Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளூட்டோவைக் கடந்து சென்று நெருக்கத்தில் படம்பிடித்தது ஆய்வுக் கலன்

Featured Replies

பத்து ஆண்டுகளில் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்த நாஸா விண்கலம் புளூட்டோ குட்டிக் கிரகத்தை கிட்டத்தில் வைத்து படம்பிடித்துள்ளது. அந்தப் படங்கள் விரைவில் பூமியை வந்தடையும்.

 

http://www.bbc.com/tamil/science/2015/07/150714_plutovideo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒதுக்கி வைத்த கிரகத்தையே ஆராய்ச்சி செய்கின்றார்களாம்!!!!!!!!!!! :innocent:

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் இல்லாமல் இப்ப புளுட்டோ பெரிசா தெரியுதாம். அப்ப அது மீண்டும் 9 வது கிரகமாக வாய்ப்புள்ளது.:innocent:

இதில அதிகம் சந்தோசப்படப் போவது எங்கட சாத்திரிமார்தான். நவக்கிரகங்களில் ஒன்றை குறைச்ச கவலைல இருந்தவை பாருங்க. :)

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான வளர்ச்சியையும் தொழில் நுட்ப வளர்ச்சியையும் பார்க்கப் பிரமிப்பாய் இருக்கு...!

  • தொடங்கியவர்

அமெரிக்க விண்கலத்தின் அபார வெற்றி

nh_2476567f.jpg

'நியூ ஹொரைசன்ஸ்' விண்கலம் ஒன்பதரை ஆண்டுகள் பயணம் செய்து, சுமார் 500 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புளூட்டோ கிரகத்தை வெற்றிகரமாக அணுகி, இதுவரை இல்லாத 'குளோசப்' படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அது அனுப்பிய படங்கள் தெளிவாகவே உள்ளன. புளூட்டோ கிரகம் ஒரு விண்கலத்தால் ஆராயப்படுவது இதுவே முதல் தடவை. இது ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

சூரிய மண்டலத்தில் உள்ள புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் கடந்த காலத்தில் அமெரிக்க ‘நாஸா' அமைப்பின் வெவ்வேறான விண்கலங்களால் ஆராயப்பட்டுவிட்டன. புளூட்டோ ஒன்றுதான் பாக்கியாக இருந்தது.

அமெரிக்க விண்கலம் இந்திய நேரப்படி செவ்வாய் மாலை புளூட்டோவைக் கடந்து சென்றது. அப்போது விண்கலத்துக்கும் புளூட்டோவுக்கும் இடையே இருந்த தூரம் சுமார் 12,500 கிலோ மீட்டர். விண்கலம் மெதுவாக நின்று நிதானமாக புளூட்டோவை ஆராய்ந்ததாகக் கூற முடியாது.

நெடுஞ்சாலை வழியே காரில் வேகமாகச் செல்கின்ற ஒருவர், காரை நிறுத்தாமல் வீடியோ கேமரா மூலம் சாலை ஓரத்து கிராமத்தைப் படம் எடுத்துச் சென்றால் எப்படியோ அப்படித்தான் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவைப் படம் பிடித்தது. அப்போது அந்த விண்கலத்தில் இருந்த ஆராய்ச்சிக் கருவிகள் புளூட்டோ பற்றிய தகவல்களைப் பதிவு செய்துகொண்டன.

தகவல் கிடைக்க 16 மாதங்கள்

புளூட்டோவைக் கடந்தபோது விண்கலம் மணிக்கு சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. புளூட்டோவுக்கு அருகில் விண்கலம் இருந்த நேரம் சுமார் எட்டு நிமிடங்களே. எனினும், அந்த எட்டு நிமிட நேரத்தில் எண்ணற்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் இவற்றை நிதானமாகப் பூமிக்கு அனுப்பும். அத்தனை தகவல்களும் கிடைக்க 16 மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வளவு காலம் ஆவானேன்?

முதலாவதாக, விண்கலத்தில் பல கருவிகள் உள்ளன. இரண்டாவதாக, விண்கலத்தினால் தகவல்களை அனுப்பக்கூடிய திறன் குறைவு. மூன்றாவதாக, புளூட்டோ மிகத் தொலைவில் உள்ளதால் அங்கிருந்து சிக்னல்கள் பூமிக்கு வந்து சேர நாலரை மணி நேரம் ஆகும்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ‘நாஸா' அனுப்பிய ‘வாயேஜர் - 2' விண்கலம் 1989-ல் நெப்டியூன் கிரகத்துக்குச் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அருகே சென்று அதாவது, நெப்டியூனை மிக நெருங்கிப் படம்பிடித்தது. ஆனால், இப்போதோ புளூட்டோ சற்றே தொலைவில் இருந்தபடி ஆராய்ந்துள்ளது. இதற்குக் காரணம் உண்டு. புளூட்டோ பற்றி அவ்வளவாகத் தெரியாத காரணத்தில் அக்கிரகத்தைச் சுற்றி நுண்ணிய துகள்கள் வளையம் போல அமைந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது.

புளூட்டோவை நெருங்கும்போது நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் மீது நெல்மணி அளவுக்குச் சிறு துகள் மோதினாலும் விண்கலம் செயலற்றதாகி விடுகின்ற ஆபத்து இருந்தது. ஆகவேதான் விண்கலம் சற்று எட்ட இருந்தபடியே புளூட்டோவை ஆராய்வது நல்லது என்று முடிவு செய்யப்பட்டது.

விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து புளூட்டோவை நிதானமாக ஆராயும்படி செய்திருக்கலாமே என்று கேட்கலாம். அது நடைமுறையில் சாத்தியமற்றது. ஒரு விண்கலத்தின் வேகத்தைக் கணிசமான அளவுக்குக் குறைப்பதானால் அதற்கு நிறைய எரிபொருள் தேவை. நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தில் அந்த அளவுக்கு எரிபொருள் கிடையாது.

58 ஆயிரம் கி.மீ வேகம்

சொல்லப்போனால், நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் 2006-ம் ஆண்டு ஜனவரியில் விண்ணில் செலுத்தப்பட்டபோதே, அது மணிக்கு 58 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட்டது. இதுவரையில் நாஸாவின் எந்த விண்கலமும் அந்த வேகத்தில் செலுத்தப்பட்டது கிடையாது. ஒரு விண்கலம் சூரிய மண்டலத்தின் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல வேண்டுமானால், அந்த அளவுக்கு வேகம் தேவை. நியூ ஹொரை சன்ஸ் விண்கலம் புளூட்டோவை ஆராய்ந்துவிட்டு, அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்று திட்டமிடப்பட்டதால் விண்கலம் அந்த வேகத்தில் செலுத்தப்பட்டது.

நியூ ஹொரைசன்ஸ் புளூட்டோவுக்குக் கிளம்பிய பின்னர், அது 2007-ம் ஆண்டு வாக்கில் வியாழன் கிரகத்தை நெருங்கிக் கடந்து சென்றது. ஒரு விண்கலம் இப்படியாகக் கடந்து செல்லும்போது, இயற்கை விதிகளின்படி வியாழன் அதை ‘ஜருகண்டி’ பாணியில் தனது பெரும் ஈர்ப்புச் சக்தி மூலம் வேகமாக இழுத்து மறுபுறத்தில் தள்ளிவிடும். வியாழன் கிரகம் இவ்விதம் வேகமாக இழுத்துத் தள்ளியதன் பலனாக நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தின் வேகம் மணிக்கு 83 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்தது. இதன் பலனாக நியூஹொரைசன்ஸ் விரைவாக புளூட்டோவைச் சென்றடைய முடிந்தது.

பெர்சிவல் லோவலின் தேடல்

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் பன்னெடுங்காலமாக அறியப்பட்டவை. இரவு வானில் இவற்றை வெறும் கண்ணால் காண முடியும். சனி கிரகத்துக்கு அப்பால் உள்ள கிரகங்கள் நீண்ட காலம் அறியப்படாமல் இருந்தன. டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு, யுரேனஸ் கிரகம் 1781-ம் ஆண்டிலும் நெப்டியூன் 1846-ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன. நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கரான பெர்சிவல் லோவல் என்ற விஞ்ஞானி சொந்த செலவில் வான் ஆராய்ச்சிக்கூடம் அமைத்து, நெப்டியூனுக்கு அப்பால் ஒரு கிரகம் இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் நீண்ட நாள் வானைத் தேடினார். ஆனால், அவரது முயற்சி பலிக்கவில்லை.

எனினும், பின்னர் இன்னொரு அமெரிக்க விஞ்ஞானியான கிளைட் டாம்போ பெரும்பாடுபட்டு 1930-ல் அந்தக் கிரகத்தை - அதாவது புளூட்டோவைக் கண்டுபிடித்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி கூறிய யோசனையின் பேரில் புளூட்டோவுக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது. இவ்விதமாக புளூட்டோ சூரிய மண்டலத்தின் ஒன்பதாவது கிரகமாகக் கருதப்படலாயிற்று. புளூட்டோவுடன் ஒப்பிட்டால் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை ராட்சத பனிக்கட்டி உருண்டைகள். வடிவில் சிறியதான புளூட்டோவானது பூமி, செவ்வாய் போன்று பாறைகளால் ஆனது. புளூட்டோ மிகத் தொலைவில் இருப்பதால் அது சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.

வானில் ஒரு ஏப்பம்

புளூட்டோ ஒரு கிரகம் என்ற அந்தஸ்தை 2006-ம் ஆண்டின் பிற்பகுதியில் இழந்தது. ஒரு கிரகம் என்றால், அது தனிப் பாதையில் சூரியனைச் சுற்றி வர வேண்டும். இரண்டாவதாக, அது மற்ற கிரகங்களைப் போல உருண்டை வடிவில் இருக்க வேண்டும். மூன்றாவதாக, அது தன் அருகில் உள்ள சிறிய உருண்டைகளைத் தன் பால் ஈர்த்து ஏப்பம் விட்டிருக்க வேண்டும் என மேற்படி ஆண்டில் சர்வதேச வானவியல் சங்கம் புதிய விதிகளை நிர்ணயித்தது. புளூட்டோ மூன்றாவது நிபந்தனையைப் பூர்த்திசெய்யாததால் அதைக் கிரகம் என ஏற்க முடியாது என்று அச்சங்கம் தீர்மானித்தது. எனினும் புளூட்டோவுக்கு குள்ளக் கிரகம் என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாடப் புத்தகங்களிலும் புளூட்டோ ஒரு குள்ளக் கிரகம் என்று வர்ணிக்கப்படலாயிற்று.

வானவியல் சங்கம் இவ்விதம் முடிவு எடுத்ததற்கு முன்னரே அந்த ஆண்டு ஜனவரியில் நியூ ஹொரைசன்ஸ் விண்ணில் செலுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்காவில் இன்னமும் பலர் புளூட்டோவை ஒரு கிரகம் என்றே கருதுகின்றனர். புளூட்டோவைக் கண்டுபிடித்தவர் ஒரு அமெரிக்கர் என்பதும் அதற்கான ஒரு காரணமாகும். நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தைச் செலுத்திய விஞ்ஞானிகளில் சிலரும் அவ்விதமே கருதுகின்றனர்.

நான்கரை லட்சம் பேர்

நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தில், புளூட்டோவைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் சாம்பல் சிறிதளவு வைக்கப்பட்டுள்ளது. நாஸா விடுத்த வேண்டுகோளின்படி பலரும் தங்கள் பெயரைப் பதிவுசெய்துகொண்டதால், சுமார் நாலரை லட்சம் பேரின் பெயர்கள் அடங்கிய ஒரு சி.டி. ஒன்றும் விண்கலத்தில் இடம்பெற்றுள்ளது.

புளூட்டோ சந்திரனைவிடவும் சிறியது. ஆனால், அதற்கு சாரோன் உட்பட ஐந்து குட்டி சந்திரன்கள் உள்ளன. புளூட்டோ சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ளது. அதைத் தாண்டிப் பல லட்சம் பனிக்கட்டி உருண்டைகள் வளையம்போல அமைந்துள்ளன. இவை அமைந்த பகுதி ‘கைப்பர் பெல்ட்' என்று அழைக்கப் படுகிறது. சூரிய மண்டலத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்தப் பகுதியிலிருந்து அவ்வப்போது சிறிய பனிக்கட்டி உருண்டைகள் வால் நட்சத்திரங்கள் என்ற பெயருடன் பல கிரகங்களின் சுற்றுப்பாதைகளைக் கடந்து சூரியனை நோக்கி வருகின்றன. சூரியனைச் சுற்றிவிட்டு அவை வந்த வழியே சென்றுவிடுகின்றன.

புளூட்டோவைக் கடந்து சென்ற நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் இந்த கைப்பர் வளைய வட்டாரத்தை நோக்கிச் செல்லும். அவற்றை ஆராய்ந்து தகவல்களை அனுப்பும். புளூட்டோவும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த உருண்டைகளில் ஒன்று என்ற ஒரு கருத்து உண்டு. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பனிக்கட்டி உருண்டைக்கு நிபுணர்கள் இந்தியப் புராணங்களில் வரும் வருணனைக் குறிக்கும் வகையில் ‘வருணா' என்று பெயரிட்டுள்ளனர். சூரிய மண்டலம் தோன்றியபோது மிஞ்சிய துண்டு துக்கடாக் களே இவ்விதம் பனிக்கட்டி உருண்டைகளாக இருப்பதாக ஒரு கருத்து உண்டு.

நியூ ஹொரைசன்ஸ் அனுப்பும் தகவல்கள், சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,

http://tamil.thehindu.com/opinion/columns/அமெரிக்க-விண்கலத்தின்-அபார-வெற்றி/article7433166.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

பிரபஞ்ச எல்லையை விரிவாக்கும் புதிய விண்கலம்

tec.jpg

நவ­தா­னி­யங்கள், நவ­ரத்­தி­னங்கள் என அழைக்­கப்­படும் வரி­சையில் சூரிய குடும்­பத்தில் காணப்­படும் கோள்கள் ஒன்­பதும் இருந்து வந்­தன. ஆனால், 2006 ஆம் ஆண்டில் செக். குடி­ய­ரசு நாட்டில் நடை­பெற்ற வானி­ய­லா­ளர்­களின் (International Astronomical Union - IAU) உல­க­ளா­விய ஒன்­று­கூ­டலில் கோள்­க­ளுக்­கான வரை­வி­லக்­கணம் தொடர்­பாக வாக்­கெ­டுப்பு ஒன்று நடை­பெற்­றது. அந்த வாக்­கெ­டுப்பில் கோள்­க­ளுக்­கான புதிய வரை­வி­லக்­கணம் வெற்றி பெற்­ற­மையால், அந்தப் புதிய வரை­வி­லக்­க­ணத்­திற்கு இணங்க புளுட்டோ கோளா­னது சூரியக் குடும்­பத்தின் கோள் என அழைக்­கப்­படும் தகை­மை­யினை இழந்­தது.

இதனால் ‘நவ’ வரி­சையில் இருந்த சூரியக் குடும்பக் கோள்கள் 8 ஆக மாறி­யது. தற்­போது, அக்­கு­றிப்­பிட்ட கோள் தொடர்­பான செய்­திகள் சர்­வ­தேச ஊட­கங்­களின் அறி­வியல் பகு­தியில் அதி­க­மாக வெளி­வந்­து­கொண்­டி­ருக்­கி­றது. ஏனெனில், ஒன்­பது வரு­டங்­க­ளாகப் பய­ணித்து கொண்­டி­ருக்கும் புதிய தொடு­வானம் என்ற விண்­கலம் புளுட்டோ கோளினை அண்­மித்துப் பய­ணித்துச் செல்­ல­வி­ருப்­பதும், அது தற்­போது அனுப்பிக் கொண்­டி­ருக்கும் படங்­களும் அறி­வியல் உலகைப் பர­ப­ரப்பு மிக்­க­தாக்­கி­யுள்­ளது.

சூரிய குடும்­பத்தின் ஒன்­ப­தா­வது கோளான புளுட்டோ வானி­ய­லாளர் Percival Lowell என்­ப­வரால் அதன் இருப்புக் குறித்து 1915 ஆம் ஆண்டில் எதிர்வு கூறப்­பட்டு, மற்­றொரு வானி­ய­லா­ள­ரான Clyde Tombaugh என்­ப­வரால் 1930 ஆம் ஆண்டில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இந்தக் கோளிற்கு 5 சந்­தி­ரன்கள் காணப்­ப­டு­கின்­றன. இக்கோள் சூரி­யனை ஒரு முறை சுற்­றி­வர 247.9 புவி வரு­டங்கள் எடுக்கும் எனக் கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கோள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பின்னர் இது­வ­ரையில் இக்­கு­றிப்­பிட்ட கோள் சூரி­யனை சுற்றி வந்து ஒரு பூரண சுற்­றினை முழு­மைப்­ப­டுத்­த­வில்லை.

விண்­வெளி ஆய்­வு­களை மேற்­கொள்ளும் அமெ­ரிக்­காவின் ‘நாஸா’ நிறு­வ­ன­மா­னது 2006ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 19 ஆம் திகதி புதிய தொடு­வானம் (New Horizons) எனப் பொருள்­படும் பெய­ரினைக் கொண்ட விண்­கலம் ஒன்­றினை ஏவி­யது.

இந்த விண்­க­லத்தின் இலக்­காக புளுட்டோ கோள் மற்றும் அதன் சந்­தி­ரன்­களை அண்­மித்துச் சென்று ஆராய்­வதும், அக்­கோ­ளிற்கு அப்­பா­லுள்ள Kuiper Belt வலய விண்­பொ­ருட்கள் குறித்த தக­வல்­களைப் பெறு­வ­து­மாக அமைந்­தது அந்த விண்­கலம் ஒன்­ப­தரை வரு­டங்­க­ளாக பய­ணித்துத் தற்­போது புளுட்டோ கோளினை அண்­மித்­துள்­ளது. இந்த விண்­கலம் பய­ணித்­துள்ள தூரத்­தினைக் குறிப்­பி­டு­வ­தானால், இவ்­விண்­க­லத்­தி­லி­ருந்து அனுப்­பப்­படும் ஒளியின் வேகத்தில் பய­ணிக்கும் மின்­காந்த வானொலி அலை­க­ளா­னது சுமார் நான்கு மணித்­தி­யா­லங்கள் பய­ணித்தே புவியின் அலை உண­ரி­களை அடை­கின்­றது.

புதிய தொடு­வானம் விண்­க­லத்தின் நீண்ட பய­ணத்­தின்­போது அதன் அனே­க­மான சாத­னங்­களின் பணிகள் முடக்­கப்­பட்டு உறக்க நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. பின்னர், புளுட்டோ கோளினை அண்­மித்த நிலையில் விண்­கல சாத­னங்­களின் செயற்­பாட்­டினை புவி­யி­லி­ருந்து பரீட்­சித்­த­போது, ஒரு வழு நிலை­யொன்று விண்­வெளி ஆய்­வா­ளர்­களால் அவ­தா­னிக்­கப்­பட்­டது. இந்­நி­லைமை அந்த ஆய்­வா­ளர்­களைக் கிலே­ச­முற வைத்­தது. எனினும், அந்த வழு சரி­செய்­யப்­பட்டு விண்­க­லத்தின் சாத­னங்­களின் செயற்­ப­டு­திறன் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

மேற்­கு­றிப்­பிட்ட விண்­கலம் புளுட்டோ கோளினை அண்­மிக்­கையில் அது அக்கோள் தொடர்­பான ஒளிப்­ப­டங்­களை அனுப்ப ஆரம்­பித்­தது. அவ்­வா­றான ஓர் ஒளிப்­ப­டத்தில் புளுட்டோ கோளும் அத­னது சந்­தி­ரன்­களில் பெரி­தான Charon உம் அடங்­கிய காட்சி உள்­ள­டங்­கி­யி­ருந்­தது. இந்தப் பத்தி எழு­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கையில், குறித்த விண்­கலம் புளுட்டோ கோளின் மேற்­ப­ரப்­பி­லி­ருந்து சுமார் 12,500 கிலோ­மீற்றர் உய­ரத்தில் அக்­கோ­ளினை அண்­மித்துப் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது என்ற செய்­தி­களும் அது தொடர்­பான படங்­களும் வெளி­வந்­த­வா­றுள்­ளன.

புதிய தொடுவானம் விண்கலம் தரும் தகவல்கள் பிரபஞ்ச எல்லைகள் தொடர்பாக மனிதர் கொண்டுள்ள கருதுகோள்கள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், சூரிய குடும்ப கோள்களுக்கு அப்பால் உள்ள Kuiper Belt வலய விண்பொருட்கள் தொடர்பான ஆய்வுகளுக்கான ஒரு தொடக்கமாகவும் இந்த விண்கலத்தின் பயணம் அமையவுள்ளது.

சில்லையூர் றெ.அலெக்ஸ்

யாழ்ப்பாணம்.

http://www.virakesari.lk/articles/2015/07/19/பிரபஞ்ச-எல்லையை-விரிவாக்கும்-புதிய-விண்கலம்

 

  • தொடங்கியவர்

புளூட்டோவில் நைட்ரஜன் பனிச்சிகரங்கள்: புதிய படங்களை வெளியிட்டது நாசா

நாசா வெளியிட்ட புளூட்டோ புகைப்படம். படம்: ராய்ட்டர்ஸ்

நாசா வெளியிட்ட புளூட்டோ புகைப்படம். படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய குடும்பத்தைச் சேர்ந்த புளூட்டோவை ஆய்வு செய்வதற்காக 2006-ம் ஆண்டில் நியூ ஹாரிசன் விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலம் 9 ஆண்டுகளுக்கு மேலாக விண் வெளியில் பயணம் செய்து கடந்த ஜூலை 14-ம் தேதி புளூட்டோவை மிக நெருக்கமாக கடந்து சென்றது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாசா விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. நியூ ஹாரிசன் சிக்னல் வடிவில் அனுப்பும் ஒரு தகவல், பூமியை வந்தடைய சுமார் நாலரை மணி நேரமாகிறது. அந்த வகையில் இதுவரை 5 சதவீத தகவல்கள் மட்டுமே நாசாவுக்கு கிடைத்துள்ளன. அனைத்து தகவல்களும் வந்துசேர சுமார் 16 மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.

நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 14-ம் தேதி முதல்முறையாக புளூட்டோவின் உண்மையான புகைப்படங்களை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதன்மூலம் மேலும் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

புளூட்டோவில் நைட்ரஜன் பனிச்சிகரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பூமியில் பனிச் சிகரங்கள் உருகி ஓடுவதுபோல புளூட்டோவிலும் நைட்ரஜன் பனிச்சிகரங்கள் உருகி ஓடியிருப்பது தெரியவந்துள்ளது.

புளூட்டோவின் வெப்பநிலை மைனஸ் 229 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த குளிர்நிலையில் பனி உருக வாய்ப்பில்லை. ஆனால் புளூட்டோவில் காணப்படும் நைட்ரஜன் பனிச்சிகரங்கள் மிகவும் மென்மைத்தன்மையுடன் இருப்பதால் உருகி ஓடும் தன்மை கொண்டுள்ளன என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பூமி, செவ்வாய்க் கிரகங்களில் இருப்பது போன்ற மேற்பகுதி புளூட்டோவின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. புளூட்டோவில் மலைச்சிகரங்களும் காணப்படுகின்றன. அவற்றுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முறை யாக ஏறிய எட்மண்ட் ஹிலாரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நியூ ஹாரிசன் எடுத்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் பூமியை வந்துசேரும்போது மேலும் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக் கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/world/புளூட்டோவில்-நைட்ரஜன்-பனிச்சிகரங்கள்-புதிய-படங்களை-வெளியிட்டது-நாசா/article7469434.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.