Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்

Featured Replies

சம்பந்தனிடம் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் மூதூர் முஸ்லிம்கள்

JUL 18, 2015by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள்

tna-muthur-muslimகிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முஸ்லிம் பிரமுகர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று மூதூரில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற மூதூர் அரசியல் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பிரமுகர்கள், மூதூரைச் சேர்ந்த ஒருவருக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தேசியப்பட்டியல் மூலம் பெற்றுத் தருமாறு இரா. சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்தனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பட்டியலில் மூதூரைச் சேர்ந்த வேட்பாளருக்கு இடமளிக்காமல் ஏமாற்றி விட்ட விசனம் தெரிவித்த அவர்கள், தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து, ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவதற்கு உதவுவதாகவும், அதற்குப் பதிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் மூதூருக்கு இடமளிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

tna-muthur-muslim

இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், ‘கிழக்கில், மட்டுமன்றி வட-கிழக்கிலும் கூட முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருக்கிறது.

படித்த, பக்குவமான, கருமங்களை சரியாக கையாளக் கூடிய ஒரு முஸ்லிம் வடகிழக்கின் முதலமைச்சராக வருவாராயின் அவரை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.

நாங்கள், நேர்மையாக- தூய்மையாக- நிதானமாக நடப்போம். நாம் முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். எம்மால் இயன்றளவுக்கு முஸ்லிம்களுக்காக கடமையாற்றுவோம்.

உங்களின் ஆதரவை எமக்குத் தாருங்கள். அதன் மூலம் முஸ்லிம் தலைவர்களுக்கு தெளிவான ஒரு செய்தியை அனுப்புங்கள். உங்களின் சமூகம் நிமிர்ந்து நிற்கும்.

வேட்புமனுக்கள் நிறைவடைந்து விட்ட போதும், உங்களை நான் கைவிட மாட்டேன். முஸ்லிம்- தமிழ் மக்களின் உறவுகளை வலுப்படுத்த எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்.

2016ஆம் ஆண்டு முடிவதற்குள், தமிழ்,முஸ்லிம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு ஒன்று காணப்படும். அதனை இரண்டு சமூகங்களும் இணைந்து அனுபவிக்கும் நிலை நிச்சயம் உருவாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/18/news/7942

 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லதொரு அறிகுறி திருமலை மாவட்டத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து செல்லவேண்டிய அவசியம் இருக்கின்றது. சிங்களவர்களை திருமலையில் ஓரங்கட்ட கிடைத்த நல்ல சந்தர்ப்பம்.  திருமலை, சேருவிலை, மூதூர் ஆகிய தொகுதிகளைக் கொண்ட திருமலை மாவட்டத்தில் 4 ஆசனங்கள் உண்டு. இதில் சேருவிலை தொகிதியைத் தவிர மூதூர், திருமலை மாவட்ட வாக்காளர் ஓரணியில் திரள்வார்களாயின் 3 ஆசனங்களை வெல்ல வாய்ப்புகள் உண்டு. இதில் 2 ஆசனங்களைக் கூட முஸ்லிம்களுக்குக் கொடுக்கலாம். முஸ்லிகள் கட்சி மாறுதல், சிங்களத்துக்கு சார்பான போக்கைக் கடைப்பிடித்தல், சுயநல அரசியல் (இது தமிழ் கட்சிகள் எல்லாவற்றிடமும் அதிகமாகவே உண்டு) போன்றவற்றில் இருந்து விலகி இதய சுத்தியுடன் செயற்படுவார்களாயின் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு நன்மை பயக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் தெரிவாவர்கள்.  அதில் ஒருவர்தான் தமிழராக (சம்பந்தர்) வரமுடியும். மிகுதி மூன்றில்  இரண்டு சிங்களவர்கள், ஒரு முஸ்லிம் அல்லது இரு முஸ்லிம்கள் ஒரு சிங்களவர் என வரக்கூடிய நிலையில்தான் வாக்காளர்களின் விகிதம் உள்ளது.

தமிழர்களின் வாக்குப் பிரிந்து, முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க.வுக்கு வாக்குகள் அதிகம் விழுந்தால் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற மாதிரி தமிழரின் பிரதிநிதித்துவமே இருக்காது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூனாவா கொக்கா?? நாலுபேர் வாக்கு போடுகிறதுக்கு ஒரு தேசிய பட்டியல் எம் பீ தரட்டாம்.. அதையும் ஒரு ராஜ தந்திரம் என்று சொல்ல ஒரு கூட்டம்...

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் திருமலை தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம்களின் செல்வாக்கு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நுனிப் புல் மேயும் கூட்டத்திடம் வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்!:innocent:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனம்...டீப்பா திங் பண்ணாதீங்க சார்.. தட்டினாலும் தட்டி போடும்..பிறகு எலக்சன் றிசல்ற் வர நேரம் ஆக்கள் இல்லாமல் சப் என்று போடும்.. 

ஒரு தேசிய பட்டியல் எம் பீக்கு எத்தனை வாக்குகள் வேணும் என்று ஒரு குத்து மதிப்பா சொல்லுங்க சார்???

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையே தெரியாத கூட்டங்களுடன் பேசிப் பயன் இல்லை. நன்றி வணக்கம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி,ஒன்று தெரியாவிட்டால் நாலு விசயம் தெரிந்தவர்களே இப்படித்தான் சொல்லுகிறவை. :(

என்னவோ, கடைசியாக கூட்டமைப்புக்கு 230,000 வாக்குகள் வந்த போது ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வந்தது. அதேபோல மகிந்தாவின் கட்சிக்கு நாற்பது இலட்சத்துக்கு மேல வந்த போது 17-19 ஆசனம் கிடைத்தது. எனவே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்க்கி குறைந்தது 2 இலட்சம் வேண்டும்..

 

எனவே, இந்த முறை தேசிய பட்டியல் ஒரு ஆசனம் கிடைப்பதற்கான சந்தர்பம் மிகக்குறைவு. ஆனால் அப்படி ஒன்று வருவதாக இருந்தால் இங்கே கூடி இருக்கிற 40,000-150,000 பேருக்காக அந்த ஒன்றை கொடுக்கலாம். அந்த மூனா சுமந்திரனை விட கேவலப்பட்ட மனிதராக இருக்க மாட்டார் என்று நம்புவோம். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்,
அம்பாறையில்... சிங்களவனை வெற்றி பெறச் செய்தது போல்...
இம் முறை  தனது இடத்தை.... முஸ்லீம்களுக்கு கொடுத்து, இன ஐக்கியத்தை பேண முன் வர வேண்டும்.animierte smilies Smileys lieben es zu lachen, fett zu grinsen, happy zu sein, sich zu freuen, froh zu sein und einfach witzig zu sein. Der typische und meist gebrauchteste Smilie der Welt ist sicher der 'Lachende Smiley

இன்னும், முஸ்லீம்களை நம்ப.... ஒரு கூட்டம் இங்கை.... இருக்குது.m1703.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.