Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் புலிகளுக்கு தொடர்பாடல் நிலையம் அமைத்துக் கொடுத்தாராம் ரணில்! - சரத் என் சில்வா கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சம்பூரில் புலிகளுக்கு தொடர்பாடல் நிலையம் அமைத்துக் கொடுத்தாராம் ரணில்! - சரத் என் சில்வா கூறுகிறார் 
[Saturday 2015-07-18 08:00]
நோர்வேயின் உதவியுடன் சம்பூரில் புலிகளுக்குத் தொடர்பாடல்  நிலையமொன்றை ரணில் விக்கிரமசிங்க அமைத்துக் கொடுத்தார்  என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா.அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

நோர்வேயின் உதவியுடன் சம்பூரில் புலிகளுக்குத் தொடர்பாடல் நிலையமொன்றை ரணில் விக்கிரமசிங்க அமைத்துக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா.அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

   

மஹிந்த பிரதமர் கதிரைக்குச் செல்வது உறுதி. அவருக்குப் பிரதமராக முடியாது என்று சட்ட ரீதியான கருத்துகளைத் தற்போது முன்வைக்கின்றனர். 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியைவிட பிரதமருக்கு அதிகாரம் உள்ளது. சிறிசேனவின் கதிரையில் அல்ல, பிரதமர் கதிரையில்தான் அவர் அமரப்போகிறார். அவர் பிரதமராவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரக்கமான சிறிசேன அல்ல. அவர் வைராக்கிய சிறிசேன. பொறாமை, குரோதமும் மட்டுமே அவரிடம் உள்ளன. மஹிந்தவிடம் அவ்வாறான குணம் இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி என்று அறிந்த பின்னர் அலரிமாளிகையிலிருந்து 6 மணிக்கு வெளியேறினார். மைத்திரிக்கு பொறுப்புகளையும் கையளித்தார். அவருக்கு எதிராகத்தான் இப்போது கருத்துகள் கூறப்படுகின்றன.

ரணில் விக்கிரமசிங்க புலிகளிடம் மண்டியிட்டு என்ன செய்தார்? சமாதான ஒப்பந்தத்தினூடாக பிரபாகரன் பலமடைந்தார். அவரது பங்கர்கள் அப்படியே இருந்தன. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் நான் சம்பூருக்குச் சென்றேன். திருகோணமலை துறைமுகத்துக்கு அருகில் பாரிய கோபுரங்கள் இரண்டு அமைக்கப்பட்டிருந்தன. இது ஏன் அமைக்கப்பட்டது என்று நான் கேட்டேன். புலிகளுக்குத் தொடர்பாடல் மத்திய நிலையமாக நடத்த நோர்வே அரசின் நிதி உதவியுடன் ரணில் விக்கிரமசிங்க இதனை அமைத்துக் கொடுத்துள்ளார். எமது இராணுவத்தினர் எங்கு செல்கின்றனர் என்பது இதனூடாக புலிகளுக்குத் தெரிய வந்தது. இவ்வாறாக எமது நாடு காட்டிக்கொடுக்கப்பட்டது. எனவே, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கி நாட்டைப் பாதுகாப்போம் என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=136065&category=TamilNews&language=tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பெயரை பாவிக்காமல் சிறிலங்கா மாதாவின் புதல்வர்களுக்கு அரசியல் செய்ய முடியாது போல உள்ளது....ஒரு நீதியரசர் இவ்வளவு கீழ்தரமான கருத்தை முன்வைத்து வாக்கு கேட்கிறார் என்றால்......சாதாரண வேட்பாளர்கள் எப்படி எல்லாம் பேசுவார்கள்......

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் பதவிக் காலத்தில் தான் வடக்குக் கிழக்கு பிரிக்கப்பட்ட தீர்ப்பும் வந்தது. ஒரு சிங்கள பேரினவாத நீதிபதி வழங்கிய தீர்ப்பு இந்திய - இலங்கை பொம்மை ஒப்பந்தத்தை சிதைச்சுச் சின்னாபின்னமாக்கி அதன் போலித் தன்மையையும்.. சிங்கள நீதித்துறையில்.. பேரினாவாத சிந்தனை ஓட்டம் எவ்வளவு ஆழ ஊடுருவி உள்ளது என்பதையும் இனங்காட்டின. அதுமட்டுமல்ல.. சுனாமி மீட்பு இடைக்கால நிர்வாக கட்டமைப்பையும் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தவர் இந்த கொடிய சிங்கள இனவாதி.

இவை எல்லாம் கண்டும் சர்வதேசம் சிறீலங்காவை இன்னும் சனநாயக நாடு நீதி நிலைத்திருக்கிறது.. என்று வியந்து கொண்டிருப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி 3 தடவைகள் திறக்கப்பட்டுள்ளது

ரிப்போட் செய்யமுடியவில்லை

கவனிக்குக..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.