Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் ஆறுதலாக உணர்ச்சி வசப்படாமல் பழிவாங்கும் சிந்தனை இல்லாமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆறுதலாக உணர்ச்சி வசப்படாமல் பழிவாங்கும் சிந்தனை இல்லாமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும்

 

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமரிடம் கொடுக்கப்படும் நிலையில் மஹிந்த அந்த அதிகாரங்களை மீண்டும் பயன்படுத்தும் நிலை காணப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே,  இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

ஆட்சி மாற்றத்தின் பின்னர் பெரிய மாற்றம் கிடைக்கும் என்ற பெரிய நம்பிக்கையை கொடுத்து தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளித்து இருந்தது.

இன்று ஜனாதிபதிக்கு இருக்க கூடிய அதிகாரங்கள் படிப்படியாக அகற்றி பிரதமரிடம் பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்படும் நிலையில் ஆட்சியில் இருந்து அகற்றின மஹிந்த ராஜபஷே பாராளுமன்றத்திற்கு வந்து ஜனாதிபதியனால் பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்படும் அதிகாரங்களை பயன்படுத்த கூடிய நிலையில் இருக்கின்றார்

இந்த ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகளை கொடுத்து இருக்கிறது என்பதனை அவர்கள் யோசிக்க தொடங்க வேண்டும்.

நாங்கள் ஆறுதலாக உணர்ச்சி வசப்படாமல் பழிவாங்கும் சிந்தனை இல்லாமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும் என்பதனால் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு, அன்று தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கி இருந்தது.

மக்கள் விரும்பாத கருத்தை நாங்கள் தெரிவிக்கின்றோம் என்றால் அதில் ஆழ்ந்த கருத்து இருக்கு என்பதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

தேர்தல் அரசியலுக்காக வாக்கு எடுப்பதற்கு செயற்படும் தரப்பு நாங்கள் அல்ல  என்ற அந்த நம்பிகையை மக்கள் எம் மீது வைத்தால் வர கூடிய காலத்தில் நாங்கள் கூறுகின்ற ஆலோசனைகளை கேட்டு செயற்பட்டால் எம்மை பொறுத்தவரை நாம் பெரியளவில் முன்னேற்றம் அடைவோம்.

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் ஏமாற்றப்பட்டது போல மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாற்றப்பட கூடாது என்பதே எமது நோக்கம்.என தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122040/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒருவர் தீர்க்கதரிசனம் உள்ளவர். இவர் ஒருவர் தூரநோக்கு உள்ளவர்.  தீர்க்கதரிசனம் எண்ட வடசொல்லின் தமிழ் வடிவம் தான் தூரநோக்கு. கடைசியிலை தூரநோக்கு எங்கை கொண்டுபோய் நிறுத்தினது என்பது தெரியும் தானே! மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். விண்ணணியின் கோமாளிகளுக்கு  குறைபிடிக்கிற அரசியலைத் தவிர எதுவும் தெரியாது. இம்முறையும் நல்ல பாடம் புகட்டப்படும் புலிவால்களுக்கும் சேர்த்து!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலுக்கையும் கையுக்கையும் காட்டிக்கொடுப்பனர்களும் கூட இருந்து குழிபறிப்பினரும் இருக்கும் போது தூரநோக்கு மட்டுமல்ல பரந்தசிந்தனையும் பரந்த மனப்பான்மையும் தோற்றுப்போகும்.

குட்டிமணியை காட்டி கொடுத்ததில் இருந்து போரட போனவர்களை போட்டு தள்ளியது வரை யாரென்று காலம் சொல்லிவிட்டது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து இங்கு பல பேர் ரெஸ்லிங் பார்ப்பது போல போராட்டத்தை பார்த்தவர்களுக்கு மற்றவனை குறை சொல்லி ஒப்பாரி வைப்பதை விட வேறு வழியில்லை . 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்ற புதிய அரசாங்கம் இதுவரையில் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. மாறாக தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றவே முனைகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். 

இந்த இக்கட்டான நிலை தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.கந்தர்மடப்பகுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இந்த முறையும் ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னுமொரு ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு தமிழ் மக்களுடைய வாக்கு பலத்தை பயன்படுத்த கூடாது. அப்படிப்பட்ட ஒரு ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு தேவையில்லை.

உண்மையிலேயே மகிந்த ராஜபச்ஷவின் சித்தாந்தங்களை முற்றுமுழுதாக நிராகரித்து தமிழ் மக்களுக்கு நலன் கொடுக்கக் கூடிய வகையிலே ஒரு புதிய ஆட்சி வரப்போவதென்றால் எங்களுடைய ஆதரவினை முற்றுமுழுதாக் கொடுக்கலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ராஜபக்ஷவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேனவின் தலமையில் இருந்த அந்த கூட்டாட்சி முற்றுமுழுதாக ராஜபக்ஷவை விட தீவிரமாக தமிழ் மக்களுடைய விவகாரங்களில் சிங்கள தேசிய இனத்தின் நலன்கள் என்ற கோணத்தில் அனுகுவார்கள் என்ற வாக்குறுதியினை கொடுத்துத்தான் தென்னிலங்கையில் அந்த தரப்பு செயற்பட்டது.

ஆனால் இன்று கவலை என்னவென்றால் ஆட்சி மாற்றம் பெரிய மாற்றத்தினை கொடுக்கும் என்று நம்பிக்கை கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து, மிகப் பெரிய அளவில் அந்த ஆட்சிமாற்றத்திற்கு தமிழ் மக்களை வாக்களிக்க செய்தும் இன்று ஆட்சியில் இருந்து துரத்தப்பட்ட மகிந்தவையே மைத்திரியின் புதிய ஆட்சி தன்னுடைய மிக முக்கியமான வேட்பாளராகக் கொண்டு வருகின்ற நிலமை உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இருக்கினற ஜனாதிபதியின் அதிகாரங்களை மெல்ல மெல்ல குறைத்து அவற்றை பிரதமருக்கு கொடுக்கின்ற போக்கில் போய்கொண்டிருக்கின்ற நிலையிலே பாராளுமன்றத்திற்கு புதிதாக வந்த மகிந்த ராஜபக்ஷ மீண்டும் வந்து ஜனாதிபதியிடம் இருந்து பாராளுமன்றத்திற்கு கொடுக்கின்ற அதிகாரங்களை தான் பயன்படுத்தக் கூடிய நிலமை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிமாற்றம் எவ்வளவு நம்பிக்கை கொடுத்திருக்கின்றது என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

நாங்கள் உணர்ச்சிவசப்படாமல் வெறுமNனு பழிவாங்கல் என்ற கோணத்தில் சிந்தித்து செயற்படாமல் துரநோகத்தோடு செயற்பட வேண்டும் என்பதால்தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.

இன்றாவது மக்கள் இவற்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் பொறுப்போடுதான் நடந்து கொள்கின்றோம். வெறுமனே மக்கள் ஒரு நிலையில் இருக்கின்றதால் மக்கள்  பழிவாங்க விரும்புகின்றதனால் மக்கள் ஏற்றுக் கொள்ளதாத கருத்தைக் கூறி எங்களை மக்கள் விமர்சிக்கின்ற தேவை எங்களுக்கு இல்லை.

ஆனால் மக்கள் விரும்பாத ஒரு கருத்தை நாங்கள் முன்வைக்கின்றோம் என்றால் அதற்கு ஒரு ஆழமான காரணம் இருக்கின்றது என்பதை மக்கள் உணர தொடங்க வேண்டும்.

எம்மை பொறுத்தவரையில் நாம் தேர்தலுக்கான வாக்குகளை பெறுவதற்கு செயற்படுகின்ற ஒரு தரப்பு இல்லை. மக்கள் நம்பிக்கை வைத்திருந்தால் இனிவரும் காலங்களில் நாங்கள்  அவர்களுக்கு கூறகின்ற ஆலோசனைகளை சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டால் பெரிய அளவில் முன்னேற்றம் அடைய கூடிய நிலமை வரும்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏதிர்காலத்தில் ஏமாற்றப்படக் கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/41628/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்


தேர்தல் நெருங்க நெருங்கக் கூட்டமைப்பின் வால்பிடிகளுக்கு   நெஞ்சு படக் படக் என்று அடிக்க ஆரம்பித்து விட்டது.
ஏதோ எல்லாம் உளற ஆரம்பித்து விட்டனர்.:grin:
கஜன் மிகவும் தெளிவாக இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

 நாங்கள் ஆறுதலாக உணர்ச்சி வசப்படாமல் பழிவாங்கும் சிந்தனை இல்லாமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


தேர்தல் நெருங்க நெருங்கக் கூட்டமைப்பின் வால்பிடிகளுக்கு   நெஞ்சு படக் படக் என்று அடிக்க ஆரம்பித்து விட்டது.
ஏதோ எல்லாம் உளற ஆரம்பித்து விட்டனர்.:grin:
கஜன் மிகவும் தெளிவாக இருக்கின்றார்.

அவர் நல்லதைத்தான்  சொல்கிறார்

இங்க ஒருத்தர்

குட்டிமணிவரை போய் வாந்தி  எடுக்கிறார்

திரி  என்னவென்றே வாசிக்க வாந்தி விடுகுதில்லை...:(

குட்டிமணியை காட்டி கொடுத்ததில் இருந்து போரட போனவர்களை போட்டு தள்ளியது வரை யாரென்று காலம் சொல்லிவிட்டது .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து இங்கு பல பேர் ரெஸ்லிங் பார்ப்பது போல போராட்டத்தை பார்த்தவர்களுக்கு மற்றவனை குறை சொல்லி ஒப்பாரி வைப்பதை விட வேறு வழியில்லை . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 நாங்கள் ஆறுதலாக உணர்ச்சி வசப்படாமல் பழிவாங்கும் சிந்தனை இல்லாமல் தூர நோக்குடன் செயற்பட வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அவர் நல்லதைத்தான்  சொல்கிறார்

இங்க ஒருத்தர்

குட்டிமணிவரை போய் வாந்தி  எடுக்கிறார்

திரி  என்னவென்றே வாசிக்க வாந்தி விடுகுதில்லை...:(

என்ன செய்யுறது விசுகர்? :(

கொண்ட கோலத்தை குருவாலையும் மாத்தேலாது எண்டமாதிரி கூடப்பிறந்த கொஞ்சம் காரணமில்லாமல் இப்பிடியாய் மற்றவன்ரை தலையிலை மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு திரியுதுகள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.