுடன் தெரிந்தது. துருப்பிடித்த உலோகக் கம்பிகள் நிலைக்குத்தாக வாசல் அருகேநிறுத்தப்பட்டிருந்தன. சுண்ணாம்பு பட்டைபட்டையாகச் சுவரில் கழன்றுகொண்டு தொங்கியது. மேல்மாடிக்குக் கூட்டிச்சென்றான். வெண்துணிகள் மேலே நிறையக் கட்டப்பட்டிருந்தன. அவன் உற்சாமாகக் கூட்டிச்சென்றான். மூன்றாவது மாடியில் இடப்பக்கம் உள்ள குடிலின் மரக்கதவைத் தட்டிக்கூப்பிட்டான். இருபது வயது மதிக்கத்தக்க இளம்பெண் வெளியேவந்தாள். முழங்கால்வரை உடலோடு ஒட்டிய அங்கியணிந்திருந்தாள். வாசலின் ஊடாக அவள் வெளியேவர சிறிய செவ்வக ஹாலின் மின்விசிறி இரைச்சலாகச் சுற்றிக்கொண்டிருந்தது. அவன் என்னிடம் சரியா என்று சமிச்சையுடன் கேட்டான். மௌனமாக நின்றேன். அவன் விநோதமாகப் பார்த்து திரும்பவும் கேட்டான். துணுக்குற்று அப்பெண்ணின் மார்பைப்பார்த்தேன். உருண்டுதிரண்டு திரட்சியாக அவளின் டீஷட்டினுள்ளே பதுங்கியிருந்தது. பணத்தை எடுத்துக்கொடுத்தேன். என் காதருகே குனிந்து “ஒருமுறை விந்துவெளியேறும்வரைதான் இந்தப்பணம் செல்லுபடியாகும்” என்றான். என்னை உள்ளேபோகச் சொல்லிவிட்டு அவளுடன் சிறிதுநேரம் கதைத்துக்கொண்டு நின்றான்.

அது மிகவும் நீண்ட அறையாகவிருந்தது. மெலிதான ஓடிக்குளோன் வாசனை வீசிக்கொண்டிருந்தது. நீள்வட்ட வடிவில் நிலைக்கண்ணாடி சுவரில் சாய்வாகப் பொருத்தப்பட்டிருந்தது. கட்டில் மெத்தையில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் அவள் வந்தாள். நீண்ட செவ்வகமான முகமான மாநிறப் பெண்ணாக இருந்தாள். அப்பட்டமாக முகத்தில் வகைக்குள் உட்படுத்த முடியாத முதிர்ச்சியிருந்தது. தலைமயிரைக் கலைத்துவிட்டு மௌனமாகத் தன்னுடைய மேலாடைகளைக் கலைந்தாள். அவளின் திரட்சியான மார்பகங்களின் சதைகள் தொங்கியது. என் நெஞ்சின் வினோதச்சத்தங்கள் ஜனிக்கப் பார்த்துக்கொண்டு நிற்க என் மனைவியின் முகம் சிலிர்ப்புடன் மிகவேகமாக என்னைக் கடந்துசென்றது. அவள்மீது மிருகத்துக்கான வேட்கையுடன் நுழைந்தேன். “ஆணுறை இருக்கின்றதா? என்றாள். எனக்கு உறைக்க அருகிலிருந்த மேசையின் லாட்சியில் இருந்து ஆணுறையை எடுத்துவந்தாள். உக்கிரமாக அவளின் மார்பின் தசைகள்மீது மாமிசத்தின்மீது பாயும் புலிபோல் அதிசுவாரசியமாகப் பாய்ந்தேன். கட்டுக்கடங்காத உணர்வுகள் கிளர்ச்சியடைய அவளை உக்கிரமாகப் புணரத்தொடக்கியிருந்தேன். அவளைப் புகையிரதத்தில் கண்ட பெண்ணாகக் கருதத்தொடங்க முகிழ்ந்தெழுந்த கலவியின்பங்களிலும் என் தன்னிலை ஆச்சரியப்படுத்தியது.

அவளைவிட்டு வரும்போது இரண்டுமணியைத் தாண்டியிருந்தது. தளர்ச்சியாக மறுபடி என் லொஜ்ஜிக்கு வந்தேன். முச்சக்கரவண்டியால் இறங்கும்போது என் பர்ஸ் இல்லாமல் இருப்பது புரிந்தது. அடச்சே அவளுடைய அறையில் விட்டுவிட்டேன், நினைவுக்குவந்தது. மறுபடி அங்கே முச்சக்கர வண்டியை நகர்த்தச்சொன்னேன். நுழைந்தபடிகளின்படியே ஏறிச்சென்றேன். மின் குமிழ்கள் எரிந்துகொண்டிருந்தன. என் உடம்பு சத்துக்கள் அற்று நலிந்துபோனவனின் பதற்றம்போல் துவண்டுகொண்டிருந்தது. அவளின் குடிலின் கதவைத்தட்டினேன். எந்தச்சலனமும் இல்லை, நீண்டநேரம் தட்டிக்கொண்டிருந்தேன். உள்தாழ்ப்பால் விலக்கப்பட்டுக் கதவுதிறந்தது. அவளைக்கண்டு திடுக்கிட்டேன்.

அவள்கையில் மிகவெதுவெதுப்பான கைக்குழந்தையொன்று ஒட்டிக்கொண்டிருந்தது. கூர்ந்துபார்க அக் குழந்தை அவளின் முலைக்காம்பில் வாய்பதித்துத் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தது. பாலின் மனம் கசிந்துகொண்டிருந்தது. என் சர்வப்புலன்களும் உயிர்ந்து திடுக்கிட்டு அடக்காமல் தடுமாறி என்னை அவதிக்குள்ளாக்கியது.

“மகே பர்ஸ் அத்துள்ளே” என்றேன். உள்ளேபோய்ச் சிறிதுநேரத்தில். என்னுடைய பர்சை எடுத்துக்கொண்டுவந்தாள். மௌனமாகத் தரும்போது அவளின் மென்மையான விரல்கள் என்னுடைய கைமுனையை ஸ்பரிசித்தது. கூச்சமாக ஒருகணம் உணர்ந்து தகித்து அடங்கினேன். அக் குழந்தை தலைதிருப்பி முழிந்த அகலக்கண்ணால் மிரச்சியுடன் என்னைப்பார்த்தது. மிகப்பெரிய வெறுப்பு குழந்தையின் கண்களிலிருந்து கசிந்துகொண்டிருந்தது. என் பிரடி விறைத்துப் புல்லரித்தது.

அக்குழந்தை அப்பெண்ணின் முலைக்காம்பில் இருந்து வாயையெடுத்து திரும்பவும் கவ்விக்கொண்டது. இடைப்பட்ட நொடியில் கருமையான முலைக்காம்பு அபத்தமாகத் தென்பட்டது. அவசரமாகப் பார்வையை விலக்கிக்கொண்டு மெலிதான நடுக்கத்துடன் வெளியேறினேன். வெறுமையாக நடந்துகொண்டிருந்தேன். எக்கச்சக்கமான பிளாஸ்டிக் போத்தல்கள் வீதிநெடுகிலும் பரந்திருந்தன. அடர்ந்த கருமையான இரவில் மஞ்சள் மின்குமிழ்கள் ஒளிர்ந்து இருமையின் மைய அழகினை நிதானமா சிதைத்துக்கொண்டிருந்தன. மணிக்கூட்டுக் கோபுரத்தினைக் கடந்து சுற்றிவந்தேன்.

இறுக்கமான சிமண்டில் பழைய கட்டிடங்கள் உறுதியாக நிறைந்திருந்தன. பழைய பேப்பர்களை விரித்து அதன்மேல் உருக்குலைந்த மனிதர்களின் கால்கள் தென்பட்டது. உற்றுப்பார்த்தேன் மிகவயதானவர்களின் கால்கள். கைவிடப்பட்ட மூதாட்டிகள். பிச்சையெடுத்துப் பிழைப்பவர்கள். உடல்பலன்கள் நீர்ந்துபோய்த் தோல்களின் கலங்கள் வயதாகி தொய்வடைந்து சதைகள் ஈய்ந்துபோயுள்ள நிலையில் இருப்பிடங்கள் இல்லாமல் கிடைக்கும் இடங்களில் படுத்துக்கொள்பவர்கள். அவர்களைச் சுவாரசியமின்று அருகில் பார்த்துக்கொண்டுவந்தேன். பெரும்பலானவர்கள் எண்பது வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகளாக இனம்கண்டேன். புரண்டு புரண்டு பேப்பர்கள் ஒலியெழுப்ப உறங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு மூதாட்டியின் தொய்வடைந்து நீண்டு இறங்கி உருக்குலைந்த மார்பு முழுவதுமாத் தென்பட்டது. சுருக்கமான தொய்வான மார்பின் சதைகள் ஆயிரம் புழுக்களின் கூட்டு நெளிவுகளாகத் தென்பட்டது. என் உடம்பு அதிரும் வகையில் நடுங்கத்தொடங்கியது. பார்வையை விலத்தி என்னையறியாமல் ஓடத்தொடங்கினேன். வயிறுகுமட்டியது. நாசியில் வினோத மணங்கள் சற்றேண்டு வந்துபோனது.

என்னுடைய லொஜ்ஜில் மின்விசிறிகளைச் சத்தத்துடன் ஒலிக்கவிட்டுத் தூங்க முயன்று தோற்றேன். தொய்ந்த சதையின் உருக்குலைந்த விம்பங்கள் கற்பனை செயாமலே என்னுள்ளே எழுந்தது. மறுபடி மறுபடி சிந்தனைகளை மாற்ற முயன்று தோற்றேன். புணர்ந்த பெண்ணின் கலவிகளை வலுக்கட்டாயமாக நினைத்தேன். அவளின் இளமையான மார்புகளின் தசைகளின் மென்மை என்னுள் ஸ்பரிசித்தது. ஒரேநொடியில் குழந்தையொன்று அவளின் மார்பை உருஞ்ச மார்பின் தசைகள் உருக்குலைந்தது என் முன்னே தொங்கியது. என் கால்துடைகள் நடுங்கின. சர்வப்புலன்களையும் ஒதுக்கிவிட்டு எழுந்தேன். திரும்பவும் வயிறுகுமட்டியது. பர்சில் உள்ள மனைவியின் புகைப்படத்தைப் பார்த்தேன். உணர்ச்சிகள் குமிந்து ஒடுங்குவதாகக் கற்பனை செய்துகொண்டேன். அவளின் நெற்றியிலிருந்து ஆரம்பித்த என் பார்வைகள் தட்டையான அவளின் மார்பில் நிலைகுத்திநின்றது. பர்சை ஓங்கியறைந்து மூடிவிட்டுத் தலையணியில் முகம் அழுத்திப்படுத்தேன்.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை எழுந்துபார்க்கும்போது மணி ஏழுமுப்பதைத் தோராயமாக அண்மித்துக்கொண்டிருந்தது. விசித்திர பயங்கள் குவியல் குவியலாக எழுந்தடங்கியது. குளித்துவிட்டுவந்தேன். மடிக்கணணியைச் சரிபார்த்துக்கொண்டேன். வர்த்தக மைய கட்டிடத்துக்குச்செல்ல ஆயத்தம் ஆனேன். முதல்வேலையாக இந்துரங்க திஸ்ஸநயகாவைச் சந்திக்கவேண்டும். சறுக்கல்கள் இல்லாமல் ஒப்பந்தங்களில் கச்சிதமாகக் கையெழுத்து வேண்ட வேண்டும். வேண்டியவுடன் என் முகாமையாளருக்குத் தெரிவித்துவிடவேண்டும். என் பணி ஓய்ந்தது.

பேருந்தில் புறப்பட்டேன். நிரம்பிய கூட்டம் மத்தியில் உடைகள் கசங்காமல் இருக்கப் பிராயச்சித்தப்பட்டேன். எக்கச்சக்கமான பெண்கள் நிறைந்திருந்தார்கள். இறுக்கமான திமிரும் சதைகளை நோக்கி என் கண்கள் செல்லத்தொடங்கியது. ஒவ்வாமையை வரவழைத்துக்கொண்டு கண்களைத் தாழ்த்திக்கொண்டேன். கொழும்பு வர்த்தக மையத்தினை அண்மித்தேன். நடந்துமேலெறிச்சென்று உள்கட்டிடத்தை அடைந்தேன். கண்ணாடிக்கதவினூடாக நுழையும்போது குளிர்மையான காற்று தேகம்முழுவதும் பரந்து இதமாக்கியது. ஒருநொடியில் இது சிங்கள யுவதிகளின் யுகமாகக் கண்டுகொண்டேன். கச்சிதமான உடல்வாகுகொண்ட பெண்கள் தேர்வுசெய்யப்பட்டு நீக்கமற நிறைந்திருந்தார்கள். உடலின் கிளர்ச்சிகள் வேட்கையுடன் தகிக்கத்தொடங்கியது. என்னை நானே வெறுக்க எத்தனித்து என் போலித்தனத்தைக் கண்டு சோர்வடைந்தேன்.

பெரும்பாலான பெண்களின் மார்புச்சட்டையின் மேல்பட்டின்கள் அநியாயமாக வெடவெடக்கத் திறந்திருந்தன. அதனூடாக மார்பின் சதைகள் தெரிய என் தலையில் அடித்துக்கொண்டேன். அவதிகளின் விளிம்பில் தத்தளித்தேன். சில்மிஷ உணர்வுகள் ஊடுருவு நரம்புகளின் முடிச்சில் தீண்டியது.

இந்துரங்க திஸ்ஸநயகா படியவாரிய தலையுடன் சுழல்நாற்காலியில் இருந்தார். ஒவ்வொரு கோப்புகளையும் மூக்குக் கண்ணாடியின் உவப்புடன் ஆராய்ந்துகொண்டிருந்தார். கரும்தேநீர் வரவழைத்தார். மாபிள் கேத்தலுடன் ஒடுங்கிய அங்கியுடன் சுருள்கேதத்துடன் நுழைந்த அப்பெண் என்னருகே குனிந்து வற்றாத புன்னகையுடன் அகண்ட தேநீர் கோப்பையில் தேநீரைவார்த்தாள். அவளின் மார்பின் சதைகளின் வெண்நிறத்தை மிகவருகில் கண்டேன். வெண்புழுக்கள் கேத்தல் துளையிலிருந்து குடுவையில் நுழைவதுபோல் என் மூளையின் அபத்த நீயூரோன்கள் உணர்த்தியது.

“ஏன் ஒரு மாதிரி இருக்கின்றீர்கள்? தேநீரை பருகலாமே” இந்துரங்க புன்னகை ஒளிர ஆங்கிலத்தில் சொன்னார். இது சிங்களவர்களுக்கான புன்னகை. அனைத்து சிங்களவர்களிடமும் இதே ஒருமையிலான புன்னகையைக் கண்டுள்ளேன். கோப்புக்களில் கையெழுத்துப் பிசகாமல் வேண்டப்பட்டது. தேநீரை உறிஞ்சிக்கொண்டு மடிக்கணணியையை உயிர்ப்பித்து இலண்டனிலுள்ள கெவினுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.

மறுபடியும் அலுப்புகொள்ளவைக்கும் புகையிரதப்பயணங்களைக் கடந்து அன்றிரவு பின்னேரப்பொழுதில் வீடுவந்தேன். மனைவியின் கண்களை ஊடுருவத் தகுதியின்றிச் சிக்கலாகத் தவித்தேன். வெகுநேரமாக வினோத எரிச்சல் என்னுள் எழுந்தவண்ணம் இருந்தன. படுக்கையில் வீழ்ந்தேன். என் உடலின் சவ்வுகள் மெலிதாக நடுங்கியது. இரண்டுவயது மகன் என் காலைப்படித்து இழுத்து. “அப்பா அப்பா” என்று திக்குத்திக்காக உளறினான். பீறிட்டு வந்த எரிச்சலின் மத்தியில் கோவம் சுடர்விட்டு வெகுவாக எரிந்து. அவனைப்பிடித்து உதறிவிட்டேன். அவன் முழங்கால் கட்டில் சட்டத்தில் மோதியது. அவனின் அலறல் உச்சசுதியில் எழுந்தது. மனைவி ஓடிவந்தாள். “என்னப்பா இவன் அழறான் என்ன பாத்தனியல்…” “ஓ…”வென்று அவனை அணைத்துத் தூக்கி தோளில் அணைத்துச் சமாதானப் படுத்த ஆரம்பித்தாள். நான் மௌனமாகவேயிருந்தேன். கொஞ்சநேரத்தில் அவன் அழுகையடங்கியிருந்தது. எட்டிப்பார்த்தேன் மனையின் தட்டையான மார்பில் முகம்புதைத்துப் பால்குடித்துக்கொண்டிருந்தான். ஒரு சிறு அசைவில் வாய்விலத்த அவளின் முலைக்காம்பைக்கண்டேன் என் உடல் சிலிர்ந்து நடுங்கியதை பலமாக உணர்ந்தேன். அவனின் கண்கள் திடீரென்று என்னைநோக்கியது. அவன் கண்களை நான் பார்க்கவேயில்லை.

 

•••

 

 

http://malaigal.com/?p=6898

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.